search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வடபழனி முருகன் கோவில் வைகாசி விசாக விழா 18-ந்தேதி தொடங்குகிறது
    X

    வடபழனி முருகன் கோவில் வைகாசி விசாக விழா 18-ந்தேதி தொடங்குகிறது

    வடபழனி முருகன் கோவிலில் வைகாசி விசாக விழா வருகிற 18-ந் தேதி முதல் ஜூன் 8-ந் தேதி வரை நடைபெறுகிறது.
    முருகக் கடவுளுக்கு உகந்த விழாக்களில் முக்கியமானது வைகாசி விசாக விழா ஆகும். இந்த விழா, உலகில் உள்ள பெரும்பான்மையான முருகன் கோவில்களில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் சென்னை வடபழனியில் உள்ள முருகன் கோவிலில் வைகாசி விசாக விழா வருகிற 18-ந் தேதி(வெள்ளிக்கிழமை) முதல் ஜூன் 8-ந் தேதி(வெள்ளிக்கிழமை) வரை நடைபெற உள்ளது.

    முதல் நாளான 18-ந் தேதி மாலை 5 மணிக்கு விநாயகர் மூஷிக வாகனத்தில் புறப்பாடு நிகழ்ச்சியுடன் விழா தொடங்குகிறது. 2-வது நாளான 19-ந் தேதி(சனிக்கிழமை) காலை 7 மணிக்கு கொடியேற்றம் நிகழ்ச்சி நடக்கிறது. 23-ந் தேதி(புதன்கிழமை) இரவு 7 மணிக்கு பஞ்சமூர்த்தி புறப்பாடு நிகழ்ச்சியும், 25-ந் தேதி(வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும், 27-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) இரவு 7 மணிக்கு வடபழனி முருகன் உற்சவர் புறப்பாடும் நடைபெறுகிறது.

    விழாவின் முக்கிய தினமான வைகாசி விசாக நாளான 28-ந் தேதி(திங்கட்கிழமை) காலை 8 மணிக்கு வள்ளி, தேவசேனா சமேத ஸ்ரீ சண்முகர் வீதி உலா நிகழ்ச்சியும், மதியம் 12 மணிக்கு தீர்த்தவாரியும், மாலை 6 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், இரவு 7 மணிக்கு மயில் வாகன புறப்பாடும் நடைபெறுகிறது. 29-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) இரவு 7 மணிக்கு புஷ்ப பல்லக்கு புறப்பாடு நடைபெறுகிறது.

    அதைத் தொடர்ந்து 30-ந் தேதி(புதன்கிழமை) முதல் ஜூன் 8-ந் தேதி(வெள்ளிக்கிழமை) வரை இரவு 7 மணிக்கு விடையாற்றி கலை நிகழ்ச்சிகளாக, இன்னிசை கச்சேரி, பரதநாட்டியம், சமய சொற்பொழிவு, நாட்டுப்புற பாடல்கள், பொம்மலாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

    விழாவுக்கான ஏற்பாடுகளை வடபழனி முருகன் கோவிலின் இணை ஆணையர் இரா.வான்மதி தலைமையில், கோவில் பணியாளர்கள் மற்றும் கோவில் பூசாரிகள் செய்து வருகின்றனர். 
    Next Story
    ×