search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "robber arrested"

    • தனிப்படை போலீசார் ஆந்திரா சென்று சித்தூர் மாவட்டம் புத்தூர் பகுதியில் பதுங்கி இருந்த கொள்ளையனை மடக்கி பிடித்து கைது செய்தனர்.
    • ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு அடிக்கடி பல்வேறு இடங்களுக்கு சென்று பூட்டிகிடக்கும் வீடுகளை நோட்டமிட்டு திருடிச் சென்று உள்ளான்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம், விளக்கொளி பெருமாள் கோவில் தெருவில் நகைக்கடை நடத்தி வருபவர் மகாவீர் சந்த். கடந்த சில நாட்களுக்கு முன்பு பூட்டி இருந்த இவரது வீட்டின் பூட்டை உடைத்து 182 பவுன் நகை, ரூ.1 லட்சம் கொள்ளைபோனது. இதே போல் அதே பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவரின் வீட்டில் 15 பவுன் நகை திருடு போனது. இதுகுறித்து விஷ்ணு காஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

    கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து விசாரித்தபோது இந்த 2 கொள்ளையிலும் ஈடுபட்டது ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தை பகுதியை சேர்ந்த பிரபல கொள்ளையன் சதீஷ் ரெட்டி என்பது தெரிந்தது.

    இதையடுத்து தனிப்படை போலீசார் ஆந்திரா சென்று சித்தூர் மாவட்டம் புத்தூர் பகுதியில் பதுங்கி இருந்த அவனை மடக்கி பிடித்து கைது செய்தனர். விசாரணையில் அவன் மீது ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா மற்றும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் ஏற்கனவே 80 வழக்குகள் இருப்பது தெரிந்தது. இப்போது 81-வது முறையாக கொள்ளை வழக்கில் சதீஷ் ரெட்டி பிடிபட்டு உள்ளார். பல கொள்ளை வழக்குகளில் அவர் பிடிபடாமல் சுற்றி வந்த நிலையில் காஞ்சிபுரம் கொள்ளை வழக்கில் பிடிபட்டு இருக்கிறான்.

    அவனிடம் இருந்து 88 பவுன் நகை, ரூ.36 லட்சத்து 10 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

    ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு அடிக்கடி பல்வேறு இடங்களுக்கு சென்று பூட்டிகிடக்கும் வீடுகளை நோட்டமிட்டு திருடிச் சென்று உள்ளான். ஒரே இடத்தில் கைவரிசை காட்டினால் சிக்கிக்கொள்வோம் என்பதால் இடத்தை அடிக்கடி மாற்றியதாகவும் கூறி உள்ளான்.

    கொள்ளை வழக்கில் சிறப்பாக செயல்பட்ட தனிப்படை போலீசாரை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.

    • பாஸ்கர் (வயது 40). இவர் மீது சேலம் அஸ்தம்பட்டி போலீஸ் நிலையத்தில் வழிப்பறி உள்பட 3 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
    • இவரை போலீசார் தேடி வந்தனர். கோர்ட்டிலும் அவர் ஆஜர் ஆகாததால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

    சேலம்:

    அரியலூர் மாவட்டம் அந்தோணியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 40). இவர் மீது சேலம் அஸ்தம்பட்டி போலீஸ் நிலையத்தில் வழிப்பறி உள்பட 3 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    இவரை போலீசார் தேடி வந்தனர். கோர்ட்டிலும் அவர் ஆஜர் ஆகாததால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப் பட்டது. இதனால் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் சேலம் டவுன் ரெயில்வே போலீ சாரிடம் நேற்று இரவு அவர் சிக்கினார். அவரை ரெயில்வே போலீசார் அஸ்தம்பட்டி போலீசாரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வரும் போலீசார், பாஸ்கரை சிறையில் அடைக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    • பஸ்சில் இருந்த தாலிப் ராஜா திடீரென பஸ் ஜன்னல் வழியாக ஏறி குதித்து தப்பினார்.
    • தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர்.

