search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    அதை கற்றுக் கொண்டதால் எனக்கு மனக்கட்டுப்பாடு அதிகம் - நிவேதா பெத்துராஜ்
    X

    அதை கற்றுக் கொண்டதால் எனக்கு மனக்கட்டுப்பாடு அதிகம் - நிவேதா பெத்துராஜ்

    ஒருநாள் கூத்து மூலம் அறிமுகமான நிவேதா பெத்துராஜ், தனக்கு மனக்கட்டுப்பாடு இருப்பது குறித்து விளக்கமாக கூறியிருக்கிறார். #NivethaPethuraj #TikTikTik
    ஒருநாள் கூத்து மூலம் அறிமுகமான நிவேதா பெத்துராஜ் இப்போது டிக் டிக் டிக் படத்தில் ஜெயம் ரவியுடன் விண்வெளி வீராங்கனையாக நடித்து வருகிறார். அவர் அளித்த பேட்டியில்,

    ’தமிழ் சினிமாவில் நடிக்கும் கதாநாயகிகள் இப்போது ரொம்பவே மாறிவிட்டார்கள் என்று நினைக்கிறேன். படத்தில் நடிக்கும்போது அவர்களுக்கு முக்கியத்துவம் இருக்கிறதா என்று பார்க்கிறார்கள். முழுக்கதையையும் வாங்கி படிக்கிறார்கள்.

    அவர்கள் சம்பளத்தை மட்டுமே பிரதானமா பார்ப்பதில்லை. நல்ல கதாபாத்திரங்கள்தான் முக்கியம் என்று நினைக்கிறார்கள். என்னைப் பொருத்தவரை இந்தநாள் வரைக்கும் எந்தத் தவறான வி‌ஷயங்களுக்காகவும் சினிமாவில் யாரும் என்னை அணுகிய தில்லை.

    எனக்கு தற்காப்புக் கலை தெரியும். தாய்லாந்தில் இது தொடர்பாக இரண்டு ஆண்டுகள் படித்து இருக்கிறேன். குத்துச் சண்டை நன்றாக தெரியும். அதனால் என் உடல் எப்போதும் கட்டுக்கோப்பாக இருக்கும்.



    தற்காப்புக் கலை, குத்துச்சண்டை... இதெல்லாம் கற்றுக்கொண்டதால் மனக்கட்டுப்பாடு எனக்கு அதிகமாக இருக்கும். நான் கற்றுக்கொண்ட தற்காப்புக் கலை `டிக் டிக் டிக்‘ படத்துல நடிக்கும்போது எனக்கு பெரும் உதவியாக இருந்தது.” என்று கூறி இருக்கிறார்.
    Next Story
    ×