search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Lift"

    • திடீரென லிப்ட் கதவு மூடப்பட்டு மேலே சென்றது. அங்கிருந்து பலத்த சத்தம் எழுப்பியபடி வேகமாக கீழே விழுந்தது.
    • அங்கிருந்த தொழிலாளர்கள் லிப்டை உடைத்து 2 பேரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், என்.டி.ஆர். மாவட்டம், கொண்டப்பள்ளியில் உள்ள நர்லா தட்டாராவில் அனல் மின் நிலையம் உள்ளது.

    இங்கு 5-ம் கட்ட என்டிபிஎஸ் திட்டத்தின் ஒரு பகுதியாக 800 மெகாவாட் திறன் கொண்ட புதிய அனுமின் நிலைய கட்டுமானப் பணி நடந்து வருகிறது. ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் சில நாட்களாக வேலை செய்து வருகின்றனர்.

    70 மீட்டர் உயரத்தில் வேலை செய்ய தொழிலாளர்கள் 310 டிகிரி கொண்ட லிஃப்டில் ஏறினர். ஜிதேந்திரசிங், சோட்டூசிங் உள்ளிட்ட 20 தொழிலாளர்கள் லிப்டில் மேலே சென்று கட்டுமான பணியில் ஈடுபட்டனர்.

    பின்னர் மீண்டும் லிப்டில் கீழே வந்தனர். லிப்ட் கதவு திறக்காததால், தொழிலாளர்கள் உள்ளேயே சிக்கினர். சாவியை போட்டு லிப்டை திறந்தனர்.

    அப்போது 20 தொழிலாளர்களில் 18 பேர் வெளியே வந்தனர். மேலும் 2 பேர் வர முற்பட்ட போது, திடீரென லிப்ட் கதவு மூடப்பட்டு மேலே சென்றது. அங்கிருந்து பலத்த சத்தம் எழுப்பியபடி வேகமாக கீழே விழுந்தது. இந்த விபத்தில் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ஜித்தேந்திரா சிங், சோட்டு சிங் ஆகியோர் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்தனர்.

    அங்கிருந்த தொழிலாளர்கள் லிப்டை உடைத்து 2 பேரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் வரும்வழியிலேயே அவர்கள் 2 பேரும் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • பெண் தனியாக நிற்பதை அறிந்த வாலிபர் அந்த பெண்ணுக்கு லிப்டுக்குள்ளேயே பாலியல் தொல்லை கொடுக்க முயற்சி செய்துள்ளார்.
    • 31 வினாடிகள் ஓடக் கூடிய இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.

    பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் பொது இடங்களில் தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது.

    அப்படி தன்னிடம் அத்துமீறிய வாலிபரை பெண் ஒருவர் தாக்கி நிலைகுலைய வைத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    லிப்டில் பெண் ஒருவர் தனியாக பயணம் செய்கிறார். அதே லிப்டுக்குள் வாலிபர் ஒருவரும் நின்று கொண்டிருக்கிறார். பெண் தனியாக நிற்பதை அறிந்த வாலிபர் அந்த பெண்ணுக்கு லிப்டுக்குள்ளேயே பாலியல் தொல்லை கொடுக்க முயற்சி செய்துள்ளார்.

    தனது அருகில் வாலிபர் வருவதால் அந்த பெண் சற்று தள்ளி நிற்கிறார். ஆனால் அந்த வாலிபரோ பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுக்க மீண்டும் நெருங்கினார்.

    இதனால் அந்த பெண் திடீரென்று வாலிபரின் கன்னத்தில் பளார் என்று அறைவிட்டார். அத்துடன் நிற்காமல் அந்த நபரின் மர்ம உறுப்பில் எட்டி உதைத்தார். இதில் அந்த வாலிபர் அப்படியே நிலை குலைந்தார். இந்த சம்பவம் லிப்டில் இருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவானது.

    31 வினாடிகள் ஓடக் கூடிய இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. இந்த வீடியோவை 20 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பார்த்துள்ளனர். மேலும் அந்த பெண்ணின் தைரியத்தையும் பாராட்டி உள்ளனர்.

    கரூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று காலை தொழிலாளர் நலத்துறை சார்பில் ஆய்வுக்கூட்டம் மற்றும் கட்டுமான தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

    விழாவில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர். முதலில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டம் முடிவடைந்ததும் அமைச்சர் செந்தில் பாலாஜி கோவை புறப்பட்டு சென்றார்.

    இதையடுத்து நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் கணேசன் கட்டுமான தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். விழா நிறைவடைந்ததும் அமைச்சர் அங்கிருந்து புறப்பட்டார். பயனாளிகள் உள்ளிட்டோர் விழா நடைபெற்ற இரண்டாவது மாடியில் இருந்து லிப்ட் மூலம் கீழே இறங்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்தனர்.

