என் மலர்
உள்ளூர் செய்திகள்

காரைக்கால் கருக்களாச்சேரி மீனவ கிராமத்தில் கரை ஒதுங்கிய அடையாளம் தெரியாத ஆண் உடல்
- சிலரை அழைத்து சடலத்தை பார்த்து அடையாளம் தெரிகிறதா? என விசாரித்துள்ளார்.
- நிரவி போலீஸ் நிலையத்தை தொடர்புகொள்ளும்படி போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
புதுச்சேரி:
காரைக்கால் கருக்களாச்சேரி மீனவ கிராம பஞ்சாயத்து தலைவர் மனோகரன்(வயது50). இவர் நேற்று காலை வழக்கம் போல், கடற்கரை ஓரம் நடைபயிற்சி மேற்கொண்டார். சவுக்கு தோப்பு அருகே, அடை யாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று கரை ஒதுங்கி கிடந்தது. தொடர்ந்து, கிராம முக்கியஸ்தர்கள் சிலரை அழைத்து சடலத்தை பார்த்து அடையாளம் தெரிகிறதா? என விசாரித்துள்ளார்.
அடையாளம் தெரியாத காரணத்தால், நிரவி காவல்நிலையத்தில் மனோகரன் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, 45 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இவரை பற்றி அடையாளம் யாருக்கேனும் தெரிந்தால், நிரவி போலீஸ் நிலையத்தை தொடர்புகொள்ளும்படி போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Next Story






