search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரவுடி கைது"

    • பிரபாகரன் ( 28), ரவுடி. இவரது மனைவி மோனிஷா (24), இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.
    • ஆத்திரம் அடைந்த பிரபாகரன் மாமனார் அண்ணாதுரை மற்றும் மாமியாரையும் அரிவாளால் வெட்டினார்.

    சேலம்:

    சேலம் அரிசிபாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் ( 28), ரவுடி. இவரது மனைவி மோனிஷா (24), இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.

    இந்த நிலையில் கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் கணவருடன் கோபித்து கொண்டு மோனிஷா கடந்த 15 நாட்களுக்கு முன்பு அருகில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.

    இதையடுத்து மனைவியை அழைத்து வருவதற்காக மாமனார் அண்ணாதுரை வீட்டிற்கு பிரபாகரன் சென்றார். அப்போது அவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த பிரபாகரன் மாமனார் அண்ணாதுரை மற்றும் மாமியாரையும் அரிவாளால் வெட்டினார். தொடர்ந்து அவர் தலைமறைவானார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் அவரை தேடி வந்தனர். நேற்று பிரபாகரன் போலீசாரிடம் சிக்கினார். அவரை போலீசார் கைது செய்தனர். 

    • போலீசார் அவரை தேடி கண்டுபிடித்து கைது செய்தனர்.
    • எதிரிகளுக்கு பயந்து ரவுடி கார்த்திக் வில்லிவாக்கத்தில் வந்து குடியேறியதாக தெரிவித்தார்.

    அம்பத்தூர்:

    சென்னை வில்லிவாக்கம் அண்ணா சத்யா நகர் பகுதியில் மதுபோதையில் கணவர் அடித்து உதைப்பதாக பெண் ஒருவர் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து தகவல் தெரிவித்தார்.

    இதையடுத்து வில்லிவாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது பெண்ணை தாக்கிய வாலிபர் வீட்டில் டிபன் பாக்ஸ்களை அடுக்கி வைத்திருந்தார். அதில் என்ன இருக்கிறது என்று கேட்ட போலீசார் டிபன் பாக்சுகளை எடுக்க முயன்றனர். அப்போது அந்த வாலிபர் டிபன் பாக்சுக்குள் குண்டுகள் உள்ளது திறந்தால் வெடித்துவிடும் என்று கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் பின் வாங்கினார்கள். அதற்குள் வாலிபர் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார்.

    இதையடுத்து போலீசார் அவரை தேடி கண்டுபிடித்து கைது செய்தனர். போலீஸ் விசாரணையில் அவரது பெயர் கார்த்திக் என்பதும் ராணிப்பேட்டையை சேர்ந்த ரவுடி என்பதும் தெரிய வந்தது.

    இதை தொடர்ந்து வெடி குண்டு நிபுணர்களின் உதவியுடன் போலீசார் டிபன் பாக்சை திறந்து பார்த்தனர். அப்போது டிபன் பாக்சுக்குள் 2 நாட்டு வெடி குண்டுகள் இருந்தது. அதனை பறிமுதல் செய்தனர். ராணிப்பேட்டையில் இருந்து தனது எதிரிகளுக்கு பயந்து ரவுடி கார்த்திக் வில்லிவாக்கத்தில் வந்து குடியேறியதாக தெரிவித்தார்.

    ரவுடிகளால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு விடும் என்று கருதி வெளியில் செல்லும்போது டிபன்பாக்ஸ் குண்டுகளோடு சென்றதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்து உள்ளது.

    இதையடுத்து ரவுடி கார்த்திக் சதி திட்டம் தீட்டும் நோக்கத்தில் சென்னையில் பதுங்கி இருந்தாரா? என்பது பற்றி போலீசார் தொடர்ந்து விசா ரணையில் ஈடுபட்டு உள்ளனர்.

    • ரமேஷ் என்பவரை ரவுடி நாகபூசனராவ் என்கிற குக்கா தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து வெட்டி கொலை செய்ய முயன்றார்.
    • தலைமறைவாக இருந்து வந்த ரவுடி நாகபூசனராவ், அவரது கூட்டாளி கருமுத்து ஆகிய 2 பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

    போரூர்:

    வடபழனி, கங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரமேஷ். இவரை கடந்த 1998-ம் ஆண்டு திருவொற்றியூரை சேர்ந்த ரவுடி நாகபூசனராவ் என்கிற குக்கா தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து வெட்டி கொலை செய்ய முயன்றார். இதில் ரமேஷ் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

    இந்த வழக்கில் கைதான நாகபூசனராவ், அவரது கூட்டாளி கருமுத்து உள்ளிட்ட 4 பேரும் ஜாமீனில் வெளியே வந்த பின்னர் 1999-ம் ஆண்டு முதல் கோர்ட்டில் ஆஜர் ஆகாமல் தலைமறைவாகி விட்டனர்.

