search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Metro Train"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • போக்குவரத்து நெரிசல் இல்லாமல் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்ய முடிவதால் பொதுமக்களிடையே நாளுக்கு நாள் மெட்ரோ ரெயிலுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது.
    • 119 கி.மீ. நீளத்திற்கு நடைபெற உள்ள மெட்ரோ ரெயில் பணிகள் 2028-ம் ஆண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் விமான நிலையம் முதல் சென்ட்ரல் ரெயில் நிலையம் வரையில் ஒரு வழித்தடத்திலும், விமான நிலையம் முதல் விம்கோ நகர் வரை மற்றொரு வழித்தடத்திலும் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. போக்குவரத்து நெரிசல் இல்லாமல் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்ய முடிவதால் பொதுமக்களிடையே நாளுக்கு நாள் மெட்ரோ ரெயிலுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது.

    இந்நிலையில், கோயம்பேட்டில் இருந்து திருமங்கலம், முகப்பேர் வழியாக ஆவடி வரை 16.07 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரெயில் சேவையை நீட்டிக்க மெட்ரோ ரெயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

    சென்னையில் 2-வது கட்ட மெட்ரோ ரெயில் பணிகள் சிறுசேரி- கிளாம்பாக்கம், பூந்தமல்லி- பரந்தூர், கோயம்பேடு- ஆவடி ஆகிய 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகின்றன.

    கோயம்பேடு- ஆவடி மெட்ரோ சேவைக்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் டெண்டர் கோரி உள்ளது.

    119 கி.மீ. நீளத்திற்கு நடைபெற உள்ள மெட்ரோ ரெயில் பணிகள் 2028-ம் ஆண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    • சின்னமலை மெட்ரோ ரெயில் நிலையத்தில் வாகன நிறுத்தும் பகுதி சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக 2 மாதங்களுக்கு தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது.
    • சின்னமலை மெட்ரோ ரெயில் நிலைய வாகன நிறுத்தம் பகுதி மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் வரும் 19-ந்தேதி மீண்டும் திறக்கப்படுகிறது.

    சென்னை:

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

    சின்னமலை மெட்ரோ ரெயில் நிலையத்தில் புதுப்பிக்கப்பட்ட வாகன நிறுத்தம் பகுதி மீண்டும் திறக்கப்படுகிறது.

    பயணிகளின் வசதி மற்றும் சீரான வாகன நிறுத்த மேம்பாட்டை கருத்தில் கொண்டு, சின்னமலை மெட்ரோ ரெயில் நிலையத்தில் வாகன நிறுத்தும் பகுதி சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக இரண்டு மாதங்களுக்கு தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது.

    இந்நிலையில் தற்போது சின்னமலை மெட்ரோ ரெயில் நிலைய வாகன நிறுத்தம் பகுதி மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டு வரும் 19-ந்தேதி முதல் பொது பயன்பாட்டிற்கு மீண்டும் திறக்கப்படுகிறது.

    மெட்ரோ பயணிகள் தங்களின் 4 சக்கர வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

     

    • மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
    • மெட்ரோ ரெயில் பயணிகளை மற்ற பொது போக்குவரத்துடன் இணைக்கும் வகையில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

    சென்னை:

    சென்னையில், மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது தினமும் 3 லட்சம் பேர் பயணம் செய்கிறார்கள்.

