search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லேப் டாப்"

    • பெண் ஒருவர் ஸ்கூட்டரில் பின்னால் அமர்ந்து கொண்டு பயணம் செய்கிறார். அப்போது அவர் லேப் டாப்பில் வேலை செய்து கொண்டே பயணம் செய்வது போன்று காட்சி உள்ளது.
    • சில நேரங்களில் இருக்கும் எனவும், மற்றொரு நபர் இதை கொச்சைப்படுத்தக் கூடாது என்பது போன்ற கருத்துக்களையும் பதிவிட்டுள்ளார்.

    பெங்களூருவில் பைக் சவாரியின் போதும் ஒரு பெண் லேப் டாப்பில் வேலை செய்த படி பயணம் செய்யும் காட்சி சமூக வலைதளங்களில் பரவி விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. டுவிட்டரில் பகிரப்பட்ட அந்த புகைப்படத்தில் பெங்களூருவை சேர்ந்த பெண் ஒருவர் ஸ்கூட்டரில் பின்னால் அமர்ந்து கொண்டு பயணம் செய்கிறார். அப்போது அவர் லேப் டாப்பில் வேலை செய்து கொண்டே பயணம் செய்வது போன்று காட்சி உள்ளது.

    பகிரப்பட்டதில் இருந்து 44 ஆயிரம் பார்வைகளையும், நூற்றுக்கணக்கான விருப்பங்களையும் பெற்றுள்ள புகைப்படத்தை பார்த்த வலைதள வாசிகள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். அதில் சிலர் எப்போதும் வேலை அழுத்தம் இல்லை. சில நேரங்களில் இருக்கும் எனவும், மற்றொரு நபர் இதை கொச்சைப்படுத்தக் கூடாது என்பது போன்ற கருத்துக்களையும் பதிவிட்டுள்ளார்.

    • கன்னியாகுமரி மாவட்டம் கண்ணன் குளம் பிஸ்மி நகர் பகுதியை சேர்ந்தவர் அபினன்(வயது 21).
    • அபினன் அவருடைய அறையில் இருந்த போது, அடையாளம் தெரியாத நபர்கள் அறைக்கு வந்து, அறையில் இருந்த 2 லேப்டாப்பை திருடி சென்றனர்.

    திருச்சி

    கன்னியாகுமரி மாவட்டம் கண்ணன் குளம் பிஸ்மி நகர் பகுதியை சேர்ந்தவர் அபினன்(வயது 21). இவர் திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு எம்.பி.ஏ. படித்து வருகிறார். மேலும் இவர் பொன்மலை அணுகு சாலையில் உள்ள ஒரு குடியிருப்பில் தனது நண்பர்களுடன் வாடகைக்கு அறை எடுத்து தங்கி படித்து வருகிறார்.

    இந்நிலையில் சம்பத்தன்று மதியம் அபினன் அவருடைய அறையில் இருந்த போது, அடையாளம் தெரியாத நபர்கள் அறைக்கு வந்து, அறையில் இருந்த 2 லேப்டாப் மற்றும் ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்டவற்றை எடுத்துக் கொண்டு தப்பி சென்றனர்.

    இது குறித்து அபினன் கேகே நகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

    அதில் பாலக்கரை பீமா நகர் பகுதியை சேர்ந்த கிருபாகரன்(21), பீமநகர் ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்த பிரவீன்(24), செபஸ்தியார் கோவில் தெருவை சேர்ந்த சிமியோன்(21), மார்சிங் பேட்டை பகுதியை சேர்ந்த அருண்குமார் (23) ஆகிய 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் காவல்துறையினர் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ×