search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Laptop"

    • இன்பினிக்ஸ் நிறுவனம் 43 இன்ச் ஸ்மார்ட் டிவியுடன் முற்றிலும் புதிய லேப்டாப் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.
    • புதிய இன்பினிக்ஸ் லேப்டாப் அலுமினியம் அலாய் பினிஷ் மற்றும் 1.24 கிலோ எடை கொண்டிருக்கிறது.

    இன்பினிக்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் இன்புக் X2 பிளஸ் லேப்டாப்-ஐ அறிமுகம் செய்துள்ளது. புதிய இன்புக் X2 பிளஸ் லேப்டாப் 15.6 இன்ச் FHD ஸ்கிரீன், 11th Gen i3 (8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி | 8 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி), i5 (8 ஜிபி + 512 ஜிபி) மற்றும் டாப் எண்ட் i7 (16 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி) என மூன்று வித பிராசஸர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    இந்த லேப்டாப் அலுமினியம் அலாய் பினிஷ், 1.24 கிலோ எடை கொண்டிருக்கிறது. இந்த லேப்டாப் 14,8 மில்லிமீட்டர் அளவு தடிமனாக உள்ளது. இதில் 1080 பிக்சல் FHD கேமரா, இரண்டு எல்இடி லைட்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் பேக்லிட் கீபோர்டு, 2 ஸ்பீக்கர்கள், டிடிஎஸ் ஆடியோ, 10 மணி நேர வீடியோ பிளேபேக் வழங்கும் 50Wh பேட்டரி கொண்டிருக்கிறது. இத்துடன் 65 வாட் டைப் சி பாஸ்ட் சார்ஜர் வழங்கப்படுகிறது.

    இன்பினிக்ஸ் இன்புக் X2 பிளஸ் அம்சங்கள்:

    15.6 இன்ச் 1920x1080 பிக்சல் FHD டிஸ்ப்ளே, 300 நிட்ஸ் பிரைட்னஸ்

    3 ஜிகாஹெர்ட்ஸ் 11th Gen இண்டெல் கோர் i3 பிராசஸர், இண்டெல் UHD கிராபிக்ஸ்

    2.5 ஜிகாஹெர்ட்ஸ் 11th Gen இணஅடெல் கோர் i5-1155G7

    2.9 ஜிகாஹெர்ட்ஸ் கோர் i7-1195G7 பிராசஸர், ஐரிஸ் Xe கிராபிக்ஸ்

    8 ஜிபி, 16 ஜிபி LPDDR4X ரேம்

    256 ஜிபி, 512 ஜிபி NVMe PCIe 3.0 SSD

    விண்டோஸ் 11 ஹோம்

    1080 பிக்சல் வெப்கேமரா, டூயல் எல்இடி ஃபில் லைட்கள்

    வைபை 6, 1x USB -C, 2x USB 3.0, 1x HDMI 1.4, 1x எஸ்டி கார்டு ஸ்லாட்

    3.5 எம்எம் ஹெட்போன் ஜாக், மைக்ரோபோன் ஜாக்

    ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், இரண்டு டிஜிட்டல் மைக்ரோபோன்கள், டிடிஎஸ் ஆடியோ

    50Wh பேட்டரி

    65 வாட் PD 3.0 டைப் சி பாஸ்ட் சார்ஜிங்

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    இன்பினிக்ஸ் இன்புக் X2 பிளஸ் லேப்டாப் கிரே மற்றும் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 32 ஆயிரத்து 990 என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 52 ஆயிரத்து 990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை அக்டோபர் 18 ஆம் தேதி ப்ளிப்கார்ட் தளத்தில் துவங்க இருக்கிறது.

    • கன்னியாகுமரி மாவட்டம் கண்ணன் குளம் பிஸ்மி நகர் பகுதியை சேர்ந்தவர் அபினன்(வயது 21).
    • அபினன் அவருடைய அறையில் இருந்த போது, அடையாளம் தெரியாத நபர்கள் அறைக்கு வந்து, அறையில் இருந்த 2 லேப்டாப்பை திருடி சென்றனர்.

    திருச்சி

    கன்னியாகுமரி மாவட்டம் கண்ணன் குளம் பிஸ்மி நகர் பகுதியை சேர்ந்தவர் அபினன்(வயது 21). இவர் திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு எம்.பி.ஏ. படித்து வருகிறார். மேலும் இவர் பொன்மலை அணுகு சாலையில் உள்ள ஒரு குடியிருப்பில் தனது நண்பர்களுடன் வாடகைக்கு அறை எடுத்து தங்கி படித்து வருகிறார்.

