search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சொத்து வரியை குறைக்க கோரி முற்றுகை போராட்டம்
    X

    சொத்து வரியை குறைக்க கோரி முற்றுகை போராட்டம்

    • சொத்து வரியை குறைக்க கோரி வருகிற 28-ந் தேதி முற்றுகை போராட்டம் நடக்கிறது
    • ராஜபாளையம் நகராட்சி வரி உயர்வு எதிர்ப்பு போராட்டக்குழுவின் கூட்டம் மாரியப்பன் தலைமையில் நடந்தது.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் நகராட்சி வரி உயர்வு எதிர்ப்பு போராட்டக்குழுவின் கூட்டம் மாரியப்பன் தலைமையில் நடந்தது. இதில் தமிழக விவசாயிகள் சங்கம், அறம் அறக்கட்டளை, முகநூல் நண்பர்கள், தெரசா நற்பணி இயக்கம், தென்னை விவசாயிகள் சங்கம், விருதுநகர் மாவட்ட நுகர்வோர் மையம், நேதாஜி ரத்ததான கழகம், தமிழ்ச் சங்கத்தை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    தமிழகத்திலேயே அதிகமாக வரிவிதித்துள்ள (சென்னை 12.40%, ராஜபாளையம் 20.80%) ராஜபாளையம் நகராட்சியில் சொத்து வரியை குறைக்க வலியுறுத்தியும், தாமிரபரணி தண்ணீருக்கு 3 மடங்கு (மாதம் ரூ.50 என்பதை 150 ஆக) உயர்த்தப்பட்டுள்ள வரி உயர்வை ரத்து செய்யக் கோரியும், ராஜபாளையம் நகரில் 5 ஆண்டுகளாக நடைபெறும் பாதாள சாக்கடை, தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டம், ரெயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தியும் நகராட்சி அலுவலகத்தை வருகிற 28-ந் தேதி முற்றுகையிடுவது என்று முடிவு செய்யப்பட்டது.

    Next Story
    ×