search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "roads"

    • இந்த சாலையை பொதுமக்கள் மட்டுமின்றி, தேயிலை தோட்ட தொழிலாளர்களும் பயன்படுத்தி வருகின்றனர்.
    • அத்தியாவசிய பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்கள், பிற வாகனங்கள் பழுதடைந்த சாலையின் நடுவே நின்று விடுகிறது.

    பந்தலூர்

    பந்தலூர் அருகே மழவன் சேரம்பாடியில் இருந்து கொளப்பள்ளி, டேன்டீ ரேஞ்ச் எண்.2, காவயல் வழியாக புஞ்சகொல்லிக்கு சாலை செல்கிறது. இந்த சாலையை பொதுமக்கள் மட்டுமின்றி, தேயிலை தோட்ட தொழிலாளர்களும் பயன்படுத்தி வருகின்றனர். அப்பகுதி மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்கவும், ரேஷன் கடைக்கு வந்து செல்லவும் மழவன் சேரம்பாடி வழியாக கொளப்பள்ளி, குறிஞ்சி நகர், அய்யன்கொல்லிக்கு வந்து செல்கிறார்கள்.


    இந்தநிலையில் மழவன் சேரம்பாடி முதல் புஞ்சகொல்லி வரை சாலை பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. தற்போது பெய்து வரும் மழையால் குழிகளில் தண்ணீர் தேங்கி, குளம்போல் காணப்படுகிறது. இதனால் அவசர தேவைக்கு வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும் அத்தியாவசிய பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்கள், பிற வாகனங்கள் பழுதடைந்த சாலையின் நடுவே நின்று விடுகிறது. 

    இந்த சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தனர். இருப்பினும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பள்ளி மாணவ-மாணவிகள் நடந்து செல்ல முடியாமல் அவதியடைந்து வருகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

    மழவன் சேரம்பாடியில் இருந்து புஞ்சகொல்லி வரை செல்லும் சாலையில் காட்டு யானைகள் நடமாட்டம் உள்ளது. சாலை பழுதடைந்து உள்ளதால், யானைகள் துரத்தினால் கூட ஓட முடியாத அவல நிலை இருக்கிறது. குழிகளில் தண்ணீர் நிரம்பி இருப்பதால், மேலும் குழிகள் பெரிதாகி வருகிறது. எனவே, குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • பா்லியாறு போன்ற பகுதிகளில் அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான தோட்டங்கள் உள்ளது.
    • மேட்டுப்பாளையம் மலைப் பாதையில் அவ்வப்போது யானைகள் கூட்டம் வந்து செல்கின்றன.

    ஊட்டி

    நீலகிரி மாவட்டம், குன்னூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளான ஹில்குரோவ், குரும்பாடி, பா்லியாறு போன்ற பகுதிகளில் அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான தோட்டங்கள் உள்ளது.


    இங்கு தோட்டங்களில் உள்ள பலா மரங்களில் பலாப் பழங்கள் விளைந்துள்ளன. இவற்றை உண்பதற்காக குன்னூா்- மேட்டுப்பாளையம் மலைப் பாதையில் அவ்வப்போது யானைகள் கூட்டம் வந்து செல்கின்றன.


    எனவே, சுற்றுலா வாகன ஓட்டிகள், இருசக்கர வாகனத்தில் செல்பவா்கள் மிகவும் கவனமுடன் இந்த சாலையில் பயணிக்க வேண்டும் என்று குன்னூா் வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.

    • அடிப்படை வசதிகள் செய்துதர ரூ.88 லட்சம் நிதி ஒதுக்கீடு
    • ஒன்றிய குழு தலைவர் தகவல்

    திருப்பத்தூர்:

    கந்திலி ஒன்றிய குழு கூட்டம் கந்திலி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் திருமதி திருமுருகன் தலைமை வகித்தார்.

    அனைவரையும் வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாவதி வரவேற்றார், ஒன்றிய குழு துணை தலைவர் ஜி மோகன் குமார் முன்னிலை வகித்தார், கூட்டத்தில் நடைபெற்ற விவாதங்கள் வருமாறு:-

    திருமதி திருமுருகன் ஒன்றிய குழு தலைவர்; ஒன்றியக் குழு உறுப்பினர்கள் தங்கள் ஊராட்சி பகுதிகளில் குடிநீர், சாலை, பள்ளி கட்டிடம், உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க தலா ரூ4, லட்சம் வீதம் ரூ.88 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    சின்னத்தம்பி (அதிமுக) மட்றபள்ளி கிராமத்தில் வார சந்தைக்கு குறைந்தது 1000 மாடுகள், ஆடுகள், விற்பனைக்கு வருகிறது மாடுகளை லாரியில் இருந்து இறக்க சாய்வு தளம் ஏற்படுத்தி தர வேண்டும்

    டாக்டர் லீலா சுப்ரமணியம் (அதிமுக;) ஆதியூரிலிருந்து எலவம்பட்டி செல்லும் சாலையில் மின்சார கம்பிகள் 3 அடி மேலே கையில் தொடும் அளவில் உள்ளது. இதனால் விபத்துக்கள் நேரலாம் உடனடியாக கந்திலி ஒன்றியம் சார்பில் மின்சார துறைக்கு கடிதம் எழுதி மின்சார கம்பிகளை உயர்த்தி கட்ட வேண்டும், மேலும் ஆதியூர் முதலியார் தெரு பகுதியில் தண்ணீர் ஏற்படுத்தி தர வேண்டும், ஆலமரத்து வட்டம் பகுதிக்கு சாலை அமைத்து தர வேண்டும்

