என் மலர்
சினிமா

பிரபுதேவாவுடன் இணைந்த பிரபல நடிகை
பிரபுதேவா அடுத்ததாக ஏ.சி.முகில் இயக்கத்தில் முதல்முறையாக போலீஸ் அதிகாரியாக நடிக்கும் படத்தில் பிரபல நடிகை கதாநாயகியாக ஒப்பந்தமாகி இருக்கிறார். #Prabhudeva #PrabhuDevainKhaki
நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழ் சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுத்திருக்கும் பிரபுதேவா அடுத்தடுத்து பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான ‘மெர்க்குரி’ படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும் இவரது நடிப்பில் அடுத்ததாக, `யங் மங் சங்', `லக்ஷ்மி' உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு தயாராகி இருக்கின்றன.
இந்நிலையில், பிரபுதேவா நடிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானாது. இந்த படத்தை ஜெபக் புரொடக்ஷன்ஸ் சார்பில் நேமிசந்த் ஜெபக் தயாரிக்கிறார். ஏ.சி.முகில் இயக்கும் இந்த படத்தில் பிரபுதேவா முதல்முறையாக போலீஸ் அதிகாரியாக நடிக்க இருக்கிறார்.

இதில் பிரபுதேவாவிற்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். நிவேதா பெத்துராஜ் நடிப்பில் ‘ஒரு நாள் கூத்து’, ‘பொதுவாக என் மனசு தங்கம்’ ஆகிய நடித்துள்ளார். ஜெயம்ரவியுடன் இவர் நடித்துள்ள ‘டிக் டிக் டிக்’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. #Prabhudeva #PrabhuDevainKhaki
Next Story