search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "PCB"

    பிசிசிஐ-க்கு எதிராக நஷ்டஈடு கேட்டு ஐசிசி-யில் முறையிட வேண்டும் என்ற முடிவு ஒருமனதாக எடுக்கப்பட்டது என்று நஜம் சேதி தெரிவித்துள்ளார். #BCCI #PCB
    இந்திய கிரிக்கெட் வாரியம் - பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு இடையே கடந்த 2014-ம் ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தில் முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் தலைவர் நஜம் சேதி கையெழுத்திட்டிருந்தார். அதில் 2015 முதல் 2023 வரை இரு அணிகளும் 6 தொடர்களில் பங்கேற்று விளையாடும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    ஆனால் தீவிரவாத தாக்குதலை காரணம் காட்டி பிசிசிஐ பாகிஸ்தான் கூட விளையாட மறுத்துவிட்டது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எவ்வளவு முயற்சி செய்தும் பிசிசிஐ இறங்கி வரவில்லை. இதனால் எங்களுக்கு ஏற்பட்ட பொருளாதார இழப்பிற்காக பிசிசிஐ 70 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ.500 கோடி) இழப்பீடு தர வேண்டும் என ஐசிசியிடம் முறையிட்டிருந்தது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்.

    இது தொடர்பாக ஐசிசி தகராறு தீர்ப்பாயம் கடந்த அக்டோபர் மாதம் விசாரணையைத் தொடங்கியது. கடந்த மாதம் வழக்கில் தீர்ப்பளித்த ஐசிசி தீர்ப்பாயம் பாகிஸ்தான் வழக்கை தள்ளுபடி செய்வதாக அறிவித்தது. இதையடுத்து, இந்த வழக்கிற்கான செலவை பிசிபி வழங்க வேண்டும் என்று பிசிசிஐ முறையிட்டது. இதையடுத்து பிசிசிஐ கோரிய தொகையில் 60 சதவிகிதத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வழங்க வேண்டும் என்று ஐசிசி தீர்ப்பளித்துள்ளது.

    இந்த வழக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவரான நஜம் சேதியால் ஐசிசி-யில் தாக்கல் செய்யப்பட்டது. இவரால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு மிகப்பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டுவிட்டது என குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.



    இந்நிலையில் நஜம் சேதி பிசிசிஐ-க்கு எதிராக வழக்கு தொடர வேண்டும் என்பது ஒருமனதாக எடுக்கப்பட்ட முடிவு என்று விளக்கம் அளித்துள்ளார்.

    இதுகுறித்து நஜம் சேதி கூறுகையில் ‘‘பிசிசிஐக்கு எதிராக ஐசிசி செல்ல வேண்டும் என்பது ஒருமனதாக எடுக்கப்பட்ட முடிவு. அப்போது ஷகாரியார் கான் சேர்மனாக இருந்தார். ஐசிசி 60 சதவிகிதம்தான் பிசிசிஐ-க்கு நஷ்டஈடாக வழங்க வேண்டும் என்று கூறியுள்ளது. ஏனென்றால், அது பாகிஸ்தானுக்கு சட்டப்பூர்வமான விவகாரம் இருந்ததாக நம்பியுள்ளது’’ என்றார்.
    பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தொடுத்த நஷ்டஈடு வழக்கில், பிசிசிஐ-க்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் செலவான தொகையில் 60 சதவீதம் வழங்க வேண்டும் என ஐசிசி தெரிவித்துள்ளது. #BCCI
    இந்திய கிரிக்கெட் வாரியம் - பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு இடையே கடந்த 2014-ந்தேதி புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி 2015 முதல் 2023 வரை இரு அணிகளும் 6 தொடர்களில் பங்கேற்று விளையாடும் எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தீவிரவாத தாக்குதலை காரணம் காட்டி பிசிசிஐ பாகிஸ்தான் கூட விளையாட மறுத்துவிட்டது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எவ்வளவு முயற்சி செய்தும், பிசிசிஐ இறங்கி வரவில்லை.

    இதனால் எங்களுக்கு ஏற்பட்ட பொருளாதார இழப்பிற்காக பிசிசிஐ 70 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ.500 கோடி) இழப்பீடு தர வேண்டும் என ஐசிசியிடம் முறையிட்டிருந்தது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்.