    இந்நிலையில் சம்பத்தன்று மதியம் அபினன் அவருடைய அறையில் இருந்த போது, அடையாளம் தெரியாத நபர்கள் அறைக்கு வந்து, அறையில் இருந்த 2 லேப்டாப் மற்றும் ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்டவற்றை எடுத்துக் கொண்டு தப்பி சென்றனர்.

    இது குறித்து அபினன் கேகே நகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

    அதில் பாலக்கரை பீமா நகர் பகுதியை சேர்ந்த கிருபாகரன்(21), பீமநகர் ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்த பிரவீன்(24), செபஸ்தியார் கோவில் தெருவை சேர்ந்த சிமியோன்(21), மார்சிங் பேட்டை பகுதியை சேர்ந்த அருண்குமார் (23) ஆகிய 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் காவல்துறையினர் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஜியோபுக் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது.
    • புதிய ஜியோபுக் லேப்டாப் எல்இடி டிஸ்ப்ளே மற்றும் 1366x768 பிக்சல் ரெசல்யூஷன் கொண்டிருக்கிறது.

    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்திய சந்தையில் புதிய லேப்டாப் அறிமுகம் செய்யப் போவதாக கடந்த பல மாதங்களாக தகவல்கள் வெளியாகி வந்தன. இவற்றை உண்மையாக்கும் வகையில், இந்தியாவில் ஜியோபுக் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. புதிய ஜியோபுக் மாடல் குறைந்த விலையில் கிடைக்கிறது. அரசு ஆன்லைன் வலைதளமான GeM-இல் ஜியோபுக் விற்பனைக்கு பட்டியலிடப்பட்டு இருக்கிறது.

    அந்த வகையில் GeM வலைதள விவரங்களின் படி புதிய ஜியோபுக் ஏபிஎஸ் பிளாஸ்டிக் பாடி கொண்டிருக்கிறது. இதன் டிஸ்ப்ளே பின்புறம் உள்ள மூடியில் ஜியோ லோகோ இடம்பெற்று இருக்கிறது. சற்றே தடிமனான பெசல்களை கொண்டிருக்கும் ஜியோபுக்-இல் 11.6 இன்ச் 1366x768 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட எல்இடி டிஸ்ப்ளே வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.

    மெமரியை பொருத்தவரை ஜியோபுக் மாடலில் 2 ஜிபி LPDDR4X ரேம், 32 ஜிபி eMMC ஸ்டோரேஜ் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் HD வெப் கேமரா சப்போர்ட் உள்ளது. இந்த லேப்டாப்பில் 55.1 வாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது. இது முழு சார்ஜ் செய்தால் எட்டு மணி நேரத்திற்கு பயன்படுத்த வழி செய்கிறது.

    இத்துடன் 4ஜி, வைபை, ப்ளூடூத் 5 போன்ற கனெக்டிவிட்டி வசதிகள் உள்ளன. புதிய ஜியோபுக் மாடலில் ஒற்றை யுஎஸ்பி 2.0 போர்ட், யுஎஸ்பி 3.0 போர்ட், HDMI போர்ட், காம்போ போர்ட், SD கார்டு ஸ்லாட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் மல்டி-ஜெஸ்ட்யுர் வசதி கொண்ட டச்பேட், டூயல் ஸ்பீக்கர்கள், டூயல் மைக்ரோபோன்கள் வழங்கப்பட்டுள்ளன. ஜியோபுக் மாடல் ஜியோ ஒஎஸ் கொண்டிருக்கிறது.

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    இந்திய சந்தையில் புதிய ஜியோபுக் மாடலின் விலை ரூ. 19 ஆயிரத்து 500 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. தற்போது இந்த லேப்டாப் அரசு ஊழியர்களுக்காக GeM வலைதளத்தில் கிடைக்கிறது. அனைவருக்கான விற்பனை தீபாவளி வாக்கில் துவங்கும் என எதிர்பார்க்கலாம். 

    • ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்திய சந்தையில் புதிதாக லேப்டாப் மாடலை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
    • ஏற்கனவே ஜியோவின் ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ. 6 ஆயிரம் பட்ஜெட்டில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இந்திய டெலிகாம் சந்தையில் அதிரடி சலுகைகள் வழங்கி முன்னணி நிறுவனமாக ரிலையன்ஸ் ஜியோ விளங்குகிறது. 2016 ஆம் ஆண்டு வாக்கில் உலகின் இரண்டாவது பெரிய டெலிகாம் சந்தையில் ஜியோ இலவச போன் சேவை மற்றும் குறைந்த விலை 4ஜி சேவைகளை வழங்கி பிரபலம் அடைந்தது. இதைத் தொடர்ந்து 2017 வாக்கில் ஜியோவின் ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை ரூ. 6 ஆயிரத்து 499 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

    ஸ்மார்ட்போனை தொடர்ந்து லேப்டாப் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய ஜியோ முடிவு செய்துள்ளது. பள்ளி மற்றும் அரசு நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் ஜியோவின் லேப்டாப் மாடல் ஜியோபுக் பெயரில் விற்பனைக்கு வர இருக்கிறது. அடுத்த மூன்று மாதங்களுக்குள் ஜியோபுக் விற்பனைக்கு வரும் என தகவல் வெளியாகி உள்ளது.

    புதிய ஜியோபுக் மாடலில் 4ஜி சப்போர்ட் மற்றும் 5ஜி வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. முந்தைய தகவல்களில் ஜியோபுக் மாடல் குவால்காம் பிராசஸர் மற்றும் ஆண்ட்ராய்டு ஒஎஸ் தழுவி உருவாக்கப்பட்ட ஜியோ ஒஎஸ் வழங்கப்பட்டு இருக்கும் என கூறப்பட்டது.

    தற்போது கவுண்ட்டர்பாயிண்ட் ரிசர்ச் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் இந்திய சந்தையில் 100 டாலர்கள் பட்ஜெட்டில் அதிகம் விற்பனையாகும் ஸ்மார்ட்போன் பிரிவில் ஜியோபோன் முதலிடம் பிடித்து இருக்கிறது. ஒட்டுமொத்த போன் விற்பனையில் இந்த பிரிவில் இருந்து மட்டும் ஒன்பது சதவீதமாக உள்ளன.

    ஜியோபுக் மாடலில் ஆண்ட்ராய்டு தழுவி உருவாக்கப்பட்ட ஜியோஒஎஸ் வழங்கப்படுகிறது. இத்துடன் மைக்ரோசாப்ட் செயலிகளும் வழங்கப்பட உள்ளது. மேலும் ARM தொழில்நுட்பத்தில் உருவான குவால்காம் பிராசஸர் பெரும்பாலும் ஸ்னாப்டிராகன் 665 வழங்கப்படும் என தெரிகிறது. இந்த லேப்டாப் ஏசர், லெனோவோ மற்றும் லாவா நிறுவன மாடல்களுக்கு போட்டியாக அமையும் என தெரிகிறது.

    இந்திய சந்தையில் விண்டோஸ் ஒஎஸ் கொண்ட லேப்டாப்கள் பெரும்பான்மையாக ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இந்த நிலையில், தான் ஜியோ நிறுவனம் ஆண்ட்ராய்டு ஒஎஸ் தழுவிய ஜியோஒஎஸ் கொண்ட ஜியோபுக் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. அடுத்த ஆண்டு மார்ச் மாத வாக்கில் பல லட்சம் யூனிட்களை விற்பனை செய்ய ஜியோ திட்டமிட்டுள்ளது.

    • ப்ளிப்கார்ட் தளத்தில் பிக் பில்லியன் டேஸ் பெயரில் சிறப்பு விற்பனை துவங்கி நடைபெற்று வருகிறது.
    • இந்த சிறப்பு விற்பனையில் ஏராளமான பொருட்களுக்கு அதிரடி சலுகை மற்றும் தள்ளுபடி போன்ற பலன்கள் வழங்கப்படுகின்றன.

