search icon
என் மலர்tooltip icon

    கணினி

    ரியல்மி நோட்புக் ஏர் லேப்டாப் அறிமுகமானது - விலை எவ்வளவு தெரியுமா?
    X

    ரியல்மி நோட்புக் ஏர் லேப்டாப் அறிமுகமானது - விலை எவ்வளவு தெரியுமா?

    • ஸ்கை கிரே மற்றும் ஐஸ் ப்ளூ ஆகிய இரு நிறங்களில் ரியல்மி நோட்புக் ஏர் லேப்டாப் அறிமுகமாகி உள்ளது.
    • ரியல்மி நிறுவனத்தின் இந்த புதிய லேப்டாப்பில் 11-வது ஜென் கோர் ஐ-3 புராசஸர் இடம்பெற்றுள்ளது.

    ரியல்மி நிறுவனம் அதன் புதிய லேப்டாப் ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது. ரியல்மி நோட்புக் ஏர் என பெயரிடப்பட்டுள்ள இந்த லேப்டாப்பில் சிறப்பம்சமே அதன் டிசைன் மற்றும் எடை தான். இந்த புது லேப்டாப்பின் மொத்த எடை வெறும் 1.36 கிலோ தானாம். இதில் உள்ள மற்றொரு கவனிக்கத்தக்க அம்சம் என்னவென்றால் அது இதில் உள்ள மெல்லிய பெசில்கள் தான். இதன் அளவு 4.9 எம்.எம். ஆப்பிள் மேக்புக் ஏர் எம் 1 மாடலோடு ஒப்பிடுகையில் இது மிகவும் மெல்லிசானது.

    ரியல்மி நிறுவனத்தின் இந்த புதிய லேப்டாப்பில் 11-வது ஜென் கோர் ஐ-3 புராசஸர் இடம்பெற்றுள்ளது. 8 ஜிபி ரேம் உடன் வரும் இந்த லேப்டாப்பில் 256ஜிபி மற்றும் 512ஜிபி என இரண்டு மெமரி வேரியண்ட்களில் வருகிறது. இதன் 16 : 10 டிஸ்ப்ளே பேனல் 1920 x 1200 ரெசலியூசனை ஆதரிக்கும் திறன் கொண்டதாகும். மேலும் இது 88 சதவீதம் ஸ்கிரீன் டூ பாடி ரேசியோவை கொண்டுள்ளது.


    முழுவதுமாக மெட்டல் பாடியால் ஆன இந்த லேப்டாப், 54Whr பேட்டரி திறன் கொண்டதாகும். 65வாட் பாஸ்ட் சார்ஜிங்கையும் இது ஆதரிக்கிறது. இதன் 8ஜிபி + 256ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை இந்திய மதிப்புப்படி ரூ.35 ஆயிரத்து 300 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அதேபோல் இதன் 8ஜிபி + 512ஜிபி மெமரி வேரியண்டின் விலை ரூ.38 ஆயிரத்து 800 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஸ்கை கிரே மற்றும் ஐஸ் ப்ளூ ஆகிய இரு நிறங்களில் வந்துள்ள இந்த லேப்டாப் தற்போது சீனாவில் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

    Next Story
    ×