search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rowdy Arrest"

    இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த ரவுடியை போலீசார் சுட்டுப்பிடித்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    மதுரை:

    மதுரை அண்ணாநகர் செண்பக தோட்டம் பகுதியைச் சேர்ந்தவன் குருவி விஜய் (வயது 27), பிரபல ரவுடியான இவன் மீது வழிப்பறி உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    இதனால் போலீசார் அவனை தேடி வந்தனர். இதையறிந்த குருவி விஜய் கடலூர், தென்காசி மாவட்டங்களுக்கு சென்று தலைமறைவு வாழ்க்கை நடத்தினான். அங்கும் அவன் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டு வந்தான். இதனால் அவன் மீது அங்குள்ள போலீஸ் நிலையங்களிலும் பல்வேறு வழக்குகள் பதிவாயின.

    இந்த நிலையில் நேற்று இரவு குருவி விஜய் மதுரை வந்தான். பின்னர் அவன் தனது நண்பரான வண்டியூர் மெயின் ரோட்டைச் சேர்ந்த கார்த்தி என்ற மவுலி (28) என்பவருடன் சேர்ந்து செண்பக தோட்டம் பகுதியில் உள்ள ஒரு பூங்கா அருகே அமர்ந்து மது குடித்துக் கொணடிருந்தான்.

    அப்போது அண்ணாநகர் காமராஜர் தெருவைச் சேர்ந்த 24 வயது பெண் தனது மாமாவுக்கு சாப்பாடு கொடுத்து விட்டு மொபட்டில் வீட்டிற்கு திரும்ப முயன்றார்.

    அவர் மொபட்டில் வருவதை பார்த்ததும் குருவி விஜய்யும், கார்த்தியும் அந்த பெண்ணை வழிமறித்தனர். இதனால் பயந்து போன அந்த பெண் மொபட்டை நிறுத்தினார். உடனே 2 பேரும் அவரை தங்களுடன் வருமாறும், இல்லையென்றால் கத்தியால் குத்திக்கொன்று விடுவதாகவும் மிரட்டினார்கள். பின்னர் இருவரும் அந்த பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றனர்.

    இதனால் பயத்தில் அந்த பெண் அலறினார். சத்தம் கேட்டு அருகில் வீட்டில் இருந்த அவரது மாமா அங்கு ஓடிவந்து காப்பாற்ற முயன்றார். உடனே 2 ரவுடிகளும் அவரை சரமாரியாக தாக்கினர். இதில் நிலைக்குலைந்த அவர் கீழே விழுந்தார். உடனே அவர் இது பற்றி போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

    ஆனால் போதையில் இருந்த குருவி விஜய்யும், கார்த்தியும் அந்த பெண்ணை தரதரவென் இழுத்துச் சென்று பூங்கா அருகில் நின்று கொண்டிருந்த வேனுக்குள் தள்ளினார்கள். பின்னர் 2 பேரும் மாறி மாறி அந்த பெண்ணை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

    இது பற்றி அறிந்த அண்ணா நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் குமரன், சப்-இன்ஸ்பெக்டர் சிவராமகிருஷ்ணன் ஆகியோர் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் ரவுடிகளை பிடிக்க முயற்சி செய்தனர். ஆனால் அவர்கள் இன்ஸ்பெக்டர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் மீது கற்களை எடுத்து சரமாரியாக வீசிவிட்டு தப்பி ஓட முயன்றனர். இந்த கல்வீச்சில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமரன் நெஞ்சில் காயம் ஏற்பட்டது.

    இதையடுத்து இன்ஸ்பெக்டர் அவர்களை நோக்கி துப்பாக்கியால் ஒரு ரவுண்டு சுட்டார். இதில் ரவுடி குருவி விஜய் காலில் குண்டு பாய்ந்தது. இதனால் அலறி அடித்து ஓடி அவன் கீழே விழுந்தான். உடனே போலீசார் அவனை மடக்கிப்பிடித்தனர்.

    அவனது கூட்டாளி கார்த்தி போலீசாரிடம் இருந்து தப்பி ஓட்டம் பிடித்தான். அப்போது அவன் கீழே தவறி விழுந்ததில் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே போலீசார் அவனையும் சுற்றி வளைத்து பிடித்தனர். 2 பேரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கைதான கார்த்தி மீதும் போலீசில் கஞ்சா கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

    குண்டு காயம் ஏற்பட்ட ரவுடி குருவி விஜய் மதுரை ராஜாஜி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளான். அங்கு அவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணிடம் நடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த ரவுடியை போலீசார் சுட்டுப்பிடித்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    அமைந்தகரையில் போலீஸ் என்று கூறி பணம் கேட்டு மிரட்டிய 2 ரவுடிகளை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் சாலை ரெயில்வே காலனி 1-வது தெருவில் டீக்கடை நடத்தி வருபவர் ஞானவேல்.

    இவரது டீக்கடைக்கு நேற்று முன்தினம் மாலை வந்த 2 பேர் நாங்கள் போலீஸ் என்று கூறினர். இங்கு கடை நடத்த வேண்டும் என்றால் எங்களுக்கு ரூ.40ஆயிரம் பணம் கொடுக்க வேண்டும் என்று ஞானவேலை மிரட்டினர்.

    சந்தேகமடைந்த கடை ஊழியர் பாண்டியன் உடனடியாக அமைந்தகரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த இன்ஸ்பெக்டர் பெருந்துறை முருகன் மற்றும் போலீசார் பணம் கேட்டு மிரட்டிய இருவரையும் பிடிக்க முயன்றனர். போலீசாரை கண்டதும் இருவரும் தப்பி ஓடினர். அவர்களை போலீசார் துரத்திச் சென்று மடக்கி பிடித்து கைது செய்தனர்.

    போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் பூந்தமல்லியைச் சேர்ந்த சதீஷ் என்கிற கல்லறை சதீஷ் (29) சூளைமேட்டைச் சேர்ந்த மதிவாணன் (33) என்பது தெரியவந்தது. அமைந்தகரை பகுதியில் உள்ள பல்வேறு கடைகளில் மிரட்டி பணம் வசூல் செய்து சொகுசு வாழ்க்கை அனுபவித்து வந்துள்ளனர்.

    கைது செய்யப்பட்ட கல்லறை சதீஷ் மீது திருவேற்காடு, பூந்தமல்லி, கே.கே.நகர், அமைந்தகரை, குன்றத்தூர் காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன.

    திருப்பூர் அடுத்த வஞ்சிபாளையம் அருகே டாஸ்மாக் பாரில் ஊழியர்களை வெட்டி கொள்ளையடித்த வழக்கில் ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
    திருப்பூர்:

    திருப்பூரை அடுத்த வஞ்சிபாளையம் அருகே டாஸ்மாக் கடை உள்ளது. அதையொட்டி தனபால் என்பவருக்கு சொந்தமான பாரும் உள்ளது. டாஸ்மாக் கடையில் நளேந்திரன் (வயது 50) என்பவர் விற்பனையாளராகவும், பாரில் சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலை அடுத்த வேலங்குடி கிராமத்தை சேர்ந்த கண்ணப்பன் (37) என்பவர் காசாளராகவும் வேலை பார்த்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த 16-ந்தேதி அதிகாலை 3 பேர் கொண்ட கும்பல் ஒரு காரில், கையில் அரிவாளுடன் டாஸ்மாக் கடை மற்றும் பாருக்கு சென்றது. பின்னர் உள்ளே சென்ற 3 பேரும் டாஸ்மாக் கடை மற்றும் பாரில் உள்ள பணத்தை கொடுக்குமாறு நளேந்திரன், கண்ணப்பன் ஆகியோரிடம் அரிவாளை காட்டி மிரட்டி உள்ளனர். ஆனால் அவர்கள் பணம் இல்லை என்று கூறியதால், ஆத்திரமடைந்த அந்த கும்பல் நளேந்திரன் மற்றும் கண்ணப்பனை அரிவாளால் வெட்டியது.

    மேலும் கண்ணப்பனிடம் இருந்த ரூ.2 ஆயிரம், ஏ.டி.எம். கார்டு ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து அந்த கும்பல் தப்பி சென்றது. இதில் படுகாயமடைந்த கண்ணப்பன், நளேந்திரனை சக ஊழியர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து திருமுருகன்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் திருப்பூர் காலேஜ் ரோட்டில் திருமுருகன்பூண்டி போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினார்கள்.