    ப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சிறப்பு விற்பனை சில தினங்களுக்கு முன் துவங்கியது. இந்த விற்பனையில் பல்வேறு பிரிவுகளில் ஏராளமான பொருட்களுக்கு அசத்தல் சலுகைகள் அறிவிக்கப்பட்டன. குறிப்பாக மின்சாதனங்களுக்கு அதிரடி சலுகைகள் அறிவிக்கப்பட்டு இருந்தன. சிறப்பு விற்பனையில் லேப்டாப் ஆர்டர் செய்தவருக்கு ப்ளிப்கார்ட் சார்பில் சோப் வினியோகம் செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

    இது பற்றிய தகவல் லின்க்டுஇன் தளத்தில் வெளியாகி இருக்கிறது. டெல்லியை சேர்ந்த மாணவர் ஒருவர் ப்ளிப்கார்ட் பிக் பில்லின் டேஸ் விற்பனையில் லேப்டாப் ஒன்றை ஆர்டர் செய்திருக்கிறார். எனினும், லேப்டாப்பிற்கு பதில் அவருக்கு டிடர்ஜெண்ட் சோப்புகள் வினியோகம் செய்யப்பட்டுள்ளன. இதை ப்ளிப்கார்ட் வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரியிடம் மாணவர் தெரிவித்து இருக்கிறார். எனினும், இதற்கு பணம் திருப்பி தரப்பட மாட்டாது என ப்ளிப்கார்ட் அதிகாரி தெரிவித்து இருக்கிறார்.

    அதன் பின் வெளியான தகவல்களில் ப்ளிப்கார்ட் இந்த வாடிக்கையாளருக்கு பணத்தை திரும்ப வழங்குவதற்கான பணிகளை துவங்கி இருப்பதாக தெரிவித்து இருப்பதாக கூறப்பட்டு இருக்கிறது. ப்ளிப்கார்ட் தளத்தில் உள்ள "ஓபன் பாக்ஸ்" திட்டத்திலேயே இந்த மாணவர் லேப்டாப்பை வாங்கி இருக்கிறார். இந்த திட்டத்தில் வாடிக்கையாளர் பொருளை வாங்கும் போது, டெலிவரி செய்யும் நபர் கண் முன்னே அதனை திறந்து பார்க்க வேண்டும்.

    பின் தான் ஆர்டர் செய்த பொருள் சரியாக இருப்பதை உறுதி செய்த பின் அதனை வாங்கிக் கொள்ளலாம். எனினும், இந்த மாணவர் ஆர்டர் செய்த லேப்டாப்பை அவரி்ன் தந்தை டெலிவரி ஊழியரிடம் இருந்து பெற்று இருக்கிறார். இதன் காரணமாக லேப்டாப்பிற்கு பதில் சோப்பு வைக்கப்பட்டு இருந்த சம்பவம் தாமதமாக தெரியவந்துள்ளது. மேலும் டெலிவரி செய்ய வந்த நபருக்கும் ஓபன் பாக்ஸ் திட்டம் பற்றிய தகவல் தெரிந்திருக்கவில்லை. 

    • ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் ஐஎப்ஏ 2022 நிகழ்வில் முற்றிலும் புதிய நோக்கியா லேப்டாப் மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது.
    • பியுர்புக் சீரிசின் கீழ் மொத்தம் மூன்று புதிய நோக்கியா லேப்டாப் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன.

    ஜெர்மனி நாட்டின் பெர்லின் நகரில் நடைபெற்று வரும் 2022 ஐஎப்ஏ நிகழ்வில் ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா பியுர்புக் லேப்டாப் மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது. பியுர்புக் சீரிசில் மொத்தம் மூன்று லேப்டாப்கள் அறிமுகமாகி இருக்கின்றன. இவை நோக்கியா பியுர்புக் போல்டு, நோக்கியா பியுர்புக் லைட் மற்றும் நோக்கியா பியுர்புக் ப்ரோ என அழைக்கப்படுகின்றன.

    நோக்கியா பியுர்புக் போல்டு மற்றும் பியுர்புக் லைட் மாடல்களில் 14 இன்ச் டிஸ்ப்ளே, பியுர்புக் ப்ரோ மாடலில் 15.6 இன்ச் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது. போல்டு மற்றும் லைட் மாடல்களில் இண்டெல் பெண்டியம் சில்வர் N6000, பியுர்புக் ப்ரோ மாடலில் இண்டெல் கோர் i3 1220P பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. ஏஎம்டி நிறுவனத்தின் ரைசன் 5000 பிராசஸரை விட இண்டெல் கோர் i3 சக்திவாய்ந்த பிராசஸர் ஆகும்.


