search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "La Liga"

    ரொனால்டோ வெற்றிடத்தை காரேத் பேலேவால் நிரப்ப முடியும் என ரியல் மாட்ரிட் அணியின் புதிய பயிற்சியாளர் ஜூலென் லோப்டெகுய் தெரிவித்துள்ளார். #Ronaldo
    போர்ச்சுக்கல் கால்பந்து அணியின் கேப்டனான கிறிஸ்டியானோ ரொனால்டா, கிளப் அளவிலான போட்டியில் தலைசிறந்த வீரராக திகழ்ந்து வருகிறார். கடந்த 2009-ம் ஆண்டில் இருந்து 2018 சீசன் வரை ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடினார். இந்தக் காலக்கட்டத்தில் கால்பந்து விளையாட்டின் உச்சாணிக்கே சென்றார். ரியல் மாட்ரிட் அணிக்காக அதிக கோல் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

    ரொனால்டோ அணியில் இருந்து சென்றதும், அவர் இடம் வெற்றிடமாகவே உள்ளது. அவருக்கு இணையான எந்த வீரரையும் ரியல் மாட்ரிட் இதுவரை ஒப்பந்தம் செய்யவில்லை. இந்நிலையில் அந்த அணியில் உள்ள காரேத் பேலே ரொனால்டோ இடத்தை நிரப்புவார் என்று பயிற்சியாளர் ஜூலென் லோப்டெகுய் தெரிவித்துள்ளார்.



    ஷினேடின் ஷிடேன் பயிற்சியாளராக இருக்கும்போது பேலேவிற்கு ஆடும் லெவனில் தொடர்ச்சியாக இடம் கிடைக்காமல் இருந்தது. லிவர்பூல் அணிக்கெதிரான சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தற்போது ரொனால்டோ இல்லாததால் இவருக்கு தொடர்ந்து இடம் கிடைக்க வாய்ப்புள்ளது.

    ரியல் மாட்ரிட் அணிக்காக 126 போட்டிகளில் விளையாடி 70 கோல்கள் அடித்துள்ளார்.
    லா லிகா கால்பந்து தொடர் அணியான அட்லெடிகோ மாட்ரிட் கிரிஸ்மான், லூகாஸ் ஹெர்னாண்டசின் ஒப்பந்தத்தை நீட்டித்துள்ளது. #Laliga #AtleticoMadrid
    ஸ்பெயின் நாட்டில் நடத்தப்பட்டு வரும் லா லிகா கால்பந்து தொடரில் பங்கேற்று விளையாடும் முன்னணி அணிகளில் ஒன்று அட்லெடிகோ மாட்ரிட். இந்த அணியில் பிரான்ஸ் அணியின் முன்னணி வீரர்களான கிரிஸ்மான், லூகாஸ் ஹெர்னாண்டஸ் இடம்பிடித்து விளையாடி வந்தனர்.

    கிரிஸ்மான் முன்னணி ஸ்டிரைக்கராக விளங்கி வந்தார். இவர் 2014-ம் ஆண்டில் இருந்து இந்த அணிக்காக விளையாடி வருகிறார். 2017-2018 சீசன் முடிந்த பின்னர், பார்சிலோனா அணிக்கு மாற இருக்கிறார் என்ற பேச்சு வெளியானது.



    இதை முற்றிலும் மறுத்த கிரிஸ்மான், நான் அட்லெடிகோ மாட்ரிட் அணிக்காகத்தான் விளையாடுவேன் என்று அறிவித்தார். இந்நிலையில் அவருடனான ஒப்பந்தத்தை 2023 வரை நீட்டித்துள்ளது அட்லெடிகோ மாட்ரிட்.



    அதேபோல் மற்றொரு பிரான்ஸ் வீரரான லூகாஸ் ஹெர்னாண்டசின் ஒப்பந்தத்தை 2024 வரை நீட்டித்துள்ளது. மொனாகோ அணியில் இடம்பிடித்துள்ள தாமஸ் லேமரை 63 மில்லியன் பவுண்டிற்கு விலைபேசியுள்ளது. இவரும் அட்லெடிகோ மாட்ரிட் அணிக்காக விளையாட இருக்கிறார்.
    லா லிகா தொடரில் பார்சிலோனாவிற்காக 34 கோல்கள் அடித்து யூரோப்பியன் கோல்டன் ஷூவை ஐந்தாவது முறையாக தட்டிச் சென்றுள்ளார் மெஸ்சி. #Messi
    யூரோப்பா கண்டத்தில் உள்ள ஒவ்வொரு நாட்டிலும் கால்பந்து லீக் தொடர் ஆண்டுதோறும் நடைபெறும். இங்கிலாந்தில் இங்கிலீஷ் பிரீமியர் லீக், ஸ்பெயினில் லா லிகா, பிரான்ஸில் லீக் 1, இத்தாலியில் செரி ஏ, ஜெர்மனியில் பண்டேஸ்லிகா போன்ற முன்னணி கால்பந்து லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.



    இந்த கால்பந்து லீக்கில் அதிக கோல்கள் அடிக்கும் வீரருக்கு ஆண்டுதோறும் யூரோப்பியன் கோல்டன் ஷூ வழங்கப்படும். அதன்படி இந்த வருடம் லா லிகா தொடரில் பார்சிலோனா அணிக்காக விளையாடும் மெஸ்சி கோல்டன் ஷூவை தட்டிச் சென்றுள்ளார். மெஸ்சி இந்த சீசனில் 34 கோல்கள் அடித்துள்ளார். அத்துடன் 25 கோல்கள் அடிக்க துணைபுரிந்துள்ளார்.



    இவர் ஏற்கனவே, கடந்த வருடம், 2010, 2012 மற்றும் 2013-ல் இந்த விருதை கைப்பற்றியுள்ளார். இங்கிலீஷ் பிரீமியர் லீக்கில் லிவர்பூல் அணிக்காக விளையாடும் முகமது சாலா 332 கோல்கள் அடித்து 2-வது இடம்பிடித்துள்ளார். டோட்டன்ஹாம் வீரர் ஹரி கேன் 30 கோல்கள் அடித்து 3-வது இடத்தில் உள்ளார். ரியல் மாட்ரிட் வீரர் ரொனால்டோ 26 கோல்கள் அடித்து 8-வது இடத்தை பிடித்துள்ளார்.
    லா லிகா கடைசி லீக்கில் பார்சிலோனா ரியல் சோசியேடாட் அணியை 1-0 என வீழ்த்தி, வெற்றியோடு 25-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. #Laliga #Barcelona
    ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் முன்னணி கால்பந்து லீக் தொடரான லா லிகாவின் 2017-18 சீசன் நேற்றிரவுடன் முடிவடைந்தது. ஏற்கனவே கோப்பையை உறுதி செய்த பார்சிலோனா, கடைசி லீக்கில் ரியல் சோசியேடாட் அணியை எதிர்கொண்டது.

    முதல் பாதி நேரத்தில் இரு அணி வீரர்களும் கோல்கள் அடிக்கவில்லை. 2-வது பாதி நேரத்தில் ஆட்டத்தின் 57-வது நிமிடத்தில் பிலிப்பே கவுட்டினோ கோல் அடிக்க பார்சிலோனா 1-0 என முன்னிலைப் பெற்றது. அதன்பின் இரு அணி வீரர்களும் கோல் அடிக்காததால் பார்சிலோனா 1-0 என வெற்றி பெற்றது.



    இந்த போட்டியின் மூலம் வெற்றியோடு கோப்பையை கைப்பற்றியது பார்சிலோனா. லா லிகா சாம்பியன் பட்டத்தை பார்சிலோனா கைப்பற்றுவது இது 25-வது முறையாகும். பார்சிலோனா 38 போட்டியில் 28 வெற்றி, 9 டிரா, ஒரு தோல்வியுடன் 93 புள்ளிகள் பெற்று முதல் இடம்பிடித்ததுள்ளது. 79 புள்ளிகளுடன் அட்லெடிகோ டி மாட்ரிட் 2-வது இடத்தையும், 76 புள்ளிகளுடன் ரியல் மாட்ரிட் 3-வது இடத்தையும், 73 புள்ளிகளுடன் வாலன்சியா 4-வது இடத்தையும் பிடித்தது.
    லா லிகா சீசனின் கடைசி ஆட்டத்தில் வில்லாரியலுக்கு எதிராக டிரா செய்து 3-வது இடத்தை பிடித்தது ரியல் மாட்ரிட். #laliga #Realmadrid
    ஸ்பெயின் நாட்டின் முதன்மையான கால்பந்து லீக் தொடரான லி லிகா இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டது. ரியல் மாட்ரிட் தனது கடைசி லீக் ஆட்டத்தில் வில்லாரியலை எதிர்கொண்டது. ஆட்டம் தொடங்கிய 11-வது நிமிடத்தில் காரேத் பேலே முதல் கோலை பதிவு செய்தார். வில்லாரியலின் ஐந்து வீரர்களை ஏமாற்றி அற்புதமாக கோல் அடித்தார்.

    ஆட்டத்தின் 32-வது நிமிடத்தில் மார்சிலோ கொடுத்த பந்தை கிறிஸ்டியானோ ரொனால்டோ தலையால் முட்டி கோல் அடித்தார். இதனால் முதல் பாதி நேரத்தில் ரியல் மாட்ரிட் 2-0 என முன்னிலைப் பெற்றது.



    2-வது பாதி நேரத்தில் வில்லாரியல் அணி வீரர்கள் ஆக்ரோஷமாக விளையாடினார்கள். 61-வது நிமிடத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோ வெளியேறினார். அவருக்குப் பதிலாக பென்சிமா களம் இறங்கினார். 70-வது நிமிடத்தில் வில்லாரியல் அணியின் ரோஜர் மார்டினெஸ், 85-வது நிமிடத்தில் சாமு கேஸ்டிலியேஜோ ஒரு கோலும் அடிக்க போட்டி 2-2 என டிராவில் முடிந்தது.

