search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nadigar Sangam"

    திரைத்துறையினர் மீது பாலியல் புகார் கூறிவரும் நடிகை ஸ்ரீரெட்டி, நடிகர் சங்க உறுப்பினர் கேட்டு மீண்டும் போராட்டம் நடத்தி வருகிறார். #SriReddy #SriLeaks
    தெலுங்கு பட உலகில் நடிக்க வரும் பெண்களை சிலர் படுக்கைக்கு அழைப்பதாக நடிகை ஸ்ரீரெட்டி பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார். ஸ்ரீலீக்ஸ் முகநூல் பக்கத்தில் பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் விவரங்களையும் வெளியிட்டு அதிர வைத்தார். தெலுங்கு திரைப்பட வர்த்தக சபை முன்பு அரை நிர்வாண போராட்டமும் நடத்தினார்.

    ஸ்ரீரெட்டிக்கு ஆதரவாக பெண்கள் அமைப்பினரும் களம் இறங்கினர். அதைத்தொடர்ந்து ஸ்ரீரெட்டி தெலுங்கு படங்களில் நடிக்க, தெலுங்கு நடிகர் சங்கம் தடை விதித்தது. மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியதால், அவர் மீதான தடை நீக்கப்பட்டது.

    இந்த நிலையில், நடிகர் நானி மீதும், ஸ்ரீரெட்டி ‘செக்ஸ்’ புகார் கூறினார். “நானி பெரிய கதாநாயகன் ஆவதற்கு முன்பே எனக்கு தெரியும். அடிக்கடி என் வீட்டுக்கு வருவார். நான் பெரிய படத்தில் நடிக்கும்போது, உனக்கு கதாநாயகி வாய்ப்பு வாங்கி தருகிறேன் என்றார். உடல் ரீதியாக என்னை அவர் பயன்படுத்திக் கொண்டார். இப்படி ஆசை காட்டி, இன்னொரு பெண்ணின் வாழ்க்கையையும் நானி கெடுத்து விட்டார் என்றும் கூறினார்.

    இதனால் ஸ்ரீரெட்டிக்கும், நானிக்கும் இடையே மோதல் ஏற்பட்டு இருக்கிறது. “ஸ்ரீரெட்டி புகாரில் உண்மை இல்லை என்றும் அவர் மன்னிப்பு கேட்காவிட்டால், அவதூறு வழக்கு தொடர்வேன் என்றும் ஸ்ரீரெட்டிக்கு நானி நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்.

    இந்த நிலையில், தெலுங்கு நடிகர் சங்கம் தனக்கு உறுப்பினர் அட்டை வழங்க வேண்டும் என்று கோரி, ஸ்ரீரெட்டி மீண்டும் போராட்டத்தில் குதித்து இருக்கிறார்.

    இதுவரை அவருக்கு உறுப்பினர் அட்டை கொடுக்காமல், தெலுங்கு நடிகர் சங்கம் நிறுத்தி வைத்து இருப்பது குறிப்பிடத்தக்கது. #SriReddy
    விருது வழங்கும் விழாக்களில் கலந்து கொள்ள நடிகர் - நடிகைகளுக்கு, நடிகர் சங்கம் சில கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறது. #NadigarSangam
    தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நேற்று இரவு ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:- கடந்த காலங்களில் திரையுலகில் திரைப்பட விழாக்கள், விருது வழங்கும் நிகழ்ச்சிகள், நடன நிகழ்ச்சிகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என பல நிகழ்வுகள் நடந்துள்ளன. அந்த நிகழ்ச்சிகளில் நடிகர்-நடிகைகள் பலரும் கலந்துகொண்டுள்ளனர். ஆனால், சமீப காலங்களில், அது வியாபார நோக்கத்தில் நடத்தப்படுவதால், அந்த பயனை நடிகர்-நடிகைகளும் பெறவேண்டும் என்ற நோக்கத்தில், நடிகர் சங்கத்தின் சிறப்பு கூட்டத்தில், இதுபற்றி விவாதித்து முடிவு எடுக்கப்பட்டது.

    அன்று எடுத்த முடிவில் இனிமேல் இதுபோன்ற விழாக்களில் கலந்து கொள்ளும் நடிகர்கள், இலவசமாகவோ அல்லது மரியாதைக்காகவோ கலந்துகொள்ள வேண்டாம். ஒன்று, அவர்கள் பணம் பெற்றுக்கொண்டு கலந்துகொள்ள வேண்டும். அல்லது தென்னிந்திய நடிகர் சங்கத்தின் அறக்கட்டளைக்கு பயன்படும் வகையில் பணம் கிடைப்பதை உறுதி செய்த பின், அந்த விழாவில் கலந்து கொள்ளலாம்.

    இந்த பணம் பல நலிந்த கலைஞர்களுக்கு உதவி செய்வதற்காகவே பயன்படும் என்பதாக ஒரு முடிவு எடுக்கப்பட்டது. இதற்கு பின் நடந்த தனியார் விழாக்களில் இந்த நடைமுறையில் பணம் பெற்று, கலைஞர்களும் கலந்துகொண்டார்கள். இதன் தொடர்ச்சியாக ஐதராபாத்தில் நடந்த ஒரு ஆங்கில பத்திரிகை விருது வழங்கும் நிகழ்ச்சிக்காகவும், அந்த நிறுவனத்திடம் அன்பளிப்பு தொகை பேசப்பட்டது. அதற்கு இன்று வரையிலும் எந்த பதிலும் வரவில்லை.

    இதை, நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் நடிகர்-நடிகைகளிடம் தெரிவித்தோம். அதில் பல நடிகர்-நடிகைகள் எங்களது வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு, விழாவினை தவிர்த்து இருக்கிறார்கள். சிலர் தவிர்க்க முடியாத காரணத்தினால், கலந்துகொண்டும் இருக்கிறார்கள்.

    நாங்கள் அனைவரின் உணர்வுகளை மதிக்கிறோம். இனி எதிர்காலத்தில் நாம் ஒற்றுமையுடன் இருந்து இதுபோன்ற பொது நிகழ்வுகளில் கலந்துகொள்வதையும், நாம் ஒரு பொதுநோக்கோடு செயல்படுவதையும் உறுதி செய்யவேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம்.

    எனவே இனிமேல், தாங்கள், தொலைக்காட்சி, விருது வழங்கும் நிகழ்ச்சி போன்ற நிகழ்வுகளாக இருந்தாலும், ஒன்று நீங்கள் பொருளாதார ரீதியில் பயன்பெறுங்கள். இல்லையேல் தென்னிந்திய நடிகர் சங்க அறக்கட்டளைக்கு அந்த பொருளாதாரத்தை நீங்கள் உறுதி செய்து கொடுத்தால், அது பல நலிந்த கலைஞர்களின் வாழ்க்கையில் விளக்கு ஏற்றும் விதமாக அமையும்.

    இதனை தொடர்ச்சியாக பின்பற்ற வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறோம். எங்கள் நலிந்த கலைஞர்களின் உணர்வுகளை மதித்து, இன்று (நேற்று) ஐதராபாத்தில் ஒரு ஆங்கில பத்திரிகையின் விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்ளாத நடிகர்கள் கார்த்தி, விஜய்சேதுபதி, நடிகைகள் நயன்தாரா, குஷ்பு மற்றும் அனைவருக்கும் தென்னிந்திய நடிகர் சங்கம் நன்றி தெரிவித்துக்கொள்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    மலையாள நடிகர் சங்க தலைவராக நடிகர் மோகன்லால் போட்டியின்றி தேர்வுசெய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #NadigarSangam #Mohanlal
    கேரளாவில் மலையாள நடிகர், நடிகைகள் சங்கம் ‘அம்மா’ என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தின் தலைவராக மலையாள குணச்சித்திர, நகைச்சுவை நடிகர் இன்னசென்ட் தற்போது பதவி வகித்து வருகிறார். இவர் சாலக்குடி தொகுதி எம்.பி.யாகவும் உள்ளார்.

    கடந்த 17 வருடங்களாக மலையாள நடிகர் சங்க தலைவர் பதவியில் இன்னசென்ட் இருந்து வருகிறார். இவர் பதவி ஏற்ற பிறகு நடிகர், நடிகைகளின் பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்த்துவைக்க நடவடிக்கையும் எடுத்தார். நடிகை கடத்தல் வழக்கில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்ட சம்பவத்தையும் இன்னசென்ட் திறமையாக கையாண்டு நடிகர் சங்கத்தில் ஒற்றுமையை ஏற்படுத்தினார்.

    இந்த நிலையில் இன்னசென்ட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். அதற்கான சிகிச்சை பெற்று தற்போது குணமடைந்து உள்ளார். ஆனாலும் முதுமை மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக அவர் நடிகர் சங்க தலைவர் பதவியில் தொடர்ந்து நீடிக்க விரும்ப வில்லை.

    இதனால் விரைவில் நடைபெற உள்ள நடிகர் சங்க தலைவர் தேர்தலில் தான் போட்டியிட விரும்ப வில்லை என்று இன்னசென்ட் அறிவித்துள்ளார்.

    இதனால் மலையாள நடிகர் சங்கத்தின் அடுத்த தலைவர் யார்? என்ற கேள்வி எழுந்தது. மலையாள திரையுலகில் சூப்பர் ஸ்டார்களாக விளங்கும் மோகன்லால், மம்முட்டி ஆகியோரில் ஒருவர் புதிய நடிகர் சங்க தலைவராக பொறுப்பேற்க வேண்டும் என்ற பேச்சும் மலையாள படஉலகில் எழுந்தது. இந்த நிலையில் மலையாள நடிகர்சங்க தலைவர் பதவிக்கு போட்டியிட விருப்பம் தெரிவித்து மோகன்லால் மனு செய்து உள்ளார். இதுவரை அவரை எதிர்த்து யாரும் போட்டியிட மனு தாக்கல் செய்ய வில்லை.

    இதைதொடர்ந்து விரைவில் கேரள நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் நடிகர் மோகன் லால் தலைவர் பதவிக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளார். மோகன்லால் நடிகர் சங்க தலைவராவது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
    நடிகர் சங்க தேர்தலில் நடிகர் விஷாலை எதிர்த்து நிற்க இருக்கும் ரித்திஷ், அதற்காக நடிகர் ரஜினியை நேரில் சந்தித்து ஆதரவு கேட்டிருக்கிறார். #Rithish #Rajini
    நடிகரும் முன்னாள் எம்.பி.யுமான ரித்திஷ் இன்று ரஜினிகாந்தை அவரது வீட்டில் சந்தித்து பேசினார். பின்னர் அவர் கூறியதாவது:-

    ‘நடிகர் சங்க தேர்தல் நடந்து மூன்று ஆண்டுகள் ஆகிறது. உடனடியாக தேர்தல் நடத்தப்பட வேண்டும். விஷாலோ கட்டடம் கட்டிய பிறகு தான் தேர்தல் என்கிறார். நடிகர் சங்கத்தில் இருந்து நாடக நடிகர்கள் உள்பட 128 பேர் நீக்கப்பட்டுள்ளனர். அதற்காக வழக்கு போட்டுள்ளோம்.

    விஷால், தயாரிப்பாளர் சங்கத்திலும் எதுவும் செய்யவில்லை. முறை கேடுகள் செய்ததற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. நல்லது செய்வார் என்று தான் கடந்த தேர்தலில் ஆதரித்தேன். ஆனால் அவர் இப்படி செய்வார் என்று நினைக்கவில்லை. இவை எல்லாவற்றையும் பற்றி ரஜினியிடம் பேசினேன்.

    மேலும் வரும் நடிகர் சங்க தேர்தலில் விஷால் எந்த பதவிக்கு போட்டியிடுகிறாரோ அந்த பதவிக்கு அவரை எதிர்த்து போட்டியிட இருக்கிறேன். அதற்கும் ரஜினியிடம் ஆதரவு கேட்டு இருக்கிறேன்’.

    இவ்வாறு அவர் கூறினார்.



    10 நாட்களுக்கு முன்பு ரஜினியை பொது வெளியில் விமர்சித்தீர்களே? என்று கேட்டதற்கு ‘அது அரசியல். இது சினிமா. அ.தி.மு.க. தலைமையை விமர்சிக்கும்போது அதற்கு பதில் கூற வேண்டியது என் கடமை’ என்றார்.

    இந்த சந்திப்பின் போது தமிழ் திரைப்பட இயக்குனர் சங்க தலைவர் கார்த்திக் உடன் இருந்தார்.
    ×