என் மலர்
நீங்கள் தேடியது "vadapalani murugan temple"
- நள்ளிரவில் காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட மர்மநபர் வடபழனி முருகன் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.
- கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னையில் பிரசித்த பெற்ற முருகன் கோவில்களுள் ஒன்று வடபழனி முருகன் கோவில். இக்கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், வடபழனி முருகன் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
நள்ளிரவில் காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட மர்மநபர் வடபழனி முருகன் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து கோவில் நடை திறந்த பின் நடைபெற்ற சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது. இதனை தொடர்ந்து கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.
- வடபழனியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
- முருகனை தரிசிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
போரூர்:
ஆடி கிருத்திகையை முன்னிட்டு வடபழனி முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
இன்று அதிகாலை 3மணி அளவில் கோவில் நடை திறக்கப்பட்டு பின்னர் பள்ளியறை பூஜை முடிந்து முருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.
இதையடுத்து அதிகாலை 5 மணி முதல் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டு நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இன்று இரவு 11 மணி வரை முருகனை தரிசிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
நண்பகல் 12 மணி வரை சந்தனகாப்பு அலங்காரத்திலும், அதைத்தொடர்ந்து மாலை 4 மணி வரை ராஜ அலங்காரமும், பின்னர் இரவு 11 மணி வரை புஷ்ப அங்கி அலங்காரத்துடனும் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
வடபழனி, விருகம்பாக்கம், சாலிகிராமம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து பால் குடம் எடுத்தும், அலகு குத்தியும், காவடி எடுத்தும் ஏராளமான பக்தர்கள் ஊர்வலமாக வந்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தி வருகின்றனர்.
பக்தர்கள் நெரிசல் இன்றி சாமி தரிசனம் செய்யும் வகையில் ஆங்காங்கே குடி தண்ணீர் வசதி, முதியோர், கைக்குழந்தையுடன் வருபவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு தனி வரிசை என பல்வேறு வசதிகள் கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பான முறையில் செய்யப்பட்டுள்ளது.
மேலும் கோவில் வளாகத்தை சுற்றியும் கோவிலுக்கு செல்லும் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை கட்டுப்படுத்தும் விதமாக போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- வைகாசி விழாவையொட்டி மங்களகிரி விமானத்தில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் வீதி உலா நடந்தது.
- தேரோட்ட நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சென்னை:
சென்னை வடபழனியில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் வைகாசி விசாகத் திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
விசாகத் திருவிழா கடந்த 13-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது. இந்த ஆண்டுக்கான வைகாசி விழாவையொட்டி மங்கள கிரி விமானத்தில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் வீதி உலா நடந்தது.
பின்னர் சூரிய பிரபை, சந்திர பிரபை புறப்பாடு, ஆட்டுக்கிடா வாகனத்தில் வள்ளி தெய்வ யானை சமேத சுப்பிரமணியர் வீதி உலா, நாக வாகனத்தில் சுப்பிரமணியர் வீதி உலா நடைபெற்றது. நேற்று முன்தினம் பஞ்சமூர்த்தி புறப்பாடும், நேற்று யானை புறப்பாடும் நடந்தது.
இந்த நிலையில் பிரம் மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நிகழ்ச்சி இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை நடைபெற்றது.
காலை 6 மணிக்கு மேல் தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரோட்ட நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து இரவு ஒய்யாவி உற்சவமும், நாளை (திங்கட்கிழமை) இரவு 7 மணிக்கு குதிரை வாகன புறப்பாடும் நடைபெறுகிறது. 21-ந்தேதி இரவு 7 மணிக்கு ஆண்டவர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
வைகாசி விசாகமான 22-ந்தேதி காலை 9 மணிக்கு வள்ளி தெய்வானை சமேத சண்முகர் வீதி உலாவும், காலை 10 மணிக்கு தீர்த்த வாரி உற்சவமும், கலசாபி ஷேகமும் நடக்கிறது. தொடர்ந்து திருக்கல்யாண உற்சவம், மயில்வாகனத்தில் புறப்பாடு நடக்கிறது. இதைத் தொடர்ந்து கொடியிறக்கத்துடன் பிரம்மோற்சவம் விழா நிறைவு பெறுகிறது.