    மத்திய அரசு அனுமதி அளித்தால் மட்டுமே பாகிஸ்தானுடன் தொடரில் பங்கேற்க முடியும் என பிசிசிஐ கூறியிருந்தது. ஆனால் புரிந்துணர்வு ஒப்பந்தம் தங்களைக் கட்டுப்படுத்தாது, மேலும் ஐசிசிக்கு வருவாய் கிடைப்பதற்கான வழிவகைகளுக்கு பாகிஸ்தான் ஆதரவு தரவில்லை. 2008-ல் மும்பை பயங்கரவாத தாக்குதலை அடுத்து மத்திய அரசுதான் இருதரப்பு தொடர்களுக்கு அனுமதி தர வேண்டும் என பிசிசிஐ பதில் மனு தாக்கல் செய்தது.

    ஒப்பந்தத்தின்படி இந்தியா கிரிக்கெட் தொடரில் பங்கேற்காததால், பிசிசிஐ ரூ.500 கோடி இழப்பீடு தரவேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) கோரிக்கை தொடர்பாக ஐசிசி தகராறு தீர்ப்பாயம் கடந்த அக்டோபர் மாதம் விசாரணையைத் தொடங்கியது. ஐசிசி தகராறு தீர்ப்பாயத் தலைவர் மைக்கேல் பெலாஃப், ஜேன் பால்சன், அன்னபெல் பென்னட் ஆகியோர் விசாரணை நடத்தினார்கள். இதற்காக இரு வாரியங்களும் சர்வதேச சட்ட நிபுணர்களை வழக்காட நியமித்தன.

    கடந்த மாதம் வழக்கில் தீர்ப்பளித்த ஐசிசி தீர்ப்பாயம் பாகிஸ்தான் வழக்கை தள்ளுபடி செய்வதாக அறிவித்தது. இந்த தீர்ப்பு கட்டுப்படுத்தக்கூடியது. மேலும் மேல்முறையீடும் செய்ய முடியாதது எனவும் உத்தரவிட்டது.

    இதையடுத்து, இந்த வழக்கிற்கான செலவை பிசிபி வழங்க வேண்டும் என்று பிசிசிஐ முறையிட்டது. இதையடுத்து பிசிசிஐ கோரிய தொகையில் 60 சதவீதத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வழங்க வேண்டும் என்று ஐசிசி தீர்ப்பளித்துள்ளது.
    இருநாடுகளுக்கு இடையில் தொடரை நடத்த விரும்பாத பிசிசிஐ-யிடம் 447 கோடி ரூபாய் கேட்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தொடர்ந்த வழக்கை ஐசிசி தள்ளுபடி செய்தது. #BCCI #PCB
    கிரிக்கெட்டில் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான ஆட்டத்திற்கு ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் வரவேற்பு உண்டு. இருநாடுகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் நடத்துவதன் மூலம் இரு கிரிக்கெட் வாரியத்திற்கும் கோடிக்கணக்கில் வருமானம் கிடைக்கும்.

    பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்திய எல்லையில் தொடர் தாக்குதல் நடத்தியதால் இந்தியா இருநாடுகளுக்கு இடையிலான தொடரில் விளையாட மறுத்துவிட்டது. இதனால் பாகிஸ்தானுக்கு பெரிய இழப்பு ஏற்பட்டது.



    பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவரான நஜம் சேதி இருநாடுகளுக்கு இடையில் மீண்டும் கிரிக்கெட் தொடர் நடத்த தீவிர முயற்சி எடுத்தார். இதன் காரணமாக 2015 முதல் 2023 வரை இருநாடுகளுக்கும் இடையில் 6 தொடர் நடத்த பிசிசிஐ - பிசிபி இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டது.

    இந்தியா நடத்தும் தொடரை இந்தியாவிலும், பாகிஸ்தான் நடத்தும் தொடரை பொதுவான ஒரு இடத்திலும் நடத்தலாம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்தது. இதற்கான முயற்சிகள் நடந்து கொண்டிருக்கும்போது, எல்லையில் தீவிரவாத தாக்குதல் இருக்கும்வரை கிரிக்கெட் தொடர் கிடையாது என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்தது.



