search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Khushbu"

    • தி.மு.க. பேச்சாளரின் ஆபாசமான பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு டுவிட்டரில் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
    • தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. டுவிட்டரில் மன்னிப்பு கேட்டுள்ளார்.

    சென்னை:

    சென்னை ஆர்.கே. நகரில் தி.மு.க. பொதுக்கூட்டம் சமீபத்தில் நடந்தது. அமைச்சர் மனோ தங்கராஜ் பங்கேற்ற இந்த கூட்டத்தில் தி.மு.க. பேச்சாளர் சைதை சாதிக் பேசும்போது, பாரதிய ஜனதா கட்சியில் உள்ள நடிகைகள் குஷ்பு, நமீதா, காயத்ரி ரகுராம், கவுதமி ஆகியோரை குறிப்பிட்டு மிக ஆபாசமாக, தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சித்தார். இரட்டை அர்த்தம் தரும் மோசமான வார்த்தைகளை பயன்படுத்தினார். தி.மு.க. பேச்சாளரின் பேச்சை மேடையில் இருந்த யாரும் கண்டிக்காமல் சிரித்தபடி ரசித்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

    தி.மு.க. பேச்சாளரின் ஆபாசமான பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு டுவிட்டரில் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

    இதற்கு தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. டுவிட்டரில் மன்னிப்பு கேட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், "ஒரு பெண்ணாகவும், மனிதராகவும் இதற்கு நான் வெளிப்படையாக மன்னிப்பு கேட்கிறேன் என்றும் இதுபோன்ற பேச்சுக்களை தி.மு.க.வும், தலைவர் மு.க.ஸ்டாலினும் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்" என்று கூறி உள்ளார்.

    இந்நிலையில் சைதை சாதிக் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், நான் மேடையில் பேசிய பேச்சு தவறாக சித்தரிக்கப்பட்டு ஜோடிக்கப்பட்டு வெளி வந்துள்ளது. இருப்பினும் மரியாதைக்குரிய நடிகை குஷ்பு அவர்கள் மனம் புண்பட்டிருந்தால் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    • தி.மு.க. பேச்சாளரின் பேச்சை மேடையில் இருந்த யாரும் கண்டிக்காமல் சிரித்தபடி ரசித்தனர்.
    • பெண்களை இழிவுபடுத்துவதன் வாயிலாக இதுபோன்ற ஆண்கள் ஒரு பெண்ணின் கருப்பையை அவமதிக்கிறார்கள்.

    சென்னை:

    சென்னை ஆர்.கே. நகரில் தி.மு.க. பொதுக்கூட்டம் சமீபத்தில் நடந்தது.

    அமைச்சர் மனோ தங்கராஜ் பங்கேற்ற இந்த கூட்டத்தில் தி.மு.க. பேச்சாளர் சைதை சாதிக் பேசும்போது, பாரதிய ஜனதா கட்சியில் உள்ள நடிகைகள் குஷ்பு, நமீதா, காயத்ரி ரகுராம், கவுதமி ஆகியோரை குறிப்பிட்டு மிக ஆபாசமாக, தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சித்தார்.

    இரட்டை அர்த்தம் தரும் மோசமான வார்த்தைகளை பயன்படுத்தினார். தி.மு.க. பேச்சாளரின் பேச்சை மேடையில் இருந்த யாரும் கண்டிக்காமல் சிரித்தபடி ரசித்தனர்.

    இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது.

    தி.மு.க. பேச்சாளரின் ஆபாசமான பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு டுவிட்டரில் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

    டுவிட்டரில் குஷ்பு, ஆண்கள், பெண்களை துஷ்பிரயோகம் செய்தால் அது அவர்கள் வளர்ந்த வளர்ப்பையும், அவர்கள் வளர்ந்த நச்சு சூழலையும் காட்டுகிறது.

    பெண்களை இழிவுபடுத்துவதன் வாயிலாக இதுபோன்ற ஆண்கள் ஒரு பெண்ணின் கருப்பையை அவமதிக்கிறார்கள். இத்தகைய ஆண்கள், தங்களை கருணாநிதியை பின்பற்றுபவர்கள் என்று சொல்லி கொள்கின்றனர். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் இதுதான் புதிய திராவிட மாடலா? என கேள்வி எழுப்பியிருந்தார்.

    இதற்கு தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. டுவிட்டரில் மன்னிப்பு கேட்டுள்ளார்.

    அவர் வெளியிட்டுள்ள பதிவில், "ஒரு பெண்ணாகவும், மனிதராகவும் இதற்கு நான் வெளிப்படையாக மன்னிப்பு கேட்கிறேன்.

    இதை யார் பேசியிருந்தாலும், அவர் எந்த கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும், ஒரு போதும் இந்த நடத்தையை ஏற்க முடியாது.

