search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Propaganda"

    • மாணவர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்டங்கள் குறித்து துண்டு பிரசுரங்கள் வழங்கப்படுகிறது.
    • அரசுப் பள்ளிகளில் கடந்த 17-ந்தேதி முதல் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு வாகன பிரச்சாரத்தை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சிவகுமார் தொடங்கி வைத்தார் .

    நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் திருநாவு க்கரசு, ஒருங்கிணைந்த பள்ளி கல்வி உதவித் திட்ட அலுவலர் ரமேஷ் குமார், உதவி திட்ட அலுவலர்ரா மலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இப்பிரச்சார வாகனம் அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்க ப்படும் நலத்திட்ட உதவிகள் குறித்து பொது மக்கள் கூடும் இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்து கிறது. மேலும் பொது மக்களுக்கு அரசு பள்ளிகளில் மாணவ ர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்டங்கள் குறித்து துண்டு பிர சுரங்கள் வழங்கப்படுகிறது.

    அரசுப் பள்ளிகளில் கடந்த 17-ந்தேதி முதல் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.இவ்வாய்ப்பை பயன்படுத்தி பயன்பெற தஞ்சாவூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பொதுமக்களுக்கு வேண்டு கோள் விடுத்துள்ளார்.

    • தீ தொண்டு வார விழாவை முன்னிட்டு நடைபெற்றது
    • ரெயில் நிலையத்தில் துண்டு பிரசுரம் விநியோகம்

    உடையார்பாளையம், 

    அரியலூர் மாவட்டம் செந்துறை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தின் சார்பாக தீ தொண்டு வார விழா நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) அழகானந்தம், சரவணன், சிங், செந்தமிழ்செல்வன் ஆகியோர் அடங்கிய குழு செந்துறை ரெயில் நிலையத்தில் பயணிகள் மற்றும் அலுவலர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரம் வழங்கினர்.

    • உயிர் நீத்த தீயணைப்பு வீரர்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
    • தீ விபத்து தடுப்பு குறித்து பிரச்சாரம் மேற்கொள்ளப்படும்.

    பூதலூர்:

    திருக்காட்டுப்பள்ளி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தில் ஒரு வாரம் தீ தொண்டு நாள் வாரம் அனுசரிக்கப்பட உள்ளது.தீயணைப்பு பணிகளின் போது உயிர் நீத்த தீயணைப்பு வீரர்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தப்ப ட்டது.

    திருக்காட்டுப்பள்ளி தீயணைப்பு நிலைய அதிகாரி சகாயராஜ், போக்குவரத்து அதிகாரி முருகன் ஆகியோர் தீயணைப்பு வீரர்கள் நினைவாக மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி னார்கள் .

    இந்தநிகழ்ச்சியில் திருக்காட்டுப்பள்ளி தீயணைப்பு நிலைய வீரர்கள் கலந்து கொண்டனர்.வரும் 20 ம் தேதி வரை தீ விபத்து தடுப்பு குறித்து பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தனர்.

    • தூய்மை குறித்த விழிப்புணர்வு பிரசாரம் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நடத்தப்பட்டு வருகிறது
    • கலெக்டர்,நகர்மன்ற தலைவர், ஆணையர்உள்ளிட்டோர் பங்கேற்பு

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் பழைய பஸ் நிலையத்தில் நகரங்களில் தூய்மைக்கான மக்கள் இயக்கம் என்னும் தலைப்பில் நகரப் பகுதிகளை தூய்மையாக வைத்துக் கொள்வது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. தூய்மையான சுற்றுச்சூழலை உறுதி செய்யும் பொருட்டு அனைத்து நகர்ப்புற உள்ளாட்சிகளில் பெருமளவிலான மக்கள் பங்கேற்புடன் ஒவ்வொரு மாதமும் 2 மற்றும் 4-வது சனிக்கிழமைகளில் தன்னார்வ அமைப்புகள், குடியிருப்போர் நலச் சங்கங்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பங்களிப்புடன் தீவிர தூய்மைப்பணிகள் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், ஒவ்வொரு மாதமும் 3-வது புதன்கிழமைகளில் திடக்கழிவு மேலாண்மை மற்றும் தூய்மை குறித்த விழிப்புணர்வு பிரசாரம் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நடத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் நேற்று முன்தினம் இந்த உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் கற்பகம் தலைமையில் நகர்மன்ற தலைவர் அம்பிகா ராஜேந்திரன், நகராட்சி ஆணையர் ராதா மற்றும் நகர்மன்ற கவுன்சிலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், துப்புரவு பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • கரூரில் பள்ளி மாணவர் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டார்
    • வீடு வீடாக துண்டு பிரசுரம் விநியோகம்

