கத்தி முனையில் பணம் பறித்த ரவுடி கைது

தங்கராஜ் (வயது 54). இவர் நேற்று அந்த பகுதியில் உள்ள பிள்ளையார் கோவில் அருகே நடந்து வந்து கொண்டிருந்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வமணியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கத்தி முனையில் பணம் பறித்த ரவுடி கைது
Published on

சேலம்:

சேலம் வீராணம் அருகே உள்ள மேட்டுப்பட்டி தாதனூர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 54). இவர் நேற்று அந்த பகுதியில் உள்ள பிள்ளையார் கோவில் அருகே நடந்து வந்து கொண்டிருந்தார். அப் போது அவரை வழிமறித்த அதே பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி செல்வமணி(29) என்பவர் கத்தி முனையில் தங்கராஜ் பாக்கெட்டில் இருந்த ரூ.1350 பறித்துக் கொண்டார். இது குறித்து தங்கராஜ் வீராணம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வமணியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com