search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "minister kamaraj"

    சிலை கடத்தல் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டதில் எந்த உள்நோக்கமும் இல்லை. சிலைகளை பாதுகாப்பதில் அ.தி.மு.க. அரசு சிறப்பாக செயல்படுகிறது என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். #statuesmugglingcase #ministerkamaraj #cbi

    திருவாரூர்:

    திருவாரூரில் அமைச்சர் இரா.காமராஜ் நிருபர்களுக்கு இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கூட்டுறவு துறை ஊழியர்கள் அரசின் கோரிக்கையை ஏற்று வேலைநிறுத்த போராட்ட அறிவிப்பை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும்.

    சிலை கடத்தல் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டதில் எந்த உள்நோக்கமும் இல்லை. சிலைகளை பாதுகாப்பதில் அ.தி.மு.க. அரசு சிறப்பாக செயல்படுகிறது. சிலை கடத்தல் வழக்கு தமிழகம் மட்டுமின்றி பல மாநிலங்கள், நாடுகள் சம்பந்தப்பட்டுள்ளது. எனவே சி.பி.ஐ. விசாரித்தால் தான் சரியாக இருக்கும். அதன் அடிப்படையில் அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது.

    சம்பா சாகுபடி மேற்கொள்ள தமிழகம் முழுவதும் ரூ. 8 ஆயிரம் கோடி பயிர்க்கடன் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்திற்கு ரூ.215 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சம்பா சாகுபடிக்கு தேவையான இடுபொருட்கள் அனைத்தும் இருப்பில் வைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அமைச்சர் காமராஜ் கூறினார். #statuesmugglingcase #ministerkamaraj #cbi

    திருவாரூர் மாவட்டத்தில் ரூ.10½ கோடியில் குடிமராமத்து பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை அமைச்சர் காமராஜ் பார்வையிட்டார்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் ஊருக்குடி கிராமத்தில் பதினெட்டாவது வாய்க்கால் ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் 11.7 கி.மீ தூரத்திற்கு தூர்வாரும் பணி நடைபெற்று வருவதை உணவுத்துறை அமைச்சர் இரா.காமராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது மாவட்ட கணிப்பாய்வு அதிகாரியும், பள்ளிக்கல்வித்துறை இணைச் செயலாளருமான சரவணவேல்ராஜ், மாவட்ட கலெக்டர் நிர்மல் ராஜ் ஆகியோர் உடன் சென்றனர்.

    பின்னர் உணவுத்துறை அமைச்சர் இரா.காமராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அரசின் நீண்ட சட்டப் போராட்டத்தின் விளைவாக காவிரி தண்ணீர் உறுதி செய்யும் வகையில் காவிரி நீர் முறைபடுத்தும் குழு அமைக்கப்பட்டு முதல் முறையாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மேட்டூர் அணை திறக்கப்பட்டது. அதற்கு காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் சார்பாக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

    திருவாரூர் மாவட்டத்தை பொறுத்தவரை ஆறு, வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. நடப்பு ஆண்டில் குடிமராமத்து பணிகள், தூர்வாரும் பணிகள் ரூ.10 கோடியே 48 லட்சம் மதிப்பீட்டில் 144 பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை விரைவாக முடிக்க அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் இப்பணிகளை கண்காணிக்கவும், கடைமடை பகுதிக்கு தண்ணீர் செல்வதை உறுதி செய்வதற்காகவும் கலெக்டரும் வெவ்வேறு துறைகளை சேர்ந்த இரண்டு அதிகாரிகள் கணிப்பாய்வு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மேற்பார்வையில் ஆறு, வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் வெண்ணாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் திருவேட்டை செல்வன், கொரடாச்செரி வட்டார வளர்ச்சி அலுவலர் வாசு மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    நியாய விலை கடைகளில் 3 மாதம் பொருள் வாங்காவிட்டாலும் ரே‌ஷன் கார்டு ரத்து இல்லை என்று உணவு துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    சட்டசபையில் இன்று மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ. (தி.மு.க) பேசுகையில், டெல்லியில் நடைபெற்ற உணவு துறை அமைச்சர்கள் கூட்டத்தில் மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் ஒரு செய்தியை வெளியிட்டதாக அறிகிறேன்.

    3 மாதங்களுக்கு மேல் உணவு பொருட்கள் வாங்காத ரே‌ஷன் அட்டைகளை ரத்து செய்ய மாநில அரசு முனைய வேண்டும் என்று கூறி இருக்கிறார். கட்டிட தொழிலாளர்கள், சாலை பணியாளர்கள், நூற்பாலை தொழிலாளர்கள், மாவட்டம் விட்டு மாவட்டம் வேலைக்கு செல்பவர்கள், 2, 3 மாதம் கழித்துதான் மீண்டும் சொந்த கிராமத்துக்கு செல்கிறார்கள்.

    மத்திய மந்திரி அறிவிப்பால் இதுபோன்ற தொழிலாளர்கள் ரே‌ஷன் கடைகளில் பொருட்கள் வாங்க முடியாத சூழல் ஏற்பட்டு விடும். 1 கோடியே 96 லட்சம் குடும்ப அட்டை கொண்ட பொது வினியோக திட்டத்துக்கு அர்த்தமே இல்லாமல் போய்விடும். எனவே மத்திய அரசின் இந்த உத்தரவை மாநில அரசு பின்பற்ற கூடாது என்றார்.

    இதற்கு அமைச்சர் ஆர்.காமராசு பதில் கூறியதாவது:-

    ரே‌ஷன் கார்டு பற்றி மத்திய மந்திரி கூறியது ஒரு அறிவுரையாகதான் கூறி இருக்கிறாரே தவிர அது கொள்கை முடிவு அல்ல. தமிழ்நாட்டை பொறுத்தவரை 3, 4, 5 மாதங்கள் ரே‌ஷனில் பொருட்கள் வாங்காவிட்டாலும், அந்த கார்டுகள் நிறுத்தப்படுவது கிடையாது. எப்போது வந்தாலும் பொருட்கள் கொடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.



    வெளியூர் சென்றவர்கள் திரும்பி வரும்போது மறுபடியும் நாங்கள் ஊருக்கு வந்துவிட்டோம் என்று ரிஜிஸ்டர் செய்து கொண்டால் அவர்களுக்கு பொருட்கள் வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதைதான் வருங்காலத்திலும் தமிழக அரசு பின்பற்றும் என்றார்.

    மா.சுப்பிரமணியம்:- சைதாப்பேட்டை மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தின் பகுதியில் உள்ள குடியிருப்புதாரர்களுக்கு அதே பகுதியில் நியாய விலை கடை அமைக்கப்படுமா? என்றார்.

    இதற்கு அமைச்சர் ஆவனம் செய்யப்படும் என்றார். #MinisterKamaraj #RationCard

    அனைத்து பொருட்களும் ரேசன் கடைகளில் வழங்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கூறினார். #MinisterKamaraj #TNAssembly
    சென்னை:

    சட்டசபையில் இன்று உணவு மற்றும் உணவுத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்தது.

    அதில் ராஜேந்திரன் (தி.மு.க.) பேசும்போது கூட்டுறவு துறையில் உள்ள குறைபாடுகளை களைய வேண்டும். ரேசன் கடைகளில் அனைத்து பொருட்களும் அனைவருக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கிராமப்புறங்களில் கூடுதல் மண்எண்ணெய் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என குறிப்பிட்டார்.

    இதற்கு உணவுத்துறை அமைச்சர் காமராஜ் அளித்த பதில் வருமாறு:-

    ‘‘தமிழ்நாட்டில் தான் மற்ற மாநிலங்களை விட உணவு பொருட்கள் சிறப்பாக வினியோகிக்கப்படுகின்றன. அனைவருக்கும் அனைத்து பொருட்களும் கிடைக்க வேண்டும் என்பதில் இந்த அரசு உறுதியாக இருந்து வருகிறது. இதற்காகத் தான் மாதத்தின் முதல் 2 ஞாயிற்றுக்கிழமையையும் வேலை நாட்களாக அன்றைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார்.

    தற்போது சிறப்பு வினியோக திட்டத்தின் கீழ் வழங்கும் துவரம் பருப்பு, பாமாயில் போன்றவற்றுக்கு மத்திய அரசு எந்த மானியமும் வழங்கவில்லை என்றாலும் அந்த திட்டத்தை நிறுத்தாமல் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. தற்போது அனைத்து பொருட்களும் ரேசன் கடைகளில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறிய தவறு கூட நடக்கக்கூடாது என்பதற்காகவே அனைத்து ரேசன் கடைகளும் கணினி மயமாக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டுக்கு ஆரம்ப காலத்தில் 54 ஆயிரம் கிலோ லிட்டர் மண்எண்ணெயை மத்திய அரசு வழங்கியது. ஆனால் பின்னர் மத்தியில் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி ஆட்சி இருந்த போது குறைக்கப்பட்டது. தற்போது தமிழ்நாட்டுக்கு 16,148 கிலோ லிட்டர் மண்எண்ணெயைதான் மத்திய அரசு வழங்குகிறது.