    இதில் அந்த நபர் முன்னுக்கு பின் முரணாக பேசியதை தொடர்ந்து அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் விசாரித்தனர்.

    இதில் அவர் ஊத்தங்கரையை அடுத்த பெரிய தள்ளப்பாடி பகுதியை சேர்ந்த கதிர் (27) என்பதும், தற்போது திருப்பூர் சாமுண்டிபுரம் முதல் வீதியில் தங்கி இருப்பதும் தெரிய வந்தது. மேலும் வஞ்சிபாளையம் அருகே டாஸ்மாக் கடை மற்றும் பாரில் 2 பேரை அரிவாளால் வெட்டி விட்டு, பணத்தை கொள்ளையடித்து சென்றவர் இவர்தான் என்பது தெரிய வந்தது.

    இதையடுத்து கதிரை கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்ற 2 பேர் தலைமறைவாகி விட்டனர். போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.

    கைது செய்யப்பட்ட கதிர் மீது புதுச்சேரியில் கொலை வழக்கும், இளையாங்குடி, காளையார்கோவில் போலீஸ் நிலையங்களில் வழிப்பறி வழக்குகளும், திருப்பூர் 15 வேலம்பாளையம் போலீஸ் நிலையத்தில் கொலை முயற்சி, வழிப்பறி உள்பட 8-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதும், பிரபல ரவுடி என்றும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
    சீர்காழியில் தொழிலதிபர்களை பிரபல ரவுடிகள் பணம் கேட்டு மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சீர்காழி:

    சீர்காழி பகுதியை சேர்ந்த அ.தி.மு.க பிரமுகர் ரமேஷ்பாபு கடந்த ஆண்டு ஜூலை மாதம் பிடாரி வடக்கு வீதியில் தனியார் பஸ் அதிபரை பார்ப்பதற்காக அவரது வீட்டுவாசலில் காரில் காத்துக்கொண்டிருந்த போது கூலிப்படையினர் நாட்டுவெடிகுண்டை வீசி அரிவாளால் வெட்டி அவரை கொலை செய்தனர்.

    இந்த வழக்கில் தொடர்புடைய சீர்காழியை அடுத்த புதுத்துறை ராமகிருஷ்ணன் மகன் பார்த்தீபன் (வயது 29). திருவாரூர் ஆதனூர் மண்டபம் பகுதியை சேர்ந்த கட்டபிரபு என்கிற அருண்பிரபு ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு பார்த்தீபன், அருண்பிரபு ஆகியோர் ஜாமீனில் வெளியே வந்தனர். இந்நிலையில் சீர்காழி பகுதியில் உள்ள முக்கிய தொழில் அதிபர்களை மர்ம நபர் ஒருவர் தொடர்பு கொண்டு பணம் கேட்டு மிரட்டி வந்துள்ளார்.

    இதுகுறித்து சீர்காழி போலீசில் தொழிலதிபர்கள் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் தொழிலதிபர்களுக்கு பணம் கேட்டு மிரட்டல் விடுத்தது அ.தி.மு.க பிரமுகர் கொலை வழக்கில் ஜாமீனில் வெளிவந்த பார்த்தீபன் என தெரியவந்தது.

    அதனை தொடர்ந்து போலீசார் பார்த்தீபனை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று இரவு தென்பாதி உப்பனார் பாலம் அருகே சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு மற்றும் போலீசார் வாகனதணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை கைகாட்டி தடுத்தனர்.

    அப்போது கார் நிற்காமல் சென்றுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் காரை விரட்டி சென்று மடக்கினர். அப்போது காரில் பயங்கர ஆயுதங்களுடன் பிரபல ரவுடிகளான பார்த்தீபன் மற்றும் அருண்பிரபு ஆகியோர் இருப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்து கார் மற்றும் அவர்களிடம் இருந்த பயங்கர ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    பின்னர் அவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    மாதவரத்தில் பதுங்கி இருந்த கூலிப்படை ரவுடிகள் 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை:

    சென்னை மாதவரம் பகுதியில் அரியானா மாநிலத்தைச் சேர்ந்த கூலிப்படை ரவுடிகள் 6 பேர் பதுங்கி இருந்தனர்.

