search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "lorry accident"

    • குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே விபத்துக்கள் அதிகரித்து வருகிறது. உயிரிழப்பு சம்பவங்களும் அதிக அளவு நடந்து வருகிறது.
    • விபத்துக்களை தடுக்க போலீசார் சாலை விதிகளை கடைபிடிக்காதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் பொது மக்களும் வலியுறுத்தி உள்ளனர்.

    நாகர்கோவில்:

    நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே கள்ளி குளம் பகுதியைச் சேர்ந்தவர் பால்துரை (வயது 65), தொழிலாளி.

    இவர் இன்று காலை வீட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் நாகர்கோவிலுக்கு வேலைக்கு புறப்பட்டார். காலை 7.30 மணியளவில் அவர் ஆரல்வாய்மொழி அருகே உள்ள வெள்ளமடம் பகுதியில் வந்தார்.

    அங்குள்ள பள்ளிக்கூடம் அருகே பால்துரை வந்த போது, அந்த வழியாக ஒரு லாரி வந்தது. தாறுமாறாக ஓடிய அந்த லாரி எதிர்பாராதவிதமாக பால் துரையின் ஸ்கூட்டர் மீது மோதியது.

    இந்த விபத்தில் ஸ்கூட்டரில் இருந்து பால் துரை தூக்கி வீசப்பட்டார். சாலையில் விழுந்த அவர் மீது லாரியின் முன் சக்கரம் ஏறியது. இதனால் பால் துரை உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    விபத்தை கண்ட அந்த பகுதி பொதுமக்கள் சம்பவ இடத்தில் திரண்டனர். இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். பால் துரையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பால்துரை பலியானது குறித்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதை கேட்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தனர்.

    ஆரல்வாய்மொழி போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து லாரியை ஓட்டி வந்த ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த ஆனந்த் என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே விபத்துக்கள் அதிகரித்து வருகிறது. உயிரிழப்பு சம்பவங்களும் அதிக அளவு நடந்து வருகிறது. இதை தடுக்க போலீசார் சாலை விதிகளை கடைபிடிக்காதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் பொது மக்களும் வலியுறுத்தி உள்ளனர்.

    • பின்னால் வேகமாக வந்த கண்டெய்னர் லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
    • லாரியின் சக்கரத்தில் சிக்கிய சிலுவை மேரி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார்.

    திருவொற்றியூர்:

    எண்ணூர், திலகர் நகர், 2-வது தெருவில் வசித்து வருபவர் சதீஷ். துபாயில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சிலுவை மேரி (வயது 26). எம்.பி.ஏ. பட்டதாரியான இவர் அம்பத்தூரில் உள்ள தனியார் வங்கியில் அதிகாரியாக வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு கடந்த மாதம் 6-ந்தேதி திருமணம் நடைபெற்றது. புதுப்பெண் சிலுவை மேரியை வழக்கமாக அவரது அண்ணன் அழைத்து செல்வதும், பணிமுடிந்ததும் மாலையில் வீட்டுக்கு அழைத்து வருவதும் வழக்கம். கடந்த இரண்டு நாட்களாக சிலுவை மேரி தனியாக மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று வந்தார்.

    இந்த நிலையில் நேற்று மாலை பணி முடிந்து அவர் மோட்டார் சைக்கிளில் மணலி விரைவு சாலையில் பக்கிங்காம் கால்வாய் அருகே வந்து கொண்டு இருந்தார்.

    அப்போது பின்னால் வேகமாக வந்த கண்டெய்னர் லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் லாரியின் சக்கரத்தில் சிக்கிய சிலுவை மேரி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார். விபத்து நடந்ததும் லாரி டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.

    இதுகுறித்து செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான ஒரு மாதத்தில் புதுப்பெண் விபத்தில் பலியான சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    காசிமேடு, தாண்டவராயன் தெருவை சேர்ந்தவர் ஜெய்கணேஷ். இவரது மனைவி வைஜெயந்தி (31). இவர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 குழந்தைகள் உள்ளனர். வைஜெயந்திக்கும், அவரது கணவர் மற்றும் குடும்பத்தினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதில் மனமுடைந்த வைஜெயந்தி வீட்டில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காசிமேடு போலீசார் விசாரித்து வருகிறார்கள். ஆர்.டி.ஓ விசாரணையும் நடந்து வருகிறது.

    • தலைமை தபால் அலுவலகம் அருகே சென்று கொண்டு இருந்தபோது பின்னால் வந்த லாரி அவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
    • விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுனரான தென்காசி மாவட்டம் குறிஞ்சிகுளம் வடக்கு தெருவை சேர்ந்த மாரிமுத்தை என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி சுபா நகரை சேர்ந்தவர் முத்துராஜ் (வயது 53). இவர் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.