    அதை பகிர்ந்து அளித்து வருகிறோம். கூடுதலாக மண்எண்ணெய் வேண்டும் என்று மத்திய அரசை தமிழக அரசு வற்புறுத்தி வருகிறது. பிரதமருக்கு தமிழக முதல்-அமைச்சர் கடிதம் எழுதியுள்ளார். கூடுதல் மண்எண்ணெய் பெறுவதற்கான முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

    கூட்டுறவு துறை தொடர்பான கேள்விகளுக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ பதில் அளித்தார். அப்போது எந்த குறைபாடும் இன்றி கூட்டுறவு வங்கிகள் செயல்பட அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. யார் தவறு செய்தாலும் அவர்கள் கூட்டுறவு சங்க தேர்தலில் போட்டியிட முடியாத அளவுக்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

    இந்த விவாதத்தின்போது தி.மு.க. உறுப்பினர்கள் துரைமுருகன், ரங்கநாதன் ஆகியோர் குறுக்கிட்டனர். அப்போது சபாநாயகர் மற்றும் அமைச்சருடன் வாக்குவாதம் நடைபெற்றது.  #MinisterKamaraj #TNAssembly
    நீட் தேர்வு எழுத சென்றபோது தந்தை உயிரிழந்ததால் மாணவர் கஸ்தூரி மகாலிங்கத்துக்கு அ.தி.மு.க. சார்பில் ரூ.2 லட்சம் நிதியுதவியை அமைச்சர் காமராஜ் வழங்கினார்.
    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே விளக்குடியை சேர்ந்த கிருஷ்ணசாமி தனது மகன் கஸ்தூரி மகாலிங்கத்தை நீட் தேர்வு எழுத எர்ணாகுளத்திற்கு அழைத்து சென்ற போது மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது குடும்பத்தாரை அமைச்சர் காமராஜ் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மாணவரின் கல்வி செலவிற்கு அ.தி.மு.க. சார்பில் ரூ.2 லட்சம் நிதி வழங்கினார்.

    பின்னர் அமைச்சர் ஆர்.காமராஜ் கூறியதாவது:-

    நீட் எழுத சென்ற மகனுடன் சென்ற கிருக்ஷ்ணசாமி எர்ணாகுளத்தில் உயிரிழந்தவுடன் தமிழக முதல்வர் அலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறியதுடன் ரூ 3 லட்சம் நிதி உதவி வழங்கவும் உத்தரவிட்டு மாணவரின் படிப்பு செலவு முழுவதையும் அரசே ஏற்கும் என்று அறிவித்தார். அ.தி.மு.க. சார்பில் ரூ 2 லட்சம் நிதி வழங்கி இருக்கிறோம். தமிழக மாணவர்கள் தமிழகத்திலேயே நீட் தேர்வு எழுத கோரிக்கை வைத்திருக்கிறோம்.

    தற்போது கபினி அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்து சேரவில்லை ஏற்கனவே 40 அடி தண்ணீர் தான் இருக்கிறது நேற்று 35,000 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது இப்போது 17 ஆயிரம் கன அடி தான் வந்து கொண்டிருக்கிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டத்தை பொறுத்து விவசாயிகள் குறுவை சாகுபடிக்கு தயாராக வேண்டும். தூர்வாரும் பணிகள் நடந்து வருகிறது. ஆறுகள், வாய்க்கால்கள் தூர் வாரப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    மேட்டூர் அணையை திறக்கும் அளவிற்கு அணையில் நீர் இருப்பு இல்லை என்று திருவாரூரில் அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். #MetturDam #TNMinister #Kamaraj
    திருவாரூர்:

    திருவாரூரில் கூட்டுறவுத்துறை சார்பில் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை நிலையம் இன்று திறக்கப்பட்டது. விழாவில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கலந்து கொண்டு பெட்ரோல்- டீசல் விற்பனை நிலையத்தை திறந்து வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.  இதில் மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ்  மற்றும் கூட்டுறவு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    இதையடுத்து அமைச்சர் காமராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கூட்டுறவு சங்கங்களின் தலைவர்கள் இல்லையென்றாலும் அதன் நிர்வாகிகள் விவசாயிகளுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறார்கள். குறுவை தொகுப்பு திட்டத்தின் மூலம் சாகுபடிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக விவசாயிகள் பெற்றுக் கொள்ளலாம்.


