search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Property tax"

    • சொத்து வரியை 30-ந்தேதிக்குள் செலுத்தினால் ஊக்கத்தொகை பெறலாம் என பெரம்பலூர் நகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார்
    • சொத்துவரியை செலுத்துபவர்களுக்கு செல்போனுக்கு குறுந்தகவல் அனுப்பப்படும்.

    பெரம்பலூர்:

    தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் சட்டம் 1998- பிரிவு 84 (1)-ன்படி பெரம்பலூர் நகராட்சி எல்லைக்குட்பட்ட சொத்துக்களின் உரிமையாளர்கள் தங்களது 2023-24-ம் ஆண்டின் முதல் அரையாண்டுக்கான சொத்துவரியை ஏப்ரல் 30-ந்தேதிக்குள் செலுத்தினால் 5 சதவீத தொகை கட்டணச்சலுகையாக அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. சொத்துவரியை செலுத்துபவர்களுக்கு செல்போனுக்கு குறுந்தகவல் அனுப்பப்படும்.

    வரித்தொகையை செலுத்துவதற்கு வசதியாக நகராட்சி அலுவலக கணினி வசூல் மையங்கள், வங்கி ஏ.டி.எம். அட்டை மற்றும் கிரெடிட் அட்டைகள், காசோலை, வரைவோலை மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனை வாயிலாக சொத்துவரி செலுத்துவதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. எனவே இந்த வாய்ப்பினை பயன்படுத்தி அரையாண்டு சொத்துவரியை இம்மாத இறுதிக்குள் செலுத்தி தாங்களும் பயன்அடைந்து, நகராட்சி நிர்வாகத்திற்கும் துணைபுரியுமாறு பெரம்பலூர் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ராதா தெரிவித்துள்ளார்.

    • சனி - ஞாயிறு விடுமுறை நாட்களில் காங்கயம் நகராட்சி அலுவலகத்தில் உள்ள கணினி வரி வசூல் மையம் செயல்படும்.
    • சொத்து வரித் தொகையில் 5 சதவீதம் ஊக்கத் தொகையாக வழங்கப்படும் என நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    காங்கயம்:

    காங்கயம் நகராட்சி ஆணையர் எஸ்.வெங்கடேஷ்வரன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    காங்கயம் நகர பொதுமக்கள் காங்கயம் நகராட்சிக்கு 2023-2024-ம் ஆண்டுக்கான செலுத்த வேண்டிய சொத்து வரியை வரும் 30-ந் தேதிக்குள் செலுத்தினால் சொத்து வரித் தொகையில் 5 சதவீதம் ஊக்கத் தொகையாக வழங்கப்படும் என நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இந்தநிலையில் பொதுமக்கள் மேற்கண்ட சொத்து வரியை செலுத்துவதற்கு வசதியாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்களில் காங்கயம் நகராட்சி அலுவலகத்தில் உள்ள கணினி வரி வசூல் மையம் செயல்படும். எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு காங்கயம் நகராட்சிப் பகுதி மக்கள் சொத்து வரியை வரும் 30 -ந் தேதிக்குள் செலுத்தி பயனடையவும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அரியலூர் நகராட்சியில் 30-ம் தேதிக்குள் சொத்து வரி செலுத்தினால் 5 சதவீதம் ஊக்கத்தொகை பெறலாம் என கலெக்டர் ரமணசரஸ்வதி அறிவித்தார்
    • டிஜிட்டல் பரிவர்த்தனை வாயிலாக சொத்து வரி செலுத்தவும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், அரியலூர் நகராட்சியில் 2023-2024-ம் ஆண்டின் முதல் அரையாண்டிற்கான சொத்து வரியினை வரும் 30-ந் தேதிக்குள் செலுத்தும் சொத்து உரிமையாளர்கள் ஊக்கத்தொகை பெற தகுதியுடையவர் ஆகிறார்கள். சொத்து உரிமையாளர்கள், சொத்து வரியினை தங்களது இல்லம் தேடி வரும் வரி வசூலிப்பாளர்கள் மற்றும் நகராட்சி அலுவலக வசூல் மையம் ஆகியவற்றில் கடன் மற்றும் பற்று அட்டை, காசோலை மற்றும் வரைவோலை மூலமாகவும் டிஜிட்டல் பரிவர்த்தனை வாயிலாக சொத்து வரி செலுத்தவும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    எனவே அரியலூர் நகராட்சி எல்லைக்குட்பட்ட சொத்து உரிமையாளர்கள் தங்களது சொத்து வரியை வரும் 30 ஆம் தேதிக்குள் செலுத்தி 5 சதவீத ஊக்கத்தொகையை பெறலாம். இதன் மூலம் நகர்பகுதிகளில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டு உள்ளார்.


    • சொத்து வரியினை வரும் 30-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.
    • 5 சதவீத ஊக்கத்தொகையினை பெற்று பயன்பெறலாம்.

    பவானி:

    பவானி நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) கதிர்வேல் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

    தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி பகுதிகளில் உள்ள சொத்து உரிமை யாளர்கள் தங்களது 2023- 2024-ம் ஆண்டின் முதல் அரையாண்டிற்கான சொத்து வரியினை வரும் 30-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.

    இதன் மூலம் சொத்து உரிமையாளர்களுக்கு 5 சதவீதம் ஊக்கத்தொகை பெற தகுதி உடையவர்கள் ஆகிறார்கள். அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் வரை ஊக்கத்தொகை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

    அதன் படி பவானி நகராட்சி சார்பில் சொத்து வரியினை தங்களது இல்லம் தேடி வரும் வரி வசூலிப்பாளர்கள் மற்றும் நகராட்சி அலுவலகத்தில் அமைந்துள்ள வசூல் மையத்தில் காசோலை, வங்கி வரைவோலை மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் வாயிலாக சொத்து வரி செலுத்தவும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    எனவே பவானி நகராட்சி எல்லைக்குட்பட்ட சொத்து உரிமையாளர்கள் தங்களது சொத்து வரியினை வரும் 30-ந் தேதிக்குள் செலுத்தி 5 சதவீத ஊக்க தொகை யினை பெற்று பயன்பெறலாம்.

    இதன் மூலம் நகராட்சி பகுதியில் மேற்கொள்ளப்ப டும் வளர்ச்சி திட்ட பணிகளில் தங்கள் பங்களி ப்பினை வழங்கிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • வருகிற 30-ந் தேதிக்குள் சொத்துவரி செலுத்தும் உரிமையாளர்களுக்கு 5 சதவீத ஊக்கத்தொகை வழங்கப்படும்.
    • மாநகராட்சி மேயர் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் சட்டம் 1998-க்கு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு 13.4.2023 முதல் தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் விதிகள் 2023 நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் சட்டம் 1998 பிரிவு 84(1)ல், அரை யாண்டுக்கான சொத்துவரியை முதல் 30 நாட்களுக்குள் செலுத்தும் உரிமையாளர்களுக்கு 5 சதவீதம் ஊக்கத் தொகை அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் வரை வழங்கப்படும்.

    அதன்படி மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள உரிமையாளர்கள் தங்களது 2023-24 ஆண்டின் முதல் அரையாண்டிற்கான சொத்துவரியை வருகிற 30-ந் தேதிக்குள் செலுத்தும் உரிமையாளர்களுக்கு ஊக்கத்தொகை பெற தகுதியுடையவர் ஆகிறார்கள். ஏப்ரல் 30-ந் தேதிக்குள் சொத்துவரி செலுத்தும் உரிமையாளர்களுக்கு 5 சதவீதம் ஊக்கத் தொகை வழங்கப்படும்.