    முக்கிய பிரமுகர்கள் பயன்படுத்தும் இந்த லிப்டில் 6 பெண்கள் உள்பட 10 பேர் ஏறினர். இரண்டாவது மாடியில் இருந்து தரை தளத்திற்கு வந்த லிப்ட் வேகமாக நின்றது. இதையடுத்து கதவை திறக்க முற்பட்டபோது அதனை திறக்கமுடியவில்லை.

    லிப்டுக்குள் இருந்தவர்கள் பல்வேறு முயற்சிகளை செய்தபோதும் லிப்ட் பழுதாகி செயலிழந்து போய் இருந்தது. நிமிடங்கள் செல்லச் செல்ல உள்ளே சிக்கியிருந்தவர்கள் அபய குரல் எழுப்பினர். தங்களை காப்பாற்றுமாறு கூச்சல் போட்டனர். உடனடியாக விழாவுக்கு வந்திருந்தவர்கள் மற்றும் கலெக்டர் அலுவலக ஊழியர்கள் திரண்டு வந்து லிப்டை திறக்க போராடினார்கள். ஆனால் அவர்களது முயற்சி பலனளிக்கவில்லை.

    இதற்கிடையே லிப்டுக்குள் இருந்தவர்கள் தங்களுக்கு மூச்சுத்திணறுவதாக கூறினர். வெளியே நின்றிருந்தவர்கள் அவர்களிடம் ஆறுதல் வார்த்தைகளை கூறி ஆசுவாசப்படுத்தினர்.

    இதற்கிடையே விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அதிரடி நடவடிக்கையாக லிப்ட் கதவை உடைத்து உள்ளே இருந்த 10 பேரையும் பத்திரமாக மீட்டனர். சுமார் அரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு அதில் சிக்கியிருந்தவர்கள் வெளியே வந்து நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.

    இதற்கிடையே லிப்டில் இருந்த மூதாட்டி ஒருவர் மயக்கம் அடைந்தார். இதனால் அங்கு மீண்டும் பதற்றம் தொற்றிக்கொண்டது. கலெக்டர் அலுவலகத்தில் தயார் நிலையில் 108 ஆம்புலன்சு மூலம் அந்த மூதாட்டி கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சிறிது ஓய்வுக்கு பிறகு அவர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    • பன்னடுக்கு வாகன நிறுத்தகம் அமைக்கவும் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.
    • ரூ.89 லட்சம் மதிப்பில் முடி காணிக்கை மண்டபம் கட்டப்பட உள்ளது.

    கோவை:

    மழை தொடர்ந்து பெய்து வரும் நிலையிலும், கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்துக்குட்பட்ட 22-வது வார்டு, 8-வது வார்டு உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் பிரச்சினை மிகவும் அதிகம் காணப்படுகிறது. இதனால் மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

    விரிவுபடுத்தப்பட்ட கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டலத்தின் கீழ் சேரன் மாநகர், நேரு நகர், காளப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் உள்ளன. இங்கு பல ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர்.

    மேற்குறிப்பிட்ட இந்த பகுதிகளில் 10 அல்லது 12 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருவதாக மக்கள் புகார் தெரிவித் துள்ளனர்.

    தொடர் மழை காரணமாக பில்லூர் அணை நிரம்பி வரும் நிலையில் அந்த தண்ணீர் வினியோகம் செய்யப்படும் குடியிருப்பு பகுதிகளுக்கு சீரான முறையில் குடிநீர் விநியோகம் செய்யப் படாதது மக்கள் மத்தி யில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.

    குடிநீர் பிரச்சனை தொடர்பாக மக்கள் தினமும் புகார்களை தெரிவிப்பது வாடிக்கையான ஒன்றாக மாறி உள்ளது. பெரிய அளவில் மக்கள் போராட்டம் நடத்தும் முன் மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து கோவை மாநகராட்சி நிர்வாகத்தினர் கூறியதாவது:-கோவை மாநகராட்சி கிழக்கு பகுதிகளில் குடிநீர் பிரச்சினை உள்ளது உண்மைதான். சேரன் மாநகர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் 10,12 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. ஒரு சில இடங்களில் மட்டுமே 7 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.நேரு நகர், காளப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 12 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. அனைத்து பகுதிகளுக்கும் 7 நாட்களுக்கு ஒரு முறை சீரான முறையில் குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்துக்கு தெரிவித்துள்ளோம்.அதிகாரிகளும் தற்போது நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். விரைவில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என நம்புகிறோம்.கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்துக்கு உட்பட்ட பகுதியில் முன்பு 52 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 36 லட்சம் லிட்டர் தண்ணீர் மட்டுமே வழங்கப்படுகிறது.

    மக்களின் அடிப்படை தேவைகளில் ஒன்றான குடிநீர் சீரான முறையில் விநியோகம் செய்ய வேண்டியது மிகவும் அவசியம். விரைவில் வாரம் ஒரு முறை அனைத்து பகுதிகளுக்கும் சீரான சுழற்சி முறையில் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    ×