    இன்று காலையில் கிழக்கு காவல் நிலையத்திற்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றார். அவர் தலைமை தபால் அலுவலகம் அருகே சென்று கொண்டு இருந்தபோது பின்னால் வந்த லாரி அவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் முத்துராஜ் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    விபத்து குறித்து தகவல் அறிந்ததும் கோவில்பட்டி டி.எஸ்.பி. வெங்கடேஷ், இன்ஸ்பெக்டர்கள் சுஜித் ஆனந்த், கிங்ஸ்லி தேவானந்த், மங்கையர்கரசி மற்றும் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுனரான தென்காசி மாவட்டம் குறிஞ்சிகுளம் வடக்கு தெருவை சேர்ந்த மாரிமுத்தை (33) என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பத்தரே கிராமம் அருகே சின்னார் சீரடி நெடுஞ்சாலையில் பஸ் சென்ற போது லாரி மீது மோதியது. இதில் பஸ் கடுமையாக சேதமடைந்தது.
    • விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார்.

    நாசிக்:

    மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டம் அம்பர்நாத்தில் இருந்து 50 பேருடன் சொகுசு பஸ் ஒன்று சீரடி நோக்கி சென்றது.

    நாசிக்கில் உள்ள பத்தரே கிராமம் அருகே சின்னார் சீரடி நெடுஞ்சாலையில் பஸ் சென்ற போது லாரி மீது மோதியது. இதில் பஸ் கடுமையாக சேதமடைந்தது.

    இந்த விபத்தில் 7 பெண்கள், 2 சிறுவர்கள் உள்பட 10 பேர் பலியானார்கள். பலர் காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    சிலருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார்.

    • மும்பை-புனே நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது கண்டெய்னர் லாரி தனியார் பஸ் மீது பின்பக்கமாக மோதியது.
    • மோதிய வேகத்தில் பஸ் டிரைவர் முன்பக்கமாக கீழே விழுந்து கண்டெய்னர் லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலம் சிந்துதுர்க் மாவட்டத்தில் இருந்து ஷாபூருக்கு தனியார் பஸ்சில் திருமண விழாவுக்காக 35 பேர் சென்று கொண்டிருந்தனர். மும்பை-புனே நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது கண்டெய்னர் லாரி தனியார் பஸ் மீது பின்பக்கமாக மோதியது.

    மோதிய வேகத்தில் பஸ் டிரைவர் முன்பக்கமாக கீழே விழுந்து கண்டெய்னர் லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் பஸ்சில் பயணித்த 10 பேர் படுகாயமடைந்தனர். அவர்களுக்கு அருகில் இருந்த மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • ஏரல் பஜாரில் லாரி வந்தபோது லாரியில் இருந்த ஒரு உரமூட்டை கீழே விழுந்தது.
    • உரமூட்டை கட்டப்பட்டிருந்த கயிறு சாலையில் விழுகிறது.

    செய்துங்கநல்லூர்:

    தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆழ்வார்திருநகரியை சேர்ந்தவர் சங்கரசுப்பு மகன் முத்து. இவர் கூலி வேலை செய்து வருகிறார்.

    இவர் நேற்று வேலைக்கு செல்வதற்காக ஏரலுக்கு சென்றுள்ளார். அப்போது வெளியூரில் இருந்து ஏரலுக்கு உரம் ஏற்றி ஒரு லாரி வந்துள்ளது. அந்த லாரியை கருப்பசாமி என்பவர் ஓட்டி வந்துள்ளார்.

    ஏரல் பஜாரில் லாரி வந்தபோது லாரியில் இருந்த ஒரு உரமூட்டை கீழே விழுந்தது. இதனால் உரமூட்டை கட்டப்பட்டிருந்த கயிறு சாலையில் விழுகிறது. அந்த சமயத்தில் முத்து அந்த வழியாக சென்றுள்ளார். அப்போது அந்த கயிறு அவரின் கழுத்தில் விழுந்துள்ளது.

    இதில் முத்து தூக்கி வீசப்பட்டார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஏரல் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் இருந்த ஒரு சி.சி.டி.வி. கேமிராவில் பதிவாகியுள்ளது. இந்த பதபதைக்க வைக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • எதிரே வேகமாக வந்த லாரி கண்ணிமைக்கும் நேரத்தில் டிராக்டர் மீது பயங்கரமாக மோதியது.
    • மோதிய வேகத்தில் டிராக்டரை லாரி 50 மீட்டர் தூரத்திற்கு இழுத்துச் சென்றது.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், சூர்யா பேட்டை அடுத்த முனுகளா பகுதியே சேர்ந்த 38 பேர் அருகில் உள்ள அய்யப்பன் கோவிலில் நடைபெற்ற படி பூஜையில் கலந்து கொள்வதற்காக நேற்று மாலை டிராக்டரில் சென்றனர்.

