search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Minister Mano Thangaraj"

    • உங்கள் குடும்பத்தில் உள்ள பெண்களை இப்படி விமர்சித்து விட்டு தனியாக அழைத்து கண்டித்தால் ஏற்பீர்களா?
    • என்னிடம் யாரும் மன்னிப்பு கேட்கவில்லை. எனக்கு மன்னிப்பும் தேவையில்லை. நடவடிக்கை தான் தேவை.

    புதுடெல்லி:

    தி.மு.க. நிர்வாகியான சைதை சாதிக் பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு பற்றி பொதுக்கூட்ட மேடையில் ஆபாசமாக பேசினார். அவரது பேச்சுக்கு பா.ஜனதா கடும் கண்டனம் தெரிவித்தது.

    அவரை கண்டித்து பா.ஜனதா மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இந்த போராட்டத்தில் அண்ணாமலை கைதாகி விடுதலையானார்.

    சைதை சாதிக் மீது நடவடிக்கை எடுக்கும் வரை ஓயப்போவதில்லை என்று அறிவித்த குஷ்பு இன்று டெல்லியில் தேசிய மகளிர் ஆணையத்துக்கு சென்று ஆணைய தலைவி ரேகா ஷர்மிளாவிடம் நேரில் புகார் மனு அளித்தார்.

    அந்த மனுவில் சைதை சாதிக்கின் பேச்சுக்கான வீடியோ ஆதாரத்தையும் இணைத்து கொடுத்துள்ளார்.

    குஷ்பு தனது புகாரில் அமைச்சர் மனோ தங்கராஜ் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

    அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் நடந்த கூட்டத்தில் தான் சைதை சாதிக் சர்ச்சைக்குரிய வகையில் பேசியது குறிப்பிடத்தக்கது.

    புகார் அளித்த பிறகு குஷ்பு டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    எனக்கே இந்த கதி என்றால் மற்ற பெண்களுக்கு தமிழகத்தில் என்ன கதி ஏற்படும்?

    அமைச்சர் பொறுப்பில் இருக்கும் மனோ தங்கராஜ் தூங்கி விழித்து 4 நாள் கழித்து நான் விளம்பரம் தேடுவதாக கூறி இருக்கிறார். அதை கேட்டதும் சிரிப்பு தான் வந்தது.

    எனக்கு இனி விளம்பரம் தேவையில்லை. நானும், அவரும் பொது வெளியில் நின்றால் அவரை எத்தனை பேருக்கு அடையாளம் தெரியும்? அவருக்குத்தான் இப்போது விளம்பரம் தேவை.

    அவரது தலைமையில் நடந்த கூட்டத்தில் தான் இவ்வளவு அநாகரீகமாக பேசி உள்ளனர். அதை கேட்டு சிரித்துக் கொண்டிருந்த அமைச்சர் தனியாக அழைத்து கண்டித்ததாக கூறுகிறார்.

    உங்கள் குடும்பத்தில் உள்ள பெண்களை இப்படி விமர்சித்து விட்டு தனியாக அழைத்து கண்டித்தால் ஏற்பீர்களா? என்னிடம் யாரும் மன்னிப்பு கேட்கவில்லை. எனக்கு மன்னிப்பும் தேவையில்லை. நடவடிக்கை தான் தேவை.

    அமைச்சர் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். சைதை சாதிக்கை கட்சியில் இருந்து நீக்க வேண்டும்.

    இது தொடர்பாக டெல்லியில் தேசிய பெண்கள் ஆணையத்தில் புகார் அளித்திருக்கிறேன். என்னைப் பற்றி பேசியவர் மீதும் அமைச்சர் மனோ தங்கராஜ் மீதும் புகார் அளித்துள்ளேன். என்னை பற்றி பேசிய பேச்சை மனோ தங்கராஜ் அமர்ந்து ரசித்துக் கொண்டிருக்கிறார். அந்த வீடியோ ஆதாரத்தையும் சமர்ப்பித்துள்ளேன் என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பெண்களை இழிவாக பேசுவது என்பது எனக்கோ, கழகத்திற்கோ உடன்பாடு இல்லை. ஏற்றுக்கொள்ளக்கூடியதும் அல்ல.
    • தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி இதுதொடர்பாக வருத்தம் தெரிவித்த பின்னரும் தன்னை விளம்பரப்படுத்துவதற்காக குஷ்பு ஏதேதோ பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

