என் மலர்

  நீங்கள் தேடியது "admk govt"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சாக்கடையை சரி செய்ய சொன்னால் அரசோ, சாராய கடைகளை திறக்கிறது என்று சூலூர் தேர்தல் பிரசாரத்தில் கமல்ஹாசன் பேசியுள்ளார்.

  சூலூர்:

  சூலூர் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மயில்சாமியை ஆதரித்து கமல்ஹாசன் நேற்று 2-வது நாளாக பிரசாரம் செய்தார். சின்னியம் பாளையம், தென்னம் பாளையம், குரும்ப பாளையம், சூலூர் பிரிவு, வாகராயம் பாளையம், கருமத்தம்பட்டி, சோமனூர், இருகூர் உள்ளிட்ட பகுதிகளில் அவர் பிரசாரம் செய்தார்.

  தமிழகத்தை மாறி, மாறி ஆட்சி செய்த இரு கட்சிகளையும் நம்பி மக்கள் ஏமாந்து விட்டனர். வரி போட்டு தறியை முடக்கிய மத்திய அரசும், அவர்களுக்கு ஆதரவாக இருக்கும் மாநில அரசும் சரியானவர்கள் அல்ல என்பதை மக்கள் உணர்ந்து விட்டார்கள்.

  அதே போல் இவர்களுக்கு மாற்று நாங்கள் தான் என்று கூறும் மற்ற அரசியல் கட்சிகளும் சரிவரவில்லை என்பதை மக்கள் உணர்ந்து விட்டனர். இன்று தமிழகத்தின் மாற்றத்துக்கான விளிம்பில் நாம் நிற்கிறோம். நியாயமான நல்ல அரசியல் தொடக்கத்தை மக்கள் ஏற்பாடு செய்ய வேண்டும்.

  தமிழகத்தில் எந்த ஊருக்கு சென்றாலும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. சாக்கடைகள் தெருவில் ஓடுகின்றன. சாக்கடையை சரி செய்யும் படி சொன்னால் அரசோ, சாராய கடைகளை திறக்கிறது.

  நமக்கென்ன என்று நாம் ஒதுங்கி நடந்தால் நாடு என்னவாகும் என்பதற்கு இன்றைய தமிழகம் உதாரணமாகும்.

  நானும் உங்களில் ஒருவனாக இருந்து இவர்களை வேடிக்கை பார்த்து சலித்து போய் கடைசியில் நாமாவது செயல்பட வேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன்.

  நான் உங்களுக்காக வந்தேன் என்பதை விட எனக்காக வந்தேன் என்பதே உண்மை.

  என்னை 60 ஆண்டுகளாக தூக்கி பிடித்திருக்கும் இந்த மக்களுக்காக நான் செய்தது கலைப்பணி மட்டுமே.

  அதையும் ஊதியம் வாங்கி விட்டு தான் செய்தேன். இனி வெறும் கலைஞனாக எனது வாழ்வை முடித்து கொள்ளாமல் உங்களில் ஒருவனாக மனிதனாக வாழ விரும்புகிறேன். எஞ்சிய வாழ்நாளை உங்களுக்காக அர்ப்பணிக்க முடிவு செய்திருக்கிறேன்.


  ஜி.எஸ்.டி.யால் நெசவு, கைத்தறி தொழில்கள் பாதிக்கப்பட்டு உள்ளது. இளைஞர்கள் அரசியல் மாற்றத்திற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை உங்களது மூத்த தலைமுறைக்கு எடுத்து கூறுங்கள்.

  அவர்கள் குழம்பி தான் போய் இருக்கிறார்கள். அவர்களை என்ன சொல்வது. என்னையும் சேர்த்து தான். என் தலைமுறைக்காரர்கள் குழம்பி விட்டார்கள். இதுவா, அதுவா என்று யோசித்து அரசியலில் நாங்கள் தொடர்ச்சியாக தோற்கும் கட்சிகளுக்கே ஒட்டு போட்டு கொண்டு இருக்கிறோம்.

  மக்களை மேம்படுத்தும் கட்சிதான் வெற்றி பெறும் கட்சிகளாக மாற முடியும். அக்கட்சியாக மக்கள் நீதி மய்யத்தை மாற்ற வேண்டியது உங்கள் கடமை.

  இந்த 4 சட்ட மன்ற தொகுதிகளில் இருக்கும் கட்சிகள் இருவரும் அரசியல் விளையாட்டாக பார்த்தாலும் நாங்கள் தமிழகத்தை மேம்படுத்த கிடைத்த வாய்ப்பாக அதை பார்க்கிறோம்.

  உங்கள் கடமையை நினைவில் கொள்ளுங்கள். நிச்சயம் நாளை நமதாகும்.

  இவ்வறு கமல்ஹாசன் பேசினார். 

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழகத்தை பொறுத்தமட்டில் விவசாயிகளை பாதிக்கும் எந்த திட்டத்திற்கும் அ.தி.மு.க. அரசு அனுமதி அளிக்காது என்று தம்பிதுரை எம்பி தெரிவித்துள்ளார். #thambidurai #tngovt ##methaneproject
  கரூர்:

  கரூர் மாவட்டத்தில் பாராளுமன்ற துணை சபாநாயகர் மு. தம்பித்துரை, அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் மக்களிடம் நேரில் சென்று குறைகள் கேட்டு மனுக்கள் பெற்று வருகின்றனர். இன்று கரூர் மூக்கினாங்குறிச்சி பகுதியில் மனுக்கள் பெற்ற போது மு.தம்பித்துரை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 

  மீத்தேன் திட்டத்திற்கு தமிழகத்தில் 2 இடங்களை மத்திய அரசு தேர்வு செய்துள்ளது. தேர்வு செய்வது அவர்களாக இருந்தாலும் அதற்கு அனுமதி அளிக்க வேண்டியது தமிழக அரசு தான். தமிழகத்தை பொறுத்தமட்டில் விவசாயிகளை பாதிக்கும் எந்த திட்டத்திற்கும் அ.தி.மு.க. அரசு அனுமதி அளிக்காது. ராஜீவ் கொலை குற்றவாளிகள் 7 பேரை விடுதலை செய்வதில் கவர்னர் விரைவில் நல்ல முடிவு எடுப்பார் என்றார். 

  2016 சட்டமன்ற தேர்தலின் போது அரவக்குறிச்சியில் தேர்தலை நிறுத்த நீங்கள் (மு.தம்பித்துரை) தான் காரணம் என முன்னாள் அமைச்சர் வி. செந்தில்பாலாஜி குற்றம் சாட்டியுள்ளாரே? என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அவர், தேர்தல் கமிஷன் எனக்கு தனி அதிகாரம் எதுவும் அளிக்கவில்லை. ஒருவேளை அப்படி இருக்கிறதா? என்று எனக்கு தெரியவில்லை. அந்த தேர்தலை பொறுத்தவரை தேர்தல் கமிஷன்தான் தேர்தலை நிறுத்தியது.

  இவ்வாறு அவர் கூறினார். #thambidurai #tngovt ##methaneproject
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இன்னும் கொஞ்சம் நாளில் தமிழ்நாடு திவாலாகும் நிலையில் உள்ளதாக ஆற்காட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராமதாஸ் வேதனையாக தெரிவித்துள்ளார். #PMK #Ramadoss #ADMK
  ஆற்காடு:

  ஆற்காடு சட்டமன்ற தொகுதி சார்பில் பாட்டாளி மக்கள் கட்சியின் 30-வது ஆண்டு தொடக்க விழா மற்றும் பொதுக்கூட்டம் ஆற்காடு பஸ் நிலையத்தில் நடந்தது. அப்போது ராமதாஸ் பேசியதாவது:-

  ஆட்சியாளர்களுக்கு பணம் கொடுப்பது மணல் தான். பால் போல் ஓடும் ஆற்றை எப்போது பார்ப்பது. நாம் ஆட்சிக்கு வந்தால் தான் பார்க்கலாம். ஒரு கிலோ மணல் கூட எடுக்க விட மாட்டோம்.

