என் மலர்
வழிபாடு

நவராத்திரி: இன்று 10-வது நாள் வழிபாட்டு முறை
- துர்க்கையை வணங்கினால் தீய எண்ணங்கள் வேரோடு அழிந்து விடும்.
- இன்று 10-ம் நாள் வழிபாட்டு முறையை அறிந்து கொள்ளலாம்.
10-வது நாள் 5-10-2022 (புதன் கிழமை)
வடிவம் : அம்பிகை. இவளுக்கு விஜயா என்ற பெயரும் உண்டு (ஸ்தூல வடிவம்)
திதி: தசமி
பலன் : புரட்டாசி மாதம் சுக்ல பட்சமியே விஜயதசமி. மூன்று சக்திகளும், தீய சக்தியை அழித்து, வெற்றி கொண்ட அனைவருக்கும் நன்மைகளை அள்ளித்தந்து அருள் பாலிக்கும் சுபநாள். இன்று தொடங்கும் எல்லா காரியங்களும் வெற்றி மீது வெற்றி பெறும்.
நைவேத்தியம் : பால் பாயாசம், காராமணி சுண்டல், இனிப்பு வகைகள்.
பூக்கள் : வாசனைப் பூக்கள்.
Next Story