search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nivetha Pethuraj"

    கடைக்குட்டி சிங்கம் படத்தை தொடர்ந்து கார்த்தி அடுத்ததாக மித்ரன் இயக்கத்தில் நடிக்க இருக்கும் புதிய படத்தில் பிரபல நடிகை ஜோடியாக நடிக்க இருக்கிறார். #Karthi
    இரும்புத்திரை படத்தின் இரண்டாம் பாகம் வெளிவருவது உறுதி என விஷால் அறிவித்தார். இரண்டாம் பாகத்திற்கு முன்பு அந்த படத்தின் இயக்குனர் மித்ரன் கார்த்தியை கதாநாயகனாக்கி ஒரு படம் இயக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

    இந்த படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடிக்கின்றனர். நிவேதா பெத்துராஜ் ஒரு கதாநாயகியாக தேர்வாகி உள்ளார். சாயிஷா, கீர்த்தி சுரேஷ் ஆகிய இருவரில் ஒருவரை மற்றொரு கதாநாயகியாக ஒப்பந்தம் செய்ய படக்குழு முயற்சித்து வருகிறது. இந்தப் படத்தை தவிர நிவேதா இரண்டாவது முறையாகத் தெலுங்கில் கதாநாயகியாக நடிக்க உள்ளார். அவர் தெலுங்கில் அறிமுகமான ‘மென்டல் மதிலோ’ படத்தை இயக்கிய விவேக் அத்ரய்யாவே இந்தப் படத்தையும் இயக்குகிறார். ‘புரோசெவ ரெவருரா’ எனப் பெயரிடப் பட்டுள்ளது.



    இவை தவிர எழில் இயக்கும் ஜகஜால கில்லாடி, விஜய் ஆண்டனி நடிக்கும் திமிரு புடிச்சவன், பிரபுதேவா நடிக்கும் புதிய படம் ஆகியவற்றில் நடித்துவரும் நிவேதா நடித்த பார்ட்டி படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
    சக்தி சவுந்தர்ராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி - நிவேதா பெத்துராஜ் நடிப்பில் வெளியாகி இருக்கும் `டிக் டிக் டிக்' படத்தின் விமர்சனம். #TikTikTikReview #JayamRavi #NivethaPethuraj
    பூமியை நோக்கி ஒரு எரிக்கல் ஒன்று விழுகிறது. இதனால், பல பாதிப்புகள் ஏற்படுகிறது. இதை விட சக்தி வாய்ந்த எரிக்கல் ஒன்று விரைவில் பூமியை நோக்கி விழ இருக்கிறது. இது விழுந்தால் மிகப்பெரிய இழப்பு ஏற்படும் என்று கருதப்படுகிறது.

    இதனால் அதை தடுக்க ராணுவ தளபதி ஜெயப்பிரகாஷ், தன் உதவியாளர்களான நிவேதா பெத்துராஜ், வின்செண்ட் அசோகன் ஆகியோருடன் முயற்சிக்கிறார். அந்த விண்கல்லை அழிக்க தேவையான சாதனங்கள் இங்கு இல்லாததால், விண்வெளியில் இருக்கும் வேறு நாட்டுக்குச் சொந்தமான விண்கலத்தை வைத்து அழிக்க நினைக்கிறார்கள்.

    விண்கலத்தை கேட்டால் தரமாட்டார்கள் என்பதால், அந்த விண்கலத்தை திருடி நமக்கு சாதகமாக மாற்ற நினைக்கிறார்கள். அதற்காக திறமையான ஆளை தேடும் போது, மேஜிக் மேனாக இருக்கும் ஜெயம் ரவியை தேர்வு செய்கிறார்கள்.



    சிறிய தவறுக்காக மகனை விட்டு பிரிந்து சிறையில் வாழும் ஜெயம் ரவியிடம், எரிகல்லை அழிக்க உதவினால், அவரது தண்டனையை ரத்து செய்து, மகனுடன் சேர்த்து வைப்பதாக உறுதி அளிக்கின்றனர். மகன் மீதான பாசத்தால் ஜெயம் ரவிக்கு இந்த திட்டத்துக்கு ஒத்துக் கொள்கிறார். மேலும் இந்த திட்டத்தில் தனது நண்பர்களும் தனக்கு துணையாக இருந்தால்தான் எதையும் வெற்றியுடன் செய்ய முடியும் என்று கூறி ரமேஷ் திலக், அர்ஜுனன் ஆகியோரை அழைத்துக் கொண்டு ஜெயம் ரவி தனது குழுவுடன் விண்வெளிக்குச் செல்கிறார்கள்.

    இந்த நிலையில், அவர்களது ராணுவ தளத்தில் இருந்து ஜெயம் ரவிக்கு ஒரு போன் வருகிறது. அதில் ஜெயம் ரவியின் மகனை கடத்தி வைத்திருப்பதாகவும், அவர்கள் செய்யும் திட்டத்தை சதி மூலம் முறியடிக்கச் செய்ய வேண்டும் என்றும் போன் செய்பவர் மிரட்டுகிறார். தன் மகனுக்காக எதையும் செய்யும் ஜெயம் ரவி, எரிக்கல்லை அழிக்க தேவையானதை செய்தாரா? தனது மகனை காப்பாற்றினாரா? கடைசியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.



    நாயகன் ஜெயம் ரவி, பாசமிகு அப்பாவாகவும், பொதுநலத்துடன் எரிகல்லை அழிக்க போராடுபவராகவும் வந்து அசத்தியிருக்கிறார். அவருடைய இயல்பான நடிப்பு ரசிக்கும்படியாக இருக்கிறது. பல காட்சிகளில் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இப்படத்தின் மூலம் இவருடைய மகன் ஆரவ் நடிகராக அறிமுகமாகி இருக்கிறார். புலிக்கு பிறந்தது பூனையாகுமா... குழந்தைத்தனமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். பாசக் காட்சிகளில் அப்பா, மகன் என இருவருமே போட்டிபோட்டு நடித்து ரசிக்க வைத்திருக்கிறார்கள். 

    இதுவரை கல்லூரி பெண், கிராமத்து பெண் என நடித்து வந்த நிவேதா பெத்துராஜ் இந்த படத்தில் வித்தியாசமான தோற்றத்தில் ராணுவ அதிகாரியாக மிரட்டியிருக்கிறார். ஒரு ராணுவ அதிகாரிக்குண்டான மிடுக்குடனும், ஒரு சில இடங்களில் கவர்ச்சியாகவும் வந்து ரசிக்க வைத்திருக்கிறார். 

    வில்லத்தனத்தில் ஆரோன் ஆசிஸ் ஆக்ரோஷமில்லாமல், அமைதியுடன் வந்து மிரட்டுகிறார். மற்றபடி ஜெயப்பிரகாஷ், வின்சென்ட் அசோகன், ரமேஷ் திலக், அர்ஜுனன் என அனைவருமே கொடுத்த கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்திருக்கின்றனர். 



    இந்தியாவின் முதல் விண்வெளி படமாக டிக் டிக் டிக் படத்தை உருவாக்கி இருக்கும் சக்தி சவுந்தர்ராஜனுக்கு பாராட்டுக்கள். விண்வெளி, விண்கலம் என விண்வெளி சம்பந்தப்பட்ட ஒவ்வொரு காட்சியையும் ரசித்து எடுத்திருக்கிறார். ஒரு பக்கம் அப்பா, மகன் பாசம், மற்றொரு பக்கத்தில் எரிகல்லை அழிக்கும் திட்டம் என திரைக்கதையில் விறுவிறுப்பை கூட்டியிருக்கிறார். அனைத்து கதாபாத்திரங்களையும் நல்ல வேலை வாங்கியிருக்கிறார். படத்தில் கலை பணியில் எஸ்.எஸ்.மூர்த்தி மெனக்கிட்டிருக்கிறார் என்பது படத்தை பார்கும் போதே தெரிகிறது. இந்தியாவின் முதல் விண்வெளி படம் என்ற வகையில் விண்வெளி சம்பந்தப்பட்ட காட்சிகளை சிறப்பாக எடுத்திருக்கிறார்கள். 

    டி.இமானின் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம். பாடல்கள் ரசிக்கும்படியாக வந்திருக்கிறது. எஸ்.வெங்கடேஷின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன.

    மொத்தத்தில் `டிக் டிக் டிக்' விறுவிறுப்பு. #TikTikTikReview #JayamRavi #NivethaPethuraj
    ஒருநாள் கூத்து, பொதுவாக என் மனசு தங்கம் ஆகிய படங்களில் நடித்த நிவேதா பெத்துராஜ், பட வாய்ப்பு இல்லாவிட்டால் துபாய்க்கே சென்று விடுவேன் என்று கூறியிருக்கிறார். #NivethaPethuraj
    நிவேதா பெத்துராஜ், ஒருநாள் கூத்து படம் மூலம் அறிமுகமானவர். அதற்குள் எட்டு படங்களை முடித்துவிட்ட இவருக்கு மதுரை தான் பூர்வீகம். ‘பிறந்தது மதுரை என்றாலும் துபாயில் தான் வளர்ந்தேன். இப்போதும் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மதுரை சென்றுவிடுவேன். 

    அழகி போட்டியில் என்னை பார்த்துவிட்டு முதல் பட வாய்ப்பு வந்தது. ஒன்றிரண்டு படங்கள் அனுபவத்திற்காக நடித்து தான் பார்ப்போமே என்று வந்தேன். முழுநேர நடிகையாகி விட்டேன். சினிமாவில் இயக்குனர் ஆக ஆசை வந்துள்ளது. 



    ஓவியம் வரைவேன். கார் நன்றாக ஓட்டுவேன். பந்தயங்களில் கூட கலந்துகொண்டுள்ளேன். சினிமாவில் நான் யாரிடமும் வாய்ப்பு கேட்டதில்லை. நான் உண்டு என் வேலை உண்டு என்று இருப்பேன். சினிமாவில் வாய்ப்பு இல்லாவிட்டால் துபாய்க்கே சென்றுவிடுவேன்’ என்று நிவேதா கூறி இருக்கிறார்.
    ஏ.சி.முகில் இயக்கத்தில் பிரபுதேவா போலீசாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நேற்று துவங்கிய நிலையில், நேற்று சண்டைக் காட்சி ஒன்றை படக்குழுவினர் படமாக்கி இருக்கின்றனர். #Prabhudeva #PDinKhaki
    நேமிசந்த் ஜபக் தயாரிப்பில் பிரபுதேவா போலீஸாக நடிக்கும் ‘புரொடக்சன் எண் 12’ படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் தொடங்கியது.

    பிரபுதேவா, நிவேதா பெத்துராஜ், இயக்குநர் மகேந்திரன், சுரேஷ் மேனன், முகேஷ் திவாரி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடிக்கிறார்கள். கே.ஜி.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். அன்பறீவ் இப்படத்திற்கு சண்டை காட்சிகளை அமைக்கிறார். நேமிசந்த் ஜபக் தயாரிக்கும் இந்த படத்திற்கு கதை, திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் ஏ.சி.முகில்.



    ‘பிரபுதேவா போலீஸாக நடிக்கும் இந்த படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை என்றும், இந்த படம் பிரபுதேவாவின் திரையுலக பயணத்தில் திருப்புமுனை படமாக அமையும்’ என்று நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார் இயக்குநர் முகில். இவர் பிரபுதேவாவின் உதவியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த படத்தின் படபிடிப்பு நேற்று சென்னையில் தொடங்கியது. இதில் பிரபுதேவா, முகேஷ் திவாரி கலந்து கொள்ளும் சண்டைக்காட்சி படமாக்கப்பட்டது. #Prabhudeva #PDinKhaki

    சக்தி சவுந்தர் ராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி - நிவேதா பெத்துராஜ் நடிப்பில் உருவாகி இருக்கும் இந்தியாவின் முதல் விண்வெளி படமான `டிக் டிக் டிக்' படத்தின் முன்னோட்டம். #TikTikTik #JayamRavi
    நேமிசந்த் ஜபக் புரொடக்ஷன்ஸ் சார்பில் நேமிசந்த் ஜபக், வி.ஹிதேஷ் ஜபக் தயாரித்துள்ள படம் `டிக் டிக் டிக்'. 

    இந்தியாவின் முதல் விண்வெளி படமாக பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் ஜெயம் ரவி - நிவேதா பெத்துராஜ் நாயகன், நாயகியாக நடித்துள்ளனர். சிங்கப்பூரை சேர்ந்த ஆரோன் ஆசிஸ் வில்லனாக நடித்திருக்கிறார். ஜெயப்பிரகாஷ், ரமேஷ் திலக், வின்சென்ட் அசோகன், அர்ஜுனன், ஜெயம் ரவி மகன் ஆரவ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

    இசை - டி.இமான், எடிட்டிங் - பிரதீப் இ.ராகவ், பாடல்கள் - மதன் கார்க்கி, தயாரிப்பு - நேமிசந்த் ஜபக், வி.ஹிதேஷ் ஜபக், ஒளிப்பதிவு - எஸ்.வெங்கடேஷ், கதை, திரைக்கதை, எழுத்து, இயக்கம் - சக்தி சவுந்தர் ராஜன்.



    படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இமான் பேசும்போது, 

    ‘இது என்னுடைய நூறாவது படம். இதற்காக இறைவனுக்கும், இங்கு கூடியிருக்கும் ரசிகர்களுக்கும் நன்றி சொல்கிறேன். இந்த நூறை ஒன்றுக்கு பின்னால் வரும் இரண்டு ஜீரோவாக பார்க்கவில்லை. இரண்டு ஜீரோவிற்கு பிறகு வரும் ஒன்றாகப் பார்க்கிறேன். இதிலிருந்து மீண்டும் இசைப்பயணத்தை தொடங்குகிறேன். தொடர்ந்து ஆயிரம் படங்களுக்கு மேல் பணியாற்ற விரும்புகிறேன். 

    அதே போல் என்னுடைய இசை பயணத்தில் என்னுடைய இணைந்து பணியாற்றிய அனைத்து இசைக்கலைஞர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய நூறாவது படமான இதில் யுவன் சங்கர் ராஜா ஒரு பாடலை பாடியிருக்கிறார். அதுபோல், யுவனின் நூறாவது படத்தில் நான் பாடி இருக்கிறேன். இது எதிர்பாராத விதத்தில் அமைந்த விஷயம்’ என்றார்.

    படம் வருகிற ஜூன் 22-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #TikTikTik #JayamRavi

    பிரபுதேவா அடுத்ததாக ஏ.சி.முகில் இயக்கத்தில் முதல்முறையாக போலீஸ் அதிகாரியாக நடிக்கும் படத்தில் பிரபல நடிகை கதாநாயகியாக ஒப்பந்தமாகி இருக்கிறார். #Prabhudeva #PrabhuDevainKhaki
    நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழ் சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுத்திருக்கும் பிரபுதேவா அடுத்தடுத்து பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான ‘மெர்க்குரி’ படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும் இவரது நடிப்பில் அடுத்ததாக, `யங் மங் சங்', `லக்‌ஷ்மி' உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு தயாராகி இருக்கின்றன.

    இந்நிலையில், பிரபுதேவா நடிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானாது. இந்த படத்தை ஜெபக் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் நேமிசந்த் ஜெபக் தயாரிக்கிறார். ஏ.சி.முகில் இயக்கும் இந்த படத்தில் பிரபுதேவா முதல்முறையாக போலீஸ் அதிகாரியாக நடிக்க இருக்கிறார். 



    இதில் பிரபுதேவாவிற்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். நிவேதா பெத்துராஜ் நடிப்பில் ‘ஒரு நாள் கூத்து’, ‘பொதுவாக என் மனசு தங்கம்’ ஆகிய நடித்துள்ளார். ஜெயம்ரவியுடன் இவர் நடித்துள்ள ‘டிக் டிக் டிக்’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. #Prabhudeva #PrabhuDevainKhaki
    ஒருநாள் கூத்து மூலம் அறிமுகமான நிவேதா பெத்துராஜ், தனக்கு மனக்கட்டுப்பாடு இருப்பது குறித்து விளக்கமாக கூறியிருக்கிறார். #NivethaPethuraj #TikTikTik
    ஒருநாள் கூத்து மூலம் அறிமுகமான நிவேதா பெத்துராஜ் இப்போது டிக் டிக் டிக் படத்தில் ஜெயம் ரவியுடன் விண்வெளி வீராங்கனையாக நடித்து வருகிறார். அவர் அளித்த பேட்டியில்,

    ’தமிழ் சினிமாவில் நடிக்கும் கதாநாயகிகள் இப்போது ரொம்பவே மாறிவிட்டார்கள் என்று நினைக்கிறேன். படத்தில் நடிக்கும்போது அவர்களுக்கு முக்கியத்துவம் இருக்கிறதா என்று பார்க்கிறார்கள். முழுக்கதையையும் வாங்கி படிக்கிறார்கள்.

    அவர்கள் சம்பளத்தை மட்டுமே பிரதானமா பார்ப்பதில்லை. நல்ல கதாபாத்திரங்கள்தான் முக்கியம் என்று நினைக்கிறார்கள். என்னைப் பொருத்தவரை இந்தநாள் வரைக்கும் எந்தத் தவறான வி‌ஷயங்களுக்காகவும் சினிமாவில் யாரும் என்னை அணுகிய தில்லை.

    எனக்கு தற்காப்புக் கலை தெரியும். தாய்லாந்தில் இது தொடர்பாக இரண்டு ஆண்டுகள் படித்து இருக்கிறேன். குத்துச் சண்டை நன்றாக தெரியும். அதனால் என் உடல் எப்போதும் கட்டுக்கோப்பாக இருக்கும்.



    தற்காப்புக் கலை, குத்துச்சண்டை... இதெல்லாம் கற்றுக்கொண்டதால் மனக்கட்டுப்பாடு எனக்கு அதிகமாக இருக்கும். நான் கற்றுக்கொண்ட தற்காப்புக் கலை `டிக் டிக் டிக்‘ படத்துல நடிக்கும்போது எனக்கு பெரும் உதவியாக இருந்தது.” என்று கூறி இருக்கிறார்.
    ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘டிக் டிக் டிக்’ படத்தின் தமிழ்நாடு தியேட்டர் உரிமையை பிரபல நிறுவனம் கைப்பற்றியுள்ளது. #TikTikTik #JayamRavi
    நேமிசந்த் ஜபக் புரொடக்ஷன்ஸ் சார்பில் இந்தியாவின் முதல் விண்வெளி படமாக பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் படம் `டிக் டிக் டிக்'. சக்தி சவுந்தர் ராஜன் இயக்கியிருக்கும் இந்த படத்தில் ஜெயம் ரவி - நிவேதா பெத்துராஜ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சிங்கப்பூரை சேர்ந்த ஆரோன் ஆசிஸ் வில்லனாக நடித்திருக்கிறார். 

    ஜெயப்பிரகாஷ், ரமேஷ் திலக், வின்சென்ட் அசோகன், அர்ஜுனன், ஜெயம் ரவி மகன் ஆரவ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படம் ஜனவரியில் ரிலீசாக இருந்தது. தவிர்க்க முடியாத சில காரணங்களால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போன நிலையில், ஜூன் 22ம் தேதி வெளியிட இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.



    இந்நிலையில், இப்படத்தின் தமிழ்நாடு தியேட்டர் உரிமையை ஸ்கிரின் சீன் என்ற பிரபல நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்திருக்கிறார். `டிக் டிக் டிக்' இமானின் 100-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. #TikTikTik #JayamRavi
    ×