    மூன்று லேப்டாப் மாடல்களிலும் FHD IPS ஸ்கிரீன், 60Hz ரிப்ரெஷ் ரேட், 1920x1080 பிக்சல் ரெசல்யூஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. பியுர்புக் போல்டு மாடலில் டச் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது. நோக்கியா பியுர்புக் சீரிஸ் மாடல்களில் ப்ளூடூத் 5.0 கனெக்டிவிட்டி, வைபை 5 வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் யுஎஸ்பி 3.2 (x2), யுஎஸ்பி ஏ 3.2 (x1) போர்ட்கள், 3.2 எம்எம் ஹெட்போன் ஜாக் வழங்கப்பட்டு உள்ளது.

    இந்த மாடல்களில் அதிகபட்சம் 8 ஜிபி ரேம், கைரேகை சென்சார், மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் போல்டு மற்றும் லைட் மாடல்களில் 128 ஜிபி எஸ்எஸ்டி, பியுர்புக் ப்ரோ மாடலில் 512 ஜிபி எஸ்எஸ்டி வழங்கப்பட்டு இருக்கிறது. பியுர்புக் லைட் எடை 1.47 கிலோ ஆகும். பியுர்புக் போல்டு 2.5 கிலோவும், பியுர்புக் ப்ரோ எடை 2.0 கிலோ ஆகும். இதன் ப்ரோ மாடலில் 2MP கேமரா, அலுமினியம் டாப் பிரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    சிறிய மாடல்களில் 1MP கேமரா மற்றும் பிளாஸ்டிக் பிரேம் வழங்கப்பட்டு உள்ளது. 15.6 இன்ச் மாடலில் பேக்லிட் கீபோர்டு, 57Wh பேட்டரி மற்றும் 65 வாட் சார்ஜிங் இடம்பெற்று இருக்கிறது. லைட் மற்றும் போல்டு மாடல்களில் 38Wh பேட்டரி மற்றும் 44 வாட் பவர் அடாப்டர் வழங்கப்பட்டு உள்ளது. 14 இன்ச் மாடல்களை முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் எட்டு மணி நேரம் வரை பயன்படுத்தலாம்.

    நோக்கியா பியுர்புக் சீரிஸ் விண்டோஸ் 11 ஒஎஸ் கொண்டிருக்கிறது. இதன் ப்ரோ மாடலில் நான்கு ஸ்பீக்கர் சிஸ்டம், சிறிய மாடல்களில் 2 ஸ்பீக்கர் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது. சர்வதேச வெளியீட்டை தொடர்ந்து மற்ற நாடுகளில் அறிமுகம் செய்யப்படுவது பற்றி இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. எனினும், இதே மாதத்தில் பிரான்ஸ் நாட்டில் அறிமுகமாவது மட்டும் உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது.

    • 4 கார்களில் கண்ணாடியை உடைத்து பணம்-லேப்டாப் திருட்டப்பட்டது.
    • இதுகுறித்த புகாரின் பேரில் மாட்டுத்தாவணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை மேலக்கால் மெயின் ரோட்டை சேர்ந்தவர் முருகபூபதிராஜா (வயது 49). இவர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில், வேதியல் துறை பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று இரவு இவர் காரில் குடும்பத்துடன் சென்றார். காளவாசல் அம்மன் கோவில் அருகே காரை நிறுத்தி விட்டு அருகில் உள்ள கடைக்கு முருகபூபதிராஜாசென்றார்.

    இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் காரின் முன்கதவு கண்ணாடியை உடைத்து உள்ளே இருந்த லேப்டாப், ஐ-பேட், ஹார்டு டிரைவ், ஆப்பிள் பென்சில், திட்ட ஆவணங்கள், லேசர் பாய்ண்டர் உள்பட ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் மதிப்புடைய பொருட்களை கொள்ளை அடித்து தப்பி சென்றனர்.

    இது தொடர்பாக முருக பூபதிராஜா கரிமேடு குற்ற பலனாய்வு பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விஸ்வநாதபுரம், மருதுபாண்டியர் தெருவை சேர்ந்தவர் அஜித் (36). சம்பவத்தன்று இரவு இவர் காரில் ராஜா முத்தையா மன்றத்துக்கு அருகில் உள்ள ஓட்டலுக்கு வந்தார். ஓட்டல் வாசலில் காரை நிறுத்தி விட்டு சென்றார். மர்ம நபர்கள் காரின் முன் கதவு கண்ணாடியை உடைத்து, லேப்டாப், ஹார்ட் டிஸ்க் ஆகியவற்றை திருடிச்சென்று விட்டனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் அண்ணா நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அஜித் காருக்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த இன்னொரு கார் கண்ணாடி யையும் உடைக்கப்பட்டு, அதில் இருந்த பொருட்களும் திருடு போனது.

