என் மலர்
நீங்கள் தேடியது "Mahadeepam in Shiva temples"
- கார்த்திகை தீபத்தை யொட்டி, சேலம் சுகவனேஸ்வரர் கோயிலில் இன்று காலை 6 மணிக்கு மூலவர் சுகவனேஸ்வரர், சொர்ணாம்பிகை அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், விபூதி உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், அலங்கார ஆராதனை நடைபெற்றது.
- மாலை 6 மணிக்கு உற்சவர் சோமாஸ்கந்தர், சண்முகர் சாமிக்கு பூஜை நடக்கிறது.
சேலம்:
கார்த்திகை தீபத்தை யொட்டி, சேலம் சுகவனேஸ்வரர் கோயிலில் இன்று காலை 6 மணிக்கு மூலவர் சுகவனேஸ்வரர், சொர்ணாம்பிகை அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், விபூதி உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், அலங்கார ஆராதனை நடைபெற்றது.
தொடர்ந்து காலை நடராஜர் சன்னதியில்பரணி தீபம் ஏற்றப்பட்டது. மாலை 6 மணிக்கு உற்சவர் சோமாஸ்கந்தர், சண்முகர் சாமிக்கு பூஜை நடக்கிறது.பின்னர் மூலவர் சன்னதியில் இருந்து தீபம் ஏற்றுவது தொடங்கப்படுகிறது.
இதை அடுத்து உட்பிரகாரத்தில் சோமாஸ் கந்தர், சண்முகம் சாமி புறப்பாடு நடக்கிறது. வெளி பிரகாரத்தில் சொக்கப் பனை எரிப்பு முடிந்த பின்பு, கோவில் முன்பு உள்ள 2 தீப தூண்களில் மகாதீபம் ஏற்றப்படுகிறது. பின்னர் சோமாஸ்கந்தர், சண்முகர் திருவீதி உலா சின்ன கடை வீதி, 2-வது அக்ரஹாரம் வழியாக வலம் வருகிறது.
கோவிலில் ஏற்றப்படும் தீபம் 2 நாட்கள்தொடர்ந்து எரிய நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. இதையொட்டி, மகாதீபம் ஏற்றப்படும் தூண்களில் தற்காலிகமாக சாரம் கட்டப்பட்டுள்ளது. மேலும் திருவீதி உலாசெல்லும் வாகனங்கள் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல், சேலம் கோட்டை மாரியம்மன், தாரமங்கலம் கைலாச நாதர், பேளூர் தான்தோன்றீஸ்வரர், ஆத்தூர் காயநிர்ம லேஸ்வரர், ஆறகளூர் காமநாதீஸ்வரர் உள்பட சேலம் மாவட்டத்தில் உள்ள சிவன், அம்மன், விநாயகர், முருகன் கோவில்களில் கார்த்திகை தீபத்தையொட்டி மகா தீபம் ஏற்றப்படுகிறது. சேலம் பழைய பஸ் நிலையம், கடைவீதி, வின்சென்ட், அஸ்தம்பட்டி, குகை, தாதகாப்பட்டி, நெத்திமேடு, செவ்வாய்பேட்டை, அம்மாப்பேட்டை, தேர்நிலையம், 2-வது அக்ரஹாரம் உள்பட பல பகுதிகளில், மண் அகல் விளக்குகள் விற்பனைக்காக குவிக்கப் பட்டுள்ளது. இதை பெண்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். ஒரு விளக்கு ரூ.5 முதல் ரூ.50 வரை விற்பனை செய்யப்பட்டது.






