search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dell XPS 13 Plus 9320"

    • டெல் எக்ஸ்.பி.எஸ். 13 ப்ளஸ் 9320 லேப்டாப்பில் எக்ஸ்பிரஸ் சார்ஜ் வசதி வழங்கப்பட்டு உள்ளது.
    • இதன்மூலம் இதில் உள்ள 55 வாட் ஹவர் பேட்டரியை 1 மணிநேரத்தில் 80 சதவீதம் சார்ஜ் செய்ய முடியுமாம்.

    டெல் நிறுவனம் அதன் புது மாடல் லேப்டாப்பை இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளது. டெல் எக்ஸ்.பி.எஸ். 13 ப்ளஸ் 9320 எனும் பெயர்கொண்ட இந்த லேப்டாப் நேற்று இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த லேப்டாப்பில் பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன. அதைப்பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

    அதன்படி இதன் பாடி மறுசுழற்சி செய்யப்பட்ட அலுமினியத்தால் உருவாக்கப்பட்டு உள்ளது. மிகவும் மெல்லிய தோற்றம் கொண்ட இந்த லேப்டாப் 1.24 கிலோ எடை கொண்டதாகும். 4K ரெசொல்யூசனுடன் கூடிய 13 இன்ச் டிஸ்ப்ளே இதில் இடம்பெற்று உள்ளது. 91.9 சதவீதம் ஸ்கிரீன் டூ பாடி ரேசியோ கொண்ட இந்த லேப்டாப்பின் நான்கு பக்கங்களிலும் ஸ்லிம் பெசில்கள் உள்ளன.


    இதில் இண்டெல் ஐரிஸ் Xe கிராபிக்ஸ் உடன் கூடிய இண்டெல் கோர் i7-1260P சிபியு இடம்பெற்றுள்ளது. 16 ஜிபி ரேமும் 1டிபி ஸ்டோரேஜும் இதில் வழங்கப்படுகிறது. மேலும் இதில் டூயல் சென்சார் உடன் கூடிய ஹெச்டி வெப் கேமரா, கைரேகை சென்சார் மற்றும் 4 ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டு உள்ளன.

    இதில் எக்ஸ்பிரஸ் சார்ஜ் வசதியும் உள்ளது. அதன்மூலம் இதில் உள்ள 55 வாட் ஹவர் பேட்டரியை 1 மணிநேரத்தில் 80 சதவீதம் சார்ஜ் செய்ய முடியுமாம். இதன் கோர் i5-1260P, 16ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்டின் விலை ரூ.1 லட்சத்து 59 ஆயிரத்து 990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அதேபோல் இதன் பவர்ஃபுல் வேரியண்டான கோர் i7-1260P, 16 ஜிபி ரேம் + 1 டிபி ஸ்டோரேஜ் வசதி கொண்ட வேரியண்ட் விலை ரூ.1 லட்சத்து 79 ஆயிரத்து 990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாளை முதல் அமேசான் தளத்திலும், டெல் இந்தியா ஆன்லைன் ஸ்டோர்களிலும் இந்த லேப்டாப் விற்பனைக்கு வர உள்ளது.

    ×