என் மலர்

  நீங்கள் தேடியது "Nivetha Pethuraj"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விஜய் ஆண்டனி, நிவேதா பெத்துராஜ் நடிப்பில் கணேஷா இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘திமிரு புடிச்சவன்’ படத்தின் விமர்சனம். #ThimiruPudichavan #ThimiruPudichavanReview
  சாதாரண குடும்பத்தில் பிறந்த விஜய் ஆண்டனி, தனது தம்பியுடன் வாழ்ந்து வருகிறார். போலீஸ் ஏட்டாக இருக்கும் விஜய் ஆண்டனி, தம்பியை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். இதற்காக தம்பியிடம் மிகவும் கண்டிப்பாக இருந்து வருகிறார். ஒருநாள் ஒரு பிரச்சனையில், விஜய் ஆண்டனியிடம் சண்டைப் போட்டுக்கொண்டு ஊரை விட்டு சென்று விடுகிறார் தம்பி. 

  சில காலங்கள் கழித்து சென்னைக்கு வருகிறார் விஜய் ஆண்டனி. வந்த இடத்தில் ஒரு கொலையை பார்க்கிறார். அந்த கொலையை தான் பார்த்ததாக போலீசிடம் கூறுகிறார். இந்த கொலையை செய்தது விஜய் ஆண்டனியின் தம்பி என்று தெரிய வருகிறது. தம்பிக்கு விஜய் ஆண்டனி எஸ்.ஐ.ஆக இந்த ஊருக்கு வந்திருக்கிறார் என்றும் தெரிய வருகிறது. ஒரு கட்டத்தில் தனது தம்பியை சுட்டுக் கொன்று விடுகிறார் விஜய் ஆண்டனி.  இதன் பின் இன்ஸ்பெக்டராக மாறும் விஜய் ஆண்டனி, 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களை வைத்து பல சம்பவங்கள் மற்றும் கொலைகளை ரவுடியான சாய் தீனா செய்து வருவது தெரிய வருகிறது. இதனால், சாய் தீனாவை என்கவுண்டர் செய்ய முடிவு செய்கிறார் விஜய் ஆண்டனி.

  இறுதியில் சாய் தீனாவை விஜய் ஆண்டனி என்கவுண்டர் செய்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

  படத்தில் நாயகனாக நடித்திருக்கும் விஜய் ஆண்டனி, நேர்மையான போலீஸ் அதிகாரியாகவும், தம்பி மீது அக்கறை காட்டுபவராகவும், வில்லனை பழிவாங்க துடிப்பவராகவும் சிறப்பாக நடித்திருக்கிறார். நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் விஜய் ஆண்டனி, இந்த படத்திலும் மீண்டும் அதை நிரூபித்திருக்கிறார்.   எஸ்.ஐ. கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் நாயகி நிவேதா பெத்துராஜ். போலீஸ் உடை இவருக்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறது. விஜய் ஆண்டனியுடன் குறும்பு செய்வது, அவரை காதலிப்பது என அழகாக நடித்திருக்கிறார். காமெடியிலும் ஸ்கோர் செய்திருக்கிறார். 

  தம்பியாக வருபவர் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். வழக்கம்போல் வில்லத்தனத்தில் மிரட்டி இருக்கிறார் சாய் தீனா. லொள்ளு சபா சுவாமிநாதன் காமெடியில் கலக்கி இருக்கிறார்.

  18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களை சிலர் தப்பான முறையில் உபயோகித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் கொலை செய்தால், சட்டத்தில் இருந்து எளிதாக தப்பிவிடலாம் என்ற நோக்கில் சிலர் செயல்படுகிறார்கள் என்பதை சொல்லியிருக்கிறார் இயக்குனர் கணேஷா. போலீஸ் மீது மக்களுக்கு இருக்கும் சில நெகட்டிவ் எண்ணங்களை போக்குகிறார். ஆனால், சில லாஜிக் இல்லாத காட்சிகளை தவிர்த்திருக்கலாம்.   விஜய் ஆண்டனியே இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். பல நாட்கள் கழித்து அவரின் இசையை கேட்ட ஒரு திருப்தி இங்கேயும் உள்ளது. பின்னணி இசை, பாடல் என தனக்கே உரிய ஸ்டைலில் கொடுத்திருக்கிறார். ரிச்சர்ட் எம்.நாதனின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

  மொத்தத்தில் ‘திமிரு புடிச்சவன்’ சாந்தமானவன்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கணேசா இயக்கத்தில் விஜய் ஆண்டனி - நிவேதா பெத்துராஜ் நடிப்பில் உருவாகி இருக்கும் `திமிரு புடிச்சவன்' படத்தின் முன்னோட்டம். #ThimiruPudichavan #VijayAntony #NivethaPethuraj
  விஜய் ஆண்டனி பிலிம் கார்பரேஷன் சார்பில் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்துள்ள படம் `திமிரு புடிச்சவன்'.

  விஜய் ஆண்டனி நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார். டேனியல் பாலாஜி, லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன், சாய் தீனா, முத்துராமன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

  இசை - விஜய் ஆண்டனி, ஒளிப்பதிவு - ரிச்சர்டு எம்.நாதன், கலை இயக்குநர் - எம்.சக்தி வெங்கட்ராஜ், சண்டைப்பயிற்சி - ஆர்.சக்தி சரவணன், பாடல்கள் - அருண் பாரதி, ஏகாந்த், ஒலி வடிவமைப்பாளர் - ஏ.எம்.ரஹ்மத்துல்லா, விஜய் ரத்தினம், ஒலிப்பதிவு பொறியாளர் - கே.சக்திவேல், எஸ்.சந்திரசேகர், தயாரிப்பு - பாத்திமா விஜய் ஆண்டனி, தயாரிப்பு நிறுவனம் - விஜய் ஆண்டனி பிலிம் கார்பரேஷன், எழுத்து, இயக்கம் - கணேசா.  படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசும் விஜய் ஆண்டனி பேசும் போது,

  தனிமரம் தோப்பாகாது என்பது போல இதில் என் பங்கு குறைவு தான். எந்த ஒரு படத்திலும் இயக்குனர் தான் ஹீரோ. இந்த படத்தை உருவாக்க கணேஷா சார் மிகக்கடுமையாக உழைத்திருக்கிறார். கடந்த இரண்டு படங்கள் வியாபரா ரீதியாக சரியாக போகவில்லை.  இந்த படத்தில் ரொமான்ஸ் இல்லை, இந்த படத்துக்கு பிறகு ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்க பயிற்சி எடுக்க இருக்கிறேன் என்றார்.

  படம் நவம்பர் 16-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. #ThimiruPudichavan #VijayAntony #NivethaPethuraj

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திமிரு புடிச்சவன் படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்திருக்கும் நிவேதா பெத்துராஜ், பார்ட்டி சென்ற இடத்தில் பாலியல் தொல்லை ஏற்பட்டது என்று கூறியிருக்கிறார். #NivethaPethuraj
  விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ள ‘திமிரு புடிச்சவன்’ படத்தில், அவருக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்து இருக்கிறார். கணேஷா டைரக்டு செய்திருக்கும் இந்த படத்தை விஜய் ஆண்டனியின் மனைவி பாத்திமா ஆண்டனி தயாரித்து இருக்கிறார். படக்குழுவினர் அனைவரும் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்கள்.

  அப்போது நிவேதா பெத்துராஜ் கூறியதாவது:-

  “பெண்களிடம் யாராவது ஒருவன் தவறாக நடக்க முயன்றால், அந்த இடத்திலேயே எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும். ரொம்ப நாட்கள் கழித்து அந்த தவறை வெளிப்படுத்தினால் சம்பந்தப்பட்டவர் மட்டுமல்லாமல், அவருடைய குடும்பமும் பாதிக்கப்படும். அவர் செய்த தவறுக்கு குடும்பத்தினர் ஏன் தண்டனை அனுபவிக்க வேண்டும்?

  ‘மீ டூ’ பிரச்சினையில் நானும் சிக்கி இருக்கிறேன். ஒரு ‘பார்ட்டி’க்கு போன இடத்தில், அது நடந்தது. நான் துபாயில் வளர்ந்த பெண் என்றாலும், மதுரையை பூர்வீகமாக கொண்ட தமிழ் பெண். வெட்கம், பயம் காரணமாக நான் அதை வெளியில் சொல்லவில்லை. தவறு என் மீது தான். நான் அந்த ‘பார்ட்டி’க்கு போயிருக்க கூடாது. போகாமல் இருந்தால் பலாத்கார முயற்சியை தவிர்த்து இருக்கலாம்.  இப்போது நான் தெளிவாக இருக்கிறேன். அதுபோன்று ஒரு சம்பவம் நடந்தால், என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு தெரியும்’ என்றார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திமிரு புடிச்சவன் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய நிவேதா பெத்துராஜ், இயக்குனரை உட்கார வைத்து படப்பிடிப்பில் ரவுண்டடித்தேன் என்று கூறியிருக்கிறார். #Thimirupudichavan
  விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரிப்பில் விஜய் ஆண்டனி, நிவேதா பெத்துராஜ் நடித்திருக்கும் படம் திமிரு புடிச்சவன். கணேஷா இயக்கியிருக்கும் இந்த படத்துக்கு விஜய் ஆண்டனி இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் விஜய் ஆண்டனி, நிவேதா பெத்துராஜ், இயக்குனர் கணேஷா உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

  நிவேதா பெத்துராஜ் பேசும்போது, ‘கதையை சொல்லும்போதே இயக்குனர் கணேஷா என்னை பயமுறுத்தி விட்டார். புல்லட் ஓட்டணும்னு சொன்னார். அதை கற்றுக் கொண்டு ஓட்டினேன். படப்பிடிப்பில் இயக்குனரை உட்கார வைத்து ஓட்டி காட்டினேன். பின்னர் விஜய் ஆண்டனியை வைத்து ஓட்டினேன். திடீரென மீன் பாடி வண்டி ஓட்ட சொன்னார். டப்பிங்கில் படத்தை பார்த்தபோது எனக்கே வித்தியாசமாக இருந்தது. நான் நடித்ததிலேயே என்னுடைய முக்கியமான படமாக இருக்கும்’ என்றார்.

  பாத்திமா மேடம் 7 மணி நேரம் கதையை கேட்டார், நல்லா இருக்கு என்று சொல்லி, தொடர்ந்து முழுக்கதையையும் கேட்டார். விஜய் ஆண்டனி சார் படங்களுக்கு இதுவரை பூஜை போட்டதே இல்லை. ஆனால் எனக்காக பூஜை போட்டார். நான் கேட்ட எல்லா விஷயங்களையும்  செய்து கொடுத்தார் விஜய் ஆண்டனி சார். என்னை முழுமையாக மதித்தார். ஒரு தயாரிப்பாளர் கதை நல்லா இருக்கு, கதையை மட்டும் வச்சிக்கிட்டு வேற இயக்குனர் வச்சி படத்தை பண்ணலாம் என சொன்னார். 

  ஆனால் விஜய் ஆண்டனி சார் தோல்வி அடைஞ்சவர் தான் நல்ல படத்தை கொடுப்பார் என சொல்லி நான் தான் இயக்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தார். நான் பெரிய நடிகர்களை கேட்டு பெரிய லிஸ்ட் கொடுத்தேன். அவர் புகழ் வெளிச்சம் படாத நல்ல திறமையான நடிகர்களை நடிக்க வைக்கலாம் என சொன்னார். அவர்கள் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார்கள். அவர் நம்பிக்கை வீண் போகாது என்றார் இயக்குனர் கணேஷா.  தனிமரம் தோப்பாகாது என்பது போல இதில் என் பங்கு குறைவு தான். எந்த ஒரு படத்திலும் இயக்குனர் தான் ஹீரோ. இந்த படத்தை உருவாக்க கணேஷா சார் மிகக்கடுமையாக உழைத்திருக்கிறார். கடந்த இரண்டு படங்கள் வியாபரா ரீதியாக சரியாக போகவில்லை.  படத்தின் வேலை முடிந்ததால் தீபாவளிக்கு ரிலீஸ் செய்கிறோம். இயக்குனருக்காக தீபாவளிக்கு ரிலீஸ் செய்கிறோம். இந்த படத்தில் ரொமான்ஸ் இல்லை, இந்த படத்துக்கு பிறகு ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்க பயிற்சி எடுக்க இருக்கிறேன் என்றார் நடிகர் விஜய் ஆண்டனி.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  டிக் டிக் டிக் படத்தை அடுத்து பல படங்களில் பிசியாக நடித்து வரும் நிவேதா பெத்துராஜ், கடைசியா பிரபோசல் வந்த ரெண்டு வருஷமாச்சு என்று கூறியிருக்கிறார். #NivethaPethuraj
  ஒருநாள் கூத்து படம் மூலம் அறிமுகம். டிக் டிக் டிக் படத்தில் நல்ல பெயர். கையில் வரிசையாக முன்னணி கதாநாயகர்களின் படங்கள் என்று பிசியாக இருக்கிறார் நிவேதா பெத்துராஜ். நடிகை மட்டும் அல்லாமல் அபுதாபியில் கடந்த வருடம் நடந்த அழகிப்போட்டியில் ‘மிஸ் இந்தியா யு.ஏ.இ’ வின்னர் கிரீடம்.. மனிதவளப் பிரிவில் பட்டதாரி... தற்காப்புக் கலைஞர்... பிட்னஸ் பயிற்சியாளர்.. ஓவியர்... என்று இவருக்கு பன்முகங்கள். அவர் அளித்த பேட்டியில் இருந்து...

  சினிமா தவிர என்ன பிடிக்கும்?
  ‘’வரையறது ரொம்பப் பிடிக்கும். விண்வெளி, விண்மீன்கள், வேற்றுகிரகங்கள் இதெல்லாம் எனக்கு கனவுல வரும். என்னோட கனவுகள் பெரும்பாலும் ஆறு மாசத்துலயோ, ஒரு வரு‌ஷத்துலயோ நிஜத்துல நடக்கும். அப்படியில்லைனா அதையெல்லாம் படத்துல பார்ப்பேன். அதையெல்லாம் எழுதி வச்சுக்கிட்டு வரைவேன்.’’

  காதல் விண்ணப்பங்கள்?
  ‘’அய்யோ.. அதை ஏன் கேட்கறீங்க? எட்டாவது படிக்கும்போதே எனக்கு முதல் பிரபோசல் வந்தது. ரோஜாப் பூக்கள் வச்சு, இங்கிலீஷ்ல ஏதேதோ எழுதின கார்டு கொடுத்தான் ஒரு பையன். செம கியூட்டா இருந்தது. அப்பல்லாம் பசங்கன்னாலே பயம். ஓடியே போயிட்டேன். அப்போ, எனக்கு இங்கிலீஷ் படிக்கத் தெரியாது. என்ன எழுதியிருந்ததுனு கூடத் தெரியலை. இப்ப நினைச்சாகூட காமெடியா இருக்கு.  அதுக்கப்புறம் வெவ்வேறு காலகட்டங்கள்ல எக்கச்சக்கமான பிரபோசல். கடைசியா பிரபோசல் வந்து ரெண்டு வரு‌ஷமாச்சு. துபாய் பசங்க இந்த வி‌ஷயத்துல ரொம்ப மோசம். வெளில போறபோது, நம்மளைப் பார்ப்பாங்க. பிடிச்சிட்டா உடனே நம்பர் கேட்டு வாங்கிடுவாங்க. அல்லது அவங்க நம்பர் கொடுத்துடுவாங்க. என்கிட்டயும் அப்படி நிறைய பசங்க நம்பர் கேட்டிருக்காங்க. ஆனா பார்த்த உடனேயே இப்படிக் கேட்டா ஒரு பீலிங்கும் வராதே... யாருக்கும் நம்பர் கொடுத்ததில்லை. ஆனால் எனக்கு அப்படி ஒருத்தன்கிட்ட நம்பர் வாங்கணும்னு தோணியது, வாங்கியிருக்கேன். ஆனா வாங்கினதோட சரி... தூக்கிப் போட்டுட்டேன்.’’

  சினிமாவில் நெருங்கிய நண்பர்கள்?
  ‘’மூணு பேர் இருக்காங்க. நான் நடிக்க வர்றதுக்கு முன்னாடியே மூணு பேரையும் தெரியும். ரம்யா ஆனந்தி, ‘காதலில் சொதப்புவது எப்படி’ படத்துல ஒர்க் பண்ணிட்டு, இப்போ ஸ்கிரிப்ட் கன்சல்டன்ட்டா இருக்காங்க. அடுத்து சத்யலட்சுமி. கண்ணதாசன் வீட்டு வாரிசு. பல் டாக்டர், கோ புரடியூசர். அப்புறம் மித்ரன் சரவணன். ‘பொன்னியின் செல்வன்’ பண்ணினபோதே அவரைத் தெரியும். இவங்க மூணு பேரும்தான் எனக்கு நெருக்கம்.”

  குடும்பம்?
  ‘’அப்பா பெத்துராஜ், இன்ஜினியர். அம்மா பவானி, ஹோம் மேக்கர். தம்பி நிஷாந்த், காலேஜ் முடிச்சிட்டு சி.எப்.ஏ பண்ணிட்டிருக்கான்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஒருநாள் கூத்து படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நிவேதா பெத்துராஜ் தனக்கு காதலர் அமையவில்லை என்றும், அதைப் பற்றி யோசிக்க கூட தனக்கு நேரமில்லை என்றும் கூறியிருக்கிறார். #NivethaPethuraj
  ஒருநாள் கூத்து படம் மூலம் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான டிக் டிக் டிக் படம் நல்ல வரவேற்பை பெற்றது.

  தற்போது பார்ட்டி படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அடுத்து விஷ்ணு விஷால் ஜோடியாக ஜெகஜால கில்லாடி, விஜய் ஆண்டனி ஜோடியாக திமிரு புடிச்சவன், பிரபு தேவாவுடன் பொன்.மாணிக்கவேல் என்று பிசியாக இருக்கிறார். இவை தவிர தெலுங்கிலும் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். அவரிடம் அவரது காதலர் பற்றி கேட்டபோது ’இன்னும் அமையவில்லை.

  இந்தி கதாநாயகிகளிடம் கேட்பது போல் எங்களிடம் கேட்டால் எப்படி? நமது சூழல் வேறு. காதலர் பற்றி யோசிக்க கூட எனக்கு நேரம் இல்லை. இதுதான் உண்மை என்றார். #NivethaPethuraj
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிரபு சாலமன் இயக்கத்தில் கும்கி-2 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இந்த படத்தில் மதியழகனுக்கு ஜோடியாக பிரபல நடிகை ஒருவருடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. #Kumki2
  கும்கி படத்தின் வெற்றியை தொடர்ந்து, அதன் இரண்டாவது பாகம் தற்போது உருவாகி வருகிறது. இந்த படத்தின் முதல் மற்றும் இரண்டாம் கட்ட படப்பிடிப்புப்பு சமீபத்தில் முடிந்த நிலையில், தற்போது மூன்றாம் கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. 

  படம் பற்றி இயக்குனர் பிரபுசாலமன் கூறியதாவது..

  படப்பிடிப்பு தற்போது மைசூர் அருகே உள்ள சிவ சமுத்திரம் அருவியில் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எம்.ஜி.ஆர் அவர்கள் நடித்த இதயக்கனி படப்பிடிப்பிற்கு பிறகு கும்கி 2 படப்பிடிப்பு தான் அங்கு நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

  இந்த படத்திற்காக இரண்டு விஷயங்களில் சிரமப்பட்டோம். ஒன்று யானை.. அது கிடைத்து விட்டது. மற்றொன்று படத்தின் நாயகி.. இன்னும் கிடைக்கவில்லை. தேடிக்கொண்டிருக்கிறோம். நாயகி இல்லாத காட்சிகளை மட்டுமே தற்போது படமாக்கி வருகிறோம் என்றார் பிரபுசாலமன். இந்த படத்தில் நடிக்க நிவேதா பெத்துராஜுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.  இந்த படத்தில் நாயகனாக மதியழகன் அறிமுகமாகிறார். வில்லனாக ஹரிஷ் பேராடியும், முக்கிய கதாபாத்திரங்களில் ஆர்.ஜே.பாலாஜி, சூசன், கோலங்கள் திருச்செல்வம், ஸ்ரீநாத், ஆகாஷ், மாஸ்டர் ரோகன், மாஸ்டர் ஜோஸ்வா, பேபி மானஸ்வி ஆகியோர் நடிக்கிறார்கள்.

  டைட்டில் கதாப்பாத்திரமாக உன்னிகிருஷ்ணன் என்ற யானை நடிக்கிறது. நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்கும் இந்த படத்தை பென் இந்தியா லிமிடெட் சார்பில் ஜெயந்திலால் காடா தயாரிக்கிறார். #Kumki2 #NivethaPethuraj

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  டிக் டிக் டிக் படத்தை தொடர்ந்து பல படங்களில் பிசியாக நடித்து வரும் நிவேதா பெத்துராஜ், தீவிரமாக சண்டைப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். #NivethaPethuraj
  நிவேதா பெத்துராஜ் கடைசியாக ஜெம் ரவியுடன் ‘டிக் டிக் டிக்’ படத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், நிவேதா தற்போது தெலுங்கு படம் ஒன்றிலும், விஜய் ஆண்டனி ஜோடியாக திமிரு பிடிச்சவன் படத்திலும், பிரபுதேவா ஜோடியாக பொன் மாணிக்கவேல் படத்திலும் நடித்து வருகிறார். 

  ஏ.சி.முகில் இயக்கும் இந்த படத்தில் பிரபுதேவா உதவி கமி‌ஷனர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் நிவேதாவுக்கும் போலீஸ் வேடம் என்று கூறப்படுகிறது. அவருக்கும் சண்டைக்காட்சிகள் உண்டு என்பதால் அதற்காக சண்டைப்பயிற்சி எடுத்து வருகிறார்.  மேலும் நிவேதா பெத்துராஜ் இதற்காக சிறப்பு வகுப்புகளுக்கு சென்று வருவதாகவும் கூறப்படுகிறது. #PonManickavel #Prabhudeva #NivethaPethuraj
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளுள் ஒருவரான நிதோ பெத்துராஜ் `பொன் மாணிக்கவேல்' படத்தில் தான் பிரபுதேவா மனைவியாக நடித்து வருவதாக கூறியிருக்கிறார். #PonManickavel #NivethaPethuraj
  நிவேதா பெத்துராஜ் கடைசியாக ஜெம் ரவியுடன் டிக் டிக் டிக் படத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், நிவேதா தற்போது தெலுங்கு படம் ஒன்றிலும், விஜய் ஆண்டனி ஜோடியாக திமிரு பிடிச்சவன் படத்திலும், பிரபுதேவா ஜோடியாக பொன் மாணிக்கவேல் படத்திலும் நடித்து வருகிறார். 

  ஏ.சி.முகில் இயக்கும் இந்த படத்தில் பிரபுதேவா பொன் மாணிக்கவேல் என்ற கதாபாத்திரத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இந்த நிலையில், படம் பற்றி பேசிய நிவேதா பெத்துராஜ், 

  ` நான் இதுவரை நடிக்காத வித்தியாசமான கதாபாத்திரத்தில், இந்த படத்தில் நடிக்கிறேன். எனக்கு பிரபுதேவாவின் மனைவி கதாபாத்திரம். பிரபுதேவாவுடன் இணைந்து நடிப்பதில் மிக்க மகிழ்ச்சி. அதனை எதிர்நோக்கி காத்திருக்கிறேன். விரைவில் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறேன் ' என்றார். ஜபக் பிலிம்ஸ் சார்பில் ஹித்தேஷ் ஜபக் மற்றும் நேமிசந்த் ஜபக் இந்த படத்தை தயாரிக்கின்றனர்.   விஜய் ஆண்டனியுடன் திமிரு பிடிச்சவன் படத்தில் நடிப்பது குறித்து பேசிய நிவேதா, ` இந்த படத்தில் முதல்முறையாக போலீஸாக நடிக்கிறேன். சில சண்டைக் காட்சிகளிலும் நடித்துள்ளேன். விஜய் ஆண்டனி விரும்பியதால் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஆகஸ்டில் படப்பிடிப்பு மீண்டும் துவங்கும் ' என்றார். #PonManickavel #Prabhudeva #NivethaPethuraj

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஏ.சி.முகில் இயக்கத்தில் பிரபுதேவா போலீசாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கிய நிலையில், பாகுபலி பட வில்லன் பிரபாகரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Prabhudeva #PDinKhaki
  ஏ.சி.முகில் இயக்கத்தில் பிரபுதேவா போலீஸாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கிய நிலையில், படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, பாகுபலி படத்தில் வில்லனாக காலகேயர் தலைவன் இன்கோசி கதாபாத்திரத்தில் நடித்திருந்த பிரபாகர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த படத்திலும் பிரபாகர் வில்லனாக நடிக்க இருப்பதாகவே கூறப்படுகிறது. 

  இதில் பிரபுதேவா ஜோடியாக நிவேதா பெத்துராஜும், முக்கிய கதபாத்திரங்களில் இயக்குநர் மகேந்திரன், சுரேஷ் மேனன், முகேஷ் திவாரி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.   கே.ஜி.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். அன்பறீவ் இப்படத்திற்கு சண்டை காட்சிகளை அமைக்கிறார். டிக் டிக் டிக் படத்தை தயாரித்த ஜபக் மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. 

  ‘பிரபுதேவா போலீஸாக நடிக்கும் இந்த படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை என்றும், இந்த படம் பிரபுதேவாவின் திரையுலக பயணத்தில் திருப்புமுனை படமாக அமையும்’ என்று நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார் இயக்குநர் முகில். இவர் பிரபுதேவாவின் உதவியாளர் என்பது குறிப்பிடத்தக்கது. #Prabhudeva #PDinKhaki

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கடைக்குட்டி சிங்கம் படத்தை தொடர்ந்து கார்த்தி அடுத்ததாக மித்ரன் இயக்கத்தில் நடிக்க இருக்கும் புதிய படத்தில் பிரபல நடிகை ஜோடியாக நடிக்க இருக்கிறார். #Karthi
  இரும்புத்திரை படத்தின் இரண்டாம் பாகம் வெளிவருவது உறுதி என விஷால் அறிவித்தார். இரண்டாம் பாகத்திற்கு முன்பு அந்த படத்தின் இயக்குனர் மித்ரன் கார்த்தியை கதாநாயகனாக்கி ஒரு படம் இயக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

  இந்த படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடிக்கின்றனர். நிவேதா பெத்துராஜ் ஒரு கதாநாயகியாக தேர்வாகி உள்ளார். சாயிஷா, கீர்த்தி சுரேஷ் ஆகிய இருவரில் ஒருவரை மற்றொரு கதாநாயகியாக ஒப்பந்தம் செய்ய படக்குழு முயற்சித்து வருகிறது. இந்தப் படத்தை தவிர நிவேதா இரண்டாவது முறையாகத் தெலுங்கில் கதாநாயகியாக நடிக்க உள்ளார். அவர் தெலுங்கில் அறிமுகமான ‘மென்டல் மதிலோ’ படத்தை இயக்கிய விவேக் அத்ரய்யாவே இந்தப் படத்தையும் இயக்குகிறார். ‘புரோசெவ ரெவருரா’ எனப் பெயரிடப் பட்டுள்ளது.  இவை தவிர எழில் இயக்கும் ஜகஜால கில்லாடி, விஜய் ஆண்டனி நடிக்கும் திமிரு புடிச்சவன், பிரபுதேவா நடிக்கும் புதிய படம் ஆகியவற்றில் நடித்துவரும் நிவேதா நடித்த பார்ட்டி படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print