    நாகர்கோவில்:

    சென்னையில் நடந்த தி.மு.க. கூட்டத்தில் சைதை சாதிக் என்பவர் பா.ஜ.க.வில் உள்ள நடிகைகள் குஷ்பு, கவுதமி, காயத்ரி ரகுராம், நமீதா ஆகியோரை பற்றி அவதூறாக பேசியதாக சர்ச்சை எழுந்தது. அந்த கூட்டத்தில் அமைச்சர் மனோ தங்கராஜூம் பங்கேற்றிருந்தார்.

    இந்தநிலையில் இதுதொடர்பாக அமைச்சர் மனோ தங்கராஜ் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    சென்னை ஆர்.கே.நகரில் நடைபெற்ற கூட்டத்தில் தி.மு.க. பேச்சாளர் பேசிய கருத்திற்கு கூட்டம் முடிந்தவுடன் அவரை அழைத்து கண்டித்தேன். பெண்களை இழிவாக பேசுவது என்பது எனக்கோ, கழகத்திற்கோ உடன்பாடு இல்லை. ஏற்றுக்கொள்ளக்கூடியதும் அல்ல. தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி இதுதொடர்பாக வருத்தம் தெரிவித்த பின்னரும் தன்னை விளம்பரப்படுத்துவதற்காக குஷ்பு ஏதேதோ பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

    குஜராத்தில் வீட்டிற்குள் புகுந்து ஆண்களை கொலை செய்துவிட்டு கர்ப்பிணி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தவர்கள் கோர்ட்டால் தண்டிக்கப்பட்டு தண்டனை காலம் முடிவதற்குள் அரசால் விடுதலை ஆகி வந்தபோது குற்றவாளிகளுக்கு வரவேற்பு அளித்த பா.ஜனதா கட்சியினருக்கு பெண்களுக்காக போராட்டம் நடத்துவதற்கு தகுதியே இல்லை.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கவர்னர்களை யார் செயல்படுத்துகிறார்கள் என்பது மக்களுக்கு தெரியும்.
    • கவர்னர்கள் சம்பந்தப்பட்ட மாநிலத்தின் நன்மைக்காக பாடுபட வேண்டும்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவிலில் நேற்று தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவை துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் ஒரு கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு மாநில அரசுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் கவர்னர்கள் செயல்படுவதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. கவர்னர்கள் தங்கள் எல்லையை அறிந்து, அவற்றில் இருந்து சம்பந்தப்பட்ட மாநிலத்தின் நன்மைக்காக பாடுபட வேண்டும்.

    ஆனால் அவர்கள் அதை செய்கிறார்களா? என்பதை மக்கள் உன்னிப்பாக கவனிக்கின்றனர். கவர்னர்களை யார் செயல்படுத்துகிறார்கள் என்பது மக்களுக்கு தெரியும்.

    குஜராத்தில் வீட்டிற்குள் புகுந்து ஆண்களை கொன்று விட்டு கர்ப்பிணி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தவர்கள் விடுதலையாகி வந்தபோது வரவேற்பு அளித்த பாரதீய ஜனதா கட்சியினர், பெண்களுக்காக போராட்டம் நடத்துவதற்கு தகுதியற்றவர்கள். தி.மு.க. பிரமுகர் பேசியது தொடர்பாக துணை பொதுச் செயலாளர் கனிமொழி வருத்தம் தெரிவித்த பின்னரும், தங்களை விளம்பர படுத்துவதற்காக அண்ணாமலை செயல்படுவது ஏற்புடையது அல்ல.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆளுநர்கள் தங்கள் எல்லையை அறிந்து அவற்றிலிருந்து சம்பந்தப்பட்ட மாநிலத்தின் நன்மைக்காக பாடுபட வேண்டும்.
    • ஆளுநர்களை யார் செயல்படுத்துகிறார்கள்? என்பது பொதுமக்களுக்கு தெரியும்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவிலில் இன்று அமைச்சர் மனோ தங்கராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் ஒரு கட்சியின் கைப்பாவையாக செயல்பட்டு மாநில அரசுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ஆளுநர்கள் செயல்படுவதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