    சாந்தகுமார் (திமுக;) : அருந்ததியர் காலனி வீடுகள் முழுவதும் பழுதடைந்து உள்ளது உடனடியாக புதிய வீடு கட்டி தர வேண்டும் அல்லது அந்த வீடுகளை பழுது பார்த்து தர வேண்டும், ஒன்றிய கவுன்சிலர்களுக்கு வழங்கப்படும் நிதியை உயர்த்தி தரவேண்டும், லக்கினநாரக்கன்பட்டியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் போடப்பட்டு வரும் தார் சாலை இரண்டு வருடமாக போடப்படாமல் குண்டும் குழியுமாக உள்ளது உடனடியாக சாலை போட நெடுஞ்சாலைத்து றையினருக்கு கடிதம் எழுத வேண்டும்.

    தலைவர் அனைத்து கோரிக்கைகளும் உடனடியாக செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்

    கந்திலி ஊராட்சி உடையாமுத்தூர் சமத்துவபுரத்தில் வீடுகள் புனரமைப்பு செய்ய வெளிப்புறத்தில் கம்பி வேலிகள் அமைக்கவும் அங்கன்வாடி கழிப்பறைகள் பழுது பார்ப்போம். பெரியார் சிலைக்கு சுற்று சுவர் அமைக்க ரூ 6 லட்சத்து 25 ஆயிரம் செலவு செய்ய பொது நிதியிலிருந்து நிதி ஒதுக்கலாம். உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது‌ இறுதியில் வட்டார வளர்ச்சி அலுவலர் துரை நன்றி கூறினார்‌.

    தமிழகத்தில் காடுகள், மலைகள் மற்றும் சாலைகளில் பேனர்கள் மற்றும் விளம்பரங்கள் வைக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. #LSPolls #BanOnBanners
    புதுடெல்லி:

    பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரசாரம் மற்றும் தேர்தல் விளம்பரங்கள் செய்வதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. தேர்தல் பிரசாரம் மற்றும் விளம்பரங்களுக்கு தேர்தல் ஆணையம் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

    இந்நிலையில், இயற்கை வளங்களை பாதிக்கும் வகையில் விளம்பரங்கள் செய்வதை தடுக்கக் கோரி வழக்கறிஞர் யானை ராஜேந்திரன், உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார்.



    அவர் தனது மனுவில், “இயற்கை வளங்களான மலைகள், குன்றுகள், பாறைகள், மரங்கள் மற்றும் அரசு சொத்துகளான நெடுஞ்சாலை பாலங்கள், சுவர்கள், ரெயில் பாலங்களில் அரசியல் கட்சியினர், வணிக நிறுவனங்கள், மத அமைப்புகள் தங்களது விளம்பரங்களை செய்கின்றனர். இதனால் அவற்றின் இயற்கை அழகு கெடுவதுடன், வாகன ஓட்டிகளும் சிரமம் அடைந்து வருகின்றனர். நடைபாதைகளை மறைத்தும் சாலையோரங்களிலும் சாலைகளின் நடுவிலும் விளம்பர போர்டுகளை வைக்கின்றனர். தற்போது தேர்தல் நேரம் என்பதால் இதற்கு தடை விதிக்க வேண்டும்.” என கூறியிருந்தார்.

    இந்த மனுவை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு விசாரித்து, தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டது. அதன்படி தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்நிலையில் இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் பதில் மனு மற்றும் மனுதாரரின் கோரிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

    நீதிபதிகள் தங்கள் உத்தரவில், இயற்கை வளங்களான மலைகள், காடுகள் மற்றும் சாலைகளில் விளம்பர பேனர்கள் வைக்க தடை விதிப்பதாக தெரிவித்தனர். இந்த உத்தரவை தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். #LSPolls #BanOnBanners
    ஐக்கிய அரபு அமீரகத்தில் பரவலாக ஆலங்கட்டி மழை பெய்தது. சாலையில் கிடந்த ஐஸ்கட்டிகளால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
    புஜேரா :

    ஐக்கிய அரபு அமீரக நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. ஆனால் புஜேரா, உம் அல் குவைன் மற்றும் ராசல் கைமா உள்ளிட்ட பகுதிகளில் இதுவரை இல்லாத வகையில் திடீரென்று ஆலங்கட்டி மழை பெய்தது.

    பொதுவாக வானில் இருந்து மழைத்துளிகள் ஐஸ்கட்டிகளாக மாறி பொழிவது ‘ஆலங்கட்டி மழை’ அல்லது ஐஸ் கட்டிமழை எனப்படுகிறது. சாதாரண மழையோடு ‘ஆலங்கட்டிகள்’ விழுவதை பார்த்திருக்கலாம். பெரும்பாலும் இவை முழுவதுமாக ஐஸ்கட்டிகளாக விழுவதில்லை.

    ஆனால் நேற்று அமீரகத்தில் முதல்முறையாக ஒரு ‘கோல்ப்’ பந்து அளவில் ஐஸ்கட்டிகள் சடசடவென்று விழுந்தன. ஐஸ்கட்டிகள் விழுந்ததால் பயந்துபோன சிலர் ஒதுங்க இடம்தேடி ஓடி சென்றனர்.

    இதனால் வாகனங்கள் சாலைகளில் செல்ல தடுமாறின. சிலமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. சாலையில் கிடந்த ஐஸ் கட்டிகளில் சிலர் விளையாடியும் மகிழ்ந்தனர்.
    ×