    ராமநாதபுரம் மாவட்டம், குருவடியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (40). சம்பவத்தன்று இரவு இவர் பாண்டி கோவில் ரோட்டில் உள்ள மதுபான கடை முன்பு காரை நிறுத்திவிட்டு சென்றார்.

    மர்ம நபர்கள் கார் கண்ணாடியை உடைத்து மணிபர்ஸ், ஏ.டி.எம். கார்டு, லேப்டாப் ஆகியவற்றை திருடிச் சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் மாட்டுத்தாவணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் மெமரியையும் கொண்டுள்ள இந்த லேப்டாப்பில் டிடிஎஸ் ஆடியோ புராசஸிங் வசதியும் உள்ளது.
    • இரண்டு மைக்ரோ போன்களையும் இது கொண்டுள்ளது.

    இன்பினிக்ஸ் நிறுவனம் கடந்த மாதம் இன்பினிக்ஸ் இன்புக் எக்ஸ் 1 ஸ்லிம் என்கிற லேப்டாப்பை அறிமுகப்படுத்திய நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் இன்புக் எக்ஸ் 1 நியோ என்கிற புதிய மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இந்த லேப்டாப் தற்போது ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது.

    இது விண்டோஸ் 11 இயங்குதளத்துடன் வருகிறது. அலுமினியம் அலாய் மெட்டல் பாடியை கொண்டுள்ள இந்த லேப்டாப், 14 இன்ச் ஃபுல் ஹெச்.டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே உடன் வருகிறது. 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் மெமரியையும் கொண்டுள்ள இந்த லேப்டாப்பில் டிடிஎஸ் ஆடியோ புராசஸிங் வசதியும் உள்ளது. இரண்டு மைக்ரோ போன்களையும் இது கொண்டுள்ளது.


    இந்த லேப்டாப்பில் இண்டெல் அல்ட்ரா ஹெச்.டி கிராபிக்ஸ் கார்டும் இடம்பெற்று உள்ளது. 50 வாட் ஹவர் பேட்டரி உடன் வரும் இந்த இன்பினிக்ஸ் இன்புக் எக்ஸ் 1 நியோ லேப்டாப்பில் பாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. இந்தியாவில் இதன் விலை ரூ.24 ஆயிரத்து 990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த லேப்டாப் தற்போது ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    • டெல் எக்ஸ்.பி.எஸ். 13 ப்ளஸ் 9320 லேப்டாப்பில் எக்ஸ்பிரஸ் சார்ஜ் வசதி வழங்கப்பட்டு உள்ளது.
    • இதன்மூலம் இதில் உள்ள 55 வாட் ஹவர் பேட்டரியை 1 மணிநேரத்தில் 80 சதவீதம் சார்ஜ் செய்ய முடியுமாம்.

    டெல் நிறுவனம் அதன் புது மாடல் லேப்டாப்பை இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளது. டெல் எக்ஸ்.பி.எஸ். 13 ப்ளஸ் 9320 எனும் பெயர்கொண்ட இந்த லேப்டாப் நேற்று இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த லேப்டாப்பில் பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன. அதைப்பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

    அதன்படி இதன் பாடி மறுசுழற்சி செய்யப்பட்ட அலுமினியத்தால் உருவாக்கப்பட்டு உள்ளது. மிகவும் மெல்லிய தோற்றம் கொண்ட இந்த லேப்டாப் 1.24 கிலோ எடை கொண்டதாகும். 4K ரெசொல்யூசனுடன் கூடிய 13 இன்ச் டிஸ்ப்ளே இதில் இடம்பெற்று உள்ளது. 91.9 சதவீதம் ஸ்கிரீன் டூ பாடி ரேசியோ கொண்ட இந்த லேப்டாப்பின் நான்கு பக்கங்களிலும் ஸ்லிம் பெசில்கள் உள்ளன.


    இதில் இண்டெல் ஐரிஸ் Xe கிராபிக்ஸ் உடன் கூடிய இண்டெல் கோர் i7-1260P சிபியு இடம்பெற்றுள்ளது. 16 ஜிபி ரேமும் 1டிபி ஸ்டோரேஜும் இதில் வழங்கப்படுகிறது. மேலும் இதில் டூயல் சென்சார் உடன் கூடிய ஹெச்டி வெப் கேமரா, கைரேகை சென்சார் மற்றும் 4 ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டு உள்ளன.

