search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Maxwell"

    • சற்று விட்டிருந்தால் அன்றை தினம் எனது காலையே இழந்திருப்பேன்.
    • வாழ்வில் இத்தனை நாட்கள் கழித்து மீண்டும் நடக்க பழகுவது எவ்வளவு மோசமாக விஷயம் என தற்போது தான் புரிந்துக்கொண்டேன்.

    மும்பை:

    ஆஸ்திரேலிய வீரர் க்ளென் மேக்ஸ்வெல் வெளியிட்டுள்ள உணர்ச்சிப்பூர்வமான தகவலால் ஐபிஎல் தொடரில் பங்கேற்பாரா என்பதிலேயே ரசிகர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. 2023ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் மினி ஏலம் சமீபத்தில் கொச்சியில் நடைபெற்று முடிந்தது. இதில் ரசிகர்கள் பலரும் எதிர்பார்க்காத தொகையில் வீரர்கள் ஏலம் கேட்கப்பட்டனர். இதில் ஆர்சிபி அணி பல சுவரஸ்யமான ஏலங்களை எடுத்த போதும், அதிரடி நாயகன் க்ளென் மேக்ஸ்வெல் பங்கேற்பாரா என்ற குழப்பத்திலேயே இருந்து வருகிறது.

    டி20 உலகக்கோப்பை தொடரில் மோசமான தோல்விகளுடன் ஆஸ்திரேலிய அணி வெளியேறியது. இதன் பிறகு தனது சொந்த ஊருக்கு சென்ற மேக்ஸ்வெல் நண்பர்களின் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற போது, விளையாட்டுத்தனமாக செயல்பட்டு கீழே விழுந்தார். அவரின் கால் மீது அவரின் நண்பர் ஒருவரும் விழுந்துவிட்டதால் காலில் பலத்த காயம் ஏற்பட்டு எலும்பு உடையும் அளவிற்கு சென்றது.

    இந்நிலையில் இதுகுறித்து மேக்ஸ்வெல் கூறியதாவது:-

    சற்று விட்டிருந்தால் அன்றை தினம் எனது காலையே இழந்திருப்பேன். எனினும் கண்டத்தில் இருந்து தப்பி, காயத்துடன் தப்பித்தேன். வாழ்வில் இத்தனை நாட்கள் கழித்து மீண்டும் நடக்க பழகுவது எவ்வளவு மோசமாக விஷயம் என தற்போது தான் புரிந்துக்கொண்டேன்.


    காலில் இருந்த வலிகள் குறைந்து ஓரளவிற்கு நடந்து வருகிறேன். இன்னும் சில நாட்களில் முழுவதுமாக குணமடைந்து நடக்க தொடங்குவேன். எனது மனைவி வினி மிகவும் ஆதரவாக இருக்கிறார். அவரின் உதவியால் நான் மீண்டு வருவேன் என மேக்ஸ்வெல் கூறியுள்ளார்.

    ஐபிஎல் தொடர் அடுத்தாண்டு மார்ச் இறுதி அல்லது ஏப்ரல் தொடக்கத்தில் தொடங்கும். மேக்ஸ்வெல்லின் காயம் சற்று தீவிரமாக இருப்பதால், அவர் பழையபடி முழு உடற்தகுதியை பெறுவதற்கு இன்னும் 3 மாதங்கள் ஆகும் என கணிக்கப்பட்டுள்ளது. எனவே ஐபிஎல்-ல் விளையாடுவாரா என்ற கவலையில் ரசிகர்கள் உள்ளனர்.

    ஆஸ்திரேலிய அணி ஆடிய போட்டியில் ‘ஸ்பாட் பிக்சிங்’ நடந்தது என்று வெளியான செய்தி எனக்கு அதிர்ச்சியும், வேதனையும் அளித்தது என்று ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல் கூறி உள்ளார். #Maxwell
    சிட்னி:

    கிரிக்கெட் போட்டியில் ‘ஸ்பாட் பிக்சிங்’ சூதாட்டம் நடந்துள்ளது. 2017-ம் ஆண்டில் ராஞ்சியில் நடந்த இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர்கள் 2 பேர் சூதாட்டத்தில் ஈடுபட்டனர் என்று அல்ஜஜீரா சேனல் சமீபத்தில் பரபரப்பான புலனாய்வு வீடியோ செய்தியை வெளியிட்டது. ஆனால் அந்த செய்தியில் யாருடைய பெயரும் குறிப்பிடப்படவில்லை. இதில் மேக்ஸ்வெல்லுக்கு தொடர்பு இருக்கக்கூடும் என்ற சந்தேகம் கிளம்பியது.

    இந்த சர்ச்சை குறித்து ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆட்டக்காரர் மேக்ஸ்வெல் கருத்து தெரிவிக்கையில், ‘ஆஸ்திரேலிய அணி ஆடிய போட்டியில் ‘ஸ்பாட் பிக்சிங்’ நடந்தது என்று வெளியான செய்தி எனக்கு அதிர்ச்சியும், வேதனையும் அளித்தது. அந்த போட்டியில் நான் முதல் சதம் அடித்தது மறக்க முடியாத நெகிழ்ச்சியான தருணமாகும். சதம் அடித்ததும் ஸ்டீவன் சுமித்துடன் நான் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டது இன்னும் என் மனதில் நிலைத்து நிற்கிறது.

    எனது முதல் டெஸ்ட் சதத்தின் நினைவை அழிக்கும் மோசமான முயற்சியாகவே இதனை நான் நினைக்கிறேன். அந்த சூதாட்ட குற்றச்சாட்டில் எந்தவித உண்மையும் கிடையாது. கிரிக்கெட் ஆட்டத்திற்கு எதிராக நான் ஒருபோதும் எதுவும் செய்ததில்லை’ என்றார்.  #Maxwell

    லண்டனில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா 214 ரன்னில் சுருண்டது. #ENGvAUS
    இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று லண்டனில் தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி ஆரோன் பிஞ்ச், டிராவிஸ் ஹெட் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

    ஆரோன் பிஞ்ச் 19 ரன்னிலும், டிராவிஸ் ஹெட் 5 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அதன்பின் வந்த ஷேன் மார்ஷ் 24 ரன்களும், மார்கஸ் ஸ்டாய்னிஸ் 22 ரன்னிலும் வெளியேறினார்கள்.



    அதிரடி பேட்ஸ்மேன் மேக்ஸ்வெல் 64 பந்தில் 62 ரன்களும், சுழற்பந்து வீச்சாளர் அஷ்டோன் அகர் 62 பந்தில் 40 ரன்களும் அடித்தனர். இருவரும் தாக்குப்பிடித்து விளையாடியதால் ஆஸ்திரேலியா 47 ஓவரில் 214 ரன்களில் ஆல்அவுட் ஆனது. இங்கிலாந்து அணி சார்பில் மொயீன் அலி 3 விக்கெட்டும், அடில் ரஷித் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்.

    பின்னர் 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து பேட்டிங் சேய்து வருகிறது.
    ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான ரிக்கி பாண்டியால் மேக்வெல்லை பழைய நிலைக்கு கொண்டு வர முடியும் என்று லாங்கர் தெரிவித்துள்ளார். #ENGvAUS
    ஆஸ்திரேலியா அணி ஐந்து ஒருநாள் மற்றும் ஒரேயொரு டி20 போட்டியில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது. பந்தை சேதப்படுத்திய விவகாரத்திற்குப் பிறகு ஆஸ்திரேலியாவின் முதல் தொடர் இதுவாகும். இந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அந்த அணி விரும்புகிறது. பயிற்சி ஆட்டத்தில் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. ஆனால் அதிரடி பேட்ஸ்மேன் ஆன மேக்ஸ்வெல் இரண்டில் ஒற்றையிலக்க ரன்னிலேயே வெளியேறினார்.

    மேக்ஸ்வெல் ஃபார்ம் இன்றி தவித்தாலும் ஆஸ்திரேலியா அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் அவர் மீது நம்பிக்கை வைத்துள்ளார். இந்த தொடரில் ரிக்கி பாண்டிங் வர்ணனையாளராக செயல்பட இருக்கிறார். தொடருக்கு முன் ஆஸ்திரேலிய அணியுடன் இணைந்து டிப்ஸ் வழங்க இருக்கிறார்.



    அப்போது மேக்ஸ்வெல்லை ரிக்கி பாண்டியால் பழைய பார்முக்கு கொண்டு வருவார் என்று லாங்கர் கூறியுள்ளார். இதுகுறித்து லாங்கர் கூறுகையில் ‘‘இங்கிலாந்து தொடருக்கான மேக்ஸ்வெல்லின் தயார்படுத்துதல் நிலை சிறப்பாக உள்ளது. அவர் விரைவில் மிகப்பெரிய ஸ்கோரை எட்டவில்லை எனில், நான் மிகவும் ஆச்சர்யம் அடைவேன். அவரைப் பற்றி பேச்சுக்கள் வந்த வண்ணம் உள்ளன. ஆனால், அவர் வலைப்பயிற்சியில் பேட்டிங் செய்து வருவது எனக்கு ஈர்ப்பை கொடுத்துள்ளது.

    மேக்ஸ்வெல் இரண்டு மாதங்களாக ரிக்கி பாண்டிங் உடன் இணைந்து ஐபிஎல் தொடரில் பணியாற்றியுள்ளார். ரிக்கி பாண்டிங் உடனான இந்த நிகழ்வு முக்கியமானது. ரிக்கி பாண்டிங் எங்கள் அணியுடன் ஞாயிற்றுக்கிழமை (இன்று) இணைவார். மேக்ஸ்வெல் அவரது பயிற்சியை சிறப்பாக செய்து, அவர் மீது நம்பிக்கை வைத்தால், அவர் சிறந்த வீரராக மாறுவது வெகுதூரத்தில் இல்லை. அவர் ஏராளமான திறமையை பெற்றுள்ளார்’’ என்றார்.
    இங்கிலாந்து தொடருக்கான 2-வது பயிற்சி ஆட்டத்திலும் ஆஸ்திரேலியா அதிரடி மன்னன் மேக்ஸ்வெல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. #ENGvAUS
    ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் வருகிற 13-ந்தேதி தொடங்குகிறது. வரும் 24-ந்தேதியுடன் இந்த தொடர் முடிவடைகிறது. அதன்பின் 27-ந்தேதி ஒரேயொரு டி20 கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது.

    இதற்கு முன் இரண்டு பயிற்சி ஆட்டத்தில் விளையாட முடிவு செய்தது. சசக்ஸ் அணிக்கெதிரான முதல் பயிற்சி ஆட்டத்தில் ஸ்டாய்னிஸின சதத்தால் ஆஸ்திரேலியா 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நேற்று நடைபெற்ற 2-வது பயிற்சி ஆட்டத்தில் மிடில்செக்ஸ் அணியை எதிர்கொண்டது.

    டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா டிராவிஸ் ஹெட்டின் (106) அபார சதத்தால் 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 283 ரன்கள் குவித்தது. ஷேன் மார்ஷ் 49 ரன்னும், ஆரோன் பிஞ்ச் 54 ரன்களும் சேர்த்தனர். அதிரடி மன்னன் மேக்ஸ்வெல் 6 பந்தில் 3 ரன்கள் எடுத்து ஏமாற்றம் அளித்தார். முதல் போட்டியிலும் சிறப்பாக விளையாடவில்லை. ஒரு ரன் மட்டுமே எடுத்தார்.



    ஸ்மித், வார்னர் இல்லாததால் மேக்ஸ்வெல் அணியின் முக்கிய வீரராக திகழ்வார் என்று எதிர்பார்த்த நிலையில் பயிற்சி ஆட்டத்தில் சிறப்பாக விளையாடாதது அந்த அணிக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

    பின்னர் 284 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மிடில்செக்ஸ் அணி களம் இறங்கியது. கேன் ரிச்சர்ட்சன், ஸ்டேன்லேக், நேசர் ஆகியோரின் அபார பந்து வீச்சல் மிடில்செக்ஸ் அணி 41 ஓவரில் 182 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இதனால் ஆஸ்திரேலியா 101 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
    ×