search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Griezmann"

    இறுதிப் போட்டியில் கோல் அடித்தாலும், அடிக்காவிடிலும் உலகக்கோப்பை டிராபியை தூக்கிப் பிடிக்க ஆசைப்படுகிறேன் என்று கிரிஸ்மான் தெரிவித்துள்ளார். #WorldCup2018
    ரஷியாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. நாளை 3-வது மற்றும் 4-வது இடத்திற்கான ஆட்டமும், நாளைமறுநாள் இறுதிப் போட்டியும் நடைபெறுகிறது. இறுதிப் போட்டியில் பிரான்ஸ் - குரோசியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    பிரான்ஸ் அணியின் ஸ்டிரைக்கர் ஆன கிரிஸ்மான், குரோசியாவிற்கு எதிராக நான் கோல் அடித்தாலும், அடிக்காவிடிலும் உலகக்கோப்பையை தூக்கிப் பிடிக்க ஆசைப்படுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து குறித்து கிரிஸ்மான் கூறுகையில் ‘‘நான் சிறுவனாக இருக்கும்போதே உலகக்கோப்பை கனவு இருந்தது. இளைஞர் அணியில் விளையாடும்போது அனைத்து சிறுவர்களுக்கும் உலகக்கோப்பையில், அதுவும் இறுதிப் போட்டியில் விளையாட வேண்டும் என்ற கனவு உண்டு. எதிர்பார்ப்பு என்ன என்பது எங்களுக்குத் தெரியும். நாங்கள் கோப்பையை வெல்ல ஆசைப்படுகிறோம். அதற்காக காத்திருக்க முடியாது.



    குரோசியாவிற்கு எதிரான இறுதிப் போட்டியில் கோல் அடிக்கிறேனா, இல்லையா என்பது பெரிய விஷயம் இல்லை. உலகக்கோப்பை சாம்பியன் டிராபியை தூக்கிப் பிடிக்க ஆசைப்படுகிறேன். இதுதான் எனக்கு பெரிய விஷயம். உலகக்கோப்பையை வெல்ல எங்களுக்கு அதிக வாய்ப்புள்ளது’’ என்றார்.
    உலகக்கோப்பை கால்பந்து தொடரின் முதல் காலிறுதி ஆட்டத்தில் உருகுவேயை 2-0 என வீழ்த்தி பிரான்ஸ் அரையிறுதிக்கு முன்னேறியது. #WorldCup2018
    உலகக்கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் நடைபெற்று வருகிறது. லீக், நாக்அவுட் சுற்றுகள் முடிந்து இன்று காலிறுதி ஆட்டங்கள் தொடங்கின. இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கிய முதல் காலிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் - உருகுவே அணிகள் மோதின. உருகுவே அணியில் காயம் காரணமாக கவானி களம் இறங்கவில்லை. பிரான்ஸ் அணி முழு பலத்துடன் களம் இறங்கியது.

    தொடக்கம் முதலே பிரான்ஸ் அணி ஆதிக்கம் செலுத்தின. ஆனால் உருகுவே அணியின் டிபென்ஸ்-ஆல் பிரான்ஸ் கோல் அடிக்க திணறின. இதற்கிடையே உருகுவே அணியும் கோல் அடிக்க முயற்சி செய்தன. ஆட்டத்தின் 40-வது நிமிடத்தில் பிரான்ஸ் அணிக்கு ப்ரீ ஹிக் வாய்ப்பு கிடைத்தது. கிரிஸ்மான் பந்தை உதைக்க வரானே அதை தலையால் முட்டி கோலாக்கினார். இதனால் பிரான்ஸ் 1-0 என முன்னிலைப் பெற்றது. அதன்பின் உருகுவே அணியால் கோல் அடிக்க இயலவில்லை. ஆகுவே, முதல் பாதி நேரத்தில் பிரான்ஸ் 1-0 என முன்னிலைப் பெற்றுள்ளது.

    2-வது பாதி நேரத்திலும் பிரான்ஸ் அணியின் ஆதிக்கம் நீடித்தது. 61-வது நிமிடத்தில் ஒரு குறிப்பிட்ட தூரத்தில் இருந்து கிரிஸ்மான் பந்தை புயல் வேகத்தில் அடித்தார். அதை உருகுவே கோல்கீப்பர் தடுத்து விட முயன்றார். அப்போது பந்து அவரது கையில் பட்டு கோல் கம்பத்திற்குள் நுழைந்தது. இதனால் பிரான்ஸ் 2-0 என முன்னிலைப் பெற்றது.



    0-2 என பின்தங்கியதால் உருகுவே அணி கோல் அடிக்கும் முனைப்பில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. பலமுறை பிரான்ஸ் கோல் எல்லைக்குள் பந்தை கடத்திச் சென்றது. ஆனால் அவற்றை வெற்றிகரமான வகையில் கோலாக மாற்ற முடியவில்லை. 90 நிமிடம் முடிந்து காயம் மற்றும் ஆட்டம் தடையை கணக்கிட்டு கூடுதலா 5 நிமிடங்கள் கொடுக்கப்பட்டது. என்றாலும் உருகுவே அணியால் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் பிரான்ஸ் 2-0 என உருகுவேயை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. #WorldCup2018 #FifaWorldCup2018 #FRAURU #URUFRA #Varane #GRIEZMANN
    லா லிகா கால்பந்து தொடர் அணியான அட்லெடிகோ மாட்ரிட் கிரிஸ்மான், லூகாஸ் ஹெர்னாண்டசின் ஒப்பந்தத்தை நீட்டித்துள்ளது. #Laliga #AtleticoMadrid
    ஸ்பெயின் நாட்டில் நடத்தப்பட்டு வரும் லா லிகா கால்பந்து தொடரில் பங்கேற்று விளையாடும் முன்னணி அணிகளில் ஒன்று அட்லெடிகோ மாட்ரிட். இந்த அணியில் பிரான்ஸ் அணியின் முன்னணி வீரர்களான கிரிஸ்மான், லூகாஸ் ஹெர்னாண்டஸ் இடம்பிடித்து விளையாடி வந்தனர்.

    கிரிஸ்மான் முன்னணி ஸ்டிரைக்கராக விளங்கி வந்தார். இவர் 2014-ம் ஆண்டில் இருந்து இந்த அணிக்காக விளையாடி வருகிறார். 2017-2018 சீசன் முடிந்த பின்னர், பார்சிலோனா அணிக்கு மாற இருக்கிறார் என்ற பேச்சு வெளியானது.



    இதை முற்றிலும் மறுத்த கிரிஸ்மான், நான் அட்லெடிகோ மாட்ரிட் அணிக்காகத்தான் விளையாடுவேன் என்று அறிவித்தார். இந்நிலையில் அவருடனான ஒப்பந்தத்தை 2023 வரை நீட்டித்துள்ளது அட்லெடிகோ மாட்ரிட்.



    அதேபோல் மற்றொரு பிரான்ஸ் வீரரான லூகாஸ் ஹெர்னாண்டசின் ஒப்பந்தத்தை 2024 வரை நீட்டித்துள்ளது. மொனாகோ அணியில் இடம்பிடித்துள்ள தாமஸ் லேமரை 63 மில்லியன் பவுண்டிற்கு விலைபேசியுள்ளது. இவரும் அட்லெடிகோ மாட்ரிட் அணிக்காக விளையாட இருக்கிறார்.
    ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஆட்டத்தில் விஏஆர் டெக்னாலாஜி மூலம் பெனால்டி வாய்ப்பு கிடைத்ததால், கிரிஸ்மான் அதை பாராட்டியுள்ளார். #WorldCup2018
    உலகக்கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் பலம் வாய்ந்த பிரான்ஸ் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. முதல் பாதி நேர ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 2-வது பாதி நேர ஆட்டத்தின்போது பிரான்ஸ் வீரர் கிரிஸ்மான் பந்தை கோல் எல்லையை நோக்கி கொண்டு சென்றார். அப்போது கோல் எல்லைக்குள் வைத்து ஆஸ்திரேலிய வீரர் கிரிஸ்மானை தள்ளிவிட்டார்.

    பிரான்ஸ் வீரர்கள் பெனால்டி வாய்ப்பு கேட்டனர். ஆனால், மைதான நடுவர் பெனால்டி கொடுக்கவில்லை. அதன்பின் VAR என்ற வீடியோ அசிஸ்டென்ட் ரெப்ரீ டெக்னாலஜி உதவியை நடுவர் கேட்டார். அப்போது ஆஸ்திரேலிய வீரர் செய்தது தவறு என்பது தெரிந்து, பெனால்டி வாய்ப்பு கொடுக்கப்பட்டது. இதில் கிரிஸ்மான் கோல் அடித்தார்.



    இதனால் VAR தனது வேலையை சரியாக செய்தது என்று கிரிஸ்மான் கூறியுள்ளார். இதுகுறித்து கிரிஸ்மான் கூறுகையில் ‘‘என்னுடைய முறையீட்டில் VAR தனது வேலையை சரியாக செய்தது. ஆஸ்திரேலிய வீரர் என்னுடைய இடது காலில் குறுக்கீட்டார். இதனால் பெனால்டி என்று நினைத்தேன். நான் எழுந்த பிறகு, எனக்கு சற்று வலியை கொடுத்தது. நான் கீழே விழுந்தது உருவகப்படுத்தியது கிடையாது.

    எனக்கும் அணிக்கும் சிறந்த ஆட்டமாக அமையவில்லை. இருந்தாலும், வெற்றியோடு திரும்பியது முக்கியமான விஷயம். 
    ×