    மெட்ரோ ரெயில் பயணிகளை மற்ற பொது போக்குவரத்துடன் இணைக்கும் வகையில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

    பயணிகள் இடையூறு இல்லாமல் ரெயில் நிலையங்களுக்கு செல்லவும் தடையின்றி மற்ற போக்குவரத்துகளுக்கு மாறவும் அதிகளவு பயணிகளை கையாளும் 22 மெட்ரோ ரெயில் நிலையங்களில் கூடுதலாக 41 நகரும் படிக்கட்டுகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளன. அண்ணா நகர், சின்னமலை, வண்ணாரப்பேட்டை, அரசு எஸ்டேட், ஈக்காட்டு தாங்கல், தேனாம்பேட்டை, ஐகோர்ட்டு, ஆயிரம் விளக்கு, மண்ணடி, பரங்கி மலை, தண்டையார்பேட்டை நிலையங்களில் தலா ஒரு நகரும் படிக்கட்டும், நேரு பூங்கா, எழும்பூர், நங்கநல்லூர் சாலை, கிண்டி, ஏ.ஜி.-டி.எம்.எஸ்., தியாகராயா கல்லூரி மற்றும் நந்தனம் ரெயில் நிலையங்களில் கூடுதலாக 2 நகரும் படிக்கட்டுகள் அமைக்கப்படும்.

    அண்ணாநகர் பூங்கா, நிலையத்தில் 3 நகரும் படிக்கட்டுகளும், வடபழனி மற்றும் மீனம்பாக்கத்தில் 4 நகரும் படிக்கட்டுகளும் திருமங்கலத்தில் 5 எஸ்க லேட்டர்களும் அமைக்கப்பட உள்ளன.

    இந்த மாதத்தில் பணிகள் தொடங்கி ஒரு வருடத்தில் நிறைவடையும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    கொரோனா பாதிப்புக்கு முன்பு மெட்ரோ ரெயில் பயணிகள் எண்ணிக்கை 1.16 லட்சமாக இருந்தது. இப்போது 2.73 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பயணித்து வருவதால் இந்த வசதிகள் செய்யப்படுகின்றன. அனைத்து மெட்ரோ ரெயில் நிலையங்களிலும் முதலில் கான்கோர்ஸ் மற்றும் தெரு நிலைகளை இணைக்கும் வகையில் மேல் நோக்கி மற்றும் கீழ்நோக்கி நகரும் படிக்கட்டுகள் வடிவமைக்கப்பட்டன. ஆனால் திட்டச் செலவை மிச்சப்படுத்த கட்டடிடம்-1 கட்டும்போது அவை நிறுவப்படவில்லை.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • 23 சுரங்கம் தோண்டும் எந்திரங்கள் கொண்டு வரப்பட்டன.
    • அடையாறு ஆற்றின் கீழே சுரங்கப்பாதை அமைக்கும் பணி கடந்த 2 மாதத்திற்கு முன்பு தொடங்கப்பட்டது.

    சென்னை:

    சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் 2-ல் மூன்றாம் கட்டத்தின் ஒரு பகுதி மாதவரம் மில்க் காலனியில் இருந்து சிறுசேரி சிப்காட் வரை 45.4 கி.மீ. தூரம் வரை அமைக்கப்படுகிறது.

    மெட்ரோ ரெயில் திட்டப் பணிகள் சுரங்கப்பாதையாக பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. மொத்தம் உள்ள 116 கி.மீ. தூரத்திற்கு இரண்டாம் திட்டப் பணிகளில் 42 கி.மீ. கட்டுமானத்திற்கு 23 சுரங்கம் தோண்டும் எந்திரங்கள் கொண்டு வரப்பட்டன. அவற்றில் 19 எந்திரங்கள் பல்வேறு இடங்களில் இயங்கி வருகின்றன.

    தி.நகர் மற்றும் கோடம்பாக்கம் போன்ற இடங்களில் களிமண் நிலம் இருந்தாலும் அடையாறு மற்றும் திருவான்மியூர் ஆகிய இடங்களில் பாறைகள் நிறைந்த பகுதியாகும்.

    இந்த திட்டப் பணியில் சில சுரங்கம் தோண்டும் எந்திரங்கள் பாறை மண்ணின் வழியாக சுரங்கப் பாதைகளை அமைக்க இணைக்கப்பட்டு உள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலையில் அடையாறு ஆற்றின் கீழே சுரங்கப்பாதை அமைக்கும் பணி கடந்த 2 மாதத்திற்கு முன்பு தொடங்கப்பட்டது.