    இதனால் வழியில்லாமல் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் 447 கோடி ரூபாய் பிசிசிஐ-யிடம் நஷ்டஈடு கேட்டு ஐசிசி-யில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை ஐசிசி-யின் மூன்று பேர் கொண்ட தீர்வு கமிட்டி விசாரணை நடத்தி வந்தது. இந்நிலையில் இந்த வழக்கை ஐசிசி இன்று தள்ளுபடி செய்தது.
    பதவிக்காலத்தில் அதிக பணத்தை செலவழித்ததாக ஆடிட்டிங் கூறியதற்கு மன்னிப்பு கேட்காவிடில் அவதூறு வழக்கு பாயும் என நஜய் சேதி குறிப்பிட்டுள்ளார். #PCB #NajamSethi
    பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவராக இருந்தவர் நஜம் சேதி. இவரது காலக்கட்டத்தில் இந்தியாவுடன் கிரிக்கெட் தொடர் நடத்த மிகப்பெரிய அளவில் முயற்சி செய்தார். இந்தியாவிற்கு வந்து பிசிசிஐ தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    இருநாடுகளுக்கு இடையிலான தொடரை இலங்கையில் நடத்த முயற்சி எடுத்தார். கடைசி நேரத்தில் இந்தியா போட்டியை நடத்துவதில் இருந்து பின்வாங்கியது. பல்வேறு முயற்சிகள் செய்தும் பலனளிக்காததால் வேறு வழியின்றி இந்தியா நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று ஐசிசி-யில் முறையிட்டார்.

    இந்நிலையில்தான் இம்ரான் கான் தலைமையிலான அரசு பாகிஸ்தானில் அமைந்தது. இதனால் நஜம் சேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். எஹ்சன் மாணி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தலைவராக நியமிக்கப்பட்டார்.

    பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் ஆடிட்டிங் குழு, சம்பளம் தொடர்பாக சுமார் 7 கோடி ரூபாய் செலவழித்துவிட்டார் நஜம் சேதி மீது குற்றம்சாட்டியிருந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த நஜம் சேதி, மன்னிப்பு கேட்காவிடில் கிரிக்கெட் வாரியம் மீது அவதூறு வழக்கு தொடர்வேன் என்று வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

    இதுகுறித்து நஜம் சேதி கூறுகையில் ‘‘நான் பாதிக்கப்பட்டிருக்கிறேன். என்னை குறிவைக்கிறார்கள். இதை என்னால் சகித்துக் கொள்ள முடியாது. என்னுடைய வக்கீல் பாகிஸ்தான் கிரிக்கெட் தலைவருக்கு என்னை அவமானம் செய்ய முயன்றதாக வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்’’ என்றார்.
    பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புதிய கிரிக்கெட் கமிட்டியை அமைத்துள்ளது. இதில் வாசிம் அக்ரம், மிஸ்பா உல் ஹக் உள்பட முன்னாள் வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். #PCB
    பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புதிய கிரிக்கெட் கமிட்டி ஒன்றை உருவாக்கியுள்ளது. இதற்கு மொசின் கான் சேர்மனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த கமிட்டியில் வாசிம் அக்ரம், மிஸ்பா உல் ஹக், உரூஜ் மும்தாஸ், முடாசர் நாஸர், ஜகிர் கான், ஹரூன் ரஷித் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

    இந்த கமிட்டி வருடத்திற்கு முன்று முறை கூடும். உள்ளூர் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகள், ஆடுகளங்கள், பயன்படுத்தப்படும் பந்துகள், பயிற்சியாளர்களின் செயல்பாடுகள், வீரர்களின் செயல்பாடுகள் குறித்து அறிக்கை தயார் செய்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு வழங்கும்.
    புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பிசிசிஐ- மதிக்காததால் 500 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்ற பிசிபி புகாரை விசாரிக்க தொடங்கியது ஐசிசி. #BCCI #PCB #ICC
    மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து இந்தியாவும், பாகிஸ்தானும் நேரடியாக மோதும் கிரிக்கெட் தொடருக்கு மத்திய அரசு அனுமதி அளிக்கவில்லை. இதனால் தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்தது.

    2014-ம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் 2015-ம் ஆண்டு முதல் 2023 வரையிலான காலக்கட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் இடையே 6 தொடர்களை நடத்த முடிவு செய்யப்பட்டது. இவற்றில் 4 தொடர்களை பாகிஸ்தானில் நடத்த முடிவு செய்யப்பட்டது.

    இந்த புரிந்துணர்வு ஒப்பந்ததில் அப்போதைய இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய (பிசிசிஐ) செயலாளர் சஞ்சய் பட்டேல் கையெழுத்திட்டார். ஆனால் மத்திய அரசு அனுமதி அளிக்காததால் பாகிஸ்தானிலோ, பொதுவான இடத்திலோ விளையாட முடியாத நிலை பிசிசிஐ-க்கு ஏற்பட்டது.



    இதனால் தங்களுக்கு ரூ.500 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று பிசிசிஐ-க்கு எதிராக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐசிசி-யிடம் (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) புகார் அளித்தது.