    இந்த டிரா மூலம் ரியல் மாட்ரிட் 38 போட்டிகளில் 22 வெற்றி, 10 டிரா, 6 தோல்விகளுடன் 76 புள்ளிகள் பெற்று 3-வது இடதில் உள்ளது. பார்சிலோனா 37 போட்டிகள் முடிவில் 27 வெற்றி, 9 டிரா, ஒரு தோல்வியுடன் 90 புள்ளிகள் பெற்று முதல் இடம் வகிக்கிறது.
    பிரேசில் கேப்டன் நெய்மரை ரியல் மாட்ரிட் அணியில் பார்க்க பயங்கரமானதாக இருக்கும் என பார்சிலோனா புகழ் மெஸ்சி தெரிவித்துள்ளார். #Messi #neymar
    பிரேசில் கால்பந்து அணியின் கேப்டன் நெய்மர். இவர் கடந்த 2013-ல் இருந்து 2017 வரை ஸ்பெயினின் புகழ்பெற்ற பார்சிலோனா அணிக்காக விளையாடி வந்தார். மெஸ்சி, சுவாரஸ் உடன் இணைந்து நெய்மர் பார்சிலோனா அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த மூன்றுபேரையும் மும்மூர்த்திகள் என்று அழைத்தனர்.

    2016-17 சீசன் முடிந்ததுடன் கால்பந்து வரலாற்றில் மிகவும் அதிகத் தொகைக்கு பிஎஸ்ஜி அணிக்கு டிரான்ஸ்பர் ஆனார். 26 வயதாகும் நெய்மர் தற்போது ரியல் மாட்ரிட் அணிக்கு டிரான்ஸ்பர் ஆகலாம் என்ற செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

    இந்நிலையில் நெய்மரை ரியல் மாட்ரிட் அணியில் பார்ப்பது மிகவும் பயங்கரமானதாக இருக்கும் என பார்சிலோனா புகழ் மெஸ்சி தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து மெஸ்சி கூறுகையில் ‘‘தனது நண்பரும், தன்னுடனும் சேர்ந்து விளையாடியவரும் ஆன நெய்மர் ரியல் மாட்ரிட் அணியில் இணைந்தால், அந்த அணியில் அவரை பார்ப்பது பயங்கரமானதாக இருக்கும். நெய்மர் என்பது பார்சிலோனாவை குறிக்கும்.

    அவர் பார்சிலோனாவிற்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் சாம்பியன்ஸ் லீக், லா லிகா டைட்டிலை வென்றுள்ளார். ஆனால், ரியல் மாட்ரிட்டிற்கு சென்றால், அது எங்களுக்க மிகப்பபெரிய இழப்பாகும். பார்சிலோனா ரசிகர்களுக்கும்’’ என்றார்.
    லா லிகாவில் விலாரியலை 5-1 என வீழ்த்தி தோற்கடிக்க முடியாத அணி என்ற சாதனையை நீட்டிக் கொண்ட செல்கிறது பார்சிலோனா. #LaLiga #Barcelona
    ஸ்பெயினில் நடைபெற்று வரும் லா லிகா கால்பந்து லீக்கில் பார்சிலோனா சிறப்பாக விளையாடி ஏற்கனவே சாம்பியன் பட்டத்தை உறுதி செய்துள்ளது.

    பார்சிலோனா தனது சொந்த மைதானத்தில் 36-வது ஆட்டத்தில் விலாரியல் அணியை எதிர்கொண்டது. இதில் பார்சிலோனா 5-1 என வெற்றி பெற்றது. ஆட்டத்தின் 11-வது நிமிடத்தில் பிலிப்பே கவுட்டினோ, 16-வது நிமிடத்தில் பவுலினோ, 45-வது நிமிடத்தில் மெஸ்சி, 87 மற்றும் 93-வது நிமிடத்தில் ஓஸ்மானே டெம்பேல் அடுத்தடுத்து இரண்டு கோல்கள் அடித்தனர். விலாரியல் அணியின் சான்சோனே 54-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.



    பார்சிலோனா 2017-18 சீசனில் லா லிகாவில் 36 போட்டிகளில் விளையாடி 27 வெற்றி, 9 டிராவுடன் 90 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் இருக்கிறது. இதுவரை தோல்வியை சந்திக்கவில்லை. ஐரோப்பிய கண்டத்தில் நடைபெறும் அனைத்து லீக் போட்டிகளையும் கணக்கில் எடுத்ததுக் கொண்டால், தோல்வியடையாத ஒரே அணி இதுதான். மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் தோல்வியை சந்திக்காமல் இருந்தால் தோற்கடிக்க முடியாத அணி என்ற சாதனையை பார்சிலோனா சொந்தமாக்கும்.

    லா லிகாவில் அட்லெடிகோ டி மாட்ரிட் 75 புள்ளிகளடன் 2-வது இடத்திலும், ரியல்மாட்ரிட் 72 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளது.
    ×