    இவர்களை பிடிக்க அரியானா மாநில போலீஸ் டி.ஐ.ஜி. சதீஷ்பாலியான் தலைமையிலான தனிப்படை போலீசார் சென்னை வந்தனர். மாதவரம் பகுதியில் கூலிப்படை கும்பல் பதுங்கி இருந்த இடத்தை நேற்று இரவு முற்றுகையிட்டனர். அப்போது மாதவரம் போலீசாரும் பாதுகாப்புக்காக சென்றனர்.

    பின்னர் துப்பாக்கிமுனையில் ரவுடிகளை மடக்கி பிடித்து கைது செய்தனர். அரியானாவைச் சேர்ந்த சுபாஷ், மதன்சர்மா, அனில், சந்தீப், ராகுல்சிங், சுமித் ஆகிய 6 பேர் பிடிபட்டனர்.

    இவர்கள் அனைவரையும், சென்னையில் இருந்து அரியானா மாநிலத்துக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    அரியானா கூலிப்படைக்கு சென்னையைச் சேர்ந்த ரவுடிகள் சிலர் தான் அடைக்கலம் கொடுத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. கூலிப்படை கும்பல் அரியானாவில் இருந்து சென்னை வந்தது எப்படி? என்பது பற்றி மாதவரம் போலீசாரும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சேலத்தில் இன்று ஒரே நாளில் பிரபல ரவுடிகள் உள்பட 27 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேலம்:

    சேலம் மாநகரில் குற்றங்களை குறைக்கும் பொருட்டு, போலீஸ் கமி‌ஷனர் சங்கர் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றார்.

    அந்த வகையில் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் யார்? யார்? என்பதை கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

    இதனை தொடர்ந்து போலீசார், ரவுடிகளை கைது செய்து ஜெயிலில் அடைத்து வருகின்றனர்.

    இதன் தொடர்ச்சியாக இன்று குற்றப்பின்னணி உடைய தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த அன்னதானப்பட்டியை சேர்ந்த ஜவகர், வளத்திகுமார், சின்னதிருப்பதியை சேர்ந்த பிளேடு செல்வம் என்கிற பன்னீர்செல்வம், அமானி கொண்டலாம்பட்டி பகுதியை சேர்ந்த சரவணன் என்கிற மாட்டுக்கார சரவணன், அஸ்தம்பட்டி கன்னாங்காட்டை சேர்ந்த பிரதாப், வீராணம் பள்ளிப்பட்டியை சேர்ந்த நாட்டாமை செல்வம் உள்பட 27 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

    மேலும் போலீஸ் துணை கமி‌ஷனர் தங்கதுரை அஸ்தம்பட்டி, குமாரசாமி, வின்சென்ட் உள்ளிட்ட பகுதிகளில் வசித்து வரும் ரவுடிகளுடைய வீடுகளுக்கு சென்று எச்சரித்தார். இனிமேல் குற்றச் செயல்களில் ஈடுபட்டால், குண்டர் சட்டத்தில் அடைக்கப்படுவீர்கள் என கூறினார்.

    அப்போது பயந்து போன பெற்றோர்கள் எங்கள் மகனை விட்டு விடுங்கள். பொதுமக்களுக்கும், பொதுச் சொத்துக்களுக்கும் இடையூறு செய்யமாட்டார்கள், குற்றச் செயல்களில் ஈடுபட மாட்டார்கள் எனக் கூறி கதறி அழுதனர்.

    இதைபோல் துணை கமி‌ஷனர் சியாமளாதேவி கிச்சிப்பாளையம், எஸ்.எம்.சி. காலனி, கஸ்தூரிபாய் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று ரவுடிகளை எச்சரித்தார். திருந்தி வாழுமாறும், இல்லையென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ரவுடிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

    கைது செய்யப்பட்ட ரவுடிகள் 27 பேர் மீது போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன. ஒரே நாளில் பிரபல ரவுடிகள் உள்பட 27 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.அதுமட்டுமின்றி ரவுடிகள் மத்தியிலும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இது குறித்து போலீசார் கூறுகையில், குற்றப் பின்னணி உடைய நபர்களை தொடர்ந்து கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதன் மூலம் குற்றமில்லாத மாநகரமாக மாற்றப்படும் என்றும் தெரிவித்தனர்.