    கரூர்,

    உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கரூர் அடுத்த ராமேஸ்வரப்பட்டியை சேர்ந்த ஏழாம் வகுப்பு பள்ளி மாணவன் விஷ்வக் நித்தின் கரூர் ஐந்து ரோடு அமராவதி ஆற்று படுகையில், தனது பெற்றோர் மற்றும் குழுவினருடன் இணைந்து ஆற்றில் அசுத்தம் கலப்பதால் ஏற்படும் தீங்குகள் குறித்த செயல் விளக்க பிரச்சாரத்தை நடத்தினார்.இதுகுறித்த விழிப்புணர்வு துண்டறிக்கைகளை பொதுமக்களுக்கு வீடு வீடாக வழங்கி பிரச்சாரம் மேற்கொண்டார்.தொடர்ந்து அவர் கரூரில் உள்ள அமராவதி ஆற்றங்கரையோரம் மற்றும் வாங்கல், மோகனூர், ஆகிய பகுதியில் காவிரி ஆற்றங்கரை ஓரங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கு நீர் நிலைகளில் இயற்கை உபாதையை கழிப்பதால் ஏற்படும் தீங்குகள் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.


    • நுகர்வோர் பாதுகாப்பு தெருமுனை பிரச்சாரம் நடந்தது
    • துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினர்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் நல மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கம் சார்பில் நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த தெருமுனை பிரச்சாரம் நடந்தது. பிரச்சாரத்திற்கு மாவட்ட தலைவர் அண்ணாதுரை தலைமை வகித்தார். செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் மணிமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக அஸ்வின்ஸ் குழும தலைவர் கணேசன் கலந்து கொண்டு கொடியசைத்து தெருமுனை பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார்.

    இக்குழுவினர் முக்கிய வீதிகள் வழியாக சென்று நுகர்வோர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மேலும் துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் அளித்து நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தனர். இந்த பிரச்சாரம் பழைய பஸ்ஸ்டாண்ட் பகுதியில் முடிவடைந்தது.

    • சுற்றுச்சூழல் உடல்நலம் சார்ந்த பிரசாரத்தோடு 20 ஆயிரம் கி.மீ. தூரத்தை சைக்கிளில் கடந்து சாதனை.
    • சைக்கிளில் செல்லும்போது கடைபிடிக்க வேண்டிய சாலை விதிகள்.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை புதுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மிதிவண்டி பயணம் உடல்நலன் மற்றும் சுற்றுச்சூழல் நலன் மாணவர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

    இதற்கு பள்ளி தலைமையாசிரியர் நித்தையன் தலைமை வகித்தார்.

    பட்டதாரி ஆசிரியர் செல்வசிதம்பரம் வரவேற்று பேசினார்.

    இதில் சிறப்பு அழைப்பாளராக சுற்றுச்சூழல் உடல்நலம் சார்ந்த பிரசாரத்தோடு 20 ஆயிரம் கி.மீ. தூரத்தை மிதிவண்டியில் கடந்து சாதனை படைத்துள்ள அரசுப்பள்ளி ஆசிரியர் சுரேஷ் மாணவர்களுக்கு உடல் நலன், சுற்றுச்சூழல் நலன், மிதிவண்டியில் செல்லும்போது கடைபிடிக்க வேண்டிய சாலை விதிகள் மற்றும் மிதிவண்டி தொடர்பான ஆலோசனைகளை வழங்கி பேசினார்.

    இதில் கல்விக்குழு தலைவர் மெட்ரோ மாலிக், வட்டார வளமைய பயிற்றுனர்கள் ஸ்ரீதர், சுரேஷ், ஆசிரியர்கள் ஆரோக்கிய அந்தோணி ராஜா, அன்பரசு, முத்துலட்சுமி, இந்திரா, அமிர்தம், பெல்சி ராணி, வனிதா, செல்வக்குமார், சங்கீதா, விதைக்கும் கரங்கள் நந்தா ஜீவானந்தம், கலாம் கனவு இயக்க பொருளாளர் கிஷோர் உட்பட பலரும் கலந்துக்கொண்டனர்.

