search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Salem District News"

    • கார்த்திகை தீபத்தை யொட்டி, சேலம் சுகவனேஸ்வரர் கோயிலில் இன்று காலை 6 மணிக்கு மூலவர் சுகவனேஸ்வரர், சொர்ணாம்பிகை அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், விபூதி உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், அலங்கார ஆராதனை நடைபெற்றது.
    • மாலை 6 மணிக்கு உற்சவர் சோமாஸ்கந்தர், சண்முகர் சாமிக்கு பூஜை நடக்கிறது.

    சேலம்:

    கார்த்திகை தீபத்தை யொட்டி, சேலம் சுகவனேஸ்வரர் கோயிலில் இன்று காலை 6 மணிக்கு மூலவர் சுகவனேஸ்வரர், சொர்ணாம்பிகை அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், விபூதி உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், அலங்கார ஆராதனை நடைபெற்றது.

    தொடர்ந்து காலை நடராஜர் சன்னதியில்பரணி தீபம் ஏற்றப்பட்டது. மாலை 6 மணிக்கு உற்சவர் சோமாஸ்கந்தர், சண்முகர் சாமிக்கு பூஜை நடக்கிறது.பின்னர் மூலவர் சன்னதியில் இருந்து தீபம் ஏற்றுவது தொடங்கப்படுகிறது.

    இதை அடுத்து உட்பிரகாரத்தில் சோமாஸ் கந்தர், சண்முகம் சாமி புறப்பாடு நடக்கிறது. வெளி பிரகாரத்தில் சொக்கப் பனை எரிப்பு முடிந்த பின்பு, கோவில் முன்பு உள்ள 2 தீப தூண்களில் மகாதீபம் ஏற்றப்படுகிறது. பின்னர் சோமாஸ்கந்தர், சண்முகர் திருவீதி உலா சின்ன கடை வீதி, 2-வது அக்ரஹாரம் வழியாக வலம் வருகிறது.

    கோவிலில் ஏற்றப்படும் தீபம் 2 நாட்கள்தொடர்ந்து எரிய நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. இதையொட்டி, மகாதீபம் ஏற்றப்படும் தூண்களில் தற்காலிகமாக சாரம் கட்டப்பட்டுள்ளது. மேலும் திருவீதி உலாசெல்லும் வாகனங்கள் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது.

    இதேபோல், சேலம் கோட்டை மாரியம்மன், தாரமங்கலம் கைலாச நாதர், பேளூர் தான்தோன்றீஸ்வரர், ஆத்தூர் காயநிர்ம லேஸ்வரர், ஆறகளூர் காமநாதீஸ்வரர் உள்பட சேலம் மாவட்டத்தில் உள்ள சிவன், அம்மன், விநாயகர், முருகன் கோவில்களில் கார்த்திகை தீபத்தையொட்டி மகா தீபம் ஏற்றப்படுகிறது. சேலம் பழைய பஸ் நிலையம், கடைவீதி, வின்சென்ட், அஸ்தம்பட்டி, குகை, தாதகாப்பட்டி, நெத்திமேடு, செவ்வாய்பேட்டை, அம்மாப்பேட்டை, தேர்நிலையம், 2-வது அக்ரஹாரம் உள்பட பல பகுதிகளில், மண் அகல் விளக்குகள் விற்பனைக்காக குவிக்கப் பட்டுள்ளது. இதை பெண்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். ஒரு விளக்கு ரூ.5 முதல் ரூ.50 வரை விற்பனை செய்யப்பட்டது.

    • அப்துல்கலாம் அறக் கட்டளை இணைந்து அரசுப்பள்ளி மாண வர்களுக்கான மதிப்புமிகு மாணவர் விருது வழங்கும் விழா சேலத்தில் நடைபெற்றது.
    • கரூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற தலைவருமான என்.பாரி தலைமை வகித்தார். செயலாளர் பிரபாகரன் வரவேற்றார். தலைவர் மனோகரன் மற்றும் ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சேலம்:

    சேலம் கன்ஸ்யூமர் வாய்ஸ், 7-ம் அறிவு அறக்கட்டளை, அப்துல்கலாம் அறக் கட்டளை இணைந்து அரசுப்பள்ளி மாண வர்களுக்கான மதிப்புமிகு மாணவர் விருது வழங்கும் விழா சேலத்தில் நடைபெற்றது.

    விழாவில் முன்னாள் மாவட்ட நீதிபதியும், கரூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற தலைவருமான என்.பாரி தலைமை வகித்தார். செயலாளர் பிரபாகரன் வரவேற்றார். தலைவர் மனோகரன் மற்றும் ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தனியார் கல்லூரி தாளாளர் ராஜேந்திர பிரசாத், ஓய்வு பெற்ற செயற்பொறியாளர் முத்துசாமி, ஓய்வுபெற்ற நல்லாசிரியர் முத்து மாரையன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    இதில், சேலம் மத்திய சிறை கண் காணிப்பாளர் வினோத், ஜி.எஸ்.டி. மற்றும் கலால் துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, 55 அரசுப்பள்ளி மாண வர்களுக்கு மதிப்புமிகு மாணவர் விருதும், 15 ஆசிரியர்களுக்கு கனவு ஆசிரியர் விருதும் வழங்கினார்கள்.

    • இந்தியாவில் 18ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மரவள்ளி கிழங்கு அறிமுகப்படுத்தப்பட்டது.
    • மரவள்ளி சாகுபடி பரப்பளவில் 25-வது இடத்திலும் உற்பத்தி திறனில் முதல் இடத்திலும் இந்தியா உள்ளது.

    இந்தியாவில் 18ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மரவள்ளி கிழங்கு அறிமுகப்படுத்தப்பட்டது. மரவள்ளி சாகுபடி பரப்பளவில் 25-வது இடத்திலும் உற்பத்தி திறனில் முதல் இடத்திலும் இந்தியா உள்ளது. இந்தியாவில் 0.21 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவில் மரவள்ளி கிழங்கு பயிரிடப்படுகிறது. மொத்த உற்பத்தி 7.74 மில்லியன் டன் ஆகும் .தமிழகத்தில் 64% கேரளாவில் 32% ஆந்திராவின் சில பகுதிகளில் 1.5 சதவீதமும் நாகலாந்து 1.2 சதவீதமும் அசாம் 0.5% என மரவள்ளி கிழங்கு பயிரிடப்படுகிறது.

    நாட்டின் மரவள்ளிக்கிழங்கு மொத்த உற்பத்தியில் தமிழகத்தின் 64% பங்களித்து முதலிடம் வகிக்கிறது. மரவள்ளி கிழங்கிலிருந்து ஸ்டார்ச் மாவு ஜவ்வரிசி ஆகியவை உற்பத்தி செய்யப்படுகின்றன. தமிழகத்தில் 14 மாவட்டங்களில் 1.21 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் மரவள்ளிக்கிழங்கு பயிரிடப்படுகிறது.

    குறிப்பாக சேலம் நாமக்கல் மாவட்டங்களில் மரவள்ளி கிழங்கு அதிக அளவில் பயிரிடப்படுகிறது இதில் நாமக்கலில் 21 சதவீதம் தர்மபுரியில் 19% சேலத்தில் 15 சதவீதம் விழுப்புரம் 14% திருச்சி 9 சதவீதம் ஈரோடு 5சதவீதம் திருவண்ணாமலை 5 சதவீதம் உள்பட 14 மாவட்டங்களில் மரவள்ளிக்கிழங்கு பரவலாக பயிரிடப்படுகிறது.

    சேலம் மாவட்டத்தில் தமிழக அரசு நிறுவனமாக செயல்பட்டு வரும் சேலம் ஸ்டார்ச் மற்றும் சேகோ உற்பத்தியாளர்கள் சேவை தொழில் கூட்டுறவு சங்கம் (சேகோ சர்வ் )ஜவ்வரிசி மரவள்ளி கிழங்கு விவசாயம் ஜவ்வரிசி ஆலையை செயல்படுத்தி வருகிறது.

    பாரம்பரியமிக்க சேலம் சேகோ (ஜவ்வரிசி) என்ற பெயரில் புவிசார் குறியீடு பெறும் முயற்சியில் ஈடுபட்டு வந்தது. அதன் பயனாக கடந்த ஆகஸ்ட் மாதம் சேலம் ஜவ்வரிசிக்கு புவிசார் குறியீடு கிடைத்தது.

    இந்த நிறுவனம் மூலம் 2.17 லட்சம் ஜவ்வரிசி மூட்டைகளை தேக்கி வைக்கும் மின்னணு ஏலம் வசதி உள்ள நிறுவனமாக சேகோ சர்வ் நிறுவனம் விளங்குகிறது. அதேபோல தெற்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய தொழில் கூட்டுறவு சங்கமாக அந்த நிறுவனம் விளங்குகிறது .இந்த சங்கத்தில் 374 உறுப்பினர்கள் உள்ளனர். இந்தியாவில் ஜவ்வரிசிக்கு என்று பிரத்தியோக விற்பனை கேந்திரமாக சேகோ சர்வ் உள்ளது. ஜவ்வரிசியானது பாரம்பரிய மிக்க உணவு பொருளாகும். இது வட மாநில மக்களின் பண்டிகை நாட்களில் மிக முக்கிய உணவுப் பொருளாக உள்ளது.

    சேலத்தை பொறுத்தவரை வெண்பட்டு, சேலம் மல்கோவா மாம்பழம் வரிசையில் சேலம் ஜவ்வரிசி புவிசார் குறியீடு பெற்றுள்ளது சிறப்பு அம்சமாகும் .இதன் மூலம் புதிய சந்தை வாய்ப்புகள் கிடைத்துள்ளதால் ஏற்றுமதி அதிகரித்து வருகிறது. ஜவ்வரிசி சார்ந்த உற்பத்தி பொருளுக்கு தேசிய மற்றும் சர்வதேச சந்தைகளில் முக்கியத்துவம் பெற முடியும் என்பதால் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கும்.

    ஜவ்வரிசி மற்றும் மரவள்ளிக்கிழங்கு மாவிலிருந்து தயாரிக்கப்படும் பல்வேறு மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். ஜவ்வரிசி ஏற்றுமதிக்கு நல்வாய்ப்பாக புவிசார் குறியீடு கிடைத்துள்ளதால் அதன் ஏற்றுமதியும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

    ஜவ்வரிசி உடல்நலம் காக்கும் முக்கிய உணவு பொருளாக திகழ்கிறது. வட மாநிலங்களில் நோன்பு காலங்களில் ஜவ்வரிசியில் செய்யப்பட்ட உணவை காலையில் உட்கொள்கின்றனர். இதனால் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க முடிகிறது. இதில் காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் சத்து அதிகம் உள்ளதால் உடல் ஆரோக்கியத்துக்கு பலம் சேர்க்கிறது. ஜவ்வரிசியிலிருந்து கிச்சடி பாயாசம் வடை ஆகியவை தயாரிக்கப்படுகின்றன. குறிப்பாக மகராஷ்டிராவில் ஜவ்வரிசியில் தயார் செய்யப்படும் வடை மக்களால் விரும்பி சாப்பிடப்படுகிறது.

    ஜவ்வரிசியில் இருந்து தயாராகும் உணவுப் பொருட்களை உட்கொள்வது கர்ப்பிணி களின் கரு வளர்ச்சிக்கு உதவுகிறது. அதேபோல் இரத்த அழுத்தத்தை குறைப்பதுடன் எலும்புகளை வலுப்படுத்துகிறது. மேலும் ஞாபக மறதி நோயான அல்சைமர் வராமல் காக்கிறது. இதனால் ஜவ்வரிசியை உணவு பொருளாக எடுத்து உடலை ஆரோக்கியமாக பாது காப்பதுடன் விவசாயிகளும் வாழ்வாதாரமும் மேம்பட உறுதுணையாக இருப்போம் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

    • சிவ பக்தர் சக்கரவர்த்தி தலைமையிலான குழுவினர் ஒன்றிணைந்து ரூ.30 லட்சம் செலவில் தையல்நாயகி உடனுறை வைத்தியநாதருக்கு முதன்முறையாக கற்றளி கோவில் கட்டினர்.
    • இக்கோவில் கும்பாபிஷேக விழா கடந்த மாதம் நடைபெற்றது.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி பேரூராட்சி பெரியசாமி நகர் பகுதியில் சிவ பக்தர் சக்கரவர்த்தி தலைமையிலான குழுவினர் ஒன்றிணைந்து ரூ.30 லட்சம் செலவில் தையல்நாயகி உடனுறை வைத்தியநாதருக்கு முதன்முறையாக கற்றளி கோவில் கட்டினர். இக்கோவில் கும்பாபிஷேக விழா கடந்த மாதம் நடைபெற்றது. தொடர்ந்து மண்டல அபிஷேக சிறப்பு பூஜை வழிபாடு நடந்து வருகிறது. இந்த வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் பெற்று வருகின்றனர்.

    ஆசிரியை வளர்மதி புகழ் குடும்பத்தினர் சார்பில் அனைவருக்கும் அன்ன தான வழங்கப்பட்டது. அன்னதானத்திற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி சக்கரவர்த்தி தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர். இன்று மாலை மண்டலாபிஷேக 48 நாள் நிறைவு பூஜை நடைபெறுகிறது.

    • வாழப்பாடி அருகே பிரசித்திப் பெற்ற பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி நந்தீஸ்வரருக்கு அபிேஷக ஆராதனை களுடன் சிறப்பு பூஜை நடைபெற்றது.
    • மூலவரான தான்தோன்றீஸ்வரர், தர்மசம்வர்த்தனி அம்பாளும் புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பிரசித்திப் பெற்ற பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி நந்தீஸ்வரருக்கு, பழம், பால், தேன், சந்தனம், விபூதி, மலர் அபிேஷக ஆராதனை களுடன் சிறப்பு பூஜை நடைபெற்றது. மூலவரான தான்தோன்றீஸ்வரர், தர்மசம்வர்த்தனி அம்பாளும் புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    இதேபோல் வாழப்பாடி அக்ரஹாரம் காசி விஸ்வநாதர் கோவிலில் நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டில் நந்தீஸ்வரர், காசி விஸ்வநாதர், காசி விசாலாட்சி அம்பாளுக்கும், அபிஷேக ஆராதனை களுடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் பெற்றனர். பக்தர்களுக்கு பிரதோஷ வழிபாட்டு கட்டளைதாரர்கள் வாயிலாக அன்னதானம் வழங்கப்பட்டது. வேப்பி லைப்பட்டி, கல்யாணகிரி, மோட்டூர் சிவன் கோவில்களிலும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

    • சேலம் மாவட்டம் ஏற்காடடில் கடந்த 3 நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
    • நேற்று காலையும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் மதியம் 2 மணிக்கு மேல் லேசான மழையாக பெய்தது.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காடடில் கடந்த 3 நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்று காலையும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் மதியம் 2 மணிக்கு மேல் லேசான மழையாக பெய்தது. சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக பெய்து வந்த மழை மாலை 5 மணிக்கு மேல் கனமழையாக கொட்டியது.

    ஏற்காடு மலைப்பாதையில் பெய்த மழையால் வாகனங்களை இயக்க முடியாமல் வாகன ஓட்டிகள் கடும் சிரமமடைந்தனர். மேலும் மலைபாதையில் உள்ள அருவிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து கொட்டுகிறது. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஏற்காட்டில் குளிரின் தாக்கமும் அதிகமாக நிலவுகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    • பிரபாகரன் ( 28), ரவுடி. இவரது மனைவி மோனிஷா (24), இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.
    • ஆத்திரம் அடைந்த பிரபாகரன் மாமனார் அண்ணாதுரை மற்றும் மாமியாரையும் அரிவாளால் வெட்டினார்.

    சேலம்:

    சேலம் அரிசிபாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் ( 28), ரவுடி. இவரது மனைவி மோனிஷா (24), இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.

    இந்த நிலையில் கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் கணவருடன் கோபித்து கொண்டு மோனிஷா கடந்த 15 நாட்களுக்கு முன்பு அருகில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.

    இதையடுத்து மனைவியை அழைத்து வருவதற்காக மாமனார் அண்ணாதுரை வீட்டிற்கு பிரபாகரன் சென்றார். அப்போது அவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த பிரபாகரன் மாமனார் அண்ணாதுரை மற்றும் மாமியாரையும் அரிவாளால் வெட்டினார். தொடர்ந்து அவர் தலைமறைவானார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் அவரை தேடி வந்தனர். நேற்று பிரபாகரன் போலீசாரிடம் சிக்கினார். அவரை போலீசார் கைது செய்தனர். 

    • பூங்கொடி (38). இவர் அதே பகுதியில் உள்ள உத்திரவேலு என்பவருக்கு சொந்தமான கயிறு திரிக்கும் மில்லில் கடந்த 7 வருடமாக வேலை செய்து வந்தார்.
    • மில்லில் வேலை செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக பூங்கொடியின் சேலை கயிறு திரிக்கும் எந்திரத்தில் சிக்கியது. இதில் பூங்கொடி படுகாயம் அடைந்தார்.

    தாரமங்கலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள கருக்கல்வாடி கிராமம் கங்காநியூர் பகுதியை சேர்ந்தவர் கோபி.

    இவரது மனைவி பூங்கொடி (38). இவர் அதே பகுதியில் உள்ள உத்திரவேலு என்பவருக்கு சொந்தமான கயிறு திரிக்கும் மில்லில் கடந்த 7 வருடமாக வேலை செய்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 20-ந் தேதி மில்லில் வேலை செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக பூங்கொடியின் சேலை கயிறு திரிக்கும் எந்திரத்தில் சிக்கியது. இதில் பூங்கொடி படுகாயம் அடைந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பூங்கொடி இறந்தார்.

    இந்த சம்பவம் தொடர்பாக பூங்கொடியின் மகன் நந்தகுமார் கொடுத்த புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • மாவட்ட அளவில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுக்களும், வட்ட அளவில் வட்ட சட்டப்பணிகள் குழுக்களும் செயல்பட்டு வருகின்றன.
    • மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது.

    ஏற்காடு:

    நாட்டில் நலிவடைந்த மக்களுக்கு உதவும் பொருட்டு தேசிய அளவில் தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவும், மாநில அளவில் மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுக்களும், மாவட்ட அளவில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுக்களும், வட்ட அளவில் வட்ட சட்டப்பணிகள் குழுக்களும் செயல்பட்டு வருகின்றன.

    சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் 13-ந் தேதியில் இருந்து மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது.

    இதை தொடர்ந்து தற்போது தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின்படி நேற்று முதல் ஏற்காடு தாலுகாவில் வட்ட சட்டப்பணிகள் குழு ஏற்காடு நீதிமன்ற கட்டிடத்தில் தொடங்கப்பட்டு உள்ளது.

    இந்த வட்ட சட்டப்பணிகள் குழுவில் தகுதியான நலிவடைந்த பிரிவினருக்கு இலவச சட்ட உதவி வழங்குதல், மக்கள் நீதிமன்றம் மூலம் பிரச்சனைகளுக்கு தீர்வு காணுதல் மற்றும் சட்ட முகாம்களை நடத்தி பொதுமக்களுக்கு சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. எனவே ஏற்காடு பொதுமக்கள் மேற்கண்ட சட்ட உதவிகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு வட்ட சட்டப்பணிகள் குழு தலைவர் தெரிவித்துள்ளார்.

    • அன்னதானப்பட்டி போலீசார் மணியனூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    • மணியனூர் பாரதி நகரில் மளிகைக் கடையில் வைத்து புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது.

    அன்னதானப்பட்டி:

    சேலம் அன்னதானப்பட்டி போலீசார் மணியனூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மணியனூர் பாரதி நகரில் மளிகைக் கடையில் வைத்து புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து மளிகைக் கடையில் புகையிலைப் பொருட்கள் விற்றதாக பரிமளா (40) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    • 8-ம் வகுப்பு மாணவியை ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று 4 நாட்கள் அடைத்து வைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
    • இதனை அறிந்த மாணவியின் உறவினர்கள் நேற்று சேலம் டவுன் போலீஸ் நிலையம் முன்பு திரண்டு மறியலில் ஈடுபட்டனர்.

    சேலம்:

    சேலம் கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஹரிகரன் (22), இவர் அந்த பகுதியை சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவியை ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று 4 நாட்கள் அடைத்து வைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த மாணவியின் உறவினர்கள் நேற்று சேலம் டவுன் போலீஸ் நிலையம் முன்பு திரண்டு மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து டவுன் அனைத்து மகளிர் போலீசார் ஹரிகரன் மீது போக்சோ வ ழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து அவரை தேடிய போது அவர் தலைமறைவாகி விட்டார். அவரை தொடர்ந்து தேடி வருகிறார்கள்.

    • சேலம் மாநகரில் அரசியல் கட்சிகள், பல்வேறு சங்கங்கள், அமைப்பினர் உள்ளிட்டோர் நடத்தும் ஆர்ப்பாட்டம், ஊர்வலம் ஆகியவற்றிற்கு தமிழ்நாடு மாநகர போலீஸ் சட்டப்படி கமிஷனர் அனுமதி பெற்று நடத்த வேண்டும்.
    • மேலும் இதற்கு 5 நாட்களுக்கு முன்னதாகவே விண்ணப்பிக்க வேண்டும்.

    அன்னதானப்பட்டி:

    சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சேலம் மாநகரில் அரசியல் கட்சிகள், பல்வேறு சங்கங்கள், அமைப்பினர் உள்ளிட்டோர் நடத்தும் ஆர்ப்பாட்டம், ஊர்வலம் ஆகியவற்றிற்கு தமிழ்நாடு மாநகர போலீஸ் சட்டப்படி கமிஷனர் அனுமதி பெற்று நடத்த வேண்டும். மேலும் இதற்கு 5 நாட்களுக்கு முன்னதாகவே விண்ணப்பிக்க வேண்டும். குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் பரீசிலனை செய்யப்பட மாட்டாது. அதேசமயம் விளையாட்டு நிகழ்ச்சிகள், திருமண நிகழ்வுகள், இறந்தோர் இறுதி ஊர்வலங்கள், மத நிகழ்ச்சிகள் உள்ளிட்டவைகளுக்கு இது பொருந்தாது. இந்த உத்தரவு இன்று முதல் அடுத்த மாதம் 9- ந் தேதி வரை அமலில் இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×