search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Male corpse"

    • போலீசார் மயங்கிய நிலையில் கிடந்த அடையாளம் தெரியாத நபரை‌ மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
    • இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் இருந்து குப்புச்சிபாளையம் செல்லும் சாலையில் உள்ள மேம்பாலம் அருகே அடையாளம் தெரியாத சுமார் 55 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் மயங்கிய நிலையில் கிடப்பதாக கடந்த 16-ந் தேதி அப்பகுதியை சேர்ந்தவர்கள்‌ பரமத்திவேலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் மயங்கிய நிலையில் கிடந்த அடையாளம் தெரியாத நபரை‌ மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரி ழந்தார். இதுகுறித்து பரமத்திவேலூர் கிராம நிர்வாக அலுவலர் ராஜா கொடுத்த புகாரின் அடிப்படையில் பரமத்தி வேலூர் போலீசார் அடை யாளம் தெரியாத நபர் யார், எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆற்றின் மணல் திட்டு நடு பகுதியில் இன்று காலை வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தார்.
    • நெல்லிக்குப்பம் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்றனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் அருகே வளவனூர் போலீஸ் சரகம் சொர்ணாவூர் மேல்பாதியில் தடுப்பணைக்கட்டு உள்ளது. இந்த தடுப்பணை தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. தற்போது வடகிழக்கு பருவ மழை காரணமாக ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆற்றின் இருகரை களை தொட்டும் தண்ணீர் சீறி பாய்ந்து செல்கிறது. இந்த ஆற்றின் மணல் திட்டு நடு பகுதியில் இன்று காலை வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து வள வனூர் போலீ சாருக்கு தகவல் தெரிவி க்கப்பட்டது.

    தகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் பால முருகன், நெல்லிக்குப்பம் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்றனர். வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். ஆற்றில் பிணமாக மிதந்த வாலிபர் யார்? அவர் எந்த ஊரை சேர்ந்தவர்? அவரை யாராவது அடித்து கொன்று உடலை வீசி விட்டு சென்றார்களா? அந்த பகுதியில் யாராவது காணாமல் போனார்களா? என்பது குறித்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சடையனேரி குளம் அருகே உள்ள கிணற்றில் நேற்று காலை ஆண் சடலம் ஒன்று தண்ணீரில் மிதந்துள்ளது.
    • திண்டுக்கல் மாவட்டம், பேகம்பூர் பள்ளப்பட்டியை சேர்ந்த சிவநேசன் மகன் தண்டபாணி என்பது தெரிய வந்தது.

    புளியங்குடி:

    புளியங்குடி சங்கரன்கோவில் சாலை அருகே உள்ள சடையனேரி குளம் அருகே உள்ள கிணற்றில் நேற்று காலை ஆண் சடலம் ஒன்று தண்ணீரில் மிதந்துள்ளது. இதை அந்தப் பகுதியை சேர்ந்தவர்கள் பார்த்து புளியங்குடி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் பரமசிவன், வாசுதேவநல்லூர் தீயணைப்பு நிலைய அலுவலர் ஷேக்அப்துல்லா தலைமையில் தீயணைப்பு வீரர்கள், சம்பவ இடத்திற்கு வந்து இறந்தவர் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் கிணற்றில் விழுந்து இறந்தவர் திண்டுக்கல் மாவட்டம், பேகம்பூர் பள்ளப்பட்டியை சேர்ந்த சிவநேசன் மகன் தண்டபாணி என்பது தெரிய வந்தது. அவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அவர் எதற்காக புளியங்குடி வந்தார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சிலரை அழைத்து சடலத்தை பார்த்து அடையாளம் தெரிகிறதா? என விசாரித்துள்ளார்.
    • நிரவி போலீஸ் நிலையத்தை தொடர்புகொள்ளும்படி போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    புதுச்சேரி:

    காரைக்கால் கருக்களாச்சேரி மீனவ கிராம பஞ்சாயத்து தலைவர் மனோகரன்(வயது50). இவர் நேற்று காலை வழக்கம் போல், கடற்கரை ஓரம் நடைபயிற்சி மேற்கொண்டார். சவுக்கு தோப்பு அருகே, அடை யாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று கரை ஒதுங்கி கிடந்தது. தொடர்ந்து, கிராம முக்கியஸ்தர்கள் சிலரை அழைத்து சடலத்தை பார்த்து அடையாளம் தெரிகிறதா? என விசாரித்துள்ளார்.

    அடையாளம் தெரியாத காரணத்தால், நிரவி காவல்நிலையத்தில் மனோகரன் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, 45 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இவரை பற்றி அடையாளம் யாருக்கேனும் தெரிந்தால், நிரவி போலீஸ் நிலையத்தை தொடர்புகொள்ளும்படி போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

    • நிலம் அளக்க முயன்ற போது அந்த பகுதியில் அழுகிய நிலையில் ஆண் பிணம் காணப்பட்டது.
    • போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ஏற்காடு:

    ஏற்காடு காவல்நிலைய குடியிருப்பு கட்டுவதற்காக இடம் தேர்வு செய்ய ஏற்காடு இன்ஸ்பெக்டர் செந்தில் ராஜ்மோகன், சப் இன்ஸ்பெக்டர் ஆனந்த குமார், கிராம நிர்வாக அலுவலர் மோகன்ராஜ், நில அலுவலர் பாஸ்கர் மற்றும் அதிகாரிகள் ஏற்காடு மலை உச்சிக்கு சென்றனர். நிலம் அளக்க முயன்ற போது அந்த பகுதியில் அழுகிய நிலையில் ஆண் பிணம் காணப்பட்டது.

    உடனே போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மோகன் குமார மங்கலம் மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் அழைத்து வரப்பட்டு அவர்களும் விசாரித்தனர்.இறந்து கிடந்தவர் யார்? எந்த ஊர் ?என தெரியவில்லை இது குறித்து அனைத்து காவல் நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • புதுக்கோட்டை அருகே கட்டியாவயல் பகுதியில் ரெயில்வே தண்டவாளத்தில் வாலிபர் ஒருவர் நேற்று இரவு பிணமாக கிடந்தார்.
    • பிணமாக கிடந்தவர் கொசளக்குடியை சேர்ந்த காசிராஜன் (வயது 31) என தெரியவந்தது.

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை அருகே கட்டியாவயல் பகுதியில் ரெயில்வே தண்டவாளத்தில் வாலிபர் ஒருவர் நேற்று இரவு பிணமாக கிடந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் திருக்கோகர்ணம் மற்றும் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    இதில் பிணமாக கிடந்தவர் கொசளக்குடியை சேர்ந்த காசிராஜன் (வயது 31) என தெரியவந்தது. அவர் ரெயிலில் அடிபட்டு இறந்தாரா? அல்லது தற்கொலை செய்துக்கொண்டாரா? என ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தகவலறிந்து அங்கு சென்ற விருத்தாசலம் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
    • கொத்தானராக பணிபுரிந்து வருவதாக தெரியவந்தது.

    கடலூர்:

    விருத்தாசலம் மணிமுக்தா ஆற்று பால த்தின் கீழ் அடை யாளம் தெரியாத 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலறிந்து அங்கு சென்ற விருத்தாசலம் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பாலத்தின் மைய பகுதியி லுள்ள தூண் அருகே கிடைத்த உடலை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் இறந்தவர் பெயர் சக்திவேல் என்பதும் அவர் வேப்பூர் பகுதியை சேர்ந்தவர் என்பதும், கொத்தானராக பணிபுரிந்து வருவதாக தெரியவந்தது. மேலும் சக்திவேல் எப்படி இறந்தார்? என்பது குறித்து விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மதுரை அருகே குட்ைடயில் 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார்.
    • அவனியாபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அவனியாபுரம்

    அவனியாபுரத்தில் இருந்து திருப்பரங்குன்றம் செல்லும் சாலையில் கல்குளம் முத்துப்பட்டி விலக்கு அருகே காலியிடத்தில் மழை நீர் நிரம்பிய குட்டையில் அடையாளம் தெரியாத 60 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடந்தது.

    இதுகுறித்து கல்குளம் கிராம நிர்வாக அலுவலர் சுப்பையா அளித்த புகாரின் பேரில் அவனியாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எப்படி இறந்தார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 60 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் உடல் சிதறிய நிலையில் கிடந்தது.
    • அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    சேலம்:

    சேலம் கொண்டலாம்–பட்டி அடுத்த நாட்டா–மங்கலம் பகுதியில் தண்ட–வாளத்தில் இன்று காலை 60 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் உடல் சிதறிய நிலையில் கிடந்தது. இதனை பார்த்த அந்த வழியாக சென்ற பொது மக்கள் அதிர்ச்சி அடைந்து சேலம் ெரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்உ டனே அங்கு விரைந்து சென்ற போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர் . பிணமாக கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகி–றார்கள். அவர் ரெயில் மோதி இறந்தாரா அல்லது யாராவது கொன்று தண்டவாளத்தில் வீசி சென்றார்களா என்பது குறித்தும் போலீசார் விசா–ரணை நடத்தி வருகிறார்கள்.

    • போலீசில் புகார்
    • கொலையா? விசாரணை

    வெம்பாக்கம்:

    திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் அடுத்த ஏழாச்சேரி கிராமத்தில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் பாதி எரிந்த நிலையில் கிடந்தது.

    தகவல் தெரிந்த ஏழாச்சேரி கிராம நிர்வாக அலுவலர் கோகுல ராமன் தூசி போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் தூசி சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் பாபு வழக்கு பதிவு செய்து இறந்தவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்றும் பாதி உடல் எரிந்த நிலையில் உள்ளதால் கொலையா தற்கொலையா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • தகவலின்பேரில் சென்ற ரயில்வே போலீசார் இறந்த முதியவரின் உடலை கைப்பற்றி கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • அவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து கரூர் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கரூர்,

    வீரராக்கியம் நடைமேடையில் 75 வயது மதிக்கத்தக்க முதியவர் பிணம் கிடந்ததாக கரூர் ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் சென்ற ரயில்வே போலீசார் இறந்த முதியவரின் உடலை கைப்பற்றி கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து கரூர் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த முதியவர் காவி நிற வேட்டி, வெள்ளை கோடு போட்ட சிமெண்ட் கலர் அரைக்கை சட்டை, அணிந்து இருந்தார் . இதுகுறித்து அவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து கரூர் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • பவானி புது பஸ்நிலையம் எதிரே தனியார் காம்ப்ளக்ஸ் பின்புறம் சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடப்பதாக பவானி கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமாருக்கு தகவல் கிடைத்தது.
    • சப்-இன்ஸ்பெக்டர் அசோகன், சித்தோடு இன்ஸ்பெக்டர் முருகையா ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பவானி:

    பவானி புது பஸ்நிலையம் எதிரே தனியார் காம்ப்ளக்ஸ் பின்புறம் சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடப்பதாக பவானி கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமாருக்கு தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில் உடன் அலுவலரை அழைத்து கொண்டு சம்பவ இடம் சென்று பார்த்த போது புளு, பச்சை, கலரில் வெள்ளை கட்டம் போட்ட லுங்கியுடன் ஆண் பிணம் இருந்தது.

    மேலும் பிணம் அழுகிய நிலையில் துர்நாற்றம் வீசியது. அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என தெரியவில்லை. இது குறித்து பவானி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அசோகன், சித்தோடு இன்ஸ்பெக்டர் முருகையா ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×