search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Student Kasturi Mahalingam"

    நீட் தேர்வு எழுத சென்றபோது தந்தை உயிரிழந்ததால் மாணவர் கஸ்தூரி மகாலிங்கத்துக்கு அ.தி.மு.க. சார்பில் ரூ.2 லட்சம் நிதியுதவியை அமைச்சர் காமராஜ் வழங்கினார்.
    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே விளக்குடியை சேர்ந்த கிருஷ்ணசாமி தனது மகன் கஸ்தூரி மகாலிங்கத்தை நீட் தேர்வு எழுத எர்ணாகுளத்திற்கு அழைத்து சென்ற போது மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது குடும்பத்தாரை அமைச்சர் காமராஜ் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மாணவரின் கல்வி செலவிற்கு அ.தி.மு.க. சார்பில் ரூ.2 லட்சம் நிதி வழங்கினார்.

    பின்னர் அமைச்சர் ஆர்.காமராஜ் கூறியதாவது:-

    நீட் எழுத சென்ற மகனுடன் சென்ற கிருக்ஷ்ணசாமி எர்ணாகுளத்தில் உயிரிழந்தவுடன் தமிழக முதல்வர் அலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறியதுடன் ரூ 3 லட்சம் நிதி உதவி வழங்கவும் உத்தரவிட்டு மாணவரின் படிப்பு செலவு முழுவதையும் அரசே ஏற்கும் என்று அறிவித்தார். அ.தி.மு.க. சார்பில் ரூ 2 லட்சம் நிதி வழங்கி இருக்கிறோம். தமிழக மாணவர்கள் தமிழகத்திலேயே நீட் தேர்வு எழுத கோரிக்கை வைத்திருக்கிறோம்.

    தற்போது கபினி அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்து சேரவில்லை ஏற்கனவே 40 அடி தண்ணீர் தான் இருக்கிறது நேற்று 35,000 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது இப்போது 17 ஆயிரம் கன அடி தான் வந்து கொண்டிருக்கிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டத்தை பொறுத்து விவசாயிகள் குறுவை சாகுபடிக்கு தயாராக வேண்டும். தூர்வாரும் பணிகள் நடந்து வருகிறது. ஆறுகள், வாய்க்கால்கள் தூர் வாரப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×