    • விழிப்புணர்வு பரப்புரை பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளார்.
    • இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    குத்தாலம்:

    பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளையின் சார்பில் அதன் நிறுவனர் டாக்டர். ராமதாஸ் தமிழ்நாட்டில் அனைத்து துறைகளில் இருந்தும் காணாமல் போன "தமிழை தேடி" என்ற தலைப்பில் விழிப்புணர்வு பரப்புரை பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளார்.

    சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தொடங்கிய இந்த பிரச்சார பயணத்தின் ஒரு பகுதியாக மயிலாடுதுறை அருகே குத்தாலம் கடைவீதியில் நேற்று நடைபெற்ற பிரச்சாரத்துக்கு பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை தலைவர் ஜி.கே.மணி தலைமை தாங்கினார். திமுக முன்னாள் எம்எல்ஏ குத்தாலம் பி.கல்யாணம், தமிழ் அறிஞர்கள் முத்துசானகிராமன், விழிகள் சி.ராஜ்குமார் உட்பட பலர் முன்னிலை வகித்தனர்.

    இக்கூட்டத்தில் பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை நிறுவனர் டாக்டர். ராமதாஸ் கூறியதாவது:-

    தமிழைத் தேடிக் கொண்டு செல்வது பெருமை ப்படக்கூடிய ஒன்று அல்ல. அது நமக்கு தலைகுனிவு என்றார்.

    நமது அடையாளம் மற்றும் அன்னை தமிழை நாம் இழந்து விட்டோம் என்று அவர் பேசினார்.இக்கூட்டத்தில், பாமக மாவட்ட செயலாளர் லண்டன் அன்பழகன், மாவட்ட செயலாளர் சித்தமல்லி பழனிசாமி, இளைஞரணி துணைத் தலைவர் விமல், மூத்த நிர்வாகிகள் குத்தாலம் கணேசன், தங்கஅய்யாசாமி, வக்கீல் சுரேஷ் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • கோட்டை முதல் குமரி வரை தமிழகம் முழுவதும் இருசக்கர வாகனத்தில் சென்று பிரசாரம்.
    • தடையை மீறி பிரசார பயணம் மேற்கொள்ளக் கூடாது.

    தஞ்சாவூர்:

    இந்து மக்கள் கட்சி சார்பில் வருகிற 29ஆம் தேதி கடலூரில் சனாதன இந்து தர்ம எழுச்சி பேரணி, மாநாடு, பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் மாநிலத் தலைவர் அர்ஜூன் சம்பத் கலந்து கொள்கிறார்.

    இந்த மாநாடு வெற்றி பெறுவதற்காகவும், வலு சேர்ப்பதற்காகவும் கோட்டை முதல் குமரி வரை தமிழகம் முழுவதும் இருசக்கர வாகனத்தில் சென்று பிரசாரம் மேற்கொள்ள இந்து மக்கள் கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் பெரிய கோவில் கார்த்தி முடிவு செய்தார்.

    அதன்படி அவர் இன்று தஞ்சை பெரிய கோவில் முன்பு சோழன் சிலை அருகே இருந்து தனது இருசக்கர வாகன பிரசார பயணத்தை தொடங்க முயன்றார். இதை அறிந்த மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா தலைமையிலான போலீசார் விரைந்து வந்து தடையை மீறி பிரசார பயணம் மேற்கொள்ளக் கூடாது என கூறி கார்த்தியை கைது செய்தனர்.

    இந்த சம்பவத்தால் தஞ்சையில் பரபரப்பு ஏற்பட்டது.

