search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    டிக் டிக் டிக்
    X

    டிக் டிக் டிக்

    சக்தி சவுந்தர் ராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி - நிவேதா பெத்துராஜ் நடிப்பில் உருவாகி இருக்கும் இந்தியாவின் முதல் விண்வெளி படமான `டிக் டிக் டிக்' படத்தின் முன்னோட்டம். #TikTikTik #JayamRavi
    நேமிசந்த் ஜபக் புரொடக்ஷன்ஸ் சார்பில் நேமிசந்த் ஜபக், வி.ஹிதேஷ் ஜபக் தயாரித்துள்ள படம் `டிக் டிக் டிக்'. 

    இந்தியாவின் முதல் விண்வெளி படமாக பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் ஜெயம் ரவி - நிவேதா பெத்துராஜ் நாயகன், நாயகியாக நடித்துள்ளனர். சிங்கப்பூரை சேர்ந்த ஆரோன் ஆசிஸ் வில்லனாக நடித்திருக்கிறார். ஜெயப்பிரகாஷ், ரமேஷ் திலக், வின்சென்ட் அசோகன், அர்ஜுனன், ஜெயம் ரவி மகன் ஆரவ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

    இசை - டி.இமான், எடிட்டிங் - பிரதீப் இ.ராகவ், பாடல்கள் - மதன் கார்க்கி, தயாரிப்பு - நேமிசந்த் ஜபக், வி.ஹிதேஷ் ஜபக், ஒளிப்பதிவு - எஸ்.வெங்கடேஷ், கதை, திரைக்கதை, எழுத்து, இயக்கம் - சக்தி சவுந்தர் ராஜன்.



    படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இமான் பேசும்போது, 

    ‘இது என்னுடைய நூறாவது படம். இதற்காக இறைவனுக்கும், இங்கு கூடியிருக்கும் ரசிகர்களுக்கும் நன்றி சொல்கிறேன். இந்த நூறை ஒன்றுக்கு பின்னால் வரும் இரண்டு ஜீரோவாக பார்க்கவில்லை. இரண்டு ஜீரோவிற்கு பிறகு வரும் ஒன்றாகப் பார்க்கிறேன். இதிலிருந்து மீண்டும் இசைப்பயணத்தை தொடங்குகிறேன். தொடர்ந்து ஆயிரம் படங்களுக்கு மேல் பணியாற்ற விரும்புகிறேன். 

    அதே போல் என்னுடைய இசை பயணத்தில் என்னுடைய இணைந்து பணியாற்றிய அனைத்து இசைக்கலைஞர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய நூறாவது படமான இதில் யுவன் சங்கர் ராஜா ஒரு பாடலை பாடியிருக்கிறார். அதுபோல், யுவனின் நூறாவது படத்தில் நான் பாடி இருக்கிறேன். இது எதிர்பாராத விதத்தில் அமைந்த விஷயம்’ என்றார்.

    படம் வருகிற ஜூன் 22-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #TikTikTik #JayamRavi

    Next Story
    ×