    சூளைமேட்டில் ரவுடி தினேஷ்குமாரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை:

    சென்னை சூளைமேடு போலீசார் தங்கள் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது ஜாபர்கான் பேட்டையை சேர்ந்த பிரபல ரவுடி தினேஷ்குமார் தனது நண்பரை பார்க்க சூளைமேடு பகுதிக்கு வந்தார்.

    அப்போது ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசாரிடம் தினேஷ்குமார் சிக்கினார். அவரை போலீசார் கைது செய்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

    தி.மு.க. கவுன்சிலர் கோபி, மயிலாப்பூரை சேர்ந்த ரவுடி மகேஷ் ஆகிய 2 பேரை கொலை செய்த வழக்கு ரவுடி தினேஷ்குமார் மீது உள்ளது. மேலும் 30-க்கும் மேற்பட்ட வழக்குகளும் அவர் மீது உள்ளன. அது தொடர்பாக அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    காஞ்சிபுரம் ரவுடி ஸ்ரீதரின் கூட்டாளிகள் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தை சேர்ந்த பிரபல ரவுடி ஸ்ரீதர். போலீசார் தேடுவதை அறிந்த அவன் வெளிநாடு தப்பி சென்று இருந்தான்.

    கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஸ்ரீதர், கம்போடியா நாட்டில் உள்ள ஓட்டலில் திடீரென சயனைடு தின்று தற்கொலை செய்து கொண்டான்.

    இதைத் தொடர்ந்து ஸ்ரீதரின் கூட்டாளிகளாக இருந்த தனிகா மற்றும் தினேஷ் ஆகியோர் இரு பிரிவாக பிரிந்தனர். அவர்களுக்குள் யார் பெரியவர் என்பதில் மோதல்கள் ஏற்பட்டு வந்தன.

    இதனால் ரவுடி ஸ்ரீதரின் இறப்புக்கு பின்னரும் காஞ்சிபுரம் பகுதிகளில் தொடர்ந்து குற்ற செயல்கள் நடந்து வந்தன.

    இந்த நிலையில் சிறையில் இருந்த தினேஷ் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியே வந்தார். கடந்த வாரம் பொன்னேரிக்கரை அருகே ஆயுதங்களுடன் சுற்றிய அவனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஏற்கனவே ரவுடி தனிகா குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.

    இதற்கிடையே ரவுடி தினேசின் கூட்டாளிகளான சின்ன காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த சரவணன், காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவில் தெருவை சேர்ந்த சதீஷ்குமார் ஆகிய 2 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

    பொன்னேரிக்கரை அருகே காரில் ஆயுதங்களுடன் சுற்றிய அவர்கள் 2 பேரும் போலீசில் சிக்கி உள்ளனர். அவர்களிடம் இருந்து 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இருவரும் தனித்தனி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    காஞ்சிபுரத்தில் ரவுடிகளின் அட்டகாசத்தை ஒடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

    சேலம் அருகே கத்தி முனையில் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட பிரபல ரவுடியை போலீசார் கைது செய்தனர்.

    சேலம்:

    சேலம் கந்தம்பட்டியை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 45). இவர் நேற்று அந்த பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த தொளசம்பட்டியை சேர்ந்த பிரபல ரவுடி மாரியப்பன் (56) என்பவர் கத்தியை காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த ஒரு பவுன் செயினை பறித்தார்.

    இது குறித்து பழனிசாமி சூரமங்கலம் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மாரியப்பனை கைது செய்தனர். மாரியப்பன் மீது ஏற்கனவே செவ்வாய்ப்பேட்டை போலீஸ் நிலையம் உள்பட பல்வேறு போலீஸ் நிலையங்களில் 13 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    சென்னையில் ஒரேநாளில் 62 ரவுடிகளை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை:

    சென்னையில் தொடர்ச்சியாக படுகொலை சம்பவங்கள் நடந்து வருகின்றன. சென்னை அரும்பாக்கத்தில் ரவுடி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. புளியந்தோப்பிலும் ரவுடி ஒருவர் கொலை செய்யப்பட்டார்.

    எனவே சென்னை நகரில் மீண்டும் ரவுடிகள் அட்டூழியம் தலை தூக்கலாம் என்று கருதி ரவுடிகளை பிடிக்க போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார்.

    சென்னையில் உள்ள போலீஸ் நிலையங்களில் ரவுடிகளின் சரித்திர பதிவேடு உள்ளது. அதில் உள்ள ரவுடிகளை பிடிக்க உத்தரவிடப்பட்டது.

