search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mobile Phone"

    ஆப்பிள் உள்பட பல்வேறு முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு ஐரோப்பிய யூனியன் புதிய உத்தரவை பிறப்பிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #EuropeanUnion #Apple


    ஆப்பிள் நிறுவன ஐபோன்கள், பல்வேறு நிறுவனங்களின் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் வெவ்வேறு விதமான மொபைல் சார்ஜிங் போர்ட் மற்றும் கேபிள்கள் அந்தந்த நிறுவனத்தின் விருப்பப்படி அவர்களது சாதனங்களில் வழங்கி வருகின்றன.

    சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில், ஐரோப்பிய யூனியன் விரைவில் சில மாற்றங்களை அமல்படுத்த இருக்கிறது. அந்த வகையில் சர்வதேச மொபைல் போன் சந்தையில் உற்பத்தியாகும் மொபைல்களுக்கு பொதுவான சார்ஜிங் போர்ட்டை அனைத்து நிறுவனங்களும் பின்பற்ற வேண்டியிருக்கும்.

    இதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் மொபைல் போன் நிறுவனங்களை பொதுப்படையான மொபைல் சார்ஜிங் போர்ட்களை உற்பத்தி செய்ய பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்த ஐரோப்பிய யூனியன், இம்முறை நிரந்தர தீர்வை எட்டும் நடவடிக்கைகளில் தீவிரமாக செயல்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு ஆண்டும் உலகில் 51,000 டன் மின்சாதன கழிவு தேங்குவதே ஐரோப்பிய யூனியனின் நடவடிக்கைக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. மக்கள் புதிய சாதனங்களை பயன்படுத்த துவங்கும் போது பழைய மொபைல் போன் சார்ஜர்களை வீசிவிடுகின்றனர். மேலும் இது நுகர்வோருக்கு பாதகமாக இருப்பதாகவும் ஐரோப்பிய யூனியன் தெரிவித்துள்ளது.



    முன்னதாக ஆப்பிள், சாம்சங், நோக்கியா மற்றும் ஹூவாய் என மொத்தம் 12 பிரபல ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்களிடம் பொதுப்படையான மொபைல் சார்ஜர்களை உற்பத்தி செய்ய 2009-ம் ஆண்டிலேயே ஐரோப்பிய யூனியன் உத்தரவிட்டிருந்தது. எனினும் இதுவரை எந்த நிறுவனமும் இதற்கான முயற்சிகளில் ஈடுபடவில்லை.

    மொபைல் போன் நிறுவனங்கள் இதற்கு முறையாக செவிசாய்க்காததால் ஐரோப்பிய யூனியன் இம்முறை கடின முடிவுகளை எடுக்க இருக்கிறது. முறையான அணுகுமுறைக்கு சரியான தீ்ர்வு கிடைக்காததால், யூனியன் விரைவில் வெவ்வேறு ஆப்ஷன்களை செயல்படுத்துவதற்கான செயல்பாட்டு கட்டணங்கள் மற்றும் அதனால் ஏற்படும் நன்மைகளை அறிந்து கொள்ளும் வகையில் மதிப்பீட்டு ஆய்வு நடத்தப்பட உள்ளது.

    தற்சமயம் மொபைல் போன்களில் மிகவும் பிரபலமாகவும், எதிர்காலத்திற்கும் சிறப்பானதாக தெரியும் மொபைல் சார்ஜிங் கேபிள் மற்றும் ஸ்லாட்டாக யு.எஸ்.பி. டைப்-சி இருக்கிறது. இதனால் ஐரோப்பிய யூனியன் யு.எஸ்.பி. டைப்-சி ரக சார்ஜர்களை பொதுப்படையாக அறிவித்து, ஐரோப்பிய யூனியனில் விற்பனையாகும் மொபைல்களில் யு.எஸ்.பி. டைப்-சி அவசியம் இருக்க வேண்டும் என உத்தரவிடலாம் என கூறப்படுகிறது.

    இதுபோன்ற சூழலில் ஆப்பிள் நிறுவனமும் தனது சாதனங்களில் யு.எஸ்.பி. டைப்-சி வழங்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படும். பின் ஐபோன்களில் யு.எஸ்.பி. டைப்-சி வழங்குவதை தவிர வேறு வழியிருக்காது. #EuropeanUnion #Apple
    சியோமி நிறுவனத்தின் புதிய ஃபியூஷன் போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சியோமி ஃபியூஷன் போன்களில் அதிநவீன ஸ்மார்ட் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.#Xiaomi


    இந்தியாவில் மலிவு விலையில் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்தே பிரபலமான சியோமி தற்சமயம் க்வின் 1 மற்றும் க்வின் 1 எஸ் ஃபீச்சர்போன்களை அறிமுகம் செய்துள்ளது. யுபின் எனும் கிரவுட்ஃபன்டிங் தளம் மூலம் புதிய மொபைல் போன்களை சியோமி அறிமுகம் செய்துள்ளது.

    வழக்கமான ஃபீச்சர் போன் போன்றில்லாமல், சியோமி மொபைலில் மேம்படுத்தப்பட்ட ல்மார்ட் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் ரியல்-டைம் மொழி மாற்றம் செய்யும் வசதியை இந்த மொபைல் போன்கள் கொண்டுள்ளது. இதன் க்வின் 1எஸ் மாடலில் 4ஜி கனெக்டிவிட்டி கொண்டுள்ளது.



    சியோமி க்வின் 1 சிறப்பம்சங்கள்:

    - 2.8 இன்ச் QVGA 240x320 பிக்சல் ஐ.பி.எஸ். டிஸ்ப்ளே
    - டூயல்-கோர் மீடியாடெக் MT6260A சிப்செட்
    - 8 எம்பி ரேம்
    - 16 எம்பி இன்டெர்னல் மெமரி
    - வைபை, ப்ளூடூத்
    - யுஎஸ்பி டைப்-சி போர்ட்
    - 1480 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    சியோமி க்வின் 1எஸ் சிறப்பம்சங்கள்:

    - 2.8 இன்ச் QVGA 240x320 பிக்சல் ஐ.பி.எஸ். டிஸ்ப்ளே
    - டூயல்-கோர் ஸ்ப்ரெட்ரம் SC9820E சிப்செட்
    - 256 எம்பி ரேம்
    - 512 எம்பி ரேம்
    - 4ஜி வோல்ட்இ, வைபை ஹாட்ஸ்பாட், ப்ளூடூத்
    - யுஎஸ்பி டைப்-சி போர்ட்
    - 1480 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    சியோமி க்வின் 1 மற்றும் க்வின் 1எஸ் ஸ்மார்ட்போன்களில் 17 மொழிகளை சப்போர்ட் செய்யும் வசதி, மெஷின் லெர்னிங் சார்ந்து இயங்கும் மொழி மாற்றம் செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் பில்ட்-இன் இன்ஃப்ராரெட் பிளாஸ்டர் வழங்கப்பட்டுள்ளது. இதனால் மொபைலை சர்வதேச ரிமோட் போன்று பயன்படுத்தலாம். 

    கருப்பு மற்றும் வெள்ளை என இரண்டு நிறங்களில் கிடைக்கும் சியோமி க்வின் 1 மற்றும் க்வின் 1எஸ் ஸ்மார்ட்போன்களின் விலை CNY 199 (இந்திய மதிப்பில் ரூ.1,990) மன நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    ரிலையன்ஸ் ஜியோபோனில் வாட்ஸ்அப் வசதி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், நோக்கியாவும் தனது ஃபீச்சர்போனில் வாட்ஸ்அப் வசதியை வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது.



    ரிலையன்ஸ் நிறுவன ஜியோபோனில் வாட்ஸ்அப் மற்றும் யூடியூப் சேவைகள் ஆகஸ்டு 15-ம் தேதி முதல் வழங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நோக்கியா மொபைல்களை விற்பனை செய்யும் ஹெச்.எம்.டி. குளோபல் தனது நோக்கியா 8810 4ஜி போனில் வாட்ஸ்அப் வழங்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

    சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட நோக்கியா 8810 4ஜி போன் பனானா போன் என அழைக்கப்படுகிறது. கைஓஎஸ் (KaiOS) சார்ந்த ஸ்மார்ட் ஃபீச்சர் ஓ.எஸ் கொண்டிருக்கும் நோக்கியா 8810 மாடலில் கூகுள் அசிஸ்டண்ட், கூகுள் சர்ச் மற்றும் கூகுள் மேப்ஸ் போன்றவை வழங்கப்படுகிறது.

    இத்துடன் நோக்கியாவின் பிரபல ஸ்னேக் கேம், மேம்படுத்தப்பட்ட வெர்ஷன் நோக்கியா 8810 மாடலில் வழங்கப்பட்டு இருக்கிறது. எனினும் இதுவரை வாட்ஸ்அப் வசதி வழங்கப்படாமல் உள்ளது. ஹெச்.எம்.டி. குளோபல் தலைமை அலுவலர் ஜூஹோ சர்விகாஸ் ட்விட்டரில், "Oh look, WhatsApp on KaiOS! Looking forward to going [banana]s!" என குறிப்பிட்டு இருக்கிறார். இதன் மூலம் ஜியோபோன் போன்றே விரைவில் நோக்கியா 8810 மாடலிலும் வாட்ஸ்அப் வழங்கப்பட இருப்பதாக தெரிகிறது.



    ஃபீச்சர்போன்களில் வாட்ஸ்அப் வசதி வழங்கப்படாமல் இருப்பதாலேயே பலர் ஸ்மார்ட்போன்களை வாங்க வேண்டிய சூழல் நிலவி வருகிறது. இந்தியாவில் 2.5 கோடி பேர் ஜியோபோன் பயன்படுத்தும் நிலையில், நோக்கியா 8810 மாடலில் வாட்ஸ்அப் வழங்கப்படும் பட்சத்தில் ஜியோபோனுக்கு நேரடியாக போட்டியாக நோக்கியா பனானா போன் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

    ஜியோபோன் மற்றும் நோக்கியா 8810 மாடல்களில் வாட்ஸ்அப்-ஐ தொடர்ந்து பிரபல செயலிகள் அறிமுகம் செய்யப்படும் பட்சத்தில் இவை பல்வேறு இதர விலை குறைந்த ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியாக இருக்கும். ஆன்ட்ராய்டில் இருப்பதை போன்றே கைஓஎஸ் வெர்ஷனிலும் வாட்ஸ்அப் இருக்குமா அல்லது சில அம்சங்கள் வேறுபடுமா என்பது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை.

    நோக்கியாவின் பிரபல 8810 மாடலை புதுப்பித்து 4ஜி வோல்ட்இ கனெக்டிவிட்டியுடன் நோக்கியா 8810 4ஜி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சிறப்பம்சங்களை பொருத்த வரை நோக்கியா 8810 4ஜி போனில் 2.45 இன்ச் QVGA 240x320 பிக்சல், 1.12 ஜிகாஹெர்ட்ஸ் டூயல்-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 205 சிப்செட், 512 எம்பி ரேம் வழங்கப்பட்டுள்ளது.

    4ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்டிரு்கும் நோக்கியா 8810 4ஜி மாடலில் 2 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் வைபை, ப்ளூடூத், மைக்ரோ-யுஎஸ்பி, எஃப்.எம். ரேடியோ, 3.5 எம்எம் ஹெட்போன் ஜாக் மற்றும் 1500 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.
    ரிலையன்ஸ் ஜியோ நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி மான்சூன் ஹங்காமா என்ற பெயரில் புதிய சலுகையை அறிவித்திருக்கிறார். இதில் பயனர்கள் ஜியோபோனினை ரூ.501 விலையில் பெற முடியும்.



    ரிலையன்ஸ் ஜியோ நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வழங்கினார். ஜியோபோன் 2, ஜியோ ஜிகாஃபைபர் அறிவிப்புகளுடன் ஜியோபோன் சார்ந்த தகவல்களையும் அவர் வெளியிட்டார்.

    கடந்த ஆண்டு ஜியோ அறிமுகம் செய்த ஜியோபோன் வாங்குவோருக்கு மான்சூன் ஹங்காமா என்ற பெயரில் புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையின் கீழ் பயனர்கள் ரூ.501 மட்டும் செலுத்தி ஜியோபோன் பெற முடியும். பயனர்கள் ஏற்கனவே பயன்படுத்தி வரும் ஃபீச்சர்போனினை வழங்கி, புதிய ஜியோபோனுக்கு ரூ.501 மட்டும் செலுத்தி வாங்கிட முடியும். இந்த சலுகை ஜூலை 21, 2018 முதல் வழங்கப்படுகிறது.

