மலை பாதையில் வாகனங்கள் இயக்க முடியாமல் வாகன ஓட்டிகள் அவதி

சேலம் மாவட்டம் ஏற்காடடில் கடந்த 3 நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது.நேற்று காலையும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் மதியம் 2 மணிக்கு மேல் லேசான மழையாக பெய்தது.
மலை பாதையில் வாகனங்கள் இயக்க முடியாமல் வாகன ஓட்டிகள் அவதி
Published on

ஏற்காடு:

சேலம் மாவட்டம் ஏற்காடடில் கடந்த 3 நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்று காலையும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் மதியம் 2 மணிக்கு மேல் லேசான மழையாக பெய்தது. சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக பெய்து வந்த மழை மாலை 5 மணிக்கு மேல் கனமழையாக கொட்டியது.

ஏற்காடு மலைப்பாதையில் பெய்த மழையால் வாகனங்களை இயக்க முடியாமல் வாகன ஓட்டிகள் கடும் சிரமமடைந்தனர். மேலும் மலைபாதையில் உள்ள அருவிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து கொட்டுகிறது. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஏற்காட்டில் குளிரின் தாக்கமும் அதிகமாக நிலவுகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com