    24 ஆண்டுகளாக தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்த ரவுடி நாகபூசனராவ், அவரது கூட்டாளி கருமுத்து ஆகிய 2 பேரையும் கோடம்பாக்கம் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

    • செவ்வாப்பேட்டை ரெயில் நிலையம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • எண்ணூர் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி மணிகண்டனை போலீசார் கைது செய்தனர்.

    திருவள்ளூர்:

    செவ்வாப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் மற்றும் போலீசார் செவ்வாப்பேட்டை ரெயில் நிலையம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கஞ்சாவுடன் வந்த சென்னை, எண்ணூர் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி மணிகண்டனை (30) போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    • சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்
    • போலீசார் ஜெயிலில் அடைத்தனர்

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சின்ன தொட்டாளத்தை சேர்ந்தவர் மோகன் (வயது 38). இவர் அந்த பகுதி அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது பெரியாங்குப்பம் புதுமணையை சேர்ந்த பிரபல ரவுடி அமெரிக்கா என்கிற ராஜேஷ் என்பவர் மது போதையில் வந்ததாக கூறப்படுகிறது. பின்னர் நடந்து சென்ற மோகனை வழிமறித்து ரூ.2 ஆயிரம் தரவேண்டும் என மிரட்டினார்.

    அதற்கு மோகன் தன்னிடம் பணம் இல்லை என மறுப்பு தெரிவித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த ராஜேஷ் மோகனை சரமாரியாக தாக்கி கத்தியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்தார்.

    இதேபோல் சின்ன தொட்டாளத்தை சேர்ந்த ராஜ்குமார் (வயது 38). என்வரிடமும் ராஜேஷ், அவரது நண்பர்கள் கதிர்வேல், ராதா, பிரபு ஆகியோர் ராஜ்குமாரிடம் பணத்தைக் கேட்டு தகராறு செய்து கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

    இது குறித்து மோகன், ராஜ்குமார் ஆகியோர் தனித்தனியாக மேல்பாடி போலீசில் புகார் செய்தனர்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜேசை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். மேலும் தலை மறைவாக உள்ளவர்களை தேடி வருகின்றனர்.

    • பாளை ஜெயிலில் அடைப்பு
    • கடந்த 2017-ம் ஆண்டு முதல் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வந்தார்.

    நாகர்கோவில், அக்.21-

    ராஜாக்கமங்கலம் அருகே விளாத்திவிளையை சேர்ந்தவர் கண்ணன் என்ற ஜிம் கண்ணன். இவர் மீது ராஜாக்கமங்கலம் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரர் ஜெகநாதன் கொலை வழக்கு உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளது. ரவுடிகள் பட்டியலிலும் கண்ணன் பெயர் இடம் பெற்றுள்ளது. ஜெகநாதன் கொலை வழக்கில் கைது கைது செய்யப்பட்ட கண்ணன் ஜாமீனில் விடுதலை ஆனார். கடந்த 2017-ம் ஆண்டு முதல் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வந்தார். இதையடுத்து அவருக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. போலீசார் அவரை தேடி வந்தனர்.

    இதேபோல் பழவூர் பகுதியில் நடந்த கொலை வழக்கு ஒன்றிலும் கைது செய்யப்பட்ட கண்ணன் தலைமறைவாக இருந்து வந்தார். பழவூர் போலீசார் கண்ணனை தேடி வந்தனர். இந்த நிலையில் பழவூர் போலீசார் கண்ணனை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் அவரை பழவூர் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி அவரை ஜெயிலில் அடைக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து கண்ணனை பாளையங்கோட்டை ஜெயில் அடைத்தனர்.

    • அடிக்கடி பணம் கேட்டு மிரட்டி வந்துள்ளார்
    • போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்

    வேலூர்:

    வேலூர் சார்பனாமேடு பில்டர்பெட் பகுதியை சேர்ந்தவர் அப்துல்கரீம் (வயது 35). இவர் டீக்கடை நடத்தி வருகிறார். இவரிடம் ஓல்டு டவுனை சேர்ந்த கனி(எ)அருணாச்சலம் என்பவர் அடிக்கடி பணம் கேட்டு மிரட்டி வந்துள்ளார்.