    கோவை:

    திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அடுத்த வேல்வார் பேட்டையை சேர்ந்தவர் தாலிப் ராஜா(28).

    இவர் கடந்த ஆண்டு திருப்பூர் மாவட்டத்தில் 2 செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டார். இது தொடர்பாக திருப்பூர் தெற்கு, நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    மேலும் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட தாலிப் ராஜாவை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய ஜெயிலில் அடைத்தனர்.

    இந்நிலையில், கோவை மத்திய ஜெயிலில் உள்ள தாலிப் ராஜாவை கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக கடந்த 7-ந் தேதி திருப்பூர் போலீசார் கோவைக்கு வந்தனர். மத்திய ஜெயிலில் இருந்து தாலிப் ராஜா மற்றும் மற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் என 4 பேரை திருப்பூருக்கு பஸ்சில் அழைத்து சென்றனர்.

    அங்கு கோர்ட்டில் ஆஜர்படுத்தி விட்டு 4 பேரையும் மீண்டும் பஸ்சில் கோவைக்கு அழைத்து வந்தனர்.

    பஸ் சிங்காநல்லூர் அருகே உள்ள இருகூர் பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது பஸ்சில் இருந்த தாலிப் ராஜா திடீரென பஸ் ஜன்னல் வழியாக ஏறி குதித்து தப்பினார்.

    போலீசார் உடனடியாக சிங்காநல்லூர் போலீசில் புகார் கொடுத்தனர். போலீசாரும் அவரை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து அவரை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் இன்று காலை கோவை பகுதியில் பதுங்கி இருந்த அவரை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். 

    • ரோந்து சென்ற போது போலீசார் மடக்கி பிடித்தனர்.
    • அந்த வழியாக சந்தேகப்படும் படியாக வாலிபர் ஒருவர் நடந்து சென்றார்.

    பொள்ளாச்சி,

    கோவை மாவட்டம் வடக்கிப்பாளையம் போலீசார் பொள்ளாச்சி ரோட்டில் நள்ளிரவு ரோந்து சென்றனர்.

    அப்போது அந்த வழியாக சந்தேகப்படும் படியாக வாலிபர் ஒருவர் நடந்து சென்றார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் அவர் கையில் வைத்து இருந்த கைப்பையை சோதனை செய்தனர். அதில் ரூ.8,400 ரொக்க பணம், 22 சிகரெட் பாக்கெட்டுகள், ஒரு சுத்தியல்,ஸ்குரு டிரைவர், ஸ்பேனர் ஆகியவை இருந்தது. போலீசார் அந்த வாலிபரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த செல்வக்குமார் (வயது 24) என்பது தெரிய வந்தது.

    செல்வகுமார் வடக்கிப்பாளையம் சுப்பையா நகரில் உள்ள முத்துக்குமார் (43) என்பவருக்கு சொந்தமான மளிகை கடையில் பூட்டை உடைத்து பணம், சிகரெட் பாக்கெட் ஆகியவற்றை கொள்ளையடித்தது தெரிய வந்தது.

    தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் செல்வகுமார் மீது சேலம் மாவட்டம் மேச்சேரி போலீஸ் நிலையத்துக்குட்பட்ட பகுதியில் 3-க்கும் மேற்பட்ட கொள்ளை வழக்குகள் பதிவாகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவர் கடந்த மாதம் 12-ந் தேதி தான் சேலம் ஜெயிலில் இருந்து வெளியே வந்துள்ளார். ஜெயிலில் இருந்து வெளியே வந்த சில நாட்களில் மீண்டும் கொள்ளை வழக்கில் கைதாகி உள்ளார்.

    கைது செய்யப்பட்ட கொள்ளையன் செல்வகுமாரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறார்கள். 

    • ‘ஹெல்மெட்’ அணிந்து கோவிலுக்குள் புகுந்து திருட்டில் ஈடுபட்ட கொள்ளையன், சி.சி.டி.வி. கேமிராவில் பதிவான காட்சி மூலம் தற்போது சிக்கினார்.
    • சுல்தான் செய்யது இப்ராகிம் அலி மீது வழிப்பறி, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.


    சாயல்குடி:

    ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே உள்ள இளஞ்செம்பூரில் முத்து இருளாயி அம்மன் கோவில் இருக்கிறது. சம்பவத்தன்று நள்ளிரவில் 'ஹெல்மெட்' அணிந்து வந்த மர்மநபர் ஒருவர், கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து உண்டியலில் இருந்த பணம் மற்றும் சாமி நகைகளை திருடினார்.

    கோவில் உண்டியல் உடைக்கப்படும் சத்தம் கேட்டு அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கோவிலுக்கு திரண்டு வந்தனர். இதையடுத்து அந்த மர்மநபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். பொதுமக்கள் வந்து பார்த்தபோது கோவில் உண்டியலில் இருந்த பணமும், சாமிக்கு அணிவித்திருந்த தங்கத்தாலி, வெள்ளி கிரீடம் உள்ளிட்டவைகளும் திருட்டுபோய் இருந்தது.

    இதுகுறித்து இளஞ்செம்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் அங்கிருந்த கண்காணிப்பு கேமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

    அதில் 'ஹெல்மெட்' அணிந்து வந்த ஒரு நபர் கோவிலுக்குள் புகுந்து உண்டியலை உடைத்த காட்சி பதிவாகி இருந்தது. அந்த நபர் யார்? என்று விசாரித்தபோது, அவர் பிரபல கொள்ளையனான பரமக்குடி சுப்பிரமணியன் கோவில் தெருவை சேர்ந்த சுல்தான் செய்யது இப்ராகிம் அலி (வயது 52) என தெரியவந்தது.

    இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து அம்மன் கோவிலில் திருட்டுபோன தங்கத்தாலி, வெள்ளி கிரீடம் மற்றும் உண்டியல் பணம் ரூ.5,750 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

    மேலும் அவர் மதுரை ஐகோர்ட்டு வக்கீல் என்று போலி அடையாள அட்டை வைத்திருந்தார். மனைவியை பிரிந்து வாழ்ந்த சுல்தான் செய்யது இப்ராகிம் அலி, வக்கீல் என போலி அடையாள அட்டையுடன் சுற்றி திரிந்து திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.

    'ஹெல்மெட்'அணிந்து திரிந்ததால் அவர் வெகுநாட்களாக சிக்காமல் இருந்துள்ளார். இந்நிலையில் 'ஹெல்மெட்' அணிந்து கோவிலுக்குள் புகுந்து திருட்டில் ஈடுபட்ட அவர், சி.சி.டி.வி. கேமிராவில் பதிவான காட்சி மூலம் தற்போது சிக்கினார்.

    சுல்தான் செய்யது இப்ராகிம் அலி மீது வழிப்பறி, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். அதுதொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. 

    • நடிகர் வடிவேல் பாணியில் ஓட்டி பார்ப்பதாக கூறி காரை திருடி சென்ற கொள்ளையன் கைது செய்யப்பட்டார்.
    • திண்டிவனம் மேம்பாலம் கீழ் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    விழுப்புரம்:

    திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் பகுதியை சேர்ந்தவர் அமர்ந்த லிங்கம் (வயது 25,) இவர் தனது மாருதி சுசுகி ஈகோ காரை 6 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்வதாக சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்திருந்தார். இதனை பார்த்த சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த சுலைமான் என்பவர் திண்டிவ னத்திற்கு வந்து அந்த காரை வாங்கிக் கொள்வதாக கூறினார். அதன்பேரில் பெயரில் அமிர்தலிங்கம் செய்யாறு பகுதியில் இருந்து அந்த காரை திண்டிவனம் ெரயில் நிலையத்திற்கு எடுத்து வந்தார். அப்பொழுது சுலைமான் நடிகர் வடிவேல் பாணியில் அந்த காரை ஓட்டி பார்த்து வாங்கிக் கொள்வதாக கூறி அவரிடம் தனது ஆதார் கார்டை கொடுத்து காரை ஓட்டி சென்றுள்ளார். காரை எடுத்துச் சென்ற சுலைமான் வெகுநேரமாக வராததால் திண்டிவனம் போலீஸ் நிலையத்தில் இது சம்பந்தமாக புகார் அளித்தார்.

