search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "panguni uthiram"

    • பொதுவாக பக்தர்கள் திருவிழா நாட்களில் தெய்வ தரிசனம் காண ஆலயங்களுக்கு செல்வது வழக்கம்.
    • முஸ்லீம்கள் கூட சிவாலய விழாக்களுக்கு வருவது உண்டு!

    பொதுவாக பக்தர்கள் திருவிழா நாட்களில் தெய்வ தரிசனம் காண ஆலயங்களுக்கு செல்வது வழக்கம்.

    ஆனால் தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி சிவாலயத்தில் பங்குனி உத்திர நாளில் சிவனும், அம்பிகையும் மக்கள் இருக்கும் இடங்களுக்கு வரும் புதுமை நடந்து வருகிறது.

    பங்குனி உத்திர நாளன்று காவிரிஆற்று மணலில் வீற்றிருக்கும் தெய்வங்களுக்கு விசேஷ அலங்காரங்களும், அபிஷேக ஆராதனைகளும் செய்யப்படுகின்றன.

    விழாநாளில் சில பக்தர்கள் நாவில் அலகு குத்திக் கொள்கிறார்கள்.

    வேறு சிலர் தீ மதிக்கிறார்கள்.

    இந்த ஊரில் பல ஜாதி, மதத்தைச் சார்ந்தவர்கள் ஒற்றுமையோடு வாழ்ந்து வருவதால் இவ்வாலயத்தில் நடைபெறும் திருவிழாக்களுக்கு அனைவரும் மத வேறுபாடு இல்லாமல் வருகிறார்கள்.

    முஸ்லீம்கள் கூட சிவாலய விழாக்களுக்கு வருவது உண்டு!

    • கன்னியர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும்.
    • ஆண், பெண் என அனைவருமே இந்த விரதத்தை அனுசரிக்கலாம்.

    பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திர தினத்தில் பவுர்ணமி நிலவு ஒளிவீசும் தினத்தை ஒரு விரத நாளாகவே கருதி முருகனை வழிபட்டால் கன்னியர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும். திருமணம் ஆன பெண்களின் மாங்கல்யம் பலம் பெறும்.

    ஆண், பெண் என அனைவருமே இந்த விரதத்தை அனுசரிக்கலாம். அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு வீட்டில் விளக்கேற்றி முருகப்பெருமானை வணங்க வேண்டும். பங்குனி உத்திரத்தன்று நாள் முழுவதும் கந்த சஷ்டி கவசம், திருமுருகாற்றுப்படை, திருப்புகழ் போன்ற நூல்களை படிக்கலாம். வேலை உள்ளவர்கள் "ஓம் சரவண பவ" என்னும் மந்திரத்தை நாள் முழுக்க உச்சரிக்கலாம். இதன் மூலம் நமது மனமானது இறைவனையே நினைத்த வண்ணம் இருக்கும். அதனால் மனம் செம்மை அடையும்.

    பங்குனி உத்திர தினத்தன்று ஒரு வேளை மட்டுமே உணவு உண்டு விரதம் இருக்க வேண்டும். வயதானவர்கள், உடல் நலம் பாதிக்கபட்டவர்கள் பால், பழம் போன்றவற்றை உண்ணலாம். நாள் முழுக்க விரதம் இருந்து மாலையில் முருகன் கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்து விரதத்தை நிறைவு செய்யலாம்.

    அருகில் முருகன் கோவில் இல்லை என்றால் சிவன் அல்லது பெருமாள் கோவிலுக்கு செல்லலாம். முடிந்தால் பகல் வேளையில் ஏழை- எளியவர் களுக்கு அன்னதானம் செய்யலாம். இந்த திருநாளில் தண்ணீர் பந்தல் அமைத்து நீர், மோர் வழங்குபவர் வளம் பெறுவார்கள். மாலையில் அருகில் உள்ள முருகன் கோவில் அல்லது முருகன் சன்னதி உள்ள கோவிலுக்கு சென்று முருகனை தரிசித்து வரலாம். பிறகு இரவில் சாத்வீகமான உணவை எடுத்துக் கொண்டு விரதத்தை முடித்துக் கொள்ளலாம்.

    திருமணம் ஆகாத ஆண்கள் மற்றும் பெண்கள் பங்குனி உத்திரம் தினத்தன்று விரதம் இருந்து இறைவனை வழிபாட்டால் நிச்சயம் விரைவில் திருமணம் கை கூடும். பங்குனி உத்திர விரதம் இருந்தால் சிறப்பான நல்லதொரு வரன் கை கூடி வரும் என்பது முன்னோர்கள் வாக்கு. அதனாலேயே பங்குனி உத்திரம் விரதத்திற்கு திருமண விரதம் என்றொரு பெயரும் உண்டு.

    பங்குனி உத்திரம் தினத்தன்று ரங்கநாத பெருமாள் கோவிலில் நடக்கும் வைபவத்தை காண்பது விஷேசம். இதனை கண்டால் களத்திர தோஷம் விலகி திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை.

    திருமணமான தம்பதியினர் இருவருக்குள்ளும் ஏதாவது ஒரு பிரச்சினை அடிக்கடி நேர்ந்தால் பங்குனி உத்திரத்தன்று விரதம் இருப்பதன் மூலம் அந்த பிரச்சி னைகள் விலகும். கணவன் மனைவி இருவரும் நீண்ட ஆயுளோடு அன்பில் திளைத்திருக்க பங்குனி உத்திர விரதம் உதவும். அதோடு வீட்டில் உள்ள பண கஷ்டங்கள் யாவும் விலகி செல்வ செழிப்போடு வாழ இந்த விரதம் உதவும்.

    பங்குனி உத்திரத்திற்கு முந்தைய நாளில் இருந்து விரதமாக இருந்து நமது குலக் கோவில்களுக்கு சென்று வழிபட வேண்டும். நம்மால் ஆன உதவியை வயதானவர்களுக்கு செய்வதன் மூலம் பெரியவர்களின் பரிபூரண ஆசிகள் நம்மை வாழ வைக்கும். தெய்வத் திருமணங்களை தரிசிப்பதே நம் வீட்டில் மங்கள விழாக்கள் நடக்க வேண்டியதை நாம் சிந்திப்பதற்காக அமைந்தவைகள் ஆகும். இந்த திருமண உற்சவத்தில் கலந்து கொண்டு இறைவனை தரிசிக்க திருமணம் கூடிவரும்.

    இறைவன் அவதரித்த ஆராட்டு விழாக்களை பங்குனி உத்திரம் தினத்தன்று நினைப்பதன் மூலம் குழந்தை பாக்கியம் உண்டாகும்.

    பங்குனி உத்திரம் விரதம் இருந்து நாராயணர் லட்சுமிதேவியை அடைந்ததைப் போல் நம் வீட்டு பெண்கள் கடைபிடிக்கும் விரதத்தின் மூலம் வற்றாத செல்வம் உண்டாகும்.

    கலைமகள் பிரம்மாவை அடைந்த நாள் பங்குனி உத்திரம் என்பதால் இந்நாளில் குழந்தைகள் ஆலயம் சென்று வணங்குவதன் மூலம் கல்வியின் சிறப்பை பெறுவார்கள். இந்த விரதத்தால் உத்யோக உயர்வு, கல்வியில் மேன்மை என அனைத்து யோகமும் கிடைப்பதுடன் சொந்தங்களின் அனுசரணையும் அமைந்து குடும்ப ஒற்றுமையுடன், குடும்ப பாரம்பரிய ஒற்றுமையும் உண்டாகும்.

    • குலத்தை காத்து, பாதுகாப்புடன் வாழ வைப்பதே நமது குல தெய்வம்தான்.
    • குல தெய்வ வழிபாட்டை மறந்து விட்டால் குடும்பத்துக்குள் பிரச்சினை ஏற்பட்டு விடும்.

    உலகில் எத்தனையோ கடவுள் உருவங்கள் உள்ளன. ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு கடவுள் பிடிக்கும். சிலர் ஒன்றுக்கும் மேற்பட்ட கடவுள்களை மனதார வழிபடுவார்கள்.

    சமீப காலமாக சீரடி சாய்பாபாவை இஷ்ட தெய்வமாக ஏற்று வழிபடுபவர்கள் எண்ணிக்கையும், சித்தர்களின் ஜீவசமாதிகளை தேடிச்சென்று வழிபடுபவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்த படி உள்ளது. அதுபோல பரிகாரத் தலங்களை புற்றீசல் போல மொய்க்கும் பக்தர்களையும் காணலாம்.

    இறைவழிபாடு இப்படி பல கோணங்களில் இருந்தாலும், நாம் நமது குல தெய்வத்தை மட்டும் எந்த விதத்திலும் மறந்து விடக்கூடாது. ஏனெனில் நம் குலத்தை காத்து, பாதுகாப்புடன் வாழ வைப்பதே நமது குலதெய்வம்தான்.

    குல தெய்வத்தை நினைக்காமல், பூஜிக்காமல் நாம் தொடங்கும் எந்த ஒரு செயலும் முழுமை பெறாது. குல தெய்வ வழி பாட்டை மறந்து விட்டால் திருமண தடை, குழந்தை பாக்கியம் கிடைக்காமல் இருப்பது, கடன், நோய், குடும்பத்துக்குள் பிரச்சினை என்று குழப்பமும், மன அமைதியின்மையும் ஏற்பட்டு விடும்.

    இத்தகைய பிரச்சினைகளில் இருந்து நாம் விடுபட வேண்டுமானால், தொடர்ந்து குல தெய்வ வழிபாட்டை செய்ய வேண்டும். குலதெய்வத்துக்கு உரிய படையல் போட்டு திருப்தி ஏற்படுத்த வேண்டும்.

    குல தெய்வம் மகிழ்ச்சி அடைந்தால், உங்கள் குலமே செழிக்கும். தினம், தினம் குல தெய்வத்தை வணங்கு பவர் களுக்கு எந்த குறையும் வராது. குதூகலம்தான் வரும்.

    பூர்வீக ஊரில் இருப்பவர் களுக்கு குல தெய்வத்தை வழிபட எந்த சிக்கலும் இருக்காது. ஆனால் ஊரை விட்டு வெளியேறி நகரங்களில் குடியேறி விட்டவர்களுக்கு, குல தெய்வ வழிபாடு செய்வது என்பது அரிதான ஒன்றாகும்.

    அப்படிப்பட்டவர் களுக்காகவே ஆண்டுக்கு ஒரு தடவை பங்குனி உத்திரம் தினத்தன்று ''குல தெய்வ வழிபாடு'' செய்யும் பழக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு குல தெய்வ வழிபாட்டுக்குரிய பங்குனி உத்திரம் வருகிற 24-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வருகிறது. அன்று குல தெய்வம் இருக்கும் ஆல யத்தில் நீங்கள் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். அது உங்களை மேன்மைப்படுத்தும்.

    நீங்கள் எத்தனை கடவுள்களை வணங்கினாலும் சரி.... குல தெய்வத்தை வழிபடா விட்டால் குண்டுமணி அளவுக்கு கூட பிரயோஜனம் இல்லை. ஆகையால் குல தெய்வத்தை அவசியம் வழிபடுங்கள். யார் ஒருவர் குல தெய்வத்தை விடாமல், ஐதீகத்துடன் வழிபாடு செய்து வருகிறாரோ, அவரை எந்த கிரகமும் நெருங்கி தொல்லை கொடுக்காது. அதுதான் குல தெய்வ வழிபாட்டின் மகிமை.

    பொதுவாக ஒவ்வொருவரும் அவர்களது முன்னோர்களின் வழியைப் பின்பற்றி ஏதாவது ஒரு தெய்வத்தை குலதெய்வமாக வழிபடுவார்கள். குலதெய்வம் என்பது நம் தாய் தந்தையைப் போல நம்கூடவே இருந்து வழிகாட்டும் அருட்சக்தி யாகக் கருதப்படுகிறது.

    நமக்கு ஒரு கஷ்டம் என்றால் குலதெய்வம் தான் உடனே முன் வந்து காப்பாற்றும், மற்ற தெய்வங்கள் எல்லாம் அடுத்துதான் வரும் என கிராமங்களில் சொல்வார்கள்.

    குழந்தை பிறந்தவுடன் அதற்கு பெயர் வைப்பது முதல் மொட்டை அடித்து முடி காணிக்கை செலுத்தி காது குத்துவது வரை அனைத்தும் குலதெய்வத்தின் கோவி லில்தான். குடும்பத்தில் எந்த சுபநிகழ்ச்சி நடந்தாலும், குலதெய்வத்தை முதலில் வணங்கிய பிறகே அதற்கான பணிகளைத் தொடங்கு வது வழக்கம். சுப நிகழ்ச்சிகளை தொடங்கு பவர்கள் உடனே குல தெய்வம் கோவிலுக்கு செல்ல முடியாவிட்டால் குல தெய்வத்தை நினைத்து காணிக்கையை ஒரு மஞ்சள் துணியில் முடிந்து வைத்து, குலதெய்வம் கோவிலுக்கு செல்லும் போது செலுத்தி விடுவது வழக்கம்.

    சில சந்தர்ப்பங்களில் சிலர் குலதெய்வ வழிபாட்டை தொடராமல் விட்டு விடுவர். சில ஆண்டுகள் கழித்து குலதெய்வம் எது என்றே தெரியாமல் போய் விடுவதும் உண்டு. இதனால் சோதனைகள் ஏற்படும் போது, குலதெய்வ குற்றமாக இருக்குமோ என்று நினைப்பதுண்டு. உடனே அவர்கள் தங்களின் சொந்த ஊர் எது என்று அறிந்து அங்கு அந்தக் கிராமத்தைக் காக்கும் கடவுளே தங்களின் குலதெய்வம் என்று அறிந்து வழிபடுகின்றனர்.

    குலதெய்வத்தை தங்களால் அறிய இயலவில்லை எனில் தெய்வ அருள் பெற்றவர்களிடம் சென்று தங்களின் கோரிக்கையை வைக்கலாம். அவர்கள் தெய்வ அருளினால் உங்களுக்கு வழிகாட்டலாம். சித்தர்களால் அருளப்பட்ட நாடி ஜோதிடம் போன்றவற்றினாலும் தாங்கள் தங்கள் குலதெய்வத்தை அறியலாம். குலதெய்வ வழிபாடு என்பது மிகவும் இன்றியமையாதது.

    இஷ்டதெய்வம் என்பது நாம் விரும்பி வழிபடும் கடவுள். எனினும், குலதெய்வம் என்பது நமது முன்னோர்களினால் தலைமுறை தலைமுறையாக வழிபட்டு வருவது, ஆகவே, எப்படியாவது நமது குலதெய்வத்தை அறிந்து வழிபடுதல் அவசியம்.

    • திருநாவுக்கரசரின் பதிகத்தைக் கேட்டு மகிழ, செவி சாய்த்து காட்சி தரும் கோட்டை விநாயகர் இங்கு உள்ளார்.
    • பத்து நாட்களும், சுவாமியும் அம்பாளும் திருவீதியுலா வருவதைக் காணக் கண்கோடி வேண்டும்.

    தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் அக்னீஸ்வரர் கோவில் உள்ளது.

    யாகங்களில் ஊற்றப்படும் நெய்யைச் சாப்பிட்டதால் வயிற்று வலியும், அதில் போடப்படும் பொருட்களைச் சுட்டெரித்ததால் பாவமும் ஏற்பட... நொந்து போனார் அக்னி பகவான்.

    சிவனிடம் முறையிட்டார்.

    இந்தத் தலத்துக்கு வந்து, தீர்த்தம் ஏற்படுத்தி, அந்த நீரால் இறைவனை அபிஷேகம் செய்து வழிபட்டார்.

    வரம் பெற்றார். பிறகு, சிவனாரிடம், "இந்த தலத்துக்கு வந்து வணங்கும் பக்தர்களது வலியையும் பாவங்களையும் போக்கியருள வேண்டும்" என அக்னிதேவன் வேண்டுகோள் விடுக்க, "அப்படியே ஆகட்டும்" என அருளினார் சிவனார்.

    இங்கேயுள்ள ஈசனுக்கு தீயாடிப்பர், அழலாடியப்பர், வன்னிவன நாதர், அக்னீஸ்வரர் என்றும், அம்பாளுக்கு அழகர்மங்கை, வார் கொண்ட முலையாள், சவுந்தரநாயகி என்றும் பெயர்கள் உண்டு.

    ஞானசம்பந்தர் மற்றும் நாவுக்கரசரால் பாடப்பெற்ற இந்தத் தலம், இரண்டு கோபுரங்களும் ஐந்து சுற்றுகளும் கொண்டு, அழகுறக் காட்சி தருகிறது.

    திருநாவுக்கரசரின் பதிகத்தைக் கேட்டு மகிழ, செவி சாய்த்து காட்சி தரும் கோட்டை விநாயகர் இங்கு உள்ளார்.

    ரோமரிஷி வழிபட்ட தலங்களில் இதுவும் ஒன்று, மகா சிவராத்திரி நாளில், பிரம்மா இங்கு வந்து வழிபட்டுப் பலன் பெற்றார் என்கிறது தல புராணம்.

    இங்கே, பங்குனி உத்திரத் திருநாள் விசேஷம்!

    இந்த நாளில், அக்னித் தீர்த்தத்தில் (குளம் தற்போது கிணறாகி விட்டது) நீராடி, ஸ்ரீஅக்னீஸ்வரரை வழிபட்டால்,

    இம்மையில் எல்லாச் செல்வங்களும் மறுமையில் நற்பிறப்பும் பெற்று, அனைத்துப் பாவங்களும் நீங்கப் பெறலாம் என்பது ஐதீகம்.

    இங்குள்ள ஸ்ரீயோக தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமைகளில் நெய் தீபமேற்றி, முல்லை மலர்களால் அர்ச்சித்து வழிபட

    கல்வித் தடை, திருமணத்தடை, தொழிலில் நசிவு என அனைத்தும் விலகி நலம் பெறலாம்.

    பங்குனியில் பத்து நாள் பிரம்மோத்ஸவம் விமரிசையாக நடை பெறுகிறது. உத்திர நாளில் பஞ்சமூர்த்தி புறப்பாடு, காவிரியில் தீர்த்தவாரி என அமர்க்களப்படும்.

    பத்து நாட்களும், சுவாமியும் அம்பாளும் திருவீதியுலா வருவதைக் காணக் கண்கோடி வேண்டும்.

    இந்த நாளில் தரிசித்து வணங்கினால், விரைவில் கல்யாண மாலை உறுதி என்கின்றனர், பக்தர்கள்.

    • ஸ்ரீரங்கநாதர் சோழ நங்கைக்காக உறையூர் சென்று ஒரு நாள் தங்கியிருந்த விவரத்தை தாயார் அறிந்து கோபமுறுவார்
    • பங்குனி உத்திரப் பெருவிழாவன்று நடைபெறும் இந்த வைபவத்தை தரிசித்தால், பிரிந்த தம்பதி ஒன்று சேருவர்

    பெருமாளுக்கும் தாயாருக்கும் என்ன பிரச்சினை? ஏன் ஊடல்? அதன் பின்னணியில் ஒரு வரலாறு உள்ளது.

    திருச்சியில் உள்ள உறையூரைத் தலைமை இடமாகக் கொண்டு ஆட்சி செய்தான் சோழ மன்னன் ஒருவன்.

    அவனுக்குக் குழந்தை பாக்கியம் இல்லை.

    அந்தக் குறையைப் போக்க, ஸ்ரீமகாலட்சுமி தாமரை மலரில் அவதரித்தாள்.

    அவளை ரங்கநாதன் திருமணம் செய்தார்.

    இதனால் உறையூரில், கமலவல்லி நாச்சியாருக்கு கோவிலே அமைந்துள்ளது.

    தாயாரின் திருநட்சத்திரம் ஆயில்யம்.

    எனவே, பங்குனியின் ஆயில்ய நட்சத்திர நன்னாளில், ஸ்ரீரங்கநாதர் உறையூருக்கு வருவார்.

    அவருடன் கமலவல்லி நாச்சியார், சிம்மாசனத்தில் திருக்காட்சி தருவார்.

    உறையூரில் நாச்சியாருடன் வீதியுலா வந்து விட்டு, பின்பு ஸ்ரீரங்கம் ஆலயத்துக்கு வருவார் அரங்கன்.

    "பெருமாளைக் காணோமே" என்று வழி மேல் விழி வைத்துக் காத்திருக்கும் ஸ்ரீரங்கநாயகித் தாயார், இவரின் வருகையைப் பார்க்காமல் விடுவாளா?

    எங்கு சென்று விட்டு வருகிறார் என்பதை அறிந்து, கோபம் தலைக்கேறியபடி, புளித்த தயிர், வெண்ணெய், பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றை அள்ளி யெடுத்துப் பெருமாளின் மீது வீசியெறிந்தாள்.

    பெருமாள் தன்னைப் பார்க்க வரக் கூடாதென தடை செய்வார் பிராட்டியார்

    ஸ்ரீரங்கநாதர் சோழ நங்கைக்காக உறையூர் சென்று ஒரு நாள் தங்கியிருந்த விவரத்தை தாயார் அறிந்த கோபம் தான் தடை செய்ததற்கான காரணம்.

    அதன் பிறகு நிகழ்கிற அவர்களின் உரையாடல்கள்தான், சுவாரஸ்யம்! "உமது ஆடைகள் கசங்கியிருக்கின்றன, உங்களின் நகைகள் கலைந்து கிடக்கின்றன.

    உடலெங்கும் இப்படி வியர்த்துக் கொட்டுகிறதே!" என்று ரங்கநாதரை அணு அணுவாக அளந்து, ஆராய்ந்து, கோபக் கணைகளை கேள்விக் கணைகளாக்கி தொடுப்பாள் தாயார்.

    "என்ன.... என்னையே, சந்தேகப்படுகிறாயா? உனக்காக, கடலில் மூழ்கி விடட்டுமா? எரிகின்ற தீயில் குதித்து விடட்டுமா? அல்லது, பாம்புக் குடத்தில் கையை விடட்டுமா?" என, தன் மனைவியை சமாதானப்படுத்தும் நோக்கில் ஏதேதோ சொன்னார் ஸ்ரீஅரங்கன்.

    இந்த பிணக்கை நம்மாழ்வார் தீர்த்து வைத்தார்.

    பெருமாள் தன் தவறை பிரதான பிராட்டியிடம் ஒப்புக் கொள்ள நாச்சியார் பெருமாளை ஏற்றுக் கொண்டார்.

    பிறகு பெருமாளும் தாயாரும் அருகருகே கல்யாண கோலமாக எழுந்தருளி சேர்த்தி என்னும் சேவை சாதிப்பர்.

    இது ஆலய 5வது திருச்சுற்றில் பங்குனி உத்திர மண்டபத்தில் நடக்கும் இவ்விழாவை காண்பவர்களுக்கும் திருமணப் பேறு உண்டாகும்.

    பங்குனி உத்திரப் பெருவிழாவன்று காலையில் நடைபெறும் இந்த வைபவத்தைக் கண்குளிரத் தரிசித்தால், பிரிந்த தம்பதி ஒன்று சேருவர் என்பது ஐதீகம்!

    இணைந்து வாழ்ந்து வருகிற தம்பதி, மேலும் ஒருவரையொருவர் நன்கு புரிந்துகொண்டு, கருத்தொற்றுமையுடன் வாழ்வார்கள் என்பது நம்பிக்கை.

    ஸ்ரீரங்கம் கோவிலில், பங்குனி உத்திர மண்டபம் என்றே உள்ளது. இந்த நாளில், பெருமாளும் தாயாரும் திருக்காட்சி தருவது இந்த மண்டபத்தில்தான்.

    எனவே, மண்டபத்துக்கு இந்த பெயர் உண்டானது.

    • ஸ்ரீபிரம்மாவே கொண்டாடிய முதல் உற்சவம், பங்குனி உத்திரத் திருவிழா என்கிறது தல புராணம்.
    • பெருமாளுக்கும் தாயாருக்கும் ஊடல் என்பதை ஏதோ கணவன் மனைவி சண்டையாகப் பார்க்கக்கூடாது.

    ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் நடக்கும் விழாக்களில் மிக முக்கியமான பெருவிழா, பங்குனி உத்திரத் திருவிழாதான்!

    ஸ்ரீபிரம்மாவே கொண்டாடிய முதல் உற்சவம், பங்குனி உத்திரத் திருவிழா என்கிறது தல புராணம்.

    அதனால்தான், இந்த விழாவை, ஆதி பிரம்மோத்ஸவம் என்கிறார்கள்.

    பங்குனி உத்திர விழாவின் இன்னொரு சிறப்பு என்ன தெரியுமா?

    பெருமாளுக்கும் தாயாருக்கும் இடையே ஊடல் நிகழ்ந்து, பிறகு இருவரும் இணைந்தது ஒரு பங்குனி உத்திர நன்னாளில்தான்!

    அது மட்டுமா? ஸ்ரீராமானுஜர், பெருமாளின் திருவடியை அடைவதற்காகத் தேர்வு செய்ததும் இந்தப் புண்ணிய நாளைத் தான்.

    பெருமாளுக்கும் தாயாருக்கும் ஊடல் என்பதை ஏதோ கணவன் மனைவி சண்டையாகப் பார்க்கக்கூடாது.

    அது, ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் இடையே நடைபெறுகிற பாசப் போராட்டம் என்பார்கள்.

    அதாவது, ஜீவாத்மாவான மனைவியும், பரமாத்மாவான கணவனும் தங்களுக்குள் நிகழ்கிற ஊடல்களைப் பெரிதுபடுத்தாமல்,

    அனைத்தையும் மறந்து, அனுசரித்து இணைந்து வாழ்ந்தால்தான் பேரின்பத்தை அடைய முடியும் என்னும் தத்துவத்தை விளக்குகிறது இது.

    இந்த கருத்தை உலக மக்களுக்கு உணர்த்தும் வகையில், பங்குனி உத்திர நாளில் ஸ்ரீரங்கத்தில் மட்டையடி உத்ஸவம் நடைபெறுகிறது.

    • ஆண்டு தோறும் இந்நாளில் சபரிமலையில் பக்தர்கள் ஐயப்பனுக்கு ருத்ராபிஷேகம் செய்து விசேஷ வழிபாடு செய்கிறார்கள்.
    • குறிப்பாக அன்றைய தினம் பக்தர்கள் காவி உடை அணிந்து கால்நடையாக பழனிக்கு வருவார்கள்.

    சபரிமலை ஐயப்பன் அவதரித்த தினம் பங்குனி உத்திரமாகும்.

    ஆண்டு தோறும் இந்நாளில் சபரிமலையில் பக்தர்கள் ஐயப்பனுக்கு ருத்ராபிஷேகம் செய்து விசேஷ வழிபாடு செய்கிறார்கள்.

    பலி விழாப் பாடல் செய் பங்குனி உத்திர நாள் ஒலி விழா என்ற திருஞான சம்பந்தர் பங்குனி உத்திரத்தை போற்றி பாடுகிறார்.

    சில கோவில்களில் சுவாமிகளுக்கு தீர்த்தவாரி உற்சவம் நடைபெறும்.

    முருகப்பெருமான் குடி கொண்டிருக்கும் திருத்தலங்களில், பங்குனி உத்திரம் பிரம்மோற்சவமாகவும், கல்யாண உற்சமாகவும் கொண்டாடப்படுகிறது.

    குறிப்பாக அன்றைய தினம் பக்தர்கள் காவி உடை அணிந்து கால்நடையாக பழனிக்கு வருவார்கள்.

    விரதமிருந்து முருகனை வழிபடுவார்கள்.

    • பஞ்ச பாண்டவர்களில் மூன்றாவதாக பிறந்தவன் அர்ஜுனன்.
    • நினைத்த பொழுது, நினைத்தபடி தூங்கவோ, தூங்காதிருக்கவோ அவனுக்கு இயலும்.

    பஞ்ச பாண்டவர்களில் மூன்றாவதாக பிறந்தவன் அர்ஜுனன்.

    பத்துவித பெயர்களை உடையவன் அவன்.

    கூர்மையான பார்வையை உடையவன்.

    நினைத்த பொழுது, நினைத்தபடி தூங்கவோ, தூங்காதிருக்கவோ அவனுக்கு இயலும்.

    அதனால் அவன் குடாகேசன் என்று அழைக்கப்பட்டான்.

    கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு கீதையை உபதேசித்தான்.

    கீதை பிறக்க காரணமாய் இருந்தவன் அர்ஜுனன்.

    எனவே அர்ஜுனன் பிறந்த தினமான பங்குனி உத்திர திருநாள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    • காமன் சிருஷ்டி தொழிலுக்கு ஆக்கபூர்வமாக உதவுபவன்.
    • இவனது தேவி ரதியாவாள்.

    காமன் சிருஷ்டி தொழிலுக்கு ஆக்கபூர்வமாக உதவுபவன்.

    இவனது தேவி ரதியாவாள்.

    காமன் ரதியைப் பிரிந்து வந்து, சண்முக அவதாரம் ஏற்படுவதற்காக தட்சிணாமூர்த்தி சொரூபமாக நின்ற பரமேஸ்வரன் மீது

    மலர் அம்புகளை ஏவ, அவரது கோபத்திற்கு ஆளாகி, நெற்றிக் கண்ணில் இருந்து கிளம்பிய அக்னியால் சாம்பலானான்.

    இதுவே காமதகனம் எனப்படுகிறது.

    காமதகனம் நடந்ததை கேள்விப்பட்டு ரதி பதறி ஓடி வந்து சிவபெருமானை வணங்கி வேண்ட,

    காமன் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டான்.

    ரதியின் கண்களுக்கு மட்டுமே காட்சி தரும் சக்தியை பெற்றான்.

    காமதகனம் நடைபெற்ற இடம், தமிழ்நாட்டிலுள்ள திருக்குறுங்கை.

    இந்த ஊரில் உள்ள குளத்தின் அடிப்பகுதி சாம்பல் மயமாக காணப்படுவதாக தெரிவிக்கின்றனர்.

    மன்மதன் மீண்டும் உயிர்ப்பெற்று எழுந்த நாள் பங்குனி உத்திர திருநாளாகும்.

    காமதகனத்தன்று மன்மதன், ரதி தம்பதிகளை வழிபடுவோர் சிவபெருமானின் பரிபூரண அனுக்கிரகத்தை அடைவர்.

    • பங்குனி உத்திரத்தன்று திருச்செந்தூரில் ஆண்டு தோறும் பிரம்மோற்சவம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
    • இவ்வாறு ராமபிரான் சீதா பிராட்டி திருமணம் பங்குனி உத்திர திருநாளன்று சிறப்பாக நடைபெற்றது.

    முருகன் தெய்வாணை திருமணம்

    இத்திருமண நாள் பங்குனி உத்திர நன்னாளில் நடந்தது.

    பங்குனி உத்திரத்தன்று திருச்செந்தூரில் ஆண்டு தோறும் பிரம்மோற்சவம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    ராமர்  சீதை திருமணம்

    ராமன் சீதையை பாணிக்கிரஹனம் செய்து கொண்டு தீவலம் வந்தான்.

    பின்னர் அம்மி மிதித்து அருந்ததி பார்த்தனர்.

    செய்ய வேண்டிய சடங்குகளை செய்து முனிவர்களையும் தந்தையையும் வணங்கி "ப்ரவிச்ச ஹோமம்" என்ற சடங்கை செய்து, பின்னர் ராமனும் சீதையும் தம்மாளிகையினுள் புகுந்தனர்.

    இவ்வாறு ராமபிரான் சீதா பிராட்டி திருமணம் பங்குனி உத்திர திருநாளன்று சிறப்பாக நடைபெற்றது.

    • பங்குனி உத்திர நாளில் குறிப்பிடத்தக்க சில நிகழ்ச்சிகள் நடந்துள்ளன
    • முருகன் தெய்வாணை திருமணம் நடந்தது இந்நாளில் தான்

    பங்குனி உத்திர நாளில் குறிப்பிடத்தக்க சில நிகழ்ச்சிகள் நடந்துள்ளன

    அவையாவன:

    * முருகன் & தெய்வயானை திருமணம்

    * ஸ்ரீராமர் & சீதை திருமணம்

    * சுந்தரேஸ்வரர் & மீனாட்சி திருமணம்

    * ஆண்டாள் & ரங்கமன்னார் திருமணம்

    * ரதிக்காக மன்மதனை சிவபெருமான் எழுப்பித் தந்த நாள்

    * அர்ஜுனன் அவதார நாள்

    * சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் பிறந்தநாள்

    • குல தெய்வத்தை நினைக்காமல், பூஜிக்காமல் நாம் தொடங்கும் எந்த ஒரு செயலும் முழுமை பெறாது.
    • தினம், தினம் குல தெய்வத்தை வணங்குபவர்களுக்கு எந்த குறையும் வராது குதூகலம்தான் வரும்.

    உலகில் எத்தனையோ கடவுள் உருவங்கள் உள்ளன.

    ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு கடவுள் பிடிக்கும்.

    சிலர் ஒன்றுக்கும் மேற்பட்ட கடவுள்களை மனதார வழிபடுவார்கள்.

    சமீப காலமாக சீரடி சாய்பாபாவை இஷ்ட தெய்வமாக ஏற்று வழிபடுபவர்கள் எண்ணிக்கையும், சித்தர்களின் ஜீவசமாதிகளை தேடிச் சென்று வழிபடுபவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்தப்படி உள்ளது.

    அது போல பரிகாரத்தலங்களை புற்றீசல் போல மொய்க்கும் பக்தர்களையும் காணலாம்.

    இறை வழிபாடு இப்படி பல கோணங்களில் இருந்தாலும், நாம் நமது குல தெய்வத்தை மட்டும் எந்த விதத்திலும் மறந்து விடக் கூடாது.

    ஏனெனில் நம் குலத்தை காத்து, பாதுகாப்புடன் வாழ வைப்பதே நமது குல தெய்வம்தான்.

    குல தெய்வத்தை நினைக்காமல், பூஜிக்காமல் நாம் தொடங்கும் எந்த ஒரு செயலும் முழுமை பெறாது.

    குல தெய்வ வழிபாட்டை மறந்து விட்டால் திருமண தடை, குழந்தை பாக்கியம் கிடைக்காமல் இருப்பது, கடன், நோய், குடும்பத்துக்குள் பிரச்சினை என்று குழப்பமும், மன அமைதியின்மையும் ஏற்பட்டு விடும்.

    இத்தகைய பிரச்சினைகளில் இருந்து நாம் விடுபட வேண்டுமானால், ஆண்டுக்கு ஒரு தடவையாவது குல தெய்வ வழிபாட்டை செய்ய வேண்டும்.

    குல தெய்வத்துக்கு உரிய படையல் போட்டு திருப்தி ஏற்படுத்த வேண்டும்.

    குல தெய்வம் மகிழ்ச்சி அடைந்தால், உங்கள் குலமே செழிக்கும்.

    தினம், தினம் குல தெய்வத்தை வணங்குபவர்களுக்கு எந்த குறையும் வராது குதூகலம்தான் வரும்.

    பூர்வீக ஊரில் இருப்பவர்களுக்கு குல தெய்வத்தை வழிபட எந்த சிக்கலும் இருக்காது.

    ஆனால் ஊரை விட்டு வெளியேறி நகரங்களில் குடியேறி விட்டவர்களுக்கு, குல தெய்வ வழிபாடு செய்வது என்பது அரிதான ஒன்றாகும்.

    அப்படிப்பட்டவர்களுக்காகவே ஆண்டுக்கு ஒரு தடவை பங்குனி உத்திரம் தினத்தன்று ''குல தெய்வ வழிபாடு'' செய்யும் பழக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.

    இந்த ஆண்டு குல தெய்வ வழிபாட்டுக்குரிய பங்குனி உத்திரம் தினத்தனன்று குல தெய்வம் இருக்கும் ஆலயத்தில் நீங்கள் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

    அது உங்களை மேன்மைப்படுத்தும்.

    நீங்கள் எத்தனை கடவுள்களை வணங்கினாலும் சரி... குல தெய்வத்தை வழிபடாவிட்டால் குண்டுமணி அளவுக்கு கூட பிரயோஜனம் இல்லை.

    ஆகையால் குல தெய்வத்தை அவசியம் வழிபடுங்கள். யார் ஒருவர் குல தெய்வத்தை விடாமல், ஐதீகத்துடன் வழிபாடு செய்து வருகிறாரோ, அவரை எந்த கிரகமும் நெருங்கி தொல்லை கொடுக்காது.

    அதுதான் குல தெய்வ வழிபாட்டின் மகிமை.

    ×