    பாகிஸ்தானின் புகார் மனு குறித்து ஐசிசி-யின் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் தீர்ப்பாயம் நேற்று விசாரணையை தொடங்கியது. மைக்கேல் பெலாப், ஜேன் பால்சன், அன்னபெல் பென்னட் ஆகியோர் இந்த விசாரணை குழுவில் இடம் பெற்று இருந்தனர்.



    இந்த வழக்கு விசாரணைக்காக இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் சர்வதேச சட்ட நிபுணர்களை வாதாட நியமித்துள்ளன. அடுத்த விசாரணை நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
    பாகிஸ்தான் சூப்பர் லீக் 2019 சீசனில் 8 போட்டிகள் பாகிஸ்தான் மண்ணில் நடத்தப்படும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. #PSL
    பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடந்த 2016-ல் இருந்து பாகிஸ்தான் சூப்பர் லீக் என்ற பெயரில் டி20 கிரிக்கெட் தொடரை நடத்தி வருகிறது. 2009-ம் ஆண்டிற்குப் பிறகு வெளிநாட்டு அணிகள் பாகிஸ்தான் சென்று விளையாட மறுத்து வருவதால் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடக்கிறது.

    பாகிஸ்தான் மண்ணில் மீண்டும் சர்வதேச போட்டிகளை நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பெரும் முயற்சி எடுத்து வருகிறது. 2017 சீசனில் இறுதிப் போட்டியை மட்டும் லாகூரில் நடத்தியது.



    கடந்த சீசனில் இரண்டு பிளேஆஃப்ஸ் போட்டியை லாகூரிலும், இறுதிப் போட்டியை கராச்சியிலும் நடத்தியது. இந்த முறை 8 போட்டிகளை பாகிஸ்தான் மண்ணில் நடத்துகிறது. இதுதொடர்பாக அணி உரிமையாளர்களிடம் பாகிஸதான் கிரிக்கெட் வாரியம் பேசியுள்ளது.

    பாகிஸ்தான் சூப்பர் லீக் 2019 சீசன் பிப்ரவரி 14-ந்தேதி துபாயில் தொடங்கு மார்ச் 17-ந்தேதி வரை நடக்கிறது. வீரர்களை தக்கவைப்பதற்கான காலக்கெடு அக்டோபர் இரண்டாவது வாரத்தில் முடிவடைந்து அதன்பின் வீரர்கள் ஏலம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய சேர்மனின் ஆலோசகர் பதவியை முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் ராஜினாமா செய்துள்ளார். #ShoibAkhtar
    பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் சேர்மனாக நஜம் சேதி இருந்தார். இவர் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தரை சேர்மன் ஆலோசகராக நியமித்தார். சமீபத்தில் பாகிஸ்தானில் நடைபெற்ற தேர்தலில் இம்ரான் கான் வெற்றி பிரதமரானார்.

    இம்ரான் கானுக்கும் நஜம் சேதிக்கும் ஏற்கனவே மோதல் இருந்ததால் நஜம் சேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். பாகிஸ்தானை பொறுத்த வரையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் அனைத்து அதிகாரத்தையும் கொண்டவர் பிரதமர்.
    இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் புதிய சேர்மனாக மாணியை நியமித்தார். அத்துடன் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் ஆட்சி மன்றக்குழு மாற்றப்பட்டது.

    இந்நிலையில் சோயிப் அக்தர் தனது ஆலோசகர் பதவியை ராஜினாமா செய்தார். தனது டுவிட்டர் பக்கத்தில் இதை தெரிவித்த அக்தர், ‘‘ஆட்சி மன்றக்குழு மாறிய பின், நெறிமுறைப்படி பதவியில் தொடர்வது தவறு’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
    பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பீல்டர் கோச்சராக நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் கிரான்ட் பிராட்பர்ன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். #PCB
    பாகிஸ்தான் அணி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தலைசிறந்த அணியாக திகழ்ந்து வருகிறது. பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் எதிரணிக்கு கடும் சவாலாக விளங்கும் அதேவேளையில், பீல்டிங்கில் சற்று பலவீனமாக காணப்படுகிறது.



    இதனால் பீல்டிங் கோச்சரை நியமிக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்தது. அதன்படி நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரரான கிரான்ட் பிராட்பர்ன்-ஐ பீல்டிங் கோச்சராக நியமனம் செய்துள்ளது. இவர் ஆசிய கோப்பையில் இருந்து பாகிஸ்தான் அணியின் கோச்சராக செயல்படுவார்.