    இது சம்பந்தமாக திண்டிவனம் ஏஎஸ்பி அபிஷேக் குப்தா, சப் இன்ஸ்பெக்டர் ஆனதராசன் தலைமையில் தனிப்படை அமைத்து சுலைமான் தந்தஆதார் கார்டில் இருந்த முகவரியில் போலீசார் விசாரித்ததில் அது போலியாக தயாரித்த ஆதார் கார்டு என்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து பல்வேறு இடங்களில் இருந்த சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் சோதனை செய்து விசாரணை செய்து வந்தனர். இந்த நிலையில் திண்டிவனம் மேம்பாலம் கீழ் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.சென்னை நோக்கி வந்த காரை சோதனை செய்தனர். அப்போது அதில் நம்பர் பிளேட் மாறி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று போலீசார் அவர்கள் பாணியில் விசாரித்தனர். விசாரணையில் அவர் அமிர்த லிங்கத்திடம் காரை திருடி சென்றது விசாரணையில் தெரிய வந்தது. அவர் மீது வழக்குப்பதிந்து கைது செய்து காரை மீட்டு அவரை சிறையில் அடைத்தனர்.

    • சங்கர் திருக்கார்த்திகை முடிந்து கடந்த 7-ந் தேதி அவர் வீடு திரும்பினார்.
    • பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த வெள்ளி நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.

    வடவள்ளி,

    கோவை சோமையம்பாளையம் மாங்கல்யன் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் (46). இவர் கடந்த 2-ந் தேதி தனது குடும்பத்தினருடன் திருவண்ணாமலை சென்றார்.

    திருக்கார்த்திகை முடிந்து கடந்த 7-ந் தேதி அவர் வீடு திரும்பினார். அப்போது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவரது வீட்டின் முன் பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது.

    உள்ளே சென்று பார்த்தபோது படுக்கையறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த வெள்ளி நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.

    இதுபற்றி சங்கர் வடவள்ளி போலீஸ்நிலையத்தில் புகார் செய்தார்.

    போலீசுார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் சங்கர் வீட்டில் கைவரிசை காட்டியது அதே பகுதியைச் சேர்ந்த தினேஷ்பாபு (வயது 29) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.

    தினேஷ்பாபு, கல்வீரம்பாளையம் நிவாசா கார்டன் பகுதியைச் சேர்ந்த தீபா (40) என்பவரது வீட்டிலும் கைவரிசை காட்டியதை ஒப்புக்கொண்டார். அந்த ெகாள்ளை தொடர்பாகவும் தினேஷ்பாபு மீது வழக்குப்பதிவு செய்யப்ப ட்டது.

    பின்னர் தினேஷ்பாபு கோர்ட்டில் ஆஜர்ப டுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்க ப்பட்டார்.

    கோவை ஓனப்பாளையம் அடுத்த உளியம்பாளையம் பகுதியில் மாகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் நேற்று முன்தினம் காலை பூஜை செய்வதற்காக கோவிலுக்கு சென்ற பூசாரி, கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து ஊர் பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கோவில் வளாகத்தில் பொருத்த ப்பட்டுள்ள சி.சி.டி.வி. காமிராயை ஆய்வு செய்தனர்.

    அதில் இரவு மர்ம நபர் கோவிலுக்கு புகுந்து கோவில் உண்டியலை உடைத்து பணத்தை எடுத்து செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.

    இதுகுறித்த சி.சி.டி.வி. காமிரா காட்சியுடன் தொண்டாமுத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • தங்கராஜ் (வயது 54). இவர் நேற்று அந்த பகுதியில் உள்ள பிள்ளையார் கோவில் அருகே நடந்து வந்து கொண்டிருந்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வமணியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    சேலம்:

    சேலம் வீராணம் அருகே உள்ள மேட்டுப்பட்டி தாதனூர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 54). இவர் நேற்று அந்த பகுதியில் உள்ள பிள்ளையார் கோவில் அருகே நடந்து வந்து கொண்டிருந்தார். அப் போது அவரை வழிமறித்த அதே பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி செல்வமணி(29) என்பவர் கத்தி முனையில் தங்கராஜ் பாக்கெட்டில் இருந்த ரூ.1350 பறித்துக் கொண்டார். இது குறித்து தங்கராஜ் வீராணம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வமணியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • பண்ருட்டியில் மோட்டார் சைக்கிள் கொள்ளையன் கைது செய்யப்பட்டார்.
    • சந்தேகத்தின் பேரில் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.

    கடலூர்:

    பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் தீவிர வாகனசோதனையில் ஈடுபட்டுஇருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த ஆசாமியிடம் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் முன்னுக்குப்பின் முரணாககூறியதால்.விசாரணை யில்பண்ரு ட்டி அருகே பகண்டை கிராமத்தை சேர்ந்தவர் ரகுபதி விவசாயி. இவரதுவீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை திருடி வந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அவரை கைது செய்து அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து நீதி மன்றத்தில் ஆஜர்செய்து சிறையில் அடைத்தனர்.

    • மயிலம் அருகே கோவிலில் திருடிய கொள்ளையன் கைது செய்யப்பட்டார்.
    • ஜெயின் கோவிலில் உண்டியலை உடைத்து திருடியதையும் ஒப்புக்கொண்டார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மயிலம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து கோவில் உண்டியல்களை உடைத்து பணம் மற்றும் காணிக்கை பொருட்கள் திருடப்பட்டு வந்தது. இதேபோல் விளங்கம்பாடி அய்யனாரப்பன் கோவிலில் உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் பணம் மற்றும் காணிக்கை பொருட்களை திருடி சென்றுள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர்.

    இந்நிலையில் மயிலம் அருகே கீழ் எடையாளம் கிராமத்தை சேர்ந்த ஹேமச்சந்திரன்(வயது19), என்பவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அய்யனாரப்பன் கோயில் உண்டியலை உடைத்து திருடியதும், கீழ எடையாளம் பகுதியில் உள்ள ஜெயின் கோவிலில் உண்டியலை உடைத்து திருடியதையும் ஒப்புக்கொண்டார். இதனையடுத்து 1750 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்த போலீசார், அவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • கொள்ளையர்களை பிடிக்க சப்-இன்ஸ்பெக்டர் சரவணகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டிருந்தது.
    • தனிப்படை போலீசார் கொள்ளை நடந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் பெருவிளை பள்ளவிளை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். இவரது மனைவி மேரி கலா (வயது 32).

    இவர் தனது மகனுடன் அருமநல்லூர் பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கடந்த 11-ந்தேதி மொபட்டில் சென்று இருந்தார். பின்னர் அவர் வீட்டிற்கு திரும்பி கொண்டு இருந்தபோது மேரிகலா கழுத்தில் கிடந்த 4½ பவுன் நகையை மர்மநபர் பறித்து சென்றார். இது குறித்து மேரி கலா பூதப்பாண்டி போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் முத்துராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். கொள்ளையர்களை பிடிக்க சப்-இன்ஸ்பெக்டர் சரவணகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டிருந்தது. தனிப்படை போலீசார் கொள்ளை நடந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    அப்போது மேரிகலாவிடம் நகை பறித்த கொள்ளையன் குறித்த அடையாளங்கள் தெரியவந்தது. இதையடுத்து அவரை பிடிக்க தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நேற்று இரவு போலீசார் முட்டைக்காடு புது காலனி பகுதியைச் சேர்ந்த சிபு (வயது 33) என்பவரை கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட சிபுவிடம் விசாரணை நடத்திய போது மேரிகலாவிடம் நகையை பறித்ததை ஒப்புக்கொண்டார். கொள்ளையடித்த நகையை அந்த பகுதியில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் அடகு வைத்து செலவு செய்ததாக கூறினார்.

    இதையடுத்து போலீசார் அந்த நகையை மீட்டனர். கைது செய்யப்பட்ட சிபுவிடம் விசாரணை நடத்தியபோது அவர், தக்கலை பகுதியில் மினி பஸ் டிரைவராக வேலை பார்த்து வந்தது தெரிய வந்துள்ளது. இவர் மீது பழவூர், அஞ்சுகிராமம், கன்னியாகுமரி, சுசீந்திரம், மணவாளக்குறிச்சி, இரணியல் பகுதியில் 15-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளது.

    கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட சிபு ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தார். பின்னர் வெளியே வந்து அவர் சென்னைக்கு சென்று உள்ளார். பின்னர் ஊருக்கு வந்த அவருக்கு செலவுக்கு பணம் இல்லை. இதனால் நகை திருடியது தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட சிபுவிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • பண்ருட்டி பகுதியில் கைவரிசை காட்டிய கொள்ளையன் கைது செய்யப்பட்டார்.
    • மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் 3 கடைகளிலும் பூட்டை உடைத்து திருடி சென்றனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்தவர் தர்மராஜ். இவரது ஸ்டூடியோவின் பூட்டை உடைத்து 1.50 லட்சம் மதிப்பிலான காமிரா மற்றும் 10 ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர். மேலும் அருகில் இருந்த ரவி என்பவரது மருந்து கடையிலிருந்து பூட்டை உடைத்து மருந்துகளை திருடி சென்றனர். இதுதவிர தாமோதரன் மெட்டல் கடையை பூட்டு உடைத்து 20 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை திருடி சென்று உள்ளனர். இது குறித்து பண்ருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் உத்தரவின் பேரில் டெல்டா பிரிவு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பாபு மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில், அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு காமிராக்களை சோதனை செய்தபோது, மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் 3 கடைகளிலும் பூட்டை உடைத்து திருடி சென்றனர். பின்னர் அங்கு செட்டிபாளையம் அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு செல்கின்றனர்.

    இதுகுறித்து டெல்டா பிரிவு போலீசார் சந்தேகத்தின் பேரில் வாலிபர் ஒருவரை பிடித்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் எஸ்.மலையனூர் சேர்ந்த ஆறுமுகம் (வயது 28) என்பது தெரிய வந்தது. மேலும் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதும், மேலும் ஒரு நபர் இவருடன் இணைந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. உடனே ஆறுமுகத்தை போலீசார் கைது செய்தனர். இதுமட்டுமின்றி மர்ம நபர்கள் திருட்டு சம்பவத்திற்கு ஈடுபடுவதற்காக அங்குசெட்டிபாளையம் பகுதியில் இருந்த மோட்டார் சைக்கிளை திருடிக் கொண்டு பண்ருட்டி பகுதிக்கு வந்து உள்ளனர். பின்னர் 3 கடைகளில் பூட்டை உடைத்து பொருட்களை திருடி மீண்டும் மோட்டார் சைக்கிளை அதே பகுதியில் மோட்டார் சைக்கிளை விட்டு விட்டு சென்றது தெரியவந்துள்ளது. அதன் பிறகு தாங்கள் கொண்டு வந்த மோட்டார் சைக்கிளில் இருந்து தப்பி சென்ற சம்பவம் குறித்து பரபரப்பு தகவல்கள் தெரிய வந்துள்ளன. இந்த நிலையில் ஆறுமுகம் மீது ஏற்கனவே கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பது தெரியவந்தது. மேலும் மற்றொரு மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

    ×