    இதில் எக்ஸ்பிரஸ் சார்ஜ் வசதியும் உள்ளது. அதன்மூலம் இதில் உள்ள 55 வாட் ஹவர் பேட்டரியை 1 மணிநேரத்தில் 80 சதவீதம் சார்ஜ் செய்ய முடியுமாம். இதன் கோர் i5-1260P, 16ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்டின் விலை ரூ.1 லட்சத்து 59 ஆயிரத்து 990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அதேபோல் இதன் பவர்ஃபுல் வேரியண்டான கோர் i7-1260P, 16 ஜிபி ரேம் + 1 டிபி ஸ்டோரேஜ் வசதி கொண்ட வேரியண்ட் விலை ரூ.1 லட்சத்து 79 ஆயிரத்து 990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாளை முதல் அமேசான் தளத்திலும், டெல் இந்தியா ஆன்லைன் ஸ்டோர்களிலும் இந்த லேப்டாப் விற்பனைக்கு வர உள்ளது.

    • முழுவதுமாக மெட்டல் பாடியால் ஆன இந்த லேப்டாப், 54 வாட் ஹவர் பேட்டரி திறன் கொண்டதாகும்.
    • இந்த லேப்டாப் ஸ்கை கிரே மற்றும் ஐஸ் ப்ளூ ஆகிய இரு நிறங்களில் கிடைக்கிறது.

    ரியல்மி நிறுவனம் அதன் புதிய லேப்டாப் ஒன்றை கடந்த வாரம் சீனாவில் அறிமுகப்படுத்தியது. ரியல்மி நோட்புக் ஏர் என பெயரிடப்பட்டுள்ள இந்த லேப்டாப்பில் சிறப்பம்சமே அதன் டிசைன் மற்றும் எடை தான். இந்த புது லேப்டாப்பின் மொத்த எடை வெறும் 1.36 கிலோ தானாம். இதில் உள்ள மற்றொரு கவனிக்கத்தக்க அம்சம் என்னவென்றால் அது இதில் உள்ள மெல்லிய பெசில்கள் தான். இதன் அளவு 4.9 எம்.எம். ஆப்பிள் மேக்புக் ஏர் எம் 1 மாடலோடு ஒப்பிடுகையில் இது மிகவும் மெல்லிசானது.

    ரியல்மி நிறுவனத்தின் இந்த புதிய லேப்டாப்பில் 11-வது ஜென் கோர் ஐ-3 புராசஸர் இடம்பெற்றுள்ளது. 8 ஜிபி ரேம் உடன் வரும் இந்த லேப்டாப்பில் 256ஜிபி மற்றும் 512ஜிபி என இரண்டு மெமரி வேரியண்ட்களில் வருகிறது. இதன் 16 : 10 டிஸ்ப்ளே பேனல் 1920 x 1200 ரெசலியூசனை ஆதரிக்கும் திறன் கொண்டதாகும். மேலும் இது 88 சதவீதம் ஸ்கிரீன் டூ பாடி ரேசியோவை கொண்டுள்ளது.


    முழுவதுமாக மெட்டல் பாடியால் ஆன இந்த லேப்டாப், 54 வாட் ஹவர் பேட்டரி திறன் கொண்டதாகும். 65வாட் பாஸ்ட் சார்ஜிங்கையும் இது ஆதரிக்கிறது. இதன் 8ஜிபி + 256ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை இந்திய மதிப்புப்படி ரூ.35 ஆயிரத்து 300 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அதேபோல் இதன் 8ஜிபி + 512ஜிபி மெமரி வேரியண்டின் விலை ரூ.38 ஆயிரத்து 800 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஸ்கை கிரே மற்றும் ஐஸ் ப்ளூ ஆகிய இரு நிறங்களில் வந்துள்ள இந்த லேப்டாப் இன்று முதல் சீன சந்தைகளில் விற்பனைக்கு வந்துள்ளது.

    • 50 வாட் ஹவர் பேட்டரி உடன் வரும் இந்த இன்பினிக்ஸ் இன்புக் எக்ஸ் 1 நியோ லேப்டாப்பில் பாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.
    • வருகிற ஜூலை 21-ந் தேதி முதல் இந்த லேப்டாப் ப்ளிப்கார்டில் விற்பனைக்கு வர உள்ளது.

    இன்பினிக்ஸ் நிறுவனம் கடந்த மாதம் இன்பினிக்ஸ் இன்புக் எக்ஸ் 1 ஸ்லிம் என்கிற லேப்டாப்பை கடந்த மாதம் அறிமுகப்படுத்திய நிலையில், தற்போது இன்புக் எக்ஸ் 1 நியோ என்கிற புதிய மாடலை இன்று இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இது விண்டோஸ் 11 இயங்குதளத்துடன் வருகிறது.

    அலுமினியம் அலாய் மெட்டல் பாடியை கொண்டுள்ள இந்த லேப்டாப், 14 இன்ச் ஃபுல் ஹெச்.டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே உடன் வருகிறது. 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் மெமரியையும் கொண்டுள்ள இந்த லேப்டாப்பில் டிடிஎஸ் ஆடியோ புராசஸிங் வசதியும் உள்ளது. இரண்டு மைக்ரோ போன்களையும் இது கொண்டுள்ளது.


    இந்த லேப்டாப்பில் இண்டெல் அல்ட்ரா ஹெச்.டி கிராபிக்ஸ் கார்டும் இடம்பெற்று உள்ளது. 50 வாட் ஹவர் பேட்டரி உடன் வரும் இந்த இன்பினிக்ஸ் இன்புக் எக்ஸ் 1 நியோ லேப்டாப்பில் பாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. இந்தியாவில் இதன் விலை ரூ.24 ஆயிரத்து 990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. வருகிற ஜூலை 21-ந் தேதி முதல் இந்த லேப்டாப் ப்ளிப்கார்டில் விற்பனைக்கு வர உள்ளது.

    • ஸ்கை கிரே மற்றும் ஐஸ் ப்ளூ ஆகிய இரு நிறங்களில் ரியல்மி நோட்புக் ஏர் லேப்டாப் அறிமுகமாகி உள்ளது.
    • ரியல்மி நிறுவனத்தின் இந்த புதிய லேப்டாப்பில் 11-வது ஜென் கோர் ஐ-3 புராசஸர் இடம்பெற்றுள்ளது.

    ரியல்மி நிறுவனம் அதன் புதிய லேப்டாப் ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது. ரியல்மி நோட்புக் ஏர் என பெயரிடப்பட்டுள்ள இந்த லேப்டாப்பில் சிறப்பம்சமே அதன் டிசைன் மற்றும் எடை தான். இந்த புது லேப்டாப்பின் மொத்த எடை வெறும் 1.36 கிலோ தானாம். இதில் உள்ள மற்றொரு கவனிக்கத்தக்க அம்சம் என்னவென்றால் அது இதில் உள்ள மெல்லிய பெசில்கள் தான். இதன் அளவு 4.9 எம்.எம். ஆப்பிள் மேக்புக் ஏர் எம் 1 மாடலோடு ஒப்பிடுகையில் இது மிகவும் மெல்லிசானது.

    ரியல்மி நிறுவனத்தின் இந்த புதிய லேப்டாப்பில் 11-வது ஜென் கோர் ஐ-3 புராசஸர் இடம்பெற்றுள்ளது. 8 ஜிபி ரேம் உடன் வரும் இந்த லேப்டாப்பில் 256ஜிபி மற்றும் 512ஜிபி என இரண்டு மெமரி வேரியண்ட்களில் வருகிறது. இதன் 16 : 10 டிஸ்ப்ளே பேனல் 1920 x 1200 ரெசலியூசனை ஆதரிக்கும் திறன் கொண்டதாகும். மேலும் இது 88 சதவீதம் ஸ்கிரீன் டூ பாடி ரேசியோவை கொண்டுள்ளது.


    முழுவதுமாக மெட்டல் பாடியால் ஆன இந்த லேப்டாப், 54Whr பேட்டரி திறன் கொண்டதாகும். 65வாட் பாஸ்ட் சார்ஜிங்கையும் இது ஆதரிக்கிறது. இதன் 8ஜிபி + 256ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை இந்திய மதிப்புப்படி ரூ.35 ஆயிரத்து 300 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அதேபோல் இதன் 8ஜிபி + 512ஜிபி மெமரி வேரியண்டின் விலை ரூ.38 ஆயிரத்து 800 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஸ்கை கிரே மற்றும் ஐஸ் ப்ளூ ஆகிய இரு நிறங்களில் வந்துள்ள இந்த லேப்டாப் தற்போது சீனாவில் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

    ×