  பாலாற்றில் வெள்ளைக்காரன் காலத்தில் கட்டிய ஒரே ஒரு தடுப்பணை புதுப்பாடியில் தான் உள்ளது. பாலாற்றில் எப்போதும் தண்ணீர் செல்ல வேண்டும். விவசாயம் செழிக்க வேண்டும். தோல் கழிவுகளை பாலாற்றில் விட்டு பாழாக்கி விட்டனர். ஒரு சொட்டு சாராயம் கூட தமிழ்நாட்டில் இருக்கக் கூடாது. பெண்கள் வாழ்வில் வசந்தம் வீச வேண்டும். குடியை ஒழிக்க வேண்டும் என்பது எனது ஆசை. இப்போது நடைபெறுவது ஊழல் ஆட்சி. அன்புமணி முதல் அமைச்சராக வந்தால் தான் ஊழல் இல்லாத ஆட்சி இருக்கும். தமிழ்நாட்டிற்கு நிறைய திட்டங்கள் வைத்துள்ளார். வீட்டிற்கு ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும். ஒரு கோடி பேருக்கு வேலை வழங்க உள்ளார்.

  நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒரு சொட்டு மழைநீர் கூட கடலுக்கு செல்லாது. அதை அமல்படுத்த வேண்டும் என்றால் வாக்காளர் மனது வைக்க வேண்டும். நீங்கள் நினைத்தால் எதையும் செய்ய முடியும். ஓட்டுக்கு பணம் கொடுக்கும் வழக்கம் தமிழ்நாட்டில் தான் உள்ளது. பணம் வாங்க மாட்டோம் என வாக்காளர்கள் நினைக்க வேண்டும்.


  50 ஆண்டுகள் 2 திராவிட கட்சிகளும் தமிழ்நாட்டை நாசம் செய்து விட்டன. புரையோடி கிடக்கின்ற தமிழ்நாட்டை அன்புமணி தான் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். தமிழ்நாட்டை மத்திய அரசு ஆட்டுவிக்கிறது. பினாமி அரசு ஆடுகிறது. சென்னை- சேலம் பசுமை வழிச்சாலை வழக்கு இன்று(நேற்று) விசாரணைக்கு வந்தது. அதனால் 7 ஆயிரம் குடும்பம் பாதுகாக்கப்பட்டது.

  இன்னும் கொஞ்சம் நாளில் தமிழ்நாடு திவாலாகும். ரூ.10 லட்சம் கோடி கடன் உள்ளது. ஒவ்வொரு தனி மனிதன் தலையிலும் ஒரு லட்சம் ரூபாய் கடன் உள்ளது. ஒரு நாளைக்கு ரூ.170 கோடி வட்டி கட்டுகின்றனர். இந்த அரசு தேவையா?, மாற்றம் வர வேண்டும்.

  இவ்வாறு அவர் பேசினார். #PMK #Ramadoss #ADMK
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அ.தி.மு.க அரசு தோல்வி பயத்தால் உள்ளாட்சி தேர்தலை தள்ளிப்போட்டு வருவதாக முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் குற்றம்சாட்டியுள்ளார். #EVKSElangovan #ADMK
  சென்னை:

  முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் பிறந்த நாள் விழாவை காங்கிரசார் இன்று சிறப்பாக கொண்டாடினார்கள்.

  சைதாப்பேட்டையில் உள்ள ராஜீவ்காந்தி சிலைக்கு முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தனது ஆதரவாளர்களுடன் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

  நவ இந்தியாவை உருவாக்கியவர் நேரு. அவர் வழியில் வந்த ராஜீவ் நவீன இந்தியாவை உருவாக்கினார். கம்ப்யூட்டர், தொலைத்தொடர்பில் புரட்சியை செய்தவர்.