    ஆளுநர்கள் தங்கள் எல்லையை அறிந்து அவற்றிலிருந்து சம்பந்தப்பட்ட மாநிலத்தின் நன்மைக்காக பாடுபட வேண்டும். ஆனால் அவர்கள் அதை செய்கிறார்களா? என்பதை மக்கள் உன்னிப்பாக கவனிக்கின்றனர். ஆளுநர்களை யார் செயல்படுத்துகிறார்கள்? என்பது பொதுமக்களுக்கு தெரியும்.

    பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை ஒரு அரசியல் கோமாளி. குஜராத்தில் வீட்டிற்குள் புகுந்து ஆண்களை கொலை செய்துவிட்டு, கர்ப்பிணி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தவர்கள், நீதிமன்றத்தில் தண்டிக்கப்படாமல் விடுதலை ஆகி வந்தபோது வரவேற்பு அளித்த பா.ஜ.க. கட்சியினர், பெண்களுக்காக போராட்டம் நடத்துவதற்கு தகுதியானவர்கள் அல்ல.

    தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி வருத்தம் தெரிவித்த பின்னரும் தங்களை விளம்பரப்படுத்துவதற்காக அரசியல் கோமாளியாக அண்ணாமலை செயல்படுவது அட்டூழியம் போல காட்சியளிக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மகத்தான அரசு சிறந்த முறையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
    • தமிழக வரலாறு என்பது ஒரு சித்தாந்தத்தின் அடிப்படையிலான வரலாறு.

    நாகர்கோவில்:

    நாகர்கோவிலில் இன்று அமைச்சர் மனோ தங்கராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சாதாரணமாக ஆளுநர் பதவி என்பது மாநிலங்களுக்கு உதவியாக, ஒத்தாசையாக இருக்க வேண்டும். மாநில அரசு இயற்றுகின்ற சட்டங்கள், சட்டத்திற்கு உட்பட்டு இருக்கிறதா என்பதை அவர்கள் பார்க்க வேண்டும்.

    எனவே தான் அவர்களுக்கு முதல் குடிமகன் என்ற அந்தஸ்து நிலையை கொடுத்து இன்றைக்கு மாநிலங்களில் வைக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் அரசியல் சாராதவர்களாக இருக்க வேண்டும்.

    எங்களது கேள்வியெல்லாம் உயர்ந்த அந்த பதவியில் இருந்து கொண்டு அதன் மாண்பை, மரியாதையை கெடுக்கின்ற விதத்தில் செயல்படுகிறார்கள் என்பது தான். தமிழக அரசுக்கு யாரும் நெருக்கடி கொடுக்க முடியாது.

    ஏனென்றால் மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மகத்தான அரசு சிறந்த முறையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தமிழக வரலாறு என்பது ஒரு சித்தாந்தத்தின் அடிப்படையிலான வரலாறு. ஒரு சனாதனத்தை கட்டமைக்க ஒவ்வொரு ஜாதிக்கும் ஒரு கடமை இருக்கிறது. அதை செய்வது தான் தர்மம் என்று பா.ஜ.க. தலைவர் கூறுகிறார். தமிழக மக்கள் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

    தமிழ் மொழியை காப்போம் என்று பா.ஜ.க. போராட்டம் நடத்துவது ஒரு மாயை ஆகும். நமது பிரதமர் சில இடங்களில் திருக்குறள் பேசுகிறார். எங்களது கோரிக்கை 22 மாநில மொழிகளை அரசியல் சட்டம் அங்கீகரித்து இருக்கிறது.

    130 கோடி மக்கள் வாழுகின்ற இந்தியாவில் 22 ஆட்சி மொழிகள் இருக்க முடியுமா? என்று கேட்டால், 100 சதவீதம் இருக்க முடியும். சிங்கப்பூரில் சில லட்சம் மக்கள் தான் உள்ளார்கள். அங்கு 4 மொழிகள், ஆட்சி மொழியில் உள்ளது. எனவே தமிழை ஆட்சி மொழியாக்குவதில் என்ன பிரச்சனை இருக்கிறது.