    கிரான்ட் பிராட்பர்ன் நியூசிலாந்து அணிக்காக 1990 முதல் 2001 வரை 7 டெஸ்ட் மற்றும் 11 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
    பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக எஹ்ஸான் மாணி எந்தவித போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். #PCB #EhsanMani
    பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருந்தவர் நஜம் சேதி. சமீபத்தில் பாகிஸ்தானில் தேர்தல் நடைபெற்றது. இதில் முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் வெற்றி பெற்று பிரதமரானார். இதனைத் தொடர்ந்து நஜம் சேதி தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    இந்நிலையில் எஹ்ஸான் மாணி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். பட்டைய கணக்கரான (CA) எஹ்ஸான் மாணி 2003 முதல் 2006 வரை ஐசிசியின் தலைவராகவும் இருந்துள்ளார்.

    முன்னதாக, பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது பயங்கரவாதிகள் கடந்த 2009-ம் ஆண்டு துப்பாக்கி சூடு நடத்தினர். இதனால், அன்றுமுதல் பாதுகாப்பு கருதி அந்நாட்டு மண்ணில் கிரிக்கெட் விளையாட இதுவரை எந்த அணியும் முன்வராமல் பாகிஸ்தான் தனிமை படுத்தப்பட்டுள்ளது.

    பின்னர், இந்த துரதிஷ்டமான சூழலில் இருந்து அந்நாடு மீண்டு வர பல ஆக்கப்பூர்வமான முயற்சிகளில் ஈடுபட்டவர் நஜம் சேதி. இவர் கடந்த 2013-ம் ஆண்டு முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்பால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவராக நியமிக்கப்பட்டவர். இவரது பதவிக்காலம் 2017-ம் ஆண்டு நிறைவடைந்த நிலையில், வாரியத்தின் உறுப்பினர்கள் அனைவரும் இவருக்கு ஆதரவாக வாக்களித்து 2020-ம் ஆண்டு வரை மீண்டும் தலைவராக தேர்வு செய்தனர்.

    இதற்கு காரணம், இவரது பதவி காலத்தில் பாகிஸ்தான் அணி சாம்பியன்ஸ் கோப்பையை கைப்பற்றியது, டி20 போட்டி தரவரிசையில் முதலிடம் பிடித்தது மற்றும் பாகிஸ்தான் பிரீமியர் லீக் தொடர் அறிமுகம் என பல சிறப்புக்களை பாகிஸ்தான் பெற்றதால் இவர் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.

    ஆனால், பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தின் காபந்து முதல்வராக 2013-ம் ஆண்டு இவர் பதவிவகித்தபோது நடைபெற்ற தேர்தலில் நவாஸ் ஷெரிப் கட்சி நூலிழையில் ஆட்சியை கைப்பற்றியது.

    அந்த தேர்தலில் 35 தொகுதிகளில் முறைகேடுகள் நடைபெற்றதாகவும் அதற்கு நஜம் சேதி துணையாக இருந்ததாகவும் இம்ரான் கான் இவர் மீது கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். இவற்றை மறுத்த நஜிம் சேதி, இம்ரான் கான் பொய்யான குற்றச்சாட்டுக்களை கூறியதாக அவர் மீது நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.



    மேலும், பாகிஸ்தானின் பிரபலமான பத்திரிகையாளர்களில் ஒருவரான சேத், அந்நாட்டின் அதிகாரத்தை இம்ரான் கான் கைப்பற்ற அவருக்கு ராணுவம் துணை புரிவதாக எழுதிய கட்டுரைகள் இம்ரான் கான் ஆதரவாளர்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பதவியேற்றதை தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்து அந்த கடிதத்தை இம்ரான் கானுக்கு அனுப்பி வைத்தார். #ImranKhan #PCB
    ஐக்கிர அரபு எமிரெட்ஸில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளை எதிர்த்து விளையாடும் தொடருக்கான தேதியை வெளியிட்டது பாகிஸ்தான். #PAKvAUS #PAKvNZ
    இலங்கை அணி கடந்த 2009-ம் ஆண்டு மார்ச் மாதம் பாகிஸ்தான் சென்று விளையாடியது. அப்போது இலங்கை வீரர்கள் சென்ற பஸ் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். அதில் இருந்து பாகிஸ்தான் சென்று விளையாட முன்னணி அணிகள் மறுத்துவிட்டன.