    நள்ளிரவு பூஜை முடிந்து சாப்பிட்டுவிட்டு மீண்டும் அதிகாலை 3 மணிக்கு டிராக்டரில் சொந்த ஊருக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தனர்.

    நெடுஞ்சாலை வழியாக சென்றால் சுமார் 2 கி.மீ தூரம் சுற்றிக்கொண்டு வரவேண்டும்.

    எனவே நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள சர்வீஸ் சாலையில் டிராக்டரை டிரைவர் ஓட்டிக்கொண்டு வந்தார்.

    அப்போது எதிரே வேகமாக வந்த லாரி கண்ணிமைக்கும் நேரத்தில் டிராக்டர் மீது பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் டிராக்டரை லாரி 50 மீட்டர் தூரத்திற்கு இழுத்துச் சென்றது

    டிராக்டரில் சென்றவர்கள் நாலாபுறமும் சிதறி கீழே விழுந்து படுகாயம் அடைந்து அபய குரல் எழுப்பினர்.

    இதில் இடிபாடுகளில் சிக்கி 5 பேர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடி துடித்து பரிதாபமாக இறந்தனர். அவர்கள் விவரம் வருமாறு, கோட்டைய்யா (வயது 45), ஜோதி (38), பிரமிளா (35), சிந்த காய் பிரமிளா (32), லோகேஷ் (10). மேலும் 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

    விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சூர்யா பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும் பலியானவர்களின் உடல்களை மீட்டு பிரத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள தனியார் கல்குவாரியில் தினமும் 100-க்கும் மேற்பட்ட கனரக லாரிகள் கேரள மாநிலத்திற்கு கற்களை கொண்டு செல்கிறது
    • கல்குவாரியில் இருந்து கற்களை ஏற்றிக்கொண்டு ஒரு கனரக லாரி விளிஞ்சம் துறைமுகத்திற்கு சென்றது

    செய்துங்கநல்லூர்:

    தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே தெற்கு காரசேரியில் உள்ள தனியார் கல்குவாரியில் தினமும் 100-க்கும் மேற்பட்ட கனரக லாரிகள் இருந்து கேரள மாநிலத்தில் விளிஞ்சம் துறைமுகத்திற்கு கற்களை கொண்டு செல்கிறது.

    இந்நிலையில் இன்று காலை 4.30 மணிக்கு தெற்கு காரசேரியில் கல்குவாரியில் இருந்து கற்களை ஏற்றிக்கொண்டு ஒரு கனரக லாரி விளிஞ்சம் துறைமுகத்திற்கு சென்றது. இந்த லாரியை துளுக்கர்பட்டியைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவர் ஓட்டியுள்ளார். இந்த லாரி சேரகுளம் அருகே உள்ள மகிழ்ச்சிபுரம் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக சாலையின் ஓரமாக இருந்த வாழைத்தோட்டத்தில் கவிழ்ந்தது.

    இதில் ஓட்டுநர் காயமின்றி உயிர் தப்பினார். இதுகுறித்து சேரகுளம் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • திருச்சி திருவாசி அருகே உள்ள மான்பிடி மங்கலம் வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகன் பிரசன்னா (வயது 27)
    • இவர் தனது தங்கை மோனிகாவுடன் மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    திருச்சி

    திருச்சி திருவாசி அருகே உள்ள மான்பிடி மங்கலம் வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகன் பிரசன்னா (வயது 27) தங்கை மோனிகா (25).இரண்டு பேரும் வேலை விஷயமாக இரு சக்கர வாகனத்தில் வீட்டிலிருந்து புறப்பட்டு திருச்சி ஓயாமரி சுடுகாட்டு சாலையில் வந்து கொண்டு இருந்தனர்.

    அப்போது அவர்களின் பின்புறம் வந்த டிப்பர் லாரி எதிர்பாரத விதமாக இரு சக்கர வாகனத்தின் பின் பக்கம் மீது மோதியது.

    இதில் பிரசன்னா தலையில் பலத்த காயமடைந்து திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இந்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி பிரசன்னா பரிதாபமாக இறந்தார். மோனிகா லேசான காயத்துடன் உயிர்த்தபினார்.

    இந்த விபத்து சம்பவம் குறித்து திருச்சி வடக்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய டிப்பர் லாரி, டிரைவரை தேடி வருகின்றனர்.

    • மங்களாபுரம் மஸ்தான் பள்ளிவாசல் வளைவில் கார் வந்தபோது எதிர்பாராதவிதமாக டேங்கர் லாரியும், காரும் நேருக்கு நேர் மோதியது. இதில் காரில் வந்த 4 பேரும் படுகாயம் அடைந்தனர்.
    • தகவல் அறிந்த கடையநல்லூர் போலீசார் அங்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கடையநல்லூர்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதன்புத்தூர் யாதவர் வடக்கு தெருவை சேர்ந்தவர் சந்தான நல்ல ஜெகன் சிவா (வயது 33).