    பா.ஜ.க.வினர் கபட நாடகம் போடுகிறார்கள். அவர்களுக்கு திராணி இருந்தால் அவர்கள் உண்மையிலேயே தமிழ் மீது பற்று கொண்டவர்களாக இருந்தால், மாநில மொழிகளையும் ஆட்சி மொழியாக்கட்டும்.

    என்.ஐ.ஏ. என்பது தேசத்தில் உள்ள உச்ச கட்டமான ஒரு புலனாய்வு அமைப்பு. அந்த அமைப்பு மாநில அரசுக்கு அறிக்கை அளித்ததாகவும் அந்த அறிக்கை தனக்குத் தெரியும் என்றும் ஒருவர் பகிரங்கமாக பேசிக் கொண்டிருக்கிறார்.

    அப்படியென்றால் மத்திய அரசு வெள்ளை அறிக்கை சமர்ப்பிக்க வேண்டியது தானே. தேசிய புலனாய்வு அமைப்பின் அறிக்கை நகல் பா.ஜ.க.வுக்கு அனுப்பப்படுகிறதா? குஜராத்தில் தற்போது நடைபெற்ற சம்பவத்தை போன்று மேற்கு வங்க தேர்தலுக்கு முன்பு அங்கும் இதுபோன்ற ஒரு சம்பவம் நடைபெற்றது. அப்போது பிரதமர் கூறிய போது, கடவுள் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் அரசு இருப்பதை விரும்பவில்லை. அதற்கான அறிகுறிதான் இது என்றார்.

    அப்படி என்றால் குஜராத்தில் தற்போது நடைபெற்றுள்ள சம்பவம் குஜராத்தில் பா.ஜ.க. அரசு இருக்கக்கூடாது என்பதற்கான அறிகுறி தானா? அதனை அவர் ஏற்றுக்கொள்வாரா?

    ஆளுநர்கள் திட்டமிட்டு பா.ஜ.க. அரசு இல்லாத மற்ற மாநிலங்களில் செயல்படுகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான். இதனை ஜனநாயகத்தை விரும்புகிறவர்கள் அத்தனை பேரும் கூறி வருகிறார்கள். எங்களுக்கு கவர்னரை கண்டு பயம் எதுவும் இல்லை. ஆனால் ஒரு ஜனநாயக அமைப்பை சிதைத்து விடக்கூடாது என்பது தான் தி.மு.க.வின் கரிசணை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கவர்னர் பதவி வேண்டுமா? வேண்டாமா? என்ற சர்ச்சை இருந்து வருகிறது.
    • கவர்னர் பதவி குறித்து அண்ணா அப்போதே விமர்சித்தார். கவர்னர் பதவி மாநிலங்களுக்கு உதவியாக இருந்ததாக வரலாறு குறைவு.

    நாகர்கோவில்:

    நாகர்கோவிலில் இன்று அமைச்சர் மனோதங்கராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மாநில அரசுகளால் நடத்தப்படும் தொலைக்காட்சிகளை மத்திய அரசு தனது கட்டுப்பாட்டுக்கு கீழ் கொண்டு வர பார்க்கிறது. மாநிலங்களின் அதிகாரங்களை பிடுங்கி, மாநில சுயாட்சி தத்துவத்திற்கு எதிராக மத்தியில் அதிகாரங்களை குவிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதைத் தான் தி.மு.க. கடுமையாக எதிர்த்து வருகிறது.

    மாநிலங்களுக்கான அதிகாரத்தை அதிகம் வழங்க வேண்டும் என்பது அனைத்து மாநிலங்களின் கோரிக்கை. ஆனால் அதை மீறுவது கண்டனத்துக்குரியது. பாரதிய ஜனதா ஆளுகின்ற மாநிலங்களிலேயே இந்தி திணிப்பையும், அதிகார குவியலையும் எதிர்த்து பலர் பேசி வருகிறார்கள்.

    தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் அரசியலில் ஆன்மிகத்தை புகுத்தி பேசி வருகிறார். தமிழகத்தில் பாரதிய ஜனதா தலை நீட்டி வருவதாக அவர் கூறுகிறார். ஏன் தலையை மட்டும் நுழைக்கிறார்கள். முழு உடலையும் நுழைக்கட்டும். ஆனால் இங்கு எதுவும் எடுபடாது. ஏனெனில் தற்போது மக்கள் மதவெறிக்கு பின்னால் இல்லை.

    அதிலும் அவர்கள் பேசுவது ஆன்மிகம் அல்ல. ஆன்மிகம் என்பது அன்பை உள்ளடக்கியது. அறத்தை முன் வைக்க கூடியது. இந்த அன்பு, அறத்துக்கு நேர் எதிராக வெறுப்பை அவர்கள் பேசி வருகிறார்கள். நிறுவனம் ஆக்கப்பட்ட மதங்களின் பிரதிநிதிகளாக இருந்து கொண்டு மாற்று மதங்களை கொச்சைப்படுத்துவது, மக்களிடம் மத உணர்வை தூண்டுவது ஆன்மிகம் ஆகாது.

    கவர்னர் பதவி வேண்டுமா? வேண்டாமா? என்ற சர்ச்சை இருந்து வருகிறது. கவர்னர் பதவி குறித்து அண்ணா அப்போதே விமர்சித்தார். கவர்னர் பதவி மாநிலங்களுக்கு உதவியாக இருந்ததாக வரலாறு குறைவு. மாறாக தலைவலியாக தான் இருந்து வருகிறது. அதிலும் இப்படிப்பட்ட நபர்கள் தலை வலியை மேலும் மேலும் அதிகப்படுத்துகிறார்கள்.

    தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளாக பல்கலைக்கழக துணை வேந்தர் பதவிக்கு ரூ. 40 முதல் 50 கோடி லஞ்சம் வாங்கிக் கொண்டு விற்கப்பட்டதாக முன்னாள் கவர்னர் பன்வாரிலால் புரோகித் கூறியுள்ளதாக கேட்கிறீர்கள். ஆனால் அவர் அதை தாமதமாக கண்டுபிடித்துள்ளார். அவர் கவர்னராக இருந்தபோது அவர் தலைமையில் தான் துணை வேந்தர் பதவிகள் நிரப்பப்பட்டன. அப்போது நற்சான்றிதழை அவரே வழங்கினார். ஏன் அப்போதே அதை பேசி தடுக்கவில்லை?

    பிரதமர் நரேந்திர மோடி பதவி ஏற்பதற்கு முன்பு இனி தமிழக மீனவர்கள் யாரும் சுடப்பட மாட்டார்கள் என்று கூறினார். ஆனால் அவர் கூறியது எதையுமே செய்யவில்லை. மீனவர்கள் பாதுகாப்பு குறித்து பேசினார்கள். தாமரை மாநாடு நடத்தினார்கள்.

    ஆனால் தற்போது எதுவுமே நடக்கவில்லை. பாரதிய ஜனதாவினர் பொய்களை கட்டவிழ்த்து விட்டு வருகிறார்கள். அதை தி.மு.க. கட்டாயம் எதிர்கொள்ளும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தி.மு.க. அரசு தேர்தல் வாக்குறுதியை படிப்படியாக நிறைவேற்றி வருகிறது.
    • பொருளாதார நெருக்கடியில் பொறுப்பேற்றால் கூட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவிலில் அமைச்சர் மனோ தங்கராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் போதை பொருட்களை படிப்படியாக ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக மக்கள் மத்தியிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    தமிழக அரசு பால் வரியை உயர்த்திருப்பதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். ஆனால் மத்திய அரசு கொண்டு வந்த ஜி.எஸ்.டி. பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கியாஸ் விலையையும் உயர்த்தி இருக்கிறது. தமிழகத்தில் நிதி சுமைக்கு மத்தியிலும் வரி உயர்த்தப்படாமல் உள்ளது. அதே சமயம் குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு வரியை உயர்த்துவது காலத்தின் கட்டாயமாகும்.

    தமிழகத்தில் வேட்டி, சேலை கொடுக்கும் திட்டத்துக்கு மூடு விழா நடத்துவதாக பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை கூறியதாக கேட்கிறீர்கள்.