    இந்த நிலையில் கடந்த மாதம் 24-ந் தேதி இரவு அப்துல்கரீம் வீட்டிற்கு சென்று அருணாச்சலம் பணம் கேட்டு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    பணம் தர அப்துல்கரீம் மறுக்கவே ஆத்திரமடைந்த அருணாச்சலம், தான் இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியால் கழுத்திலும், கைகளிலும் சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயமடைந்த அப்துல்கரீம் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்க ப்பட்டார்.

    இதுதொடர்பாக அப்துல்கரீம் கொடுத்த புகாரின் பேரில் வேலூர் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பேபி வழக்குப்பதிவு செய்து அருணாச்சலத்தை கைது செய்து ஜெயிலில் அடைத்தார்.

    இவர் மீது ஏற்கனவே வழிப்பறி, திருட்டு, கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தது போன்ற பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.

    இவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய எஸ்.பி. மணிவண்ணன், கலெக்டர் குமாரவே ல்பாண்டியனுக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் அருணாச்ச லத்தை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். அதற்கான நகலை சிறையில் உள்ள அருணாச்சலத்திடம் தெற்கு போலீசார் நேற்று வழங்கினர்.

    • இவர் மீது குமரி மாவட்டத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளது.
    • ரவுடிகள் பட்டி யலிலும் வெள்ளை செந்தில் பெயர் இடம்பெற்றுள்ளது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் பள்ளி விளை பகுதியை சேர்ந்தவர் வெள்ளை செந்தில். இவர் மீது குமரி மாவட்டத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளது. ரவுடிகள் பட்டி யலிலும் வெள்ளை செந்தில் பெயர் இடம்பெற்றுள்ளது. நேசமணிநகர் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை முயற்சி வழக்கு ஒன்றில் வெள்ளை செந்தில் கைது செய்யப்பட்டார். ஜாமீனில் வெளியே வந்திருந்த அவர் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வந்தார். இதையடுத்து அவருக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. போலீசார் அவரை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் வெள்ளை செந்தில் சென்னையில் இருப்பது தெரியவந்தது. தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் சரவணக்குமார் தலைமையிலான போலீசார் சென்னை விரைந்து சென்றனர். அங்கு வெள்ளை செந்திலை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட வெள்ளை செந்திலை நேற்று இரவு நாகர்கோவில் நேசமணிநகர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி அவரை ஜெயிலில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் வெள்ளை செந்திலை பாளையங்கோட்டை ஜெயிலில் அடைத்தனர்.

    • மர்ம வாலிபர் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து பீரோவில் இருந்த 6 பவுன் நகையை கொள்ளையடித்து தப்பி சென்றுவிட்டான்.
    • அசோக்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையில் ஈடுபட்டதாக அதே பகுதியை சேர்ந்த ரவுடியை கைது செய்தனர்.

    சென்னை :

    அசோக் நகர், அடுத்த புதூர் 14-வது தெருவை சேர்ந்தவர் குணசேகரன். இவரது மனைவி ரூபாவதி. தே.மு.தி.க சென்னை மேற்கு மாவட்ட மகளிர் அணி மாவட்ட செயலாளராக உள்ளார்.

    நேற்றுமுன்தினம் வீட்டை பூட்டிவிட்டு அருகில் உள்ள தாய்வீட்டிற்கு சென்றார். இதனை நோட்டமிட்ட மர்ம வாலிபர் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து பீரோவில் இருந்த 6 பவுன் நகையை கொள்ளையடித்து தப்பி சென்றுவிட்டான்.

    இதுகுறித்து அசோக்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையில் ஈடுபட்டதாக அதே பகுதியை சேர்ந்த ரவுடி விக்கி என்கிற விக்னேஸ்வரன் (24) என்பவரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

    • சந்துரு (வயது 32). இவர் குகையில் உள்ள ஒரு நகைக்கடையில் வேலை பார்த்து வருகிறார்.
    • நகைக் கடை உரிமையாளருக்கு போன் செய்து கடை ஊழியர் சந்திரசேகரனை விடுவிக்க ரூ.2 லட்சம் கேட்டு மிரட்டினர்.

    சேலம்:

    குகை எஸ்.எம்.சி. காலனி பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகரன் என்ற சந்துரு (வயது 32). இவர் குகையில் உள்ள ஒரு நகைக்கடையில் வேலை பார்த்து வருகிறார்.

    பணம் கேட்டு கடத்தல்

    கடந்த 7-ந்தேதி குகையை சேர்ந்த விமல்குமார் என்பவர் செல்போனில் தொடர்பு கொண்டு செவ்வாய்ப் பேட்டைக்கு வருமாறு அவரை அைழத்தார். அதன்படி சந்திரசேகரன் அங்கு சென்றார். அப்போது அவரை 6 பேர் கும்பல் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டு கடத்திச் சென்றது.

    இதையடுத்து கடத்தல் கும்பல் நகைக் கடை உரிமையாளருக்கு போன் செய்து கடை ஊழியர் சந்திரசேகரனை விடுவிக்க ரூ.2 லட்சம் கேட்டு மிரட்டினர். இது குறித்து அவர் செவ்வாய்ப்பேட்டை போலீசில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சந்திரகலா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சந்திரசேகரனை மீட்டனர். அப்போது கடத்தல் கும்பலை சேர்ந்த விமல்குமார், மாரியப்பன் ஆகிய இருவரை கைது செய்தனர்.

    பிரபல ரவுடி கைது

    மேலும் இந்த கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய விக்னேஷ், மாதையன், இளையராஜா மற்றும் சிலரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

    இந்த நிலையில் கிச்சிப்பாளையம் எஸ்.எம்.சி. காலனி பகுதியை சேர்ந்த இளையராஜா (20) என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர் மீது பல்வேறு வழக்குகள் போலீஸ் நிலையத்தில் உள்ளதும், பிரபல ரவுடி என்பதும் தெரியவந்தது.

    கைதான ரவுடி இளையராஜாவை சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைப்பதற்கான ஏற்பாடுகளை போலீசார் செய்து வருகின்றனர்.

    • கஞ்சா மற்றும் சரித்திர பதிவேடுகளில் சம்பந்தப்பட்ட 60 ரவுடிகளை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
    • ரவுடிகள் மீதான அதிரடி நடவடிக்கை தொடரும் என ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் எச்சரித்துள்ளார்.

    ஆவடி:

    ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ரவுடிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்கும்படி ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் உத்தரவிட்டார். அதன்பேரில் தனிப்படை போலீசார் நேற்று அதிகாலை ரவுடிகளை கைது செய்யும் தொடர் வேட்டையில் ஈடுபட்டனர்.

    அதன்படி கொலை, கஞ்சா மற்றும் சரித்திர பதிவேடுகளில் சம்பந்தப்பட்ட 60 ரவுடிகளை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இதில் கொலை குற்றங்களில் சம்பந்தப்பட்டவர்கள் 28 பேர், கொலை முயற்சி வழக்குகளில் 11 பேர், கஞ்சா வழக்கில் ஒருவர், பிடியாணை குற்றவாளி ஒருவர் மற்றும் இதர முக்கிய வழக்குகளில் சம்பந்தப்பட்ட 19 பேர் என மொத்தம் 60 ரவுடிகள் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

    ரவுடிகள் மீதான அதிரடி நடவடிக்கை தொடரும் என ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் எச்சரித்துள்ளார்.

    • எருக்கஞ்சேரி மெயின் ரோடு சர்மா நகர் பூங்கா அருகே அரவிந்தன் சுற்றி திரிவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.
    • அரவிந்தனிடமிருந்து ஒரு கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.

    பெரம்பூர்:

    சென்னை வியாசர்பாடி பகுதியில் கத்தியை வைத்துக் கொண்டு ரவுடி ஒருவன் டிக் டாக் செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. இதனையடுத்து உதவி கமிஷனர் தமிழ்வாணன், எம்.கே.பி. நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திர சேகரன் ஆகியோர் அந்த ரவுடி யார் என்பது பற்றி தீவிர விசாரணை நடத்தினர்.

    போலீஸ் விசாரணையில் வியாசர்பாடி புதுநகர் ஏ பிளாக் பகுதியைச் சேர்ந்த 20 வயதே ஆன ரவுடி அரவிந்தன் கத்தியை வைத்து மிரட்டி வீடியோ வெளியிட்டது தெரிய வந்தது. சமூக வலைதளங்களில் பிரபலமடைய வேண்டும் என்ற எண்ணத்தில் சிறுவன் ஒருவனை அருகில் வைத்துக் கொண்டு அரவிந்தன் கத்தியை காட்டி மிரட்டி டிக் டாக் செய்து வீடியோ வெளியிட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவனை தேடி வந்தனர். இந்த நிலையில் எருக்கஞ்சேரி மெயின் ரோடு சர்மா நகர் பூங்கா அருகே அரவிந்தன் சுற்றி திரிவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் அரவிந்தனை கைது செய்தனர்

    அரவிந்தனிடமிருந்து ஒரு கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. அவன் மீது சில குற்ற வழக்குகள் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து வழக்கு பதிவு செய்த எம்.கே.பி. நகர் போலீசார் அரவிந்தனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இது தொடர்பாக போலீசார் கூறும்போது ரவுடிகள் இது போன்ற செயலில் ஈடுபடுவது சட்ட விரோதமாகும். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    ×