வருகிற 23-ந்தேதி இரவு விசேஷ புஷ்ப பல்லக்கு புறப்பாடு, சுப்பிரமணியர் வீதி உலா நடக்கிறது. அதன் பின்னர், வைகாசி விசாக பிரம்மோற்சவ விடையாற்றி கலை நிகழ்ச்சிகள், 24-ந்தேதி முதல் ஜூன் 2-ந்தேதி வரை நடை பெறுகிறது.
இதையொட்டி தினமும் மாலையில் பரத நாட்டியம், இன்னிசை கச்சேரி, வீணை கச்சேரி, இசை செற்பொழிவு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
#WATCH | Chennai, Tamil Nadu: On the occasion of 'Vaikasi Visakam Festival' chariot procession was held in Vadapalani Murugan Temple
— ANI (@ANI) May 19, 2024
'Vaikasi Visakam' is a 10 day grand festival in which each day different processions would be held. Today as a part of the event, chariot… pic.twitter.com/fNf2inZaEA
- முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடுகள் நடந்தன.
- திரளான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்தனர்.
போரூர்:
பிரசித்தி பெற்ற வட பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திரவிழா கடந்த 21-ந் தேதி தொடங்கியது. கடந்த 3 நாட்களாக தினசரி காலை மற்றும் மாலையில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடுகள் நடந்தன.
இந்த நிலையில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு வடபழனி முருகன்கோவிலில் இன்று அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டு உச்சி காலத்துடன் தீர்த்தவாரி மற்றும் யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. திரளான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்தனர்.
விருகம்பாக்கம், சாலிகிராமம் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் உள்ள கோவில்களில் இருந்து ஏராளமான பெண்கள், ஆண்கள் அலகு குத்தியும், காவடி சுமந்தும், பால் குடம் எடுத்தும் ஊர்வலமாக வந்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.
இன்று இரவு 7மணிக்கு சிறப்பு அலங்காரத்துடன் சாமி புறப்பாடு நடக்கிறது. இதைத்தொடர்ந்து நாளை முதல் வருகிற 27-ந்தேதி வரை 3 நாட்களும் இரவு 7 மணிக்கு திருக்குளத்தில் தெப்பத்திருவிழா கோலாகலமாக நடைபெற உள்ளது.
பாரிமுனை, ராசப்பா செட்டி தெருவில் உள்ள கந்தக்கோட்டை முருகன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
குன்றத்தூர் முருகன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் வந்து நேர்த்தி கடன் செலுத்தினர். கோவில் வளாகம் முழுவதும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. பூந்தமல்லியில் உள்ள திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜபெருமாள் கோவிலில் கருட சேவையுடன், கோபுர தரிசனமும், திருவீதி உலாவும் நடைபெற்றது.
மேலும் 3 பெருமாளும் கோவிலின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து கோவில் வளாகத்தை சென்றடைந்தனர். மற்ற கோவில்களில் ஒரு கருட சேவை மட்டும் நடைபெறும். ஆனால் இங்கு மட்டும் 3 கருட சேவை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மாலையில் 3 பெருமாளுக்கும், திருக்கச்சி நம்பிகளுக்கும் அலங்கார திருமஞ்சனமும், திருப்பாவை சாற்று முறை தீர்த்த பிரசாத விநியோகமும் நடைபெறுகிறது.
திருத்தணி முருகன் கோவிலில் பங்குனி உத்திர விழாவையொட்டி அதிகாலை 5 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, தங்கவேல், தங்கக் கீரிடம், வைர ஆபரணங்கள் அணி விக்கப்பட்டு, சிறப்பு தீபாராதனை நடந்தது.
இன்று ஞாயிற்றுக்கிழமை விடு முறை மற்றும் பங்குனி உத்திரம் என்பதால் மலைக்கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் குவிந்து இருந்தனர். இதனால் பொது வழியில் மூலவரை தரிசிக்க பக்தர்கள் சுமார் 3 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனா்.
- பங்குனி உத்திரத்தை முன்னிட்டு லட்சார்ச்சனை மற்றும் தெப்பத்திருவிழா இன்று தொடங்கி வருகிற 27-ந்தேதி வரை நடைபெறுகிறது.
- இன்று காலை யாக சாலை பூஜைகளுடன் லட்சார்ச்சனை தொடங்கியது.
சென்னை:
வடபழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திரவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு பங்குனி உத்திரத்தை முன்னிட்டு லட்சார்ச்சனை மற்றும் தெப்பத்திருவிழா இன்று தொடங்கி வருகிற 27-ந்தேதி வரை நடைபெறுகிறது.