    தற்போது ஆற்றின் பாதி வரையில் சுரங்கம் தோண்டும் பணி முடிந்துள்ளது. மற்றொரு எந்திரம் சேத்துப்பட்டு ஏரிக்கு கீழே பல மீட்டர் தூரத்திற்கு சுரங்கம் தோண்டும் பணியை மேற்கொள்ளும். கிரீன்வேஸ் ரோடு ஸ்டேஷன் முதல் அடையாறு சந்திப்பு நிலையம் வரையிலான 1.6 கி.மீ. தூரத்திற்கு அடையாறு ஆற்றின் கீழ் சுரங்கப்பாதை அமைக்கும் எந்திரம் இன்னும் 3 மாதங்களில் ஆற்றின் தெற்கு கரையை வந்தடையும் என்று மெட்ரோ ரெயில் திட்ட இயக்குனர் அர்ச்சுனன் தெரிவித்தார்.

    மேலும் ஒரு சுரங்கம் தோண்டும் எந்திரம் மெதுவாக ஸ்டெர்லிங் சாலையை நோக்கி முன்னேறி வருகிறது. ஸ்டெர்லிங் சாலையை அடைய 3 மாதங்கள் ஆகலாம். மற்றொரு எந்திரம் சேத்துபட்டு ஏரி வழியாக கீழ்ப்பாக்கம் நோக்கி சென்று ஒரு மாதத்தில் சுரங்கப் பாதை அமைக்கும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

    • போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை நடவடிக்கை.
    • அண்ணாசாலையிலிருந்து ஸ்மித் சாலையில் வரும் வாகனங்கள் ஸ்மித் ரோடு x ஒயிட்ஸ் சாலை சந்திப்பில் வலதுபுறம் திரும்ப தடை விதிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    சென்னை ஒயிட்ஸ் சாலையில் உள்ள ஆயிரம் விளக்கு பகுதிகளில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தினரால் மேற்கொள்ளப்படும் கட்டுமானப் பணிகளைக் கருத்தில் கொண்டு, போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினரால் இன்று முதல் ஒரு வார காலத்திற்கு பின்வரும் போக்குவரத்து மாற்றங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    * பட்டுலாஸ் சாலை ஒயிட்ஸ் சாலை சந்திப்பிலிருந்து ஒயிட்ஸ் சாலை x திரு.வி.க. சந்திப்பு வரை வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது.

    * ராயப்பேட்டை மணிக்கூண்டில் இருந்து அண்ணாசாலை நோக்கி ஒயிட்ஸ் சாலையில் வரும் வாகனங்கள் பட்டுலாஸ் சாலை ஒயிட்ஸ் சாலை சந்திப்பில் திரும்பி தங்களது இலக்கை அடையலாம்.

    * அண்ணாசாலையிலிருந்து ஸ்மித் சாலையில் வரும் வாகனங்கள் ஸ்மித் ரோடு x ஒயிட்ஸ் சாலை சந்திப்பில் வலதுபுறம் திரும்ப தடை விதிக்கப்பட்டுள்ளது.

    * அண்ணாசாலையில் இருந்து வரும் வாகனங்கள் ஒயிட்ஸ் சாலை X திரு.வி.க. சந்திப்பில் இருந்து பட்டுலாஸ் சாலை ஒயிட்ஸ் சாலை சந்திப்பு வரை வழக்கம் போல் இயக்கப்பட்டு ராயப்பேட்டை மணிக்கூண்டிற்கு சென்றடையும்.

    வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    • காயம் அடைந்த தருணை மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஆலந்தூர்:

    வடபழனி, மசூதி தெருவை சேர்ந்தவர் தருண். இவர் மீனம்பாக்கத்தில் உள்ள கல்லூரியில் பி.சி.ஏ. இறுதி ஆண்டு படித்து வருகிறார். தினமும் மீனம்பாக்கம் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து வடபழனிக்கு மெட்ரோ ரெயிலில் சென்று வருவது வழக்கம். நேற்று மாலை கல்லூரி முடிந்ததும் வீட்டிற்கு செல்வதற்காக தருண் மீனம்பாக்கம் மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு வந்து நடை மேடையில் காத்திருந்தார்.

    அப்போது மெட்ரோ ரெயில் வந்தபோது திடீரென தருண் ரெயில் முன்பாய்ந்தார். என்ஜின் முன்பு சிக்கிய அவரை சிறிது தூரம் மெட்ரோ ரெயில் இழுத்து சென்று நின்றது. இதில் பலத்த காயம் அடைந்த தருண் அலறி துடித்தார். இதனை கண்டு மெட்ரோ ரெயிலில் பயணம் செய்ய இருந்த பயணிகள் அதிர்ச்சியில் கூச்சலிட்டனர். உடனடியாக பலத்த காயம் அடைந்த தருணை மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மாணவர் தருணின் பெற்றோர் சினிமா துறையில் வேலை பார்த்து வருகிறார்கள். தருண் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருததாக தெரிகிறது. இதனால் அவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு இருப்பது விசாரணையில் தெரிய வந்தது. நடைமேடையில் நிற்பதற்காக மெட்ரோ ரெயில் குறைந்த வேகத்தில் வந்ததால் அவர் பலத்த காயத்துடன் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினார். இது குறித்து மீன்பாக்கம் இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • அஜந்தா மேம்பாலத்தை இடிக்கும் பணி நேற்று நள்ளிரவில் தொடங்கியது.
    • மயிலாப்பூர், மந்தைவெளி, அடையாறுக்கு செல்லும் வாகனங்கள் வி.பி.ராமன் சாலையில் இயக்கப்படுகிறது.

    சென்னை:

    சென்னை மெட்ரோ ரெயில் 2ம் கட்ட வழித்தடங்கள் அமைக்கும் பணிகளுக்காக சென்னை ராயப்பேட்டை ராதாகிருஷ்ணன் சாலையில் அமைந்துள்ள அஜந்தா மேம்பாலத்தை இடிக்கும் பணி நேற்று நள்ளிரவில் தொடங்கியது. எந்த ஒரு அசம்பாவிதம் ஏற்படாமல் இருப்பதற்காக அப்பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

    2 பொக்லைன் இயந்திரங்களின் உதவியுடன் மேம்பாலத்தை இடிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேம்பாலம் இடிப்பு பணி காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    இதைத்தொடர்ந்து மயிலாப்பூர், மந்தைவெளி, அடையாறுக்கு செல்லும் வாகனங்கள் வி.பி.ராமன் சாலையில் இயக்கப்படுகிறது.

    • பயணிகளின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் தற்போதுள்ள வாகன நிறுத்தும் பகுதியில் கூடுதலாக ஒரு தளம் அமைக்கப்படவுள்ளது.
    • ​பயணிகள் அருகிலுள்ள மெட்ரோ ரெயில் நிலையங்களில் உள்ள வாகன நிறுத்தும் பகுதியை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    சென்னை:

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    பயணிகளின் வசதி மற்றும் சீரான வாகன நிறுத்த மேம்பாட்டை கருத்தில் கொண்டு, திருமங்கலம் மெட்ரோ ரெயில் நிலையத்தில் அதிகரித்து வரும் பயணிகளின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் தற்போதுள்ள வாகன நிறுத்தும் பகுதியில் கூடுதலாக ஒரு தளம் அமைக்கப்படவுள்ளது.

    இப்பணிகளை மேற்கொள்வதற்காக திருமங்கலம் மெட்ரோ ரெயில் நிலையத்தில் 50 சதவீத வாகனநிறுத்தம் பகுதி வருகிற 20-ந்தேதி முதல் இரண்டு மாதங்களுக்கு தற்காலிகமாக மூடப்படுகிறது.

    பயணிகள் அருகிலுள்ள மெட்ரோ ரெயில் நிலையங்களில் உள்ள வாகன நிறுத்தும் பகுதியை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், திருமங்கலம் மெட்ரோ ரெயில் நிலையத்தில் வாகன பயன்பாட்டாளர்களுக்கு தற்காலிகமாக ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறது என கூறப்பட்டுள்ளது.

    • பொங்கல் பண்டிகையையொட்டி ஏராளமான மக்கள் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர்.
    • 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.

    சென்னை:

    பொங்கல் பண்டிகையையொட்டி ஏராளமான மக்கள் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளதால், மெட்ரோ ரெயில்களில் பயணிப்போர் எண்ணிக்கை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனால், இன்றும் நாளையும் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைபடி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, காலை 5 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், இரவு 8 மணி முதல் 10 மணி வரையிலும் 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தொழில்நுட்ப கோளாறு காரணமாக மெட்ரோ ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
    • மெட்ரோ ரெயில் சேவை உடனடியாக சீரமைக்கப்பட்டால் தான் பயணிகள் நிம்மதியடைவார்கள்.

    சென்னை:

    சென்னை விமான நிலையம் முதல் அண்ணா சாலை வழியாக விம்கோ நகர் வரை மெட்ரோ ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இதில் பொதுமக்கள் தினந்தோறும் பயணம் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் இன்று தொழில்நுட்ப கோளாறு காரணமாக மெட்ரோ ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

    தற்போது குறிப்பிட்ட இந்த வழித்தடத்தில் ஒற்றை பாதை மெட்ரோ ரெயில் சேவை மட்டுமே இயக்கப்படுவதால் பயணிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

    மெட்ரோ ரெயில் சேவை உடனடியாக சீரமைக்கப்பட்டால் தான் பயணிகள் நிம்மதியடைவார்கள்.

    ஊழியர்கள் மெட்ரோ ரெயில் தொழில்நுட்ப கோளாறை சரி செய்தனர். சில மணி நேரங்கள் பிறகு மெட்ரோ ரெயில் சேவை சீரானதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.




    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.
    • இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.

    சென்னை:

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

    பொங்கல் விடுமுறையை முன்னிட்டு 2024 ஆம் ஆண்டு ஜனவரி 15 (திங்கட்கிழமை), 16 (செவ்வாய்க்கிழமை) மற்றும் 17 (புதன்கிழமை) ஆகிய தேதிகளில் ஞாயிற்றுக்கிழமையின் அட்டவணையின் படி மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.

    காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.

    காலை 5 மணி முதல் மதியம் 12 மணி வரை மற்றும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.

    மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.

    இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.

    மெட்ரோ ரெயில் பயணிகள் இச்சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    • ஆர்.கே.சாலை, ராயப்பேட்டை ஹைரோட்டில் இருந்து லஸ் சந்திப்பு வழியாக மந்தைவெளி சந்திப்பு நோக்கி வரும் வாகனங்கள் லஸ் சந்திப்பில் திருப்பி விடப்படும்.
    • செயின்ட் மேரிஸ் சாலை வலது புறம் திரும்பி சிருங்கேரி மட் சாலை மற்றும் வி.கே. ஐயர் சாலை வழியாக மந்தை வெளி பஸ் நிலையத்தை அடையலாம்.

    சென்னை:

    போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    சென்னை மெட்ரோ ரெயில் பணிக்காக ஆர்.கே.சாலை மெட்ரோ நிலையம், திருமயிலை மெட்ரோ நிலையம் மற்றும் மந்தைவெளி மெட்ரோ நிலைய பகுதி நாளை (7-ந்தேதி) ராயப்பேட்டை சந்திப்பில் இருந்து அஜந்தா சந்திப்பு வழியாக அர்.கே.சாலைக்கு (ராயப்பேட்டை முதல் சந்திப்பு வரை) வரும் வாகனங்கள் வி.பி.ராமன் சாலை வலது, நீதிபதி ஜம்புலிங்கம் தெரு வலது, ஆர்.கே.சாலை நோக்கி திருப்பி விடப்படும்.

    ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் இருந்து அரசு ஆஸ்பத்திரி நோக்கி வரும் வாகனங்கள் ராயப்பேட்டை பாலம் சர்வீஸ் சாலை இடது, நீலகிரிஸ் கடை, மியூசிக் அகாடமி சர்வீஸ் சாலை வலது, டி.டி.கே.சாலை, கவுடியா மட் சாலை வரை செல்லும்.

    ஆர்.கே.சாலை, ராயப்பேட்டை ஹைரோட்டில் இருந்து லஸ் சந்திப்பு வழியாக மந்தைவெளி சந்திப்பு நோக்கி வரும் வாகனங்கள் லஸ் சந்திப்பில் திருப்பி விடப்படும். வலது லஸ் சர்ச் சாலை, டி. சில்வா சாலை, பக்தவச்சலம் தெரு, வாரன் சாலை, செயின்ட் மேரி சாலை, இடது புறம் திரும்பி சி.பி.ராமசாமி சாலை வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

    ஆர்.கே.மட் சாலையில் இருந்து ராயப்பேட்டை ஹைரோடு நோக்கி வரும் வாகனங்கள், வெங்கடேச அக்ரஹாரம் தெருவில் (சாய்பாபா கோவில் தெரு)- இடதுபுறம், ரங்கா சாலை வலது, கிழக்கு அபிராமபுரம் 2-வது தெரு, லஸ் அவென்யூ, லஸ் சர்ச் சாலை வழியாக பி.எஸ்.சிவசாமி சாலை வலது, சுலிவன் கார்டன் தெரு இடது, ராயப்பேட்டை உயர் சாலை வழியாக செல்லலாம்.

    கிழக்கு மாட தெரு, வெங்கடேச அக்ரகாரம் தெரு (சாய்பாபா கோவில் தெரு), டாக்டர் ரங்கா சாலை முதல் கிழக்கு அபிராமபுரம் 1-வது தெரு, லஸ் அவென்யூ 1-வது தெரு லஸ் அவென்யூ, முண்டகண்ணியம்மன் கோவில் தெரு ஆகியவை அனைத்து வாகனங்களுக்கும் ஒரு வழிப்பாதையாக மாற்றம் செய்யப்படும்.

    வாரன் சாலையில் இருந்து வரும் வாகனங்கள் வலதுபுறம் திரும்பி செயின்ட் மேரிஸ் சாலை இடம் புறம் திரும்பி சி.பி.ராமசாமி சாலை, காளியப்பா சந்திப்பு நேராக ஆர்.ஏ.புரம் 3-வது குறுக்கு தெரு சென்று காமராஜர் சாலை, ஸ்ரீநிவாசா அவென்யூ, கிரீன்வேஸ் சந்திப்பை நோக்கி ஆர்.கே.மட் சாலை வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

    கிரீன்வேஸ் சந்திப்பில் இருந்து மந்தைவெளிக்கு வரும் வாகனங்கள் ஆர்.கே. மட் சாலை இடது, திருவேங்கடம் தெரு, திருவேங்கடம் தெரு விரிவாக்கம், வி.கே.ஐயர் சாலை, தேவநாதன் தெரு வலது, செயின்ட் மேரிஸ் சாலை இடது, ஆர்.கே. மட் சாலை வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

    மந்தைவெளி செல்லும் மாநகர பஸ்கள் வாரன் சாலை இடது புறம் செயின்ட் மேரிஸ் சாலை வலது புறம் திரும்பி சிருங்கேரி மட் சாலை மற்றும் வி.கே. ஐயர் சாலை வழியாக மந்தை வெளி பஸ் நிலையத்தை அடையலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×