    • காளையார்கோவிலில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • நீட் தேர்வுக்கு விதி விலக்கு பெறுவோம் என தி.மு.க.வினர் பிரசாரம் செய்தார்கள்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் அ.தி.மு.க. சார்பில் தி.மு.க. அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் பழனிசாமி தலைமை தாங்கி னார். ஒன்றிய செயலா ளர்கள் சிவாஜி, ஸ்டீபன் அருள்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    நீட் தேர்வுக்கு விதி விலக்கு பெறுவோம் என தி.மு.க.வினர் பிரசாரம் செய்தார்கள். ஆனால் ஆட்சிக்கு வந்தபிறகு எதையும் செய்யவில்லை. ஊழல் செய்யவில்லை என தற்போதுள்ள தி.மு.க. அமைச்சர்கள் சத்தியம் செய்ய தயாரா? அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை எல்லாம் தி.மு.க. அரசு நிறுத்திவிட்டது. தி.மு.க. ஆட்சியில் விலைவாசி உயர்வு காரணமாக பொதுமக்கள் கடும் இன்னல்களை சந்தித்து வருகிறார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் ஒன்றிய பெருந்தலைவர் ராஜேஸ்வரி கோவிந்தராஜ் மாவட்ட மகளிரணி செயலாளர் ஜாக்குலின், மறவமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன், மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளர் சரவணன் மாவட்ட மகளிரணி வெண்ணிலாசசிகுமார் பாசறை இணை செயலாளர் மோசஸ், மாவட்ட துணை செயலாளர் சதீஸ்பாலு, தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் குழந்தை, பாகனேரி சரவணன், மாவட்ட மாணவரணி துணை செயலாளர் நாகராஜன், அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் சிவக்குமார், பூமி, கவுன்சிலர் பாண்டி கண்ணன் வழக்கறிஞர் நவநிதகிருஷ்ணன் மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் கிருஷ்ணன் மற்றும் ஒன்றிய மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • காங்கிரஸ் கட்சியினர் தேசதந்தை மகாத்மா காந்தியடிகள் மற்றும் விடுதலைக்காக பாடுபட்ட தலைவர்களின் பெருமைகளை உணர்த்திடும் வகையில் தொடர் நடைபயண பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார்கள்
    • பாத யாத்திரை நிகழ்ச்சிக்கு புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தலைவர் ஒடுகம்பட்டி முருகேசன் தலைமை தாங்கினார்.

    புதுக்கோட்டை :

    தமிழகம் முழுவதும் இந்திய திருநாட்டின் 75-வது சுதந்திர தின திருநாளை போற்றும் வகையில் காங்கிரஸ் கட்சியினர் தேசந்தந்தை மகாத்மா காந்தியடிகள் மற்றும் விடுதலைக்காக பாடுபட்ட தலைவர்களின் பெருமைகளை உணர்த்திடும் வகையில் தொடர் நடைபயண பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார்கள்.

    அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி ஒன்றியத்தில் ரெகுநாதபுரத்திலிருந்து ஊர்வலமாக மருதன்கோன்விடுதி, வாண்டான்விடுதி வழியாக கறம்பக்குடி வரை காங்கிரசார் ஊர்வலமாக சென்றனர். இந்த பாத யாத்திரை நிகழ்ச்சிக்கு புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தலைவர் ஒடுகம்பட்டி முருகேசன் தலைமை தாங்கினார்.

    இதில் கலந்துகொண்ட காங்கிரசார் மத்திய அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும், பெட்ரோல் டீசல் விலை உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் குறித்தும் கிராம புறங்களில் வயல்வெளியில் வேலை செய்யும் ஆண்கள், பெண்களிடத்திலும் சுதந்திரத்திற்காக எந்த அரசு பாடுபட்டது என்பதையெல்லாம் எடுத்துக்கூறி, பா.ஜ.க. மக்கள் விரோத போக்கையும் விளக்கமாக எடுத்துக்கூறினர்.

    நிகழ்ச்சிக்கு கறம்பக்குடி கிழக்கு வட்டாரத் தலைவர் ஞானசேகரன் முன்னிலை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் அந்தோனிராஜ், மாநில பொதுகுழு உறுப்பினர் வழக்கறிஞர் சந்திரசேகரன், கறம்பக்குடி நகர தலைவர் ரெங்கநாதன், வைமா.கண்ணன், மாவட்ட பொது செயலாளர்கள் அன்பழகன், கலியமூர்த்தி, அருணாச்சல தொண்டைமான், வெள்ளைச்சாமி மற்றும் பலர் இந்த பா யாத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    • மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்று பேசுகிறார்.
    • விசிட்டிங் கார்டை கொடுத்து மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கின்றனர்.

    அவிநாசி:

    பா.ஜ.க. 8ம் ஆண்டு சாதனை விளக்க தாமரை மாநாடு நாளை 17-ந்தேதி பல்லடம் கரையாம்புதூரில் நடக்கிறது. இதில் மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்று பேசுகிறார்.மாவட்ட தலைவர் செந்தில்வேல் தலைமையில், நடைபெறும் இம்மாநாட்டில் பங்கேற்க நூதன முறையில், தொண்டர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி பா.ஜ.க. நிர்வாகிகள் விசிட்டிங் கார்டில், மாநாடு நடைபெறும் இடம், தேதி அச்சிட்டு மாநாட்டிற்கு வரும்படி தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்து வித்தியாசமான முறையில் பிரசாரம் செய்து வருகின்றனர். அவிநாசி மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில், விசிட்டிங் கார்டை கொடுத்து மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கின்றனர்.

    ×