    மதுரை மாநகராட்சி 100 வார்டு பகுதிகளில் உள்ள உரிமையாளர்களுக்கு குறுந்தகவல் அனுப்புதல், மாநகராட்சி மைய அலுவ லகம் மற்றும் 5 மண்டல அலுவலகங்களில் அறிவிப்பு பலகைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் பதாகைகள் வைத்தல், ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்தல், ரேடியோ, செய்தித்தாள்கள் மற்றும் உள்ளுர் கேபிள் தொலைக்காட்சி வாயிலாக சொத்துவரியை உரிமையாளர்கள் செலுத்து வதற்கு விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    சொத்து உரிமையாளர்கள், சொத்துவரியை மதுரை மாநகராட்சி அனைத்து வரி வசூல் மையங்கள் மற்றும் https://tnurbanepay.tn.gov.in என்ற இணையதளம் மற்றும் "TN Urban Esevai" செயலி வாயிலாக வரி செலுத்து வதற்கு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    மதுரை மாநகராட்சி 100 வார்டு பகுதிகளில் உள்ள சொத்து உரிமையாளர்கள் தங்களது சொத்துவரியை வருகிற 30-ந் தேதிக்குள் செலுத்தி 5 சதவீத ஊக்கத் தொகையை பெற்றிடுமாறும், மதுரை மாநகராட்சி பகுதி களில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சிப் பணிகளில் தங்களது பங்களிப்பை வழங்குமாறு மதுரை மாநகராட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மேலூர் நகராட்சியில் சொத்து வரி செலுத்துபவர்களுக்கு 5 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும்.
    • நகராட்சி ஆணையாளர் ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சி ஆணையாளர் ஆறுமுகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மேலூர் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய நடப்பு சொத்து வரிகளை நகராட்சி வரி வசூலிப்பாளர்கள் மூலம் மற்றும் நகராட்சி வசூல் மையம் மூலமாகவோ, காசோலை மற்றும் மின்னணு டிஜிட்டல் பரிவர்த்தனை வாயிலாகவோ ஏப்ரல் 30-ந் தேதிக்குள் செலுத்துபவர்களுக்கு ஊக்கத் தொகையாக 5 சதவீதம், அதாவது அதிகபட்சமாக ரூ.5000 வரை அளிக்கப்படும். எனவே நகராட்சிக்கு சொத்து வரி செலுத்தும் பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி வரும் ஏப்ரல் 30-ந் தேதிக்குள் தங்கள் சொத்து வரிகளை செலுத்தி அதற்கான ஊக்கத்தொகையை பெற்று கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் விதிகள் 2023 நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
    • டிஜிட்டல் பரிவர்த்தனை வாயிலாக சொத்துவரி செலுத்தவும் வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் கிரியப்பனவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் சட்டம் 1998-க்கு திருத்தங்கள் ேமற்கொள்ளப்பட்டு 13.4.2023 முதல் தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் விதிகள்2023 நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் சட்டம்1998 பிரிவு 84(1)ல் அரையாண்டுக்கான சொத்துவரியினை முதல் 30 நாட்களுக்குள் செலுத்தும் சொத்து உரிமையாளர்களுக்கு, 5 சதவீத ஊக்கத் தொகை அதிகபட்ச மாகரூ.5,000 வரை வழங்கப்படும்.

    அதன்படி சொத்து உரிமையாளர்கள் தங்களது 2023-24 ஆண்டின் முதல்அரையாண்டிற்கான சொத்துவரியினை ஏப்ரல் 30-ந் தேதிக்குள் செலுத்தும் சொத்து உரிமையாளர்கள் ஊக்கத்தொகை பெற தகுதியுடையவர் ஆகிறார்கள். எனவே, ஏப்ரல் 30-ந்தேதிக்குள் சொத்துவரியினை செலுத்தும் சொத்து உரிமையாளர்களுக்கு 5 சதவீதம் ஊக்கத் தொகை வழங்கப்படும்.சொத்துவரியினை, சொத்து உரிமையாளர்கள் செலுத்த பல்வேறு வகைகளான விழிப்புணர்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி சொத்து உரிமையாளர்களுக்கு குறுந்தகவல் அனுப்புதல், குரல் ஒலி அழைப்புகள், திருப்பூர்மாநகராட்சியின் அறிவிப்பு பலகைகளில் சொத்துவரி செலுத்துவது தொடர்பாக விழிப்புணர்வு செய்தி வெளியிடுதல், குப்பை அகற்றும் வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்தல், பண்பலை அலைவரிசை மூலம் சொத்துவரி செலுத்தக் கோரி ஒலிப்பரப்பு செய்தல், செய்தித்தாள்களில் விளம்ப ரங்கள் வெளியிடுதல் ஆகியவற்றின் மூலம் விழிப்புணர்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    சொத்து உரிமையாள ர்கள், சொத்துவரியினை தங்களது இல்லம் தேடி வரும்வரிவசூலிப்பாளர்கள், திருப்பூர் மாநகராட்சி அலுவலகங்களில் அமைந்து ள்ள அரசு இ-சேவை மையங்கள் ஆகியவற்றில் கடன் மற்றும் பற்று அட்டை, காசோலை மற்றும்வரை வோலை மூலமாகவும், திருப்பூர் மாநகராட்சி இணையதளம், NEFT and RTGS ஆகியவற்றின் மூலமாக டிஜிட்டல் பரிவர்த்தனை வாயிலாக சொத்துவரி செலுத்தவும் வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    எனவே திருப்பூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட சொத்து உரிமையாளர்கள் தங்களது சொத்துவரியினை ஏப்ரல் 30 -ந் தேதிக்குள் செலுத்தி 5 சதவீதம் ஊக்கத்தொகை யினை பெற்றிடுமாறும், திருப்பூர் மாநகரத்திற்கு மேற்கொள்ளப்படும் வளர்ச்சி பணிகளில் தங்களது பங்களிப்பினை வழங்க மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் தெரிவித்துள்ளார்.

    • ஏப்ரல் 30-ந் தேதிக்குள் செலுத்துபவர்களுக்கு வரி தள்ளுபடி செய்யப்படும்.
    • இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டுமாறு தெரிவித்துள்ளார்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் நகராட்சி ஆணையாளர் ஆர்.மோகன்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- வெள்ளகோவில் நகராட்சி பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்களது 2023- 2024ம் நிதியாண்டிற்கான, சொத்து வரியை இந்த மாதம் ஏப்ரல் 30-ந் தேதிக்குள் செலுத்துபவர்களுக்கு 5 சதவீத வரி தள்ளுபடி செய்யப்படும், எனவே இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டுமாறு தெரிவித்துள்ளார்.

    • இணையதளம் மூலம் டிஜிட்டல் பரிவர்த்தனையாகவும் செலுத்தலாம்.
    • 4 லட்சத்து 89 ஆயிரத்து 794 சொத்து உரிமையாளர்கள் ஊக்கத்தொகை பெற்றுள்ளனர்.

    சென்னை :

    பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பெருநகர சென்னை மாநகராட்சி சட்டப்படி அரையாண்டின் முதல் 15 நாட்களுக்குள் சொத்துவரி செலுத்தப்பட வேண்டும். இவ்வாறு 15 நாட்களுக்குள் செலுத்தும் சொத்து உரிமையாளர்களுக்கு 5 சதவீத ஊக்கத்தொகை அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் வரை வழங்கப்படும்.

    அதன்படி, ஏப்ரல் 1-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை 4 லட்சத்து 89 ஆயிரத்து 794 சொத்து உரிமையாளர்கள் ஊக்கத்தொகை பெற்றுள்ளனர். மேற்படி காலத்தில் ரூ.290.62 கோடி சொத்துவரி வசூல் செய்யப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் சட்ட திருத்தத்தின்படி 2023-24-ம் நிதியாண்டின் முதல் அரையாண்டுக்கான சொத்துவரியை ஏப்ரல் 30-ந் தேதிக்குள் செலுத்தும் சொத்து உரிமையாளர்கள் ஊக்கத் தொகை பெற தகுதியுடையவர் ஆகிறார்கள்.

    உரிமையாளர்கள் சொத்துவரியை தங்களது இல்லம் தேடி வரும் வரி வசூலிப்பாளர்கள், சென்னை மாநகராட்சி அலுவலகங்களில் அமைந்துள்ள அரசு இ-சேவை மையங்கள் மூலம் செலுத்தலாம்.

    நம்ம சென்னை மற்றும் பேடிஎம் செயலி, சென்னை மாநகராட்சி இணையதளம் மூலம் டிஜிட்டல் பரிவர்த்தனையாகவும் செலுத்தலாம்.

    எனவே, சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட சொத்து உரிமையாளர்கள் தங்களது சொத்துவரியை ஏப்ரல் 30-ந் தேதிக்குள் செலுத்தி ஊக்க தொகையை பெற்றிடுமாறும், சென்னை மாநகரத்துக்கு மேற்கொள்ளப்படும் வளர்ச்சிப் பணிகளில் தங்களது பங்களிப்பினை வழங்கிடவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அரசாணையில் குறிப்பிடப்பட்டது போல் சொத்துவரி உயர்த்தப்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் பொது மக்கள் உள்ளனர்.
    • சொத்துவரியை உயர்த்தினால் வீட்டு வாடகையையும் உயர்த்த வேண்டிய நிலை ஏற்படும்.

    சென்னை:

    தமிழகத்தில் 20 மாநகராட்சிகள், 124 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் உள்ளன. இவற்றில் கடந்த 1998-ம் ஆண்டு கடைசியாக சொத்துவரி உயர்த்தப்பட்டது. அதன்பிறகு சொத்துவரி உயர்த்தப்படவில்லை.

    இந்நிலையில் விலைவாசி உயர்வு, பணியாளர்களின் ஊதிய உயர்வு, பொது மக்களுக்கான அடிப்படை தேவைகளை நிறைவேற்றுதல், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தி பராமரித்தல் போன்றவற்றுக்கு கூடுதல் செலவானது. இதை கருத்தில் கொண்டு கடந்த ஆண்டு சொத்துவரி சீராய்வு செய்யப்பட்டது.

    அதன் தொடர்ச்சியாக கடந்த ஆண்டு சொத்து வரி உயர்த்தப்பட்டது. 25 சதவீதம், 50 சதவீதம், 75 சத வீதம், 100 சதவீதம் என 4 வகைகளாக சொத்துவரி உயர்த்தப்பட்டது. காலி மனைக்கு சொத்துவரி 100 சதவீதம் உயர்த்தப்பட்டது.

    மேலும் ஒவ்வொரு ஆண்டும் 6 சதவீதம் சொத்துவரி உயர்த்தப்படும் என்று அரசாணையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இந்நிலையில் கடந்த ஏப்ரல் 1-ந்தேதி முதல் புதிய நிதியாண்டு தொடங்கி உள்ள நிலையில் சொத்துவரி 6 சதவீதம் உயர்த்தப்படுமா என்ற கேள்வி பொது மக்களிடம் எழுந்துள்ளது. அரசாணையில் குறிப்பிடப்பட்டது போல் சொத்துவரி உயர்த்தப்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர்.

    கடந்த ஆண்டு சொத்து வரி பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் உடனே சொத்து வரியை உயர்த்தக்கூடாது என்று பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

    மேலும் மின்கட்டண உயர்வும் பொதுமக்களை பாதித்துள்ளது. இந்நிலையில் மீண்டும் சொத்து வரி உயர்வு என்றால் அதை தாங்கிக் கொள்ள முடியாது என்று பொதுமக்கள் கூறுகிறார்கள். சொத்துவரியை உயர்த்தினால் வீட்டு வாடகையையும் உயர்த்த வேண்டிய நிலை ஏற்படும்.

    எனவே அனைத்து தரப்பு மக்களும் இதனால் பாதிக்கப்படுவார்கள் என்பதால் சொத்துவரி உயர்வை இந்த ஆண்டு கைவிட வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

    • ராஜபாளையம் நகராட்சியில் சொத்துவரி குறைக்கப்படும் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. தகவல் தெரிவித்துள்ளார்.
    • இதுகுறித்த அறிவிப்பு சில நாட்களில் வெளியாகும்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் எம்.எல்.ஏ. தங்கபாண்டியன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ராஜபாளையம் நகராட்சியில் சொத்துவரி குறைப்பது தொடர்பாக அமைச்சர் கே.என்.நேருவையும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் அரசு கூடுதல் தலைமை செயலாளரையும், அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

    சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நேரத்தில் அரசு கூடுதல் தலைமை செயலாளரை நான் நேரில் சந்தித்து ராஜபாளையம் நகராட்சியில் சொத்து வரி குறைப்பது தொடர்பாக வலியுறுத்தினேன்.

    அதற்கு அவர் இன்னும் சில தினங்களில் ராஜபா ளையம் நகராட்சியில் சொத்து வரி குறைக்க அரசாணை வெளியிடப்படும் என்றார். ஆகவே அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனின் முயற்சியால் வருகிற ஏப்ரல் ராஜபாளையம் ெரயில்வே மேம்பாலம் எவ்வாறு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரவுள்ளதோ, எவ்வாறு குடிநீர் கட்டணம் குறைக்கப்பட்டதோ, அதேபோல் இன்னும் சில தினங்களில் ராஜபாளையம் நகராட்சியில் சொத்துவரி குறைக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சொத்து வரியை குறைக்க கோரி வருகிற 28-ந் தேதி முற்றுகை போராட்டம் நடக்கிறது
    • ராஜபாளையம் நகராட்சி வரி உயர்வு எதிர்ப்பு போராட்டக்குழுவின் கூட்டம் மாரியப்பன் தலைமையில் நடந்தது.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் நகராட்சி வரி உயர்வு எதிர்ப்பு போராட்டக்குழுவின் கூட்டம் மாரியப்பன் தலைமையில் நடந்தது. இதில் தமிழக விவசாயிகள் சங்கம், அறம் அறக்கட்டளை, முகநூல் நண்பர்கள், தெரசா நற்பணி இயக்கம், தென்னை விவசாயிகள் சங்கம், விருதுநகர் மாவட்ட நுகர்வோர் மையம், நேதாஜி ரத்ததான கழகம், தமிழ்ச் சங்கத்தை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    தமிழகத்திலேயே அதிகமாக வரிவிதித்துள்ள (சென்னை 12.40%, ராஜபாளையம் 20.80%) ராஜபாளையம் நகராட்சியில் சொத்து வரியை குறைக்க வலியுறுத்தியும், தாமிரபரணி தண்ணீருக்கு 3 மடங்கு (மாதம் ரூ.50 என்பதை 150 ஆக) உயர்த்தப்பட்டுள்ள வரி உயர்வை ரத்து செய்யக் கோரியும், ராஜபாளையம் நகரில் 5 ஆண்டுகளாக நடைபெறும் பாதாள சாக்கடை, தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டம், ரெயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தியும் நகராட்சி அலுவலகத்தை வருகிற 28-ந் தேதி முற்றுகையிடுவது என்று முடிவு செய்யப்பட்டது.

    ×