  கிராமங்கள் முன்னேற பஞ்சாயத்துராஜ் திட்டத்தை கொண்டு வந்தார். உள்ளாட்சி அமைப்புகள் மூலம் கிராமப் பகுதிகளுக்கு மத்திய அரசின் நிதி நேரடியாக வந்தது.


  அ.தி.மு.க. அரசு உள்ளாட்சி தேர்தலை நடத்தாததால் கிராமங்களுக்கு வரவேண்டிய 30 ஆயிரம் கோடி ரூபாய் நின்றுபோனது.

  தற்போதைய அ.தி.மு.க. அரசுக்கு மக்களைப்பற்றி எந்த கவலையும் இல்லை. தோல்வி பயத்தால் உள்ளாட்சி தேர்தலை தள்ளிப்போட்டு வருகிறார்கள். எப்போது தேர்தல் நடத்தினாலும், எந்த தேர்தல் நடந்தாலும் அ.தி.மு.க. தோல்வியை தழுவும்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  அவருடன் தென் சென்னை மாவட்ட தலைவர்கள் கராத்தே தியாகராஜன், ஏ.ஜி.சிதம்பரம், முன்னாள் மாவட்ட தலைவர்கள் ரங்க பாஷ்யம், வி.ஆர்.சிவராமன், பாலகிருஷ்ணன் மற்றும் நாஞ்சில் பிரசாத் உள்பட பலர் கலந்து கொண்டனர். #Congress #EVKSElangovan #ADMK
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சிலை கடத்தல் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டதில் எந்த உள்நோக்கமும் இல்லை. சிலைகளை பாதுகாப்பதில் அ.தி.மு.க. அரசு சிறப்பாக செயல்படுகிறது என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். #statuesmugglingcase #ministerkamaraj #cbi

  திருவாரூர்:

  திருவாரூரில் அமைச்சர் இரா.காமராஜ் நிருபர்களுக்கு இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

  கூட்டுறவு துறை ஊழியர்கள் அரசின் கோரிக்கையை ஏற்று வேலைநிறுத்த போராட்ட அறிவிப்பை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும்.

  சிலை கடத்தல் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டதில் எந்த உள்நோக்கமும் இல்லை. சிலைகளை பாதுகாப்பதில் அ.தி.மு.க. அரசு சிறப்பாக செயல்படுகிறது. சிலை கடத்தல் வழக்கு தமிழகம் மட்டுமின்றி பல மாநிலங்கள், நாடுகள் சம்பந்தப்பட்டுள்ளது. எனவே சி.பி.ஐ. விசாரித்தால் தான் சரியாக இருக்கும். அதன் அடிப்படையில் அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது.

  சம்பா சாகுபடி மேற்கொள்ள தமிழகம் முழுவதும் ரூ. 8 ஆயிரம் கோடி பயிர்க்கடன் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்திற்கு ரூ.215 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சம்பா சாகுபடிக்கு தேவையான இடுபொருட்கள் அனைத்தும் இருப்பில் வைக்கப்பட்டுள்ளது.

  இவ்வாறு அமைச்சர் காமராஜ் கூறினார். #statuesmugglingcase #ministerkamaraj #cbi

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அதிமுக அரசை அகற்றும்வரை ஓயமாட்டோம் என்று திருச்சி ஆர்ப்பாட்டத்தில் கே.என்.நேரு எம்.எல்.ஏ.பேசினார். #dmkprotest

  திருச்சி:

  தமிழகத்தில் மாநகராட்சி மற்றும் நகராட்சி, பேரூராட்சிகளில் சொத்து வரி உயர்த்தப்பட்டதை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று தி.மு.க. வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

  திருச்சி மாவட்ட தி.மு.க. சார்பில் திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான கே.என்.நேரு எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

  ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அன்பில் பெரியசாமி, கே.என். சேகரன், பரணிக்குமார், மாநகர செயலாளர் அன்பழகன், மாவட்ட துணை செயலாளர் குடமுருட்டி சேகர், இளைஞரணி அமைப்பாளர் ஆனந்த், தொழிலதிபர் ஜான்சன் குமார், அபூர்வாமணி,

  பகுதி செயலாளர்கள் மதிவாணன், கண்ணன், பாலமுருகன், மோகன்தாஸ், ராமதாஸ்,காஜாமலை விஜி, மண்டிசேகர், ராம்குமார் இளங்கோ, கொட்டப்பட்டு தர்மராஜ் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் சத்தியமூர்த்தி, வரதராஜன், மல்லியம்பத்து கதிர்வேல், சிங்காரம், வட்ட பிரதிநிதி பந்தல்ராமு, கிராப்பட்டி செல்வம், துர்காதேவி, மாவட்ட துணை செயலாளர்கள் முத்துசெல்வம், விஜயா ஜெயராஜ் மற்றும் லீலாவேலு, என்ஜினீயர் நித்தியானந்த், குமரேசன், மார்சிங்பேட்டை செல்வராஜ்,

  சில்வியா, மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சேசு அடைக்கலம், விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர்கள் மூக்கன், ஜெயக்குமார், கருணைராஜா, துரைராஜ், இளைஞரணி துணை அமைப்பாளர் வாளாடி கார்த்திக், பொன்னகர் ஜெரால்டு, மாவட்ட பிரதிநிதி வரகனேரி ரவிச்சந்திரன், மன்னார்புரம் ராஜேந்திரன்,

  வட்ட செயலாளர்கள் துபேல் அகமது, சிவசக்தி குமார், குமரேசன், வக்கீல் ரெங்கன், ராமமூர்த்தி, சுருளி ராஜன், ஸ்ரீரங்கம் ஜனா, பி.ஆர்.பால சுப்பிரமணியன், தாமு சேகர், பொதுக்குழு உறுப்பினர் மூவேந்திரன், தி.மு. ரெங்கா, கோபால்ஜி உள் பட பலர் கலந்து கொண் டனர்.

  ஆர்ப்பாட்டத்தின் போது கே.என்.நேரு எம்.எல்.ஏ. பேசியதாவது:-

  தமிழக அரசு சொத்து வரியை உயர்த்தியுள்ளதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போதைய சொத்து வரி உயர்வு தனி மனிதனை பெரிதும் பாதிக்கும். எனவே சொத்து வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும்.

  எந்த பிரச்சினைக்கும் சட்டமன்றத்தில் முதல்வர் சரியாக பதில் அளிப்பதில்லை. பொத்தாம் பொதுவாக பேசுகிறார். உள்ளாட்சி தேர்தல் நடத்தாத நிலையில் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. மக்களை பாதிக்கும் இந்த அரசை அகற்றும் வரை ஓய மாட்டோம்.

  இவ்வாறு அவர் பேசினார்.

  இதேபோல் துறையூரில் ஸ்டாலின் குமார் எம்.எல்.ஏ., தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க. வினர் ஏராளமானோர் கலந்து கொண்டு தமிழக அரசிற்கு எதிராக கோ‌ஷங்கள் எழுப்பினர்.

  திருச்சி துவாக்குடி நகர தி.மு.க. சார்பில் துவாக்குடி நகராட்சி அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு திருவெறும்பூர் எம்.எல்.ஏ. அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமை வகித்தார். துவாக்குடி நகர செயலாளர் காயம்பு, முன்னாள் எம்.எல். ஏ., சேகரன், திருவெறும்பூர் ஒன்றிய செயலாளர்கள் கருணாநிதி, மாரியப்பன், காட்டூர் பகுதி செயலாளர் நீலமேகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  ஆர்ப்பாட்டத்தில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எம். எல்.ஏ. பேசியதாவது:-

  தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்தியிருந்தால் மத்திய அரசின்ரூ. 5 ஆயிரத்து 500 கோடி நிதி மானியமாக கிடைத்திருக்கும். அது தற்போது கிடைக்கவில்லை

  ஏற்கனவே விலைவாசி உயர்வால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் தமிழக அரசு தற்போது வரலாறு காணாத சொத்து வரியை உயர்த்தியுள்ளது. அதனை கண்டித்து தான் இந்த ஆர்ப்பாட்டம் நடக்கிறது என்றார்.

  ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் அப்துல்குத்தூஸ், தனசேகர், வி.பி.குமார், ஜெயலட்சுமி குமார், செல்வமணி, மணிமாறன், குணாநிதி, பன்னீர்செல்வம், அப்பு என்ற கருணாநிதி, பொன்மலை தி.மு.க. இளைஞரணி சுரேஷ் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். #dmkprotest

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அ.தி.மு.க. அரசு முழுமையாக 5 ஆண்டுகளை நிறைவு செய்யும் என்று கோவையில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். #ministerspvelumani #admk

  கோவை:

  ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோவை மாநகராட்சியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை ரேஸ்கோர்சில் உள்ள நடை பயிற்சி சாலையில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அமைச்சர் எஸ்.பி. வேலுமணி இன்று ஆய்வு செய்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

  ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரேஸ்கோர்ஸ் நடை பயிற்சி சாலை நவீன படுத்தப்பட உள்ளது. இங்கு பொதுமக்களின் வசதிக்காக திறந்த வெளி கலையரங்கம், கழிப்பிட வசதிகள், குடிநீர் வசதி, குழந்தைகளுக்கான விளையாட்டு திடல்கள், உடற்பயிற்சி கூடங்கள் நவீன முறையில் அமைக்கப்பட உள்ளது. இதற்காக மக்களிடம் கருத்துக்களை கேட்டு அதன் அடிப்படையில் வசதிகள் செய்து கொடுக்கப்படும். நடை பயிற்சி சாலையில் மழைநீர் சேகரிப்பு திட்டமும் செயல்படுத்தப்படும். திட்டத்தை வேகமாக செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  இவ்வாறு அவர் கூறினார்.

  அவரிடம் நிருபர்கள் அ.தி.மு.க. அரசு வருமான வரி சோதனைக்கு பயந்து பா.ஜனதாவுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளது. இது தமிழகத்துக்கு செய்த துரோகம் என ஸ்டாலின் கூறி உள்ளாரே என கேட்டதற்கு வருமான வரித்துறை சோதனை வழக்கமான நிகழ்வு. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அ.தி.மு.க. அரசு முழுமையாக 5 ஆண்டுகளை நிறைவு செய்யும்.

  காவிரி விவகாரத்தில் மத்திய அரசு முன்பு கர்நாடக மாநிலத்திற்கு ஆதரவாக செயல்பட்ட போது அ.தி.மு.க. எம்.பி.க்கள் பாராளுமன்றத்தை முடக்கி உரிமையை மீட்டு எடுத்தனர்.

  எம்.பி.க்கள் இல்லாத தி.மு.க.வின் ஸ்டாலின் இது குறித்து பேசுவதற்கான அவசியம் என்ன என புரியவில்லை. மத்தியில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கம் வகித்த தி.மு.க. தமிழர்களின் நலனுக்காகவோ, ஈழத்தமிழர்களின் நலனுக்காகவோ என்ன நடவடிக்கை எடுத்தது? என்றார்.

  ஆய்வின் போது கலெக்டர் ஹரிஹரன், மாநகராட்சி கமி‌ஷனர் விஜயகார்த்திகேயன், போலீஸ் கமி‌ஷனர் பெரியய்யா, மாநகராட்சி துணை கமி‌ஷனர் காந்திமதி,எம்.எல்.ஏ.,க்கள் பி.ஆர்.ஜி. அருண்குமார், அம்மன் அர்ச்சுணன், மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். #ministerspvelumani #admk

  ×