    இதுபோன்ற பேச்சுக்களை தி.மு.க.வும், தனது தலைவர் மு.க.ஸ்டாலினும் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்" என்று கூறி உள்ளார்.

    • காங்கிரசில் இருக்கும் முக்கியமான தலைவர்கள் கட்சியை விட்டு வெளியேறிக்கொண்டிருக்கின்றனர்.
    • காங்கிரஸ் கட்சி எல்லாவற்றையும் இழந்துவிட்டது, வளர வாய்ப்பு இல்லை என குஷ்பூ பேட்டி

    புதுடெல்லி:

    அம்பேத்கரும் மோடியும் என்ற புத்தக வெளியிட்டு விழா டெல்லியில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ராகுல் காந்தியின் பாத யாத்திரையால் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி மலரும் என காங்கிரசார் நம்பிக்கை தெரிவித்திருப்பது பற்றி செய்தியாளர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து குஷ்பு கூறியதாவது:-

    எங்கிருந்து ஆட்சி மலரும்? காங்கிரசில் இருக்கும் முக்கியமான தலைவர்கள் கட்சியை விட்டு வெளியேறிக்கொண்டிருக்கின்றனர். யாத்திரை போகும்பாது பார்த்தால், அவர் யாருடன் உட்கார்ந்து பேசுகிறார் என்பதை பார்த்தோம். பாத யாத்திரைக்கான மேப்பை எடுத்து பார்த்தால் தெரியும். சுற்றுப்பயண திட்டம் முட்டாள்தளமாக இருப்பதாக அவரது கட்சிக்காரர்களே சொல்கிறார்கள். ஏதோ அவர் வசதிக்காக செய்ததுபோல் தெரிகிறது.

    எங்கெல்லாம் தேர்தல் வரப்போகிறது? எங்கெல்லாம் ஆட்சி இல்லை? அங்கெல்லாம் போக திட்டமிடவில்லை. 18 நாள் கேரளாவில் உட்கார்ந்து என்ன செய்யப்போகிறீர்கள்? நாட்டை இரண்டாக பிரிக்க வேண்டும் என்று பேசுபவர்களுடன் உட்கார்ந்து பேசுகிறீர்கள்?

    ராகுல் காந்தியை பொருத்தவரை கட்சி பொறுப்பு எனக்கு வேண்டாம், தலைமைப் பதவியையும் ஏற்க மாட்டேன், ஆனால் எல்லோரும் தலைமை பதவிக்கான மரியாதையை மட்டும் கொடுக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார். ராகுல் காந்தியின் பெயரில் உள்ள காந்தியை எடுத்துவிட்டால்... காங்கிரசைப் பொருத்தவரை அவர் வயநாடு தொகுதியின் எம்.பி. மட்டும்தான்.

    காங்கிரஸ் கட்சி எல்லாவற்றையும் இழந்துவிட்டது. வளர வாய்ப்பு இல்லை. ஜனநாயகப்படி நமக்கு நல்ல எதிர்க்கட்சி வேண்டும். ஆனால் காங்கிரசில் ராகுல் காந்தி தலைமையில் இருக்கும் வரை அத்தகைய எதிர்க்கட்சி வராது.

    இவ்வாறு குஷ்பு கூறினார்.

    நடிகையும், அரசியல்வாதியுமான குஷ்பு, சமீபத்தில் அளித்த பேட்டியில், அந்த படத்தை ரீமேக் செய்ய வேண்டாம் என்று கூறியிருக்கிறார். #Khushbu
    பிரபு, குஷ்பு நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற படம் ‘சின்னதம்பி’. இந்த படத்தை ரீமேக் செய்யலாம் என்று ஒரு பேச்சு எழுந்தது. இதுபற்றி குஷ்புவிடம் ஒரு பேட்டியில் கேட்டதற்கு, ‘ஒரு காலத்தில் கொண்டாடப்பட்ட படத்தை ரீமேக் என்ற பெயரில் கைவைக்கக் கூடாது. வட இந்தியாவில் இருந்து நடிக்க வந்த ஒரு நடிகை தமிழ் பேசி ஆடிப்பாடி சிரித்து, அழுதுபுரண்டு நடித்ததை வியந்து பார்த்தனர். 



    அந்த அளவுக்கு டைரக்டர் வாசு சார் சின்னத்தம்பி நந்தினி கதாபாத்திரத்தை செதுக்கி உருவாக்கி இருந்தார். படத்தின் கிளைமாக்ஸ் காட்சி முழுக்க முழுக்க நந்தினி தோளில் சுமத்தப்பட்டது. இன்னொரு முக்கியமான வி‌ஷயம் வேறு எந்த ஹீரோக்கள் நடித்து இருந்தாலும் என்னை அந்த அளவுக்கு விட்டுக்கொடுத்திருக்க மாட்டார்கள். பிரபு சார் அவரது ஹீரோயிசத்தை பெருந்தன்மையாகக