இன்று காலை யாக சாலை பூஜைகளுடன் லட்சார்ச்சனை தொடங்கியது. வருகிற 23-ந்தேதி மாலை வரை லட்சார்ச்சனை நடக்கிறது.
வருகிற 24-ந்தேதி பங்குனி உத்திரத்தன்று உச்சி கால தீர்த்தவாரி மற்றும் கலசாபிஷேகத்துடன் பூஜைகள் நடைபெறுகின்றன. அன்று இரவு 7 மணிக்கு சிறப்பு அலங்காரத்துடன் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது. வருகிற 25-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை இரவு 7 மணிக்கு தெப்பத் திருவிழா நடைபெறுகிறது.
- ஓலைக் குடிசையில் முருகன் சித்திரத்தை வைத்து பூஜித்து வந்துள்ளார்.
- பழமையான கோவில்களில், வடபழனி முருகன் கோவிலும் ஒன்று.
சென்னையில் உள்ள பழமையான கோவில்களில், வடபழனி முருகன் கோவிலும் ஒன்று. இது தமிழ்நாட்டின் முருக பக்தர்களிடையே வெகு பிரசித்தம். 17-ம் நூற்றாண்டின் இறுதியில் முருக பக்தர் ஒருவரால் இக்கோவில் கட்டப்பட்டுள்ளது. வறியவரான அந்த பக்தர், ஆரம்ப காலத்தில் ஒரு ஓலைக் குடிசையில் முருகன் சித்திரத்தை வைத்து பூஜித்து வந்துள்ளார்.
தலபுராண கதைகளின்படி ஒரு நாள் அந்த பக்தர் பூஜை செய்து கொண்டிருந்தபோது, அவருள் தெய்வீக சக்தி பரவுவதை உணர்ந்துள்ளார். சொல்வதெல்லாம் சித்திக்கும் சக்தியையும் அக்கணத்தில் இருந்து பெற்றுள்ளார். இதன்பின்னர் அவர் திருத்தணி சென்று தனது நாக்கினை அறுத்து பலிகாணிக்கையாக செலுத்தி விட்டார்.
இப்படியாக இவரது கீர்த்தி பரவ ஆரம்பித்து குடிசைக்கோவில் நாளடைவில் சிறிய கோவிலாக மாறி, தற்போது நாம் காணும் மிகப்பெரிய கோவிலாக வளர்ச்சியடைந்துள்ளது. கோவிலுக்கென்று பிரத்தியேக தீர்த்தக்குளம், பெரிய வளாகம் கொண்டு வடபழனி முருகன் கோவில் திகழ்கிறது.
- நாளை விசேஷ புஷ்ப பல்லக்கு வீதி புறப்பாடு நடக்கிறது.
- 4-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை பிரமோற்சவ விடையாற்றி கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.
சென்னை வடபழனி முருகன் கோவிலில் வைகாசி மாத பிரமோற்சவ விழா கடந்த மாதம் 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் கோவிலில் சாமி வீதி உலா நடைபெற்று வருகிறது. 10-ம் நாளான இன்று திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.
இதையொட்டி இன்று காலையில் வள்ளி, தேவசேனா, சண்முகர் வீதி உலா நடைபெற்றது. பின்னர் தீர்த்தவாரி உற்சவம் நடந்தது. இன்று மாலை 6 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. அதனை தொடர்ந்து மயில் வாகன புறப்பாடு நிகழ்ச்சி நடக்கிறது.
இரவு 9 மணிக்கு கொடியிறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது.
நாளை (3-ந்தேதி) இரவு 7 மணிக்கு விசேஷ புஷ்ப பல்லக்கு வீதி புறப்பாடு நடக்கிறது. வருகிற 4-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை பிரமோற்சவ விடையாற்றி கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.
- அஷ்டோத்திர சத கலாபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது.
- பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
வடபழனி முருகன் கோவிலில் கடந்த ஆண்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகம் நடந்து ஓராண்டு நிறைவு பெற்றதை தொடர்ந்து வருஷாபிஷேகம் நேற்று நடந்தது. இதையொட்டி கடந்த சில நாட்களாக கோவிலில் யாகசாலை வளர்க்கப்பட்டு, ஹோமங்கள், கால பூஜைகள் நடத்தப்பட்டன.
கும்பாபிஷேகம் ஓராண்டு நிறைவு நாளான நேற்று காலை முதல் கணபதி பூஜை, புண்யாக வாசனம், இரண்டாம் கால பூஜை, வேத திருமுறை பாராயணம், விசேஷ திரவிய ஹோமம் நடந்தது. அதனை தொடர்ந்து மகா பூர்ணாஹுதி, யாத்ரா தானம், எஜமான சங்கல்பம், மகா தீபாராதனை நடந்தது.
யாக சாலையில் இருந்து கடப்புறப்பாடு, அனைத்து பரிவார மூர்த்திகளுக்கு கலசாபிஷேகமும் நடைபெற்றது. முருகனுக்கு 108 எண்ணிக்கை கொண்ட அஷ்டோத்திர சத கலாபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது.
இந்த நிகழ்வில் கோவில் தக்கார் ஆதிமூலம், ஓராண்டு நிறைவு விழா உபயதாரர் மோகன்குமார், நகரத்தார் குழுவை சேர்ந்த வெங்கடாச்சலம், கோவில் துணைக் கமிஷனர் முல்லை உள்ளிட்டோர் பங்கேற்றனர். பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
- நாளை முதல் 7-ம்தேதி வரை 8 ஆயிரம் மின் விளக்குகளை கொண்டு சிறப்பு அலங்காரம்.
- 6-ம்தேதி மூலவர் செண்பகப் பூ அலங்காரத்தால் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
சென்னையில் உள்ள புகழ் பெற்ற வடபழனி முருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் திருக்கார்த்திகை விழா வெகு விமரிசையாக நடந்து வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டு கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு வடபழனி முருகன் கோவிலின் மூலவர் சன்னதி சுற்றுச்சுவரில் நாளை (திங்கட்கிழமை) முதல் வருகிற 7-ம்தேதி வரை 8 ஆயிரம் மின் விளக்குகளை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட உள்ளது.
அத்துடன், திருகார்த்திகை தினம் அன்று (6-ம்தேதி) மூலவர் செண்பகப் பூ அலங்காரத்தால் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். அன்றைய தினம் வள்ளி தேவசேனா சன்னதி உள்ளே 36 குத்துவிளக்குகள், கோவில் வளாகத்தில் 108 குத்து விளக்குகள் ஏற்றப்பட்டு, வெகு விமரிசையாக கார்த்திகை தீப விழா கொண்டாடப்பட உள்ளது. பக்தர்கள் தரிசனத்திற்கு சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
பத்தர்களுக்கு வேண்டிய குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் எல்.ஆதிமூலம், துணை ஆணையர் முல்லை உள்ளிட்ட செய்து வருகின்றனர்.
- மீனாட்சி அம்மனுக்கும், உற்சவருக்கும் ஏகதின லட்சார்ச்சனை நடைபெற்றது.
- பக்தர்களின் கொலு பாட்டு நடந்தது.
வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு, சக்தி கொலு வைத்து கொண்டாடப்பட்டு வருகிறது. இதில், பிரதானமாக வீற்றுள்ள அம்பாளுக்கு தினசரி சிறப்பு அலங்காரங்கள் செய்யப்படுகின்றன. அதன்படி, 7-ம் நாளான நேற்று, கம்பாந்தி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அம்மன் அருள்பாலித்தார்.
சக்தி கொலு 7-ம் நாள் விழாவை ரங்கவள்ளி ஆர்ட்ஸ் பவுன்டேஷனை சேர்ந்தவர்கள் குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தனர். முன்னதாக நேற்று காலை, மாலையில் சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. மாலையில் லலிதா சகஸ்ரநா பாராயணம், வேத பாராயணம், ஸ்ரீருத்ரம், சமஹம், ஸ்ரீசுக்தம் நடந்தது. பின், பக்தர்களின் கொலு பாட்டு நடந்தது.
மேலும், காலை 7.30 முதல் 12.30 மணி வரையும் மாலை 4.30 முதல் இரவு 8.30 மணி வரையும் மீனாட்சி அம்மனுக்கும், உற்சவருக்கும் ஏகதின லட்சார்ச்சனை நடைபெற்றது. இது தவிர இரவு, வித்யாவாணி சங்கீத வித்யாலயா குழுவினரின் சிறப்பு பஜனை நடந்தது. மேலும், குழந்தைளுடன் வந்த பெற்றோருக்கு 10 கேள்விகள் அடங்கிய தாள் வழங்கப்பட்டு, சரியான விடை அளித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
7-ம் நாள் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சக்தி கொலு, நிகழ்ச்சிகளை கண்டு மகிழ்ந்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் எல்.ஆதிமூலம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- கொலு பாட்டு, திருப்பூர் கிருஷ்ணனின் சொற்பொழிவு நடந்தது.
