என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோடம்பாக்கம் சூப்பர் மார்க்கெட்டில் பெண்ணிடம் அத்துமீறல்- ரவுடி கைது
- பணம் கொடுக்க மறுத்து விட்டதால் ஆத்திரமடைந்த வாலிபர் தகாத வார்த்தைகளால் பேசி பெண்ணுக்கு மிரட்டல் விடுத்தார்.
- ரவுடி மீது ஆபாசமாக பேசுதல், பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
போரூர்:
கோடம்பாக்கம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் அதே பகுதியில் "சூப்பர் மார்க்கெட்" நடத்தி வருகிறார். இவரது கடைக்கு இரவு வந்த வாலிபர் ஒருவர் பணம் கேட்டு ரகளையில் ஈடுபட்டார். இதனால் பணம் கொடுக்க மறுத்து விட்டதால் ஆத்திரமடைந்த வாலிபர் தகாத வார்த்தைகளால் பேசி பெண்ணுக்கு மிரட்டல் விடுத்தார். மேலும் பெண்ணிடம் அத்துமீறி தகாத முறையில் நடந்து கொண்டார்.
தகவல் அறிந்ததும் வடபழனி இன்ஸ்பெக்டர் ஆனந்த்பாபு மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கடையில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவை வைத்து பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த ரவுடி அய்யப்பன் (வயது32) என்பவரை கைது செய்தனர். அவர் மீது ஆபாசமாக பேசுதல், பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அய்யப்பன் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.