    தற்போது மேட்டூர் அணையை திறக்கும் அளவிற்கு அணையில் நீர் இருப்பு இல்லை. அதேநேரத்தில் கர்நாடக மாநிலத்தில் மழை காரணாக கபினி அணை திறந்து விடப்பட்டுள்ளதால் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. நீர்மட்டத்தின் உயர்வை பொறுத்து மேட்டூர் அணை திறப்பது குறித்து முடிவு செய்யப்படும்.
     
    தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சட்டப்பேரவையில் பேச உரிய வாய்ப்பும், நேரமும் வழங்கப்படுகிறது. ஆனால் அவர்கள் நொண்டி சாக்கு சொல்லிக் கொண்டு வெளிநடப்பு என்ற நாடகத்தை நடத்துகின்றனர். இது மக்களுக்கு எந்த பயனையும் அளிக்காது. கூட்டுறவு சங்க தேர்தல் நடைபெறாததால் பணிகள் தொய்வடையவில்லை. வங்கி செயலாளர்கள் பணிகளை சிறப்பாக செய்து வருவதால் விவசாயிகளுக்கு எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை.

    மேலும் தமிழக முதல்வர் விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் ரூ.115 கோடி மதிப்பில் குறுவை தொகுப்பு திட்டம் அறிவித்திருப்பதின் மூலம் குறுவை சாகுபடி காவிரி டெல்டாவில் சிறப்பாக நடைபெறும்.

     இவ்வாறு அவர் கூறினார். #MetturDam #TNMinister #Kamaraj
    தமிழக சட்டசபையில் எந்த நேரத்திலும் அ.தி.மு.க அரசு பெரும்பான்மையை நிரூபிக்க தயாராக உள்ளது என்று அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார். #admkgovernment #mkstalin

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் குடவாசலில் ரூ.2 கோடி மதிப்பில் புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கான பூமி பூஜை இன்று காலை நடந்தது. இதில் அமைச்சர் காமராஜ் கலந்து கொண்டு பூமி பூஜையை தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    காவிரி உரிமையை பெற்றதில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு பெரும் பங்கு உள்ளது. சட்ட வல்லுனர்களை கொண்டு சரியான வாதத்தை முன்வைத்ததன் மூலமாக காவிரி விவகாரத்தில் நல்ல தீர்வு கிடைத்துள்ளது. மேட்டூர் அணையை ஜூன் 12-ந் தேதி திறக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம். ஆனால் 80 அடி நீர் இருந்தால் மட்டுமே அணையை திறக்க முடியும் என்பது வழக்கம். இருப்பினும் குருவை சாகுபடி செய்யப்படும் என்ற நம்பிக்கை உள்ளது.

    மு.க.ஸ்டாலின் காவிரி பிரச்சினையை உணர்வு பூர்வமாக அணுகவில்லை. அரசியலாகவே பார்க்கிறார். சட்டமன்ற கூட்டத்தொடரில் தூத்துக்குடி பிரச்சினையை காரணம் காட்டி தான் தி.மு.க.வினர் வெளிநடப்பு செய்தனர். ஆனால் அ.தி.மு.க. அரசு பெரும்பான் மையை நிரூபிக்க எங்களை கட்டாயப்படுத்தி வெளியேற்றப்படுவதாக ஸ்டாலின் குற்றம்சாட்டி வருகிறார். இது அரசியல் உள்நோக்கம் கொண்டது.


    கடந்த தி.மு.க. ஆட்சி தான் மைனாரிட்டி ஆட்சி. தற்போதைய அ.தி.மு.க. ஆட்சி மெஜாரிட்டியுடன் தான் செயல்படுகிறது. எந்த நேரத்திலும் அ.தி.மு.க அரசு பெரும்பான்மையை நிரூபிக்க தயாராக உள்ளது.

    இவ்வாறு அமைச்சர் காம ராஜ் கூறினார். #admkgovernment #mkstalin

    ×