    ஆனால் அவர், அரசு என்ன செய்கிறது? என்ன செய்யப்போகிறது? என்பதை பற்றி தெரியாமல் பேசி வருகிறார். தி.மு.க. அரசு தேர்தல் வாக்குறுதியை படிப்படியாக நிறைவேற்றி வருகிறது. பொருளாதார நெருக்கடியில் பொறுப்பேற்றால் கூட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். மத்திய அரசு ஜி.எஸ்.டி.யால் மக்களை நசுக்கி வருகிறது. எனவே பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை மாநில அரசுக்கு பதிலாக மத்திய அரசை கேள்வி கேட்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நாளை நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் கன்னியாகுமரி மாவட்ட பாதிப்புகள் குறித்து எடுத்துரைக்கப்படும் என அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார்.
    நாகர்கோவில்:

    தமிழக தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நாகர்கோவிலில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    குமரி மாவட்டத்தில் ஒக்கி புயல் ஏற்பட்டபோது பாதிப்புகளை பார்வையிட வந்த பிரதமர் எந்த பகுதிகளுக்கும் நேரடியாக சென்று பார்க்காமல் கன்னியாகுமரியில் உள்ள விருந்தினர் மாளிகையில் படங்களை மட்டும் பார்வையிட்டுச் சென்றார்.

    இந்த நிலையில் அவரது கட்சியைச் சேர்ந்த அண்ணாமலை தமிழக வெள்ளச்சேதங்களை ஊர் ஊராகச் சென்று எல்லா பகுதிகளிலும் பார்வையிட்டு வரும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பற்றி கூறுவதற்கு எந்தவித தகுதியும் இல்லை.

    மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் மிக மோசமாக உள்ள நிலையில் அதனை சீரமைக்க இதுவரையிலும் கண்டுகொள்ளாத மத்திய அரசு, தமிழக அரசை குற்றம் சொல்வது வேடிக்கையாக உள்ளது. நாளை நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் வெள்ளச்சேதங்கள் குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது. அதில் கன்னியாகுமரி மாவட்ட பாதிப்புகள் குறித்து எடுத்துரைக்கப்படும்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்


    வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகளுக்கு தேவையான நிதி வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் உறுதி அளித்துள்ளார். பேரிடர் இழப்பீடு என்பது மாநில அரசு மட்டுமல்லாது, மத்திய அரசும் இணைந்துதான் வழங்கவேண்டும். ஆனால் பாரதிய ஜனதா கட்சியினர் மத்திய அரசை மறைத்துவிட்டு பேசுகிறார்கள். இது ஏன்? என்று தெரியவில்லை.

    பேரிடர் மீட்பு பணிகள் என்பது மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து முடிவு செய்யவேண்டிய ஒன்று. பேரிடரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று தி.மு.க. அரசு ஏற்கனவே வலியுறுத்தி உள்ளது. மீண்டும் நாங்கள் அதை வலியுறுத்துவோம். நாங்கள் இரவு-பகலாக வேகமாக பணியாற்றி கொண்டிருக்கிறோம். அதை பாராட்டுவதற்கு அவர்களுக்கு மனமில்லை. களியக்காவிளை- நாகர்கோவில், நாகர்கோவில்- காவல்கிணறு வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலை மிக மோசமாக உள்ளது.

    இது குறித்து கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் ஏற்கனவே பேசியிருக்கிறார். நாங்களும் பேசி இருக்கிறோம். ஆனால் அது குறித்து மத்திய அரசிடம் இருந்து எந்த தகவலும் இல்லை.

    தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பின்னர் இரண்டு வெள்ள சேதங்களை கன்னியாகுமரி மாவட்டம் சந்தித்துள்ளது. தற்போது வந்துள்ளது மூன்றாவது சேதம். கன்னியாகுமரி மாவட்டத்தில் வெள்ள பாதிப்பு குறித்த கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் சாலைகள் மேம்பாட்டிற்காக தமிழக அரசு ரூ.91 கோடியும், நாகர்கோவில் மாநகராட்சி பணிகளுக்கு ரூ.28 கோடியும் ஒதுக்கீடு செய்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×