- நவராத்திரி திருவிழா வருகிற 4-ந் தேதி வரை நடைபெறுகிறது.
சென்னை வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரி திருவிழா நடந்து வருகிறது. இதையொட்டி கோவில் வளாகத்தில் 'சக்தி கொலு' என்ற பெயரில் 9 படிகள் கொண்ட பிரமாண்ட கொலு கோவிலின் 4 திசைகளிலும் வைக்கப்பட்டு உள்ளது. சக்தி கொலுவில் இதுவரை மீனாட்சி அம்மன் அலங்காரம், அன்னபூரணி அம்மன் அலங்காரம், அபிராமி அம்மன் அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டு இருக்கிறது.
நவராத்திரி திருவிழாவின் 5-வது நாளான நேற்று காலை, மாலையில் சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. நேற்று கஜலட்சுமி அம்மன் அலங்காரத்தில் கொலு அமைக்கப்பட்டது. கோவில் அர்ச்சகர்களின் இல்லத்தரசிகள் மற்றும் உபயதாரர்கள் இணைந்து சக்தி கொலுவை குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தனர். இதில் பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்று கஜலட்சுமி அலங்காரத்தில் அருள்பாலித்த அம்மனை தரிசனம் செய்தனர்.
சக்தி கொலுவில் பக்தர்களின் கொலு பாட்டு, திருப்பூர் கிருஷ்ணனின் சொற்பொழிவு நடந்தது. நவராத்திரி திருவிழா வருகிற 4-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் எல்.ஆதிமூலம் செய்து உள்ளார்.
- அம்மனை பக்தர்கள் பரவசத்துடன் வழிபட்டு சென்றனர்.
- நவராத்திரி திருவிழா அக்டோபர் 4-ந்தேதி வரை நடைபெறுகிறது.
சென்னையில் பிரசித்தி பெற்ற வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரி திருவிழா கடந்த 26-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதையொட்டி கோவில் வளாகத்தில் 'சக்தி கொலு' என்ற பெயரில் 9 படிகள் கொண்ட பிரமாண்ட கொலு கோவிலின் 4 திசைகளிலும் வைக்கப்பட்டு உள்ளது. சக்தி கொலுவின் 2-ம் நாளில் மீனாட்சி அம்மன் அலங்காரமும், 3-ம் நாளில் அன்னபூரணி அம்மன் அலங்காரமும் செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நவராத்திரி திருவிழாவின் 4-ம் நாள் நிகழ்வு நேற்று கொண்டாடப்பட்டது. அதன்படி நேற்று காலை, மாலையில் சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. மாலை லலிதா சகஸ்ரநா பாராயணம், வேத பாராயணம், ஸ்ரீருத்ரம், சமஹம், ஸ்ரீசுக்தம் நடந்தது.
இதில் அபிராமி அம்மன் அலங்காரத்தில் கொலு அமைக்கப்பட்டது. இந்த கொலுவை பழம்பெரும் நடிகை சச்சு, கோவில் அர்ச்சகர்களின் இல்லத்தரசிகள் ஆகியோர் இணைந்து குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர். இதில் பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்று அபிராமி அலங்காரத்தில் அருள்பாலித்த அம்மனை மனமுருக வழிபட்டனர்.
சக்தி கொலுவில் கிருஷ்ணரின் உபதேசங்கள் ஒலி வடிவில் ஒலிக்கப்பட்டன. அதனைத்தொடர்ந்து கொலு பாட்டு, ரமணனின் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடந்தன. தினந்தோறும் கொலுவுக்கு வரும் முதல் 250 பேருக்கு சுமங்கலி செட் பிரசாதமும், அம்மன், முருகன் கோவில்கள் அடங்கிய புத்தகமும் வழங்கப்பட்டு வருகின்றன.
நவராத்திரி திருவிழா அக்டோபர் 4-ந்தேதி வரை நடைபெறுகிறது. நவராத்திரி திருவிழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் எல்.ஆதிமூலம் செய்து வருகிறார்.