    உலக லெவன் அணி - பாகிஸ்தான் டி20 தொடர் மற்றும் பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகளை பாகிஸ்தான் மண்ணில் நடத்திய பாகிஸ்தான், முன்னணி அணிகளுக்கு அழைப்பு விடுத்து வருகிறது. பாகிஸ்தானுக்குப் பதிலாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ்-ஐ சொந்த மண்ணாக கொண்டு விளையாடி வருகிறது. ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட இருக்கிறது.

    இரு அணிகளையும் பாகிஸ்தான் வந்து விளையாடும்படி பாகிஸ்தான் கோரிக்கை விடுத்தது. ஆனால், பாகிஸ்தான் கோரிக்கையை இரு நாடுகளும் நிராகரித்தது. இதனால் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இரு நாடுகளுக்கு எதிராக பாகிஸ்தான் விளையாடும் தேதியை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

    ஆஸ்திரேலியாவிற்கு எதிராக பாகிஸ்தான் இரண்டு டெஸ்ட் மற்றும் மூன்று டி20 போட்டியில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் அக்டோபர் 7-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை துபாயிலும், 2-வது டெஸ்ட் அக்டோபர் 16-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை அபு தாபியிலும் நடக்கிறது.

    அதன்பின் முதல் டி20 போட்டி அக்டோபர் 24-ந்தேதி அபு தாபியிலும், 2-வது டி20 போட்டி அக்டோபர் 26-ந்தேதி துபாயிலும், 3-வது டி20 அக்டோபர் 28-ந்தேதி துபாயிலும் நடக்கிறது.

    அதன்பின் நியூசிலாந்திற்கு எதிராக மூன்று டி20, மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டெஸ்ட் போட்டிகள் அக்டோபர் 31-ந்தேதி முதல் டிசம்பர் 7-ந்தேதி வரை நடக்கிறது.

    ஆஸ்திரேலியா 1998-ம் ஆண்டிற்கு பிறகும், நியூசிலாந்து 2003-க்குப் பிறகும் பாகிஸ்தான் சென்று விளையாடியது கிடையாது.
    இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர் மீண்டும் நடைபெற பிசிசிஐ மற்றும் பிசிசி முயற்சி எடுக்க வேண்டும் என்று மியான்தத் தெரிவித்துள்ளார். #INDvPAK
    கிரிக்கெட்டில் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான ஆஷஸ் தொடருக்குப்பின் அதிக ரசிகர்கள் விரும்பி பார்ப்பது இந்தியா - பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் தொடரைத்தான். மிகவும் பரபரப்பானதாக விளையாடப்பட்ட இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் தற்போது இருநாடுகளுக்கிடையிலான பிரச்சனையால் முடங்கி போய் கிடக்கிறது.

    பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்த தொடர் நடைபெற எவ்வளவோ முயற்சிகள் செய்து பார்த்தது. ஆனால், மத்திய அரசு அனுமதி இல்லாமல் எக்காரணம் கொண்டும் கிரிக்கெட் கிடையாது என்று இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டவட்டமாக கூறிவிட்டது.

    இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியமும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் இணைந்து மத்திய அரசுகளை சம்மதிக்க வைத்து தொடரை நடத்த முயற்சி செய்ய வேண்டும் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் மியான்தத் அறிவுறுத்தியுள்ளார்.

    இதுகுறித்து மியான்தத் கூறுகையில் ‘‘இந்திய கிரிக்கெட் வாரியமும், பாகிஸ்தானும் ஒரே கோர்ட்டில் நின்று இந்தியா - பாகிஸ்தான் தொடருக்கு மத்திய அரசுகளை சம்மதிக்க வைக்க இதுவே சரியான நேரம்.



    இந்தியாவும் பாகிஸ்தானும் இருநாட்டு தொடரில் விளையாடாவிடில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அல்லது ஐசிசி கொண்டு வர இருக்கும் லீக்கின் நோக்கம் என்ன?. இரண்டு நாடுகளும் பிரச்சினைகள் குறித்து பேசி முடிவிற்கு வந்தால், ஆஷஸ் தொடரை மிகப்பெரிய தொடராக இருக்கும்.

    அரசியல் தொடர்பான பிரச்சினை பெரிய விஷயம் அல்ல. கடந்த காலங்களில் நாங்கள் இரு நாடுகளுக்கு இடையிலான தீவிரமான பிரச்சினை இருக்கும்போதே விளையாடியுள்ளோம். அது இருநாடு உறவிற்கும் உதவியது’’ என்றார்.
    ×