    இவரது மனைவி பிரியா(27). இவர்களது மகன்கள் ராகவன் என்ற முகிலன்(4), வெற்றிவேல் நவீன் பாரதி(4). இவர்கள் 4 பேரும் சொக்கநாதன்புத்தூரில் இருந்து தென்காசி நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது தென்காசியில் இருந்து ராஜபாளையம் நோக்கி பால் ஏற்றும் டேங்கர் லாரி எதிரே வந்து கொண்டிருந்தது.

    கடையநல்லூரை அடுத்த மங்களாபுரம் மஸ்தான் பள்ளிவாசல் வளைவில் கார் வந்தபோது எதிர்பாராதவிதமாக டேங்கர் லாரியும், காரும் நேருக்கு நேர் மோதியது. இதில் காரில் வந்த 4 பேரும் படுகாயம் அடைந்தனர்.

    தகவல் அறிந்த கடையநல்லூர் போலீசார் அங்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பிரியா பரிதாபமாக உயிரிழந்தார்.

    படுகாயம் அடைந்த சந்தான நல்ல ஜெகன் சிவா மற்றும் 2 குழந்தைகளும் மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து டேங்கர் லாரியை ஓட்டி வந்த வேம்பநல்லூர் அண்ணா காலனி 1-வது தெருவை சேர்ந்த குமார் (39) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கொருக்குப்பேட்டை, திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் சம்பத் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.
    • நேற்று இரவு சம்பத் வேலை முடிந்து எண்ணூர் நெடுஞ்சாலை வழியாக மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    ராயபுரம்:

    புளியந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் முகுந்தன்(50). மாற்றுத்திறனாளி.

    இவர் தண்டையார்பேட்டை ஐ.ஒ.சி. டிரம் பிளாண்ட் சாலையில் உள்ள ஸ்டீல் பட்டறையில் வேலைக்காக மூன்று சக்கர வண்டியில் வந்தார். அப்போது அங்குள்ள பள்ளத்தில் நிலை தடுமாறி விழுந்தார்.

    அந்த நேரத்தில் பின்னால் வந்த தண்ணீர் லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே முகுந்தன் பலியானார். இது குறித்து டேங்கர் லாரி டிரைவரான அன்னை சத்தியா நகரை சேர்ந்த கணேசனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

    கொருக்குப்பேட்டை, திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் சம்பத் (வயது55). காவலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு அவர் வேலை முடிந்து எண்ணூர் நெடுஞ்சாலை வழியாக மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது ஐ.ஒ.சியில் இருந்து ஆயில் ஏற்றி வந்த டேங்கர் லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே சம்பத் பலியானார்.

    இதுகுறித்து வண்ணாரப்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து டேங்கர் லாரி டிரைவர் எழிலை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தறிகெட்டு ஓடி சாலையோரமாக நடந்து சென்று கொண்டிருந்த பெண் ஒருவர் மீது மோதியது.
    • தூக்கி வீசப்பட்ட பெண் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    போரூர்:

    வடபழனியில் இருந்து கோயம்பேடு நோக்கி நள்ளிரவு 2 மணி அளவில் கான்கீரிட் கலவை லாரி ஒன்று சென்றது.

    100அடி சாலையில் தனியார் ஆஸ்பத்திரி அருகே வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தறிகெட்டு ஓடி சாலையோரமாக நடந்து சென்று கொண்டிருந்த பெண் ஒருவர் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட பெண் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    தகவல் அறிந்து பாண்டி பஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் கமலாதேவி மற்றும் போலீசார் விரைந்து வந்து பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்தில் பலியான பெண் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவரான மேற்கு முகப்பேர் பகுதியை சேர்ந்த ராமமூர்த்தி (வயது 52) என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

    பொன்னேரி அடுத்த ஏலியம்பேடு பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் ரகுபதி (26) பி.இ. பட்டதாரி. இவர் பொன்னேரி அண்ணாசிலையில் இருந்து தேரடி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    ஆஞ்சநேயர் கோவில் அருகில் நின்று கொண்டிருந்த காரில் இருந்து திடீரென கதவு திறந்தபோது நிலை தடுமாறிய ரகுபதி மோட்டார் சைக்கிளோடு கீழே விழுந்தார்.

    அந்த நேரத்தில் எதிரே வந்த லாரி மோதியதில் ரகுபதி சம்பவ இடத்திலேயே பலியானார். அவருக்கு வருகிற ஜனவரி மாதம் திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

    ×