என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஏற்காட்டில் இலவச சட்டப்பணிகள் ஆணைக்குழு தொடக்கம்
    X

    ஏற்காட்டில் இலவச சட்டப்பணிகள் ஆணைக்குழு தொடக்கம்

    • மாவட்ட அளவில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுக்களும், வட்ட அளவில் வட்ட சட்டப்பணிகள் குழுக்களும் செயல்பட்டு வருகின்றன.
    • மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது.

    ஏற்காடு:

    நாட்டில் நலிவடைந்த மக்களுக்கு உதவும் பொருட்டு தேசிய அளவில் தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவும், மாநில அளவில் மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுக்களும், மாவட்ட அளவில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுக்களும், வட்ட அளவில் வட்ட சட்டப்பணிகள் குழுக்களும் செயல்பட்டு வருகின்றன.

    சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் 13-ந் தேதியில் இருந்து மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது.

    இதை தொடர்ந்து தற்போது தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின்படி நேற்று முதல் ஏற்காடு தாலுகாவில் வட்ட சட்டப்பணிகள் குழு ஏற்காடு நீதிமன்ற கட்டிடத்தில் தொடங்கப்பட்டு உள்ளது.

    இந்த வட்ட சட்டப்பணிகள் குழுவில் தகுதியான நலிவடைந்த பிரிவினருக்கு இலவச சட்ட உதவி வழங்குதல், மக்கள் நீதிமன்றம் மூலம் பிரச்சனைகளுக்கு தீர்வு காணுதல் மற்றும் சட்ட முகாம்களை நடத்தி பொதுமக்களுக்கு சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. எனவே ஏற்காடு பொதுமக்கள் மேற்கண்ட சட்ட உதவிகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு வட்ட சட்டப்பணிகள் குழு தலைவர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×