    கடந்த ஆண்டு ரிலையன்ஸ் ஜியோவின் ஜியோபோன் அறிமுகம் செய்யப்பட்டது. பயனர்கள் ரூ.1,500 செலுத்தி புதிய ஜியோபோன் வாங்கி மூன்று ஆண்டுகளில் அதனை திரும்ப வழங்கி முன்பணத்தை திரும்ப பெற முடியும். அந்த வகையில் ஜியோபோன் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

    இன்று (ஜுலை 5) நடைபெற்ற ரிலையன்ஸ் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் ஜியோபோனில் விரைவில் மேம்படுத்தப்பட்ட ஃபேஸ்புக், யூடியூப் மற்றும் வாட்ஸ்அப் செயலிகளை பயன்படுத்துவதற்கான அப்டேட் வழங்கப்பட இருப்பகாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் ஜியோபோனில் 2.4 இன்ச் QVGA TFT டிஸ்ப்ளே, டூயல்-கோர் பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது.

    ஜியோபோனில் 512 எம்பி ரேம், 4 ஜிபி இன்டெர்னல் மெமரியும், மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. 4ஜி வோல்ட்இ நெட்வொர்க், ஜியோ செயலிகள் ப்ரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கிறது. இத்துடன் 24 இந்திய மொழிகளில் ஜியோபோன் பயன்படுத்தும் வசதி மற்றும் வாய்ஸ் கமான்ட் உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கிறது.
    ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவன ஆண்டு பொதுக்குழு நிகழ்வில் ஜியோபோன் 2 அறிமுகம் செய்யப்பட்டது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    இந்தியாவில் ரிலைன்ஸ் ஜியோவின் ஜியோபோன் 2 அறிமுகம் செய்யப்பட்டது. ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவன ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் இதற்கான அறிவிப்பை அந்நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி வெளியிட்டார்.

    க்வெர்டி கீபோர்டு கொண்டிருக்கும் ஜியோபோன் 2 மாடலில் 2.4 இன்ச் QVGA டிஸ்ப்ளே, 4 புறமும் சுழலும் நேவிகேஷன் பட்டன், 2 எம்பி பிரைமரி மற்றும் செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. முந்தைய ஜியோபோன் போன்றே இந்த மாடலிலும் 4ஜி வோல்ட்இ, கை ஓஎஸ் (Kai OS), வழங்கப்பட்டு இருக்கிறது.

    மெமரியை பொருத்த வரை 512 எம்பி ரேம், 4 ஜிபி இன்டெர்னல் மெமரி மற்றும் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. வோல்ட்இ வசதியுடன், வோ-வைபை வசதி, எஃப்.எம்., வைபை, ஜிபிஎஸ், என்.எஃப்சி. உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. 

    2000 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் ஜியோபோன் 2 மாடிலில், அனைத்து ஜியோ செயலிகளும் ப்ரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டு இருக்கிறது. இத்துடன் 22 இந்திய மொழிகளில் புதிய ஜியோபோனினை பயன்படுத்த முடியும். 



    ஜியோபோன் 2 சிறப்பம்சங்கள்:

    - 2.4 இன்ச் QVGA TFT டிஸ்ப்ளே
    - டூயல் கோர் பிராசஸர்
    - 512 எம்பி ரேம்
    - 4 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - 2 எம்பி பிரைமரி கேமரா
    - 2 எம்பி செல்ஃபி கேமரா
    - 4ஜி வோல்ட்இ, வோ-வைபை, ஜிபிஎஸ்
    - 2000 எம்ஏஹெச் பேட்டரி

