தலைமறைவாக இருந்த கொள்ளையன் கைது

பாஸ்கர் (வயது 40). இவர் மீது சேலம் அஸ்தம்பட்டி போலீஸ் நிலையத்தில் வழிப்பறி உள்பட 3 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரை போலீசார் தேடி வந்தனர். கோர்ட்டிலும் அவர் ஆஜர் ஆகாததால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.
தலைமறைவாக இருந்த கொள்ளையன் கைது
Published on

சேலம்:

அரியலூர் மாவட்டம் அந்தோணியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 40). இவர் மீது சேலம் அஸ்தம்பட்டி போலீஸ் நிலையத்தில் வழிப்பறி உள்பட 3 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இவரை போலீசார் தேடி வந்தனர். கோர்ட்டிலும் அவர் ஆஜர் ஆகாததால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப் பட்டது. இதனால் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் சேலம் டவுன் ரெயில்வே போலீ சாரிடம் நேற்று இரவு அவர் சிக்கினார். அவரை ரெயில்வே போலீசார் அஸ்தம்பட்டி போலீசாரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வரும் போலீசார், பாஸ்கரை சிறையில் அடைக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com