    இந்தநிலையில் சென்னை கிழக்கு போலீஸ் இணை கமி‌ஷனர் பாலகிருஷ்ணன் தனது பகுதிக்கு உட்பட்ட இடங்களில் ரவுடிகளை பிடிக்கும் நடவடிக்கையை தீவிரப்படுத்த உத்தரவிட்டார்.

    அதன்படி மயிலாப்பூர், கீழ்ப்பாக்கம், திருவல்லிக்கேணி உள்ளிட்ட போலீஸ் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதியில் நேற்று ஒரே நாள் இரவில் மட்டும் 62 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் போலீஸ் நிலையங்களில் உள்ள ரவுடிகள் சரித்திர பதிவேட்டில் இடம்பெற்றவர்கள் ஆவர்.

    பீர்க்கன்கரணையில் துப்பாக்கியுடன் ரவுடியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தாம்பரம்:

    பீர்க்கன்கரணை பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர்.

    காரில் அதே பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி சூர்யா இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து காரில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது கைத்துப் பாக்கி இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் அதனை பறிமுதல் செய்தனர்.

    சூர்யாவின் கூட்டாளிகளான ராஜசேகர், முத்துக்குமார் ஆகியோரும் பிடிபட்டனர். 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.

    சூர்யா மீது கொலை வழக்குகள் உள்ளன. தனது எதிராளிகளை சுட்டுக் கொல்வதற்காக அவர் கைத்துப்பாக்கியை காரில் பதுக்கி வைத்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக் கிறார்கள். இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறர்கள். துப்பாக்கியின் பின்னணி குறித்தும் விசாரணை நடக்கிறது.

    ரவுடி சூர்யா, எதிர் கோஷ்டியை சேர்ந்த வினோத், தேசிங்குராஜா ஆகியோரை கொலை செய்ய திட்டம் தீட்டியதாக தகவல் வெளியாகி உள்ளன.

    திருமங்கலத்தில் பல்வேறு கொலை வழக்கில் தொடர்புடையவர் ரவுடி டாக் ரவி. கொடுக்கல், வாங்கல் பிரச்சினையில் ஒருவரை கொல்ல முயற்சி செய்ததாக கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

    பேரையூர்:

    மதுரை, திண்டுக்கல், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் ரவுடியாக வலம் வந்தவர் டாக் ரவி என்ற ரவிக்குமார் (வயது 47). இவர் மதுரை எல்லீஸ் நகரில் குடியிருந்து வருகிறார்.

    இவர் மீது முன்னாள் அமைச்சர் ஆலடி அருணா, வரிச்சியூர் செல்வத்தின் தம்பி இளங்கோ கொலை வழக்கு உள்ளிட்ட 4 கொலை வழக்குகள் உள்பட 24 வழக்குகள் உள்ளன.

    2014-ம் ஆண்டுக்கு பின் இவர் மீது வழக்கு எதுவும் பதிவாகவில்லை. தற்போது 2 வழக்குகள் மட்டும் நிலுவையில் உள்ளது.

    இந்த நிலையில் திருமங்கலம் அருகேயுள்ள எர்ர மலம்பட்டியைச் சேர்ந்த பீட்ராமன் (45) என்பவரிடம் டாக் ரவி என்ற ரவிக்குமார் ரூ.1 லட்சம் வாங்கியதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று திருமங்கலம் அருகே உள்ள மறவன்குளம் தனியார் ஆம்புலன்ஸ் நிறுவனத்திற்கு டாக் ரவி வந்ததாகவும், அப்போது பிட்ராமன் தான் கொடுத்த 1 லட்ச ரூபாய் பணத்தை கேட்டதற்கு டாக் ரவி ஆபாசமாக பேசியதோடு, காலி பீர் பாட்டிலை எடுத்து கொலை செய்யும் நோக்கத்துடன் அவரை குத்த முயன்றதாக தெரிகிறது.

    பின்னர் ராமனின் இருசக்கர வாகனத்தை அடித்து நொறுக்கியதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து ராமன் கொடுத்த புகாரின் அடிப்படையில் ரவுடி ராக் ரவி கைது செய்யப்பட்டார். திருமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×