search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "navaratri"

    • துர்க்கையை வணங்கினால் தீய எண்ணங்கள் வேரோடு அழிந்து விடும்.
    • இன்று 10-ம் நாள் வழிபாட்டு முறையை அறிந்து கொள்ளலாம்.

    10-வது நாள் 5-10-2022 (புதன் கிழமை)

    வடிவம் : அம்பிகை. இவளுக்கு விஜயா என்ற பெயரும் உண்டு (ஸ்தூல வடிவம்)

    திதி: தசமி

    பலன் : புரட்டாசி மாதம் சுக்ல பட்சமியே விஜயதசமி. மூன்று சக்திகளும், தீய சக்தியை அழித்து, வெற்றி கொண்ட அனைவருக்கும் நன்மைகளை அள்ளித்தந்து அருள் பாலிக்கும் சுபநாள். இன்று தொடங்கும் எல்லா காரியங்களும் வெற்றி மீது வெற்றி பெறும்.

    நைவேத்தியம் : பால் பாயாசம், காராமணி சுண்டல், இனிப்பு வகைகள்.

    பூக்கள் : வாசனைப் பூக்கள்.

    • மகிஷாசுரனை துர்க்கை வதம் செய்தநாள் ‘விஜயதசமி.’
    • விஜயதசமி தினம் கல்விக்கு உகந்த நாளாக இன்றும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

    5.10.2022 விஜயதசமி திருநாள்

    அம்மனை வழிபடுவதற்கு உகந்த நவராத்திரி விழா, கடந்த 26-ந்தேதி தொடங்கியது. ஒன்பது நாட்கள் நடைபெறும் இந்த விழாவைத் தொடர்ந்து, 10-ம் நாளில் விஜயதசமி கொண்டாடப்படுகிறது. தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் துன்பம் விளைவித்து வந்த மகிஷாசுரனுடன் அன்னை துர்க்கா தேவி போரிட்டாள். அவர்கள் இருவருக்கும் இடையே ஒன்பது நாட்கள் உக்கிரமாக போர் நடந்தது. 10-ம் நாளில் அன்னையானவள், மகிஷாசுரனை அழித்து வெற்றிபெற்றாள். இந்த நாளையே 'விஜயதசமி' (வெற்றித் திருநாள்) என்று கொண்டாடுகிறோம். வட இந்தியாவில் இந்த நிகழ்வை இரண்டு விதமாக கொண்டாடுகிறார்கள். காளி தேவியின் வெற்றியாகவும், ராவணனை ராமபிரான் அழித்த நாள் என்பதால் 'ராம்லீலா' என்றும் கொண்டாடுகின்றனர்.

    புராணக் காலத்தில் எருமை தலை கொண்ட அசுரன் வாழ்ந்து வந்தான். எருமைக்கு 'மகிஷம்' என்று பெயர். இதனால் அவனை அனைவரும் மகிஷாசுரன் என்று அழைத்தனர். அந்த அசுரனால் மூவுலகிலும் நிம்மதி குறைந்தது. இதையடுத்து துர்க்காதேவி, அசுரனை அழித்து அனைவருக்கும் நிம்மதியை பெற்றுத் தந்தாள். மகிஷாசுரனை துர்க்கை வதம் செய்தநாள் 'விஜயதசமி.' இந்த நாளில் எந்த ஒரு காரியத்தை தொடங்கினாலும் அது வெற்றியாக முடியும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. இத்திருநாளில் தொழில் நிறுவனங்களில் புதிய கணக்கு தொடங்குவார்கள். இதனால் லாபம் சேரும் என்பது ஐதீகம். அதே போல் புதிய வியாபாரத்தை இந்த நாளில் தொடங்கினாலும் வெற்றி மேல் வெற்றி கிடைக்கும்.

    விஜயதசமி தினம் கல்விக்கு உகந்த நாளாக இன்றும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளில் தான் மழலைக் குழந்தைகளுக்கு முதல்முதலாக எழுத்தறிவிக்கப்படும் நிகழ்வை ஆரம்பிப்பார்கள். இதற்கு 'வித்யாரம்பம்' என்று பெயர். இதையொட்டி நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்கள், பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை, புதிய வகுப்புகள் தொடக்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும்.

    பித்தளை தாம்பூலத் தட்டில் பச்சரிசியைப் பரப்பி அதில் தங்கள் குழந்தைகளின் கையைப் பிடித்து, தமிழ் மொழியின் முதல் எழுத்தான 'அ' என்று பெற்றோர்கள் எழுதச் செய்வர். (ஒவ்வொருவரின் தாய் மொழியின் முதல் எழுத்துக்கள் எழுதப்படும்). மேலும் அவரவர்களின் அபிமான தெய்வங் களின் திருநாமத்தையும் எழுதச் செய்வர். இதனால் அந்தக் குழந்தைகள் கல்வியில் பெரும் புகழோடு விளங்குவார்கள் என்பது ஐதீகம்.

    • சக்தியை வழிபடத்தகுந்த ஒன்பது ராத்திரி நவராத்திரி.
    • இன்று விரதம் இருந்து அன்னையை வழிபட்டால் அனைத்து நன்மைகளும் பெருகும்.

    விஜயதசமி என்றாலே வெற்றி திருநாள் ஆகும். அசுரனை அழித்த அன்னையின் வெற்றியே அது. அந்த திருநாளில் நாம் எந்த காரியத்தை தொடங்கினாலும் நிச்சயம் வெற்றி கிடைக்கும்.

    சிவனை வழிபடத்தகுந்த ஒரு ராத்திரி சிவராத்திரி. சக்தியை வழிபடத்தகுந்த ஒன்பது ராத்திரி நவராத்திரி. நவம் என்பது ஒன்பது. நவராத்திரி என்பது விரதமிருந்து வீட்டில் பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. இதனால் இந்த விழா வீடு என்ற கோவிலுக்கு ஒரு 'பிரம்மோற்சவம்' என்றும் போற்றப்படுகிறது.

    இந்த நவராத்திரி நாட்களில் வீடுகளில் கொலு வைத்து நிவேதனம் படைத்து வழிபாடு செய்வார்கள். இதில் அக்கம், பக்கத்து வீடுகளை சேர்ந்த பெண்கள் கலந்து கொள்வார்கள். அதே போல் அம்மன் கோவில்களிலும் நவராத்திரியையொட்டி சிறப்பு பூஜைகளும், கொலு பூஜைகளும் நடைபெறும்.

    தசமி என்றால் பத்து. விஜயம் என்றால் வெற்றி, வாகை, வருகை என்று பல பொருட்கள் உண்டு. இச்சாசக்தி, கிரியா சக்தி, ஞானசக்தி என்ற 3 சக்தி அவதாரங்கள் எடுத்த அன்னை இறுதியில் எல்லாம் கலந்த மகாசக்தியாக தோன்றி மகிஷாசுரனை, சும்ப, நிசும்பனை, சண்ட முன்டனை வதம் செய்த நன்னாள்தான் விஜயதசமி. அன்று விரதம் இருந்து அன்னையை வழிபட்டால் அனைத்து நன்மைகளும் பெருகும். வாழ்வில் எல்லா வளங்களும் கிடைக்கும்.

    நவராத்திரியின் 9 நாளும் விரதமிருந்து தூய்மையான உள்ளத்துடனும், பக்தியுடனும் வழிபட்டவர்கள் இல்லம் தேடி 10-ம் நாளான தசமி அன்று அன்னை விஜயம் செய்யும் நாளே விஜயதசமி என்றும் கூறப்படுகிறது. இந்த நாளில் புதிதாக தொழில் தொடங்குவோர், கல்வி பயில ஆரம்பிப்போர் தங்கள் பணிகளை தொடங்கினால் வெற்றி நிச்சயம்.

    • குழந்தைகளை பள்ளியில் சேர்க்க விஜயதசமி சிறந்த நாளாகும்.
    • அன்று உலக ஆசிரியர் தினம் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த ஆண்டு விஜயதசமி தினம் 5.10.2022 புதன்கிழமை வருகிறது. குழந்தைகளை முதன் முதலில் பள்ளியில் சேர்க்கவும், புதிய பாடம் கற்றுக் கொடுக்கத் தொடங்குவதற்கும் விஜயதசமி சிறந்த நாளாகும்.

    அன்று காலை 7 மணி முதல் 8 மணிக்குள் சந்திர ஓரையில் சேர்க்கலாம். அல்லது காலை 9 மணி முதல் 10 மணிக்குள் குரு ஓரையில் பள்ளியில் சேர்க்கலாம்.

    இந்த இரு ஓரைகளில் சேர்த்தால், பாட்டு, நடனம் போன்ற கலைகளில் சிறப்பு ஏற்படும்.

    அன்று உலக ஆசிரியர் தினம் என்பது குறிப்பிடத்தக்கது. வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடிய வள்ளலார் அவதரித்த தினமும் ஆகும்.

    • நவராத்திரி 9 நாட்களும் போற்றி பாடுவது நல்லது.
    • இன்று ஒன்பதாம் நாளுக்குரிய போற்றி பாடலை பார்க்கலாம்.

    முதலில் பிள்ளையாருக்கு இந்த 16 போற்றிகளை சொல்லவும்.

    ஓம் அகர முதல்வா போற்றி!

    ஓம் அணுவிற்கணுவாய் போற்றி!

    ஓம் ஆனை முகத்தோய் போற்றி!

    ஓம் இந்திரன் இளம்பிறைபோற்றி!

    ஓம் ஈடிலாத் தெய்வமே போற்றி!

    ஓம் உமையவள் மைந்தா போற்றி!

    ஓம் ஊழ்வினை அறுப்பாய் போற்றி!

    ஓம் எருக்கினில் இருப்பாய்போற்றி!

    ஓம் ஐங்கரனே போற்றி!

    ஓம் ஒற்றைக் கொம்பனே போற்றி!

    ஓம் கற்பக களிறே போற்றி!

    ஓம் பேழை வயிற்றோய் போற்றி!

    ஓம் பெரும்பாரக் கோட்டாய் போற்றி!

    ஓம் வெள்ளிக்கொம்பனே விநாயகா போற்றி!

    ஓம் பொன்னும் மெய்ப்பொருளும் தருவாய் போற்றி!

    ஓம் போகமும் திருவும் புணர்ப்பாய் போற்றி!

    ஒன்பதாம் நாள் போற்றி

    ஓம் ஓங்காரத்துப் பொருளேபோற்றி

    ஓம் ஊனாகி நின்ற உத்தமியேபோற்றி

    ஓம் படைத்தோன் பாகம் பிரியாய்போற்றி

    ஓம் அடியவர்க்கு மங்களம் அருள்வாய் போற்றி

    ஓம் முக்கோணத்துள் உள்ள மூர்த்தமேபோற்றி

    ஓம் ரீங்காரம் தன்னில் இருப்பவளேபோற்றி

    ஓம் நாற்பத்து முக்கோண நாயகியேபோற்றி

    ஓம் சொற்பொருள் சுவைதனைத் தந்தாய் போற்றி

    ஓம் ஆறாது தத்துவம் அருளினாய்போற்றி

    ஓம் பளிங்கு ஒளியாய் நின்ற பரமேபோற்றி

    ஓம் ஓசை விந்துநாத உட்பொருளாய்போற்றி

    ஓம் அகண்ட பூரணி அம்மாபோற்றி

    ஓம் உண்ணும் சிவயோக உத்தமியேபோற்றி

    ஓம் பண் மறைவேதப் பாசறையேபோற்றி

    ஓம் மாகேஸ்வரியே மங்கள உருவேபோற்றி

    ஓம் சாம்பவி சங்கரித் தேவியே போற்றி! போற்றி!!

    • துர்க்கையை வணங்கினால் தீய எண்ணங்கள் வேரோடு அழிந்து விடும்.
    • இன்று 9-ம் நாள் வழிபாட்டு முறையை அறிந்து கொள்ளலாம்.

    9-வது நாள் 4-10-2022 (செவ்வாய்க்கிழமை)

    வடிவம் : பரமேஸ்வரி, சுபத்ராதேவி (கையில் வில், பாணம், அங்குசம், சூலத்துடன் தோற்றம்)

    பூஜை : 10 வயது சிறுமியை சாமுண்டி வடிவில் வழிபட வேண்டும்.

    திதி : நவமி

    கோலம் : வாசனைப் பொடிகளால் ஆயுதம் போன்ற கோலம் போட வேண்டும்.

    பூக்கள் : தாமரை, மரிக்கொழுந்து, துளசி, வெள்ளை மலர்கள்.

    நைவேத்தியம் : சர்க்கரை பொங்கல், உளுந்து வடை, வேர்க்கடலை சுண்டல், கடலை, எள் பாயாசம், கேசரி, பொட்டுக்கடலை, எள் உருண்டை.

    ராகம் : வசந்த ராக கீர்த்தனம் பாடி தேவியை மகிழ்விக்க வேண்டும்.

    பலன் : ஆயுள், ஆரோக்கியம் பெருகும். சந்ததிகள் சவுக்கிய மாக இருப்பார்கள்.

    • நவராத்திரி 9 நாட்களும் போற்றி பாடுவது நல்லது.
    • இன்று எட்டாம் நாளுக்குரிய போற்றி பாடலை பார்க்கலாம்.

    முதலில் பிள்ளையாருக்கு இந்த 16 போற்றிகளை சொல்லவும்.

    ஓம் அகர முதல்வா போற்றி!

    ஓம் அணுவிற்கணுவாய் போற்றி!

    ஓம் ஆனை முகத்தோய் போற்றி!

    ஓம் இந்திரன் இளம்பிறைபோற்றி!

    ஓம் ஈடிலாத் தெய்வமே போற்றி!

    ஓம் உமையவள் மைந்தா போற்றி!

    ஓம் ஊழ்வினை அறுப்பாய் போற்றி!

    ஓம் எருக்கினில் இருப்பாய்போற்றி!

    ஓம் ஐங்கரனே போற்றி!

    ஓம் ஒற்றைக் கொம்பனே போற்றி!

    ஓம் கற்பக களிறே போற்றி!

    ஓம் பேழை வயிற்றோய் போற்றி!

    ஓம் பெரும்பாரக் கோட்டாய் போற்றி!

    ஓம் வெள்ளிக்கொம்பனே விநாயகா போற்றி!

    ஓம் பொன்னும் மெய்ப்பொருளும் தருவாய் போற்றி!

    ஓம் போகமும் திருவும் புணர்ப்பாய் போற்றி!

    எட்டாம் நாள் போற்றி

    ஓம் வேத மெய்பொருளேபோற்றி

    ஓம் மேனிக் கருங்குயிலேபோற்றி

    ஓம் அண்டர் போற்றும்

    அருட் பொருளே போற்றி

    ஓம் எண்திசை ஈஸ்வரியேபோற்றி

    ஓம் எங்கும் நிறைந்தவளேபோற்றி

    ஓம் மாயோனின் மனம்

    நிறைந்தவனே போற்றி

    ஓம் தூய ஒளியாய் தெரிபவளேபோற்றி

    ஓம் சிங்க வாகினித் தேவியேபோற்றி

    ஓம் அங்கமெலாம் காக்கும் ஆதரவேபோற்றி

    ஓம் சூலத்தில் சத்தியம் காப்பாய்போற்றி

    ஓம் துன்பம் துடைக்கும் தூமணிபோற்றி

    ஓம் எதிரிகள் விரட்டும் ஏந்தலாய்போற்றி

    ஓம் கடுவிஷம் இறக்கும் மருந்தேபோற்றி

    ஓம் காப்பதில் நிகரிலாத் தெய்வமேபோற்றி

    ஓம் கற்பகமாய் எம்முன் தோன்றுவாய்போற்றி

    ஓம் ஜம்தும் துர்க்கா தேவியே போற்றி!!

    • துர்க்கையை வணங்கினால் தீய எண்ணங்கள் வேரோடு அழிந்து விடும்.
    • இன்று 8-ம் நாள் வழிபாட்டு முறையை அறிந்து கொள்ளலாம்.

    8-வது நாள் 3-10-2022 (திங்கட்கிழமை)

    வடிவம்: நரசிம்ம தாரினி (கரும்பு வில்லுடன் சுற்றிலும் அணிமா முதலிய அஷ்ட சக்திகளுடன் ரக்த பீஜனை சம்காரம் செய்த வடிவம்)

    பூஜை : 9 வயது சிறுமியை மகா கவுரியாக பூஜிக்க வேண்டும்.

    திதி: அஷ்டமி

    கோலம் : பத்ம கோலம்

    பூக்கள் : மருதோன்றி, சம்பங்கி பூக்கள், வெண்தா மரை, குருவாட்சி.

    நைவேத்தியம் : பால்சாதம், தேங்காய் சாதம், புளியோதரை, மொச்சை சுண்டல்.

    ராகம் : புன்னகை வராளி ராகத்தில் பாடி பூஜிக்கலாம்.

    பலன் : நமக்கு இஷ்ட சித்தி உண்டாகும்.

    • இந்தப் பண்டிகைக்கு இடத்துக்கு இடம் நவராத்திரி, தசரா, துர்கா பூஜை எனப் பெயர் மாறும்.
    • ராஜராஜேஸ்வரி அம்மன் அம்பு எய்து சூரனை வதம் நிகழ்ச்சி நடைபெறும்.

    இந்தியா முழுவதும் ஒரே கால கட்டத்தில் கொண்டாடப்படும் திருவிழா தசரா தான். ஆனால், இந்தப் பண்டிகைக்கு இடத்துக்கு இடம் நவராத்திரி, தசரா, துர்கா பூஜை எனப் பெயர் மாறும். அடிப்படை அம்மன் வழிபாடு.

    ஸ்ரீ ராமர் ராவணனை வென்ற வெற்றியை போற்றும் விதமாக தசரா விழாவை வடமாநில மக்கள் கொண்டாடி வருகின்றனர். விஜயதசமி நாளில் மைசூருவின் சாமுண்டேஸ்வரி தேவி மகிஷாசுரனை வெற்றி கொண்ட நாள். தசராவின் போது, கோவில் சிற்பங்களை ஊர்வலமாக எடுத்துச்செல்லும் காட்சியும் பக்தர்கள் கடவுள் வேடமிட்டு நடனமாடும் காட்சியும் காண்போரை மெய்சிலிர்க்க வைக்கும்.

    இந்த தசரா பண்டிகை கொண்டாட்டம் நடைபெறும் 10 நாட்களிலும் மைசூரு அரண்மனை வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கும். விஜயதசமி அன்று தசரா ஊர்வலம் (ஜம்போ சவாரி) நடைபெறும். தங்க மண்டபத்தில் சாமுண்டேஸ்வரி தேவி எழுந்தருளி மைசூரு நகரின் பிரதான வீதிகளில் வலம் வருவார். துர்க்கை மகிசாசூரனை அழித்த நாளே விஜயதசமி. வடக்கே உள்ள ஐதிகம்.

    பராசக்தியே துர்க்கை வடிவம். தசராவில் முதல் 3 நாட்கள் துர்க்கையையும், அடுத்த 3 நாட்கள் லட்சுமியையும், கடைசி3 நாட்கள் சரஸ்வதியையும் வழிபடுவர். புரட்டாசி அமாவாசைக்கு அடுத்து வரக்கூடிய மாதம் 'ஆச்வின' மாதம். இந்த மாதத்தில் உள்ள வளர்பிறை பிரதமை முதல் நவமி வரை உள்ள நாட்களே நவராத்திரி.

    ராமநாதபுரத்திலும் கர்நாடக மாநிலத்தில் கொண்டாடுவது போல் ராமநாதபுரம் ராமலிங்க விலாசம் அரண்மனையில் அமைந்துள்ள ராஜராஜேஸ்வரி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா கடந்த 9 நாட்களாக சிறப்பாக நடைபெறும். ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட இந்த கோவில் நவராத்திரி திருவிழா, மைசூரில் நடைபெறும் தசரா பண்டிகையை போல மன்னர்கள் காலம் முதல் ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்வாக ராஜராஜேஸ்வரி அம்மன் நகரில் உள்ள அனைத்து உற்வச மூர்த்திகளுடன் ஊர்வலமாக மகர் நோன்பு திடலை அடைந்து அங்கு ராஜராஜேஸ்வரி அம்மன் அம்பு எய்து சூரனை வதம் நிகழ்ச்சி நடைபெறும். இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்குபெறுவார்கள்.

    • மீனாட்சி அம்மனுக்கும், உற்சவருக்கும் ஏகதின லட்சார்ச்சனை நடைபெற்றது.
    • பக்தர்களின் கொலு பாட்டு நடந்தது.

    வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு, சக்தி கொலு வைத்து கொண்டாடப்பட்டு வருகிறது. இதில், பிரதானமாக வீற்றுள்ள அம்பாளுக்கு தினசரி சிறப்பு அலங்காரங்கள் செய்யப்படுகின்றன. அதன்படி, 7-ம் நாளான நேற்று, கம்பாந்தி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அம்மன் அருள்பாலித்தார்.

    சக்தி கொலு 7-ம் நாள் விழாவை ரங்கவள்ளி ஆர்ட்ஸ் பவுன்டேஷனை சேர்ந்தவர்கள் குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தனர். முன்னதாக நேற்று காலை, மாலையில் சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. மாலையில் லலிதா சகஸ்ரநா பாராயணம், வேத பாராயணம், ஸ்ரீருத்ரம், சமஹம், ஸ்ரீசுக்தம் நடந்தது. பின், பக்தர்களின் கொலு பாட்டு நடந்தது.

    மேலும், காலை 7.30 முதல் 12.30 மணி வரையும் மாலை 4.30 முதல் இரவு 8.30 மணி வரையும் மீனாட்சி அம்மனுக்கும், உற்சவருக்கும் ஏகதின லட்சார்ச்சனை நடைபெற்றது. இது தவிர இரவு, வித்யாவாணி சங்கீத வித்யாலயா குழுவினரின் சிறப்பு பஜனை நடந்தது. மேலும், குழந்தைளுடன் வந்த பெற்றோருக்கு 10 கேள்விகள் அடங்கிய தாள் வழங்கப்பட்டு, சரியான விடை அளித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    7-ம் நாள் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சக்தி கொலு, நிகழ்ச்சிகளை கண்டு மகிழ்ந்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் எல்.ஆதிமூலம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நவராத்திரி 9 நாட்களும் போற்றி பாடுவது நல்லது.
    • இன்று ஏழாம் நாளுக்குரிய போற்றி பாடலை பார்க்கலாம்.

    முதலில் பிள்ளையாருக்கு இந்த 16 போற்றிகளை சொல்லவும்.

    ஓம் அகர முதல்வா போற்றி!

    ஓம் அணுவிற்கணுவாய் போற்றி!

    ஓம் ஆனை முகத்தோய் போற்றி!

    ஓம் இந்திரன் இளம்பிறைபோற்றி!

    ஓம் ஈடிலாத் தெய்வமே போற்றி!

    ஓம் உமையவள் மைந்தா போற்றி!

    ஓம் ஊழ்வினை அறுப்பாய் போற்றி!

    ஓம் எருக்கினில் இருப்பாய்போற்றி!

    ஓம் ஐங்கரனே போற்றி!

    ஓம் ஒற்றைக் கொம்பனே போற்றி!

    ஓம் கற்பக களிறே போற்றி!

    ஓம் பேழை வயிற்றோய் போற்றி!

    ஓம் பெரும்பாரக் கோட்டாய் போற்றி!

    ஓம் வெள்ளிக்கொம்பனே விநாயகா போற்றி!

    ஓம் பொன்னும் மெய்ப்பொருளும் தருவாய் போற்றி!

    ஓம் போகமும் திருவும் புணர்ப்பாய் போற்றி!

    ஏழாம் நாள் போற்றி

    ஓம் மெய்த் தவமே போற்றி

    ஓம் மூலாதாரத்து ஒளியேபோற்றி

    ஓம் ஆதிமுதல் அம்பரமேபோற்றி

    ஓம் அகண்ட பரிபூரணியேபோற்றி

    ஓம் அகிலலோக நாயகி போற்றி

    ஓம் நல்வினை நிகழ்த்துவாய்போற்றி

    ஓம் அஞ்சலென்று அருள்வாய்போற்றி

    ஓம் ஆறுமுகன் வேல் தந்தோய்போற்றி

    ஓம் சொல்லுக்கு இனிய சுந்தரிபோற்றி

    ஓம் வில்லோன் மாயை தந்தவளே போற்றி

    ஓம் ஐந்தெழுத்தோன் ஆரணங்கே போற்றி

    ஓம் எழுவரில் ஒன்றானவளேபோற்றி

    ஓம் இல்லத்தொளி தரும் இறைவி போற்றி

    ஓம் ஏற்றம் தரும் ஏறே போற்றி

    ஓம் காட்சிக்கு இனியவளேபோற்றி

    ஓம் சாம்பவி மாதே போற்றி

    • துர்க்கையை வணங்கினால் தீய எண்ணங்கள் வேரோடு அழிந்து விடும்.
    • இன்று 7-ம் நாள் வழிபாட்டு முறையை அறிந்து கொள்ளலாம்.

    7-வது நாள் 2-10-2022 (ஞாயிற்றுக்கிழமை)

    வடிவம் : சாம்பவித் துர்க்கை (பொற் பீடத்தில் ஒரு பாதம் தாமரை மலரில் இருக்க வீணை வாசிக்கும் தோற்றம்)

    பூஜை : 8 வயது சிறுமியை பிராக்மி மகா சரஸ்வதி, சுமங்கலியாக கருதி பூஜிக்க வேண்டும்.

    திதி : சப்தமி.

    கோலம் : நறுமண மலர்களால் கோலமிட வேண்டும்.

    பூக்கள் : தாழம்பூ, தும்ைப, மல்லிகை, முல்லை.

    நைவேத்தியம் : எலுமிச்சம் பழசாதம், பழ வகைகள், வெண்பொங்கல், கொண்டக்கடலை சுண்டல், பாதாம் முந்திரி பாயாசம், புட்டு.

    ராகம் : பிலஹரி ராகத்தில் பாடி பூஜிக்க வேண்டும்.

    பலன் : வேண்டும் வரம் அனைத்தும் கிடைக்கும்.

    ×