என் மலர்

  இந்தியா

  ஆந்திர அணுமின் நிலையத்தில் லிப்ட் அறுந்து விழுந்து 2 வடமாநில தொழிலாளர்கள் பலி
  X

  ஆந்திர அணுமின் நிலையத்தில் லிப்ட் அறுந்து விழுந்து 2 வடமாநில தொழிலாளர்கள் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • திடீரென லிப்ட் கதவு மூடப்பட்டு மேலே சென்றது. அங்கிருந்து பலத்த சத்தம் எழுப்பியபடி வேகமாக கீழே விழுந்தது.
  • அங்கிருந்த தொழிலாளர்கள் லிப்டை உடைத்து 2 பேரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

  திருப்பதி:

  ஆந்திர மாநிலம், என்.டி.ஆர். மாவட்டம், கொண்டப்பள்ளியில் உள்ள நர்லா தட்டாராவில் அனல் மின் நிலையம் உள்ளது.

  இங்கு 5-ம் கட்ட என்டிபிஎஸ் திட்டத்தின் ஒரு பகுதியாக 800 மெகாவாட் திறன் கொண்ட புதிய அனுமின் நிலைய கட்டுமானப் பணி நடந்து வருகிறது. ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் சில நாட்களாக வேலை செய்து வருகின்றனர்.

  70 மீட்டர் உயரத்தில் வேலை செய்ய தொழிலாளர்கள் 310 டிகிரி கொண்ட லிஃப்டில் ஏறினர். ஜிதேந்திரசிங், சோட்டூசிங் உள்ளிட்ட 20 தொழிலாளர்கள் லிப்டில் மேலே சென்று கட்டுமான பணியில் ஈடுபட்டனர்.

  பின்னர் மீண்டும் லிப்டில் கீழே வந்தனர். லிப்ட் கதவு திறக்காததால், தொழிலாளர்கள் உள்ளேயே சிக்கினர். சாவியை போட்டு லிப்டை திறந்தனர்.

  அப்போது 20 தொழிலாளர்களில் 18 பேர் வெளியே வந்தனர். மேலும் 2 பேர் வர முற்பட்ட போது, திடீரென லிப்ட் கதவு மூடப்பட்டு மேலே சென்றது. அங்கிருந்து பலத்த சத்தம் எழுப்பியபடி வேகமாக கீழே விழுந்தது. இந்த விபத்தில் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ஜித்தேந்திரா சிங், சோட்டு சிங் ஆகியோர் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்தனர்.

  அங்கிருந்த தொழிலாளர்கள் லிப்டை உடைத்து 2 பேரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் வரும்வழியிலேயே அவர்கள் 2 பேரும் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

  இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Next Story
  ×