    புதிய ஜியோபோன் 2 விலை ரூ.2,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை ஆகஸ்டு 15-ம் தேதி முதல் துவங்குகிறது. ஜியோபோன் 2 அறிமுக நிகழ்விலேயே பழைய ஜியோபோனில் ஃபேஸ்புக், யூடியூப் மற்றும் வாட்ஸ்அப் வசதிகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
    சீனியர்வொர்ல்டு எனும் நிறுவனம் முதியோர் பயன்படுத்த ஏதுவாக ஈசிஃபோன் கிரான்ட் எனும் மொபைல் போனினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

    சீனியர்வொர்ல்டு எனும் நிறுவனம் தனது ஈசிஃபோன் பிரான்டின் கீழ் புதிய மொபைல் போனினை அறிமுகம் செய்துள்ளது. ஈசோஃபோன் கிரான்ட் என அழைக்கப்படும் இந்த மொபைல் போன் முதியோருக்கு ஏற்ற வகையில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது.

    இந்த காலத்துக்கு ஏற்ப பாதுகாப்பாகவும், எந்நேரமும் இணைப்பில் இருக்க ஏதுவாக இந்த மொபைல் போன் வடிவமைக்கப்பட்டு இருப்பதாக சீனியர்வொர்ல்டு தெரிவித்துள்ளது.

    ஒலியை கட்டுப்படுத்த பிரத்யேக தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் இந்தியாவின் முதல் மற்றும் ஒற்றை மொபைல் போனாக ஈசிஃபோன் கிரான்ட் இருக்கிறது. காது கேட்கும் குறைபாடு இருப்பவர்களில் கூடுதல் உபகரணங்களை பயன்படுத்த விரும்பாதோருக்கு இந்த மொபைல் சிறப்பான தீர்வாக இருக்கும்.



    ஈசிஃபோன் கிரான்ட் மொபைலில் பயன்படுத்தப்படும் விசேஷ தொழில்நுட்பம்  ஆடியோவை அழைப்புகள் மட்டுமின்றி தொலைகாட்சிகளை பார்க்கும் போது மட்டுமின்றி, மற்றவர்களுடன் பேசும் போதும் சிறப்பாக வேலை செய்கிறது. முதியோருக்கு ஏற்ற வகையில் ஆடியோ அதிக ஒலியை வழங்குவதோடு, அது சீராக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    போன் டையலிங், விருப்பமான கான்டாக்ட்களுக்கு கீ ப்ரெஸ் அம்சம், எஸ்ஓஎஸ் பட்டன் (அவசர அழைப்புகளை மேற்கொள்ளலாம்) உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் பெரிய எழுத்துக்கள், குவாட் பேன்ட், ரிமைன்டர் அம்சம், எஸ்எம்எஸ் மற்றும் சைரன் மற்றும் எஃப்எம் போன்றவை வழங்கப்பட்டிருக்கிறது. மேலும் வால்யூம் பட்டன், டார்ச் மற்றும் லாக் / அன்லாக் பட்டன் உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கிறது.

    இந்தியாவில் ஈசிஃபோன் கிரான்ட் விலை ரூ.3,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பயனர்கள் இந்த மொபைல் போனினை சீனியர்வொர்ல்டு அதிகாரப்பூர்வ வலைத்தளம், ப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் உள்ளிட்டவற்றில் விற்பனை செய்யப்படுகிறது.
    லேன்ட்லைன் போன்களை ஸ்மார்ட்போன் போன்று பயன்படுத்த வழி செய்யும் அம்சங்களை சேர்க்க பிஎஸ்என்எல் திட்டமிட்டுள்ளது.
    ராஜஸ்தான்:

    ராஜஸ்தானில் லேன்ட்லைன்களில் ஸ்மார்ட்போன் அம்சங்கள் வழங்குவதற்கான அப்கிரேடுகளை வழங்க பிஎஸ்என்எல் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் லேன்ட்லைன் மாடல்களில் எஸ்எம்எஸ், சாட்டிங், வீடியோ கால் உள்ளிட்டவற்றை மேற்கொள்ள முடியும்.

    பிஎஸ்என்எல் டெலிபோன் எக்சேஞ்ச்-கள் அடுத்த தலைமுறை நெட்வொர்க்கிங் தொழில்நுட்பத்தில் (Next Generation Networking ) அப்கிரேடு செய்யப்படுகிறது. இதற்கான பணிகள் பண்டி மாவட்டத்தில் துவங்கப்பட்டுள்ளது. பண்டி மற்றும் ஹின்டொலி பகுதிகளில் அப்கிரேடு செய்யப்பட்டு மற்ற பகுதிகளில் வரும் நாட்களில் அப்கிரேடு செய்யும் பணிகள் நிறைவடையும் என டெலிகாம் மாவட்ட மேலாளர் பி.கே. அகர்வால் தெரிவித்துள்ளார்.

    மொபைல் போன்களில் சாட்டிங், எஸ்எம்எஸ், வீடியோ காலிங், பெர்சனல் ரிங் பேக் டோன் உள்ளிட்டவற்றை லேன்ட்லைன் போன்களிலும் பயன்படுத்த முடியும் என அவர் மேலும் தெரிவித்தார். இந்த வசதிகளை பயன்படுத்த லேன்ட்லைன் போன் IP போனுடன் அப்கிரேடு செய்யப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

    லேன்ட்லைன் நம்பர்களை மொபைல் போனுடன் இணைத்து லேண்ட்லைன் சேவைகளை வாடிக்கையாளர்கள் எங்கிருந்தும் பயன்படுத்த முடியும் என அவர் தெரிவித்தார். அந்த வகையில் லேன்ட்லைன் அழைப்புகளை மொபைல் போனிலும் பெற முடியும். இத்துடன் 2ஜி டவர்கள் இனி காம்போ பிடிஎஸ்-ஆக அப்கிரேடு செய்யப்படும் என்பதால் 3ஜி சேவைகளை பயன்படுத்த முடியும்.
    சர்வதேச ஃபீச்சர்போன் சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ஜியோபோன் முதலிடம் பிடித்துள்ளது.
    புதுடெல்லி:

    சர்வதேச ஃபீச்சர்போன் சந்தையில் ரிலையன்ஸ் ஜியோபோன் முதலிடம் பிடித்துள்ளது. 2018-ம் ஆண்டிற்கான முதல் காலாண்டில் மட்டும் ரிலையன்ஸ் ஜியோபோன் சுமார் 15% பங்குகளை பெற்றிருக்கிறது. 

    ரிலையன்ஸ் ஜியோபோனை தொடர்ந்து நோக்கியா, சாம்சங் மற்றும் டெக்னோ உள்ளிட்ட நிறுவனங்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. இந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோபோன் அமோக விற்பனையை சந்தித்து வரும் நிலையில், நோக்கியாவின் ரீ-என்ட்ரி உள்ளிட்டவை சர்வதேச ஃபீச்சர்போன் சந்தையின் 38% வளர்ச்சிக்கு முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகின்றன.

    சமீபத்திய தகவல்கள் கவுன்ட்டர்பாயின்ட் நிறுவனம் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. 2018 முதல் காலாண்டு நிலவரப்படி நோக்கியா ஹெச்எம்டி நிறுவனம் 14% பங்குகளையும், ஐடெல் நிறுவனம் 13% பங்குகளையும் சாம்சங், டெக்னோ நிறுவனங்கள் 6% பங்குகளையும் பெற்றிருக்கின்றன.



    ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச அளவில் சுமார் 50 கோடி ஃபீச்சர்போன்கள் விற்பனை செய்யப்படுகின்றன. வாடிக்கையாளர் எண்ணிக்கையை பொருத்து சர்வதேச அளவில் ஃபீச்சர்போன்களுக்கான வரவேற்பு இன்றும் அதிகமாகவே இருக்கிறது. என கவுன்ட்டர்பாயின்ட் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் சர்வதேச ஃபீச்சர்போன் விற்பனையில் 2018-ம் ஆண்டின் முதல் காலாண்டில் இந்திய ஃபீச்சர்போன் விற்பனை மட்டும் 43% பங்குகளை பெற்றிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

    சில ஃபீச்சர்போன் பயனர்கள் டிஜிட்டல், பொருளாதாரம் மற்றும் போதுமான கல்வியறிவு இல்லாதது போன்ற காரணங்களால் விலை அதிகமாக விற்பனை செய்யப்படும் ஸ்மார்ட்போன்களை வாங்க முடியாத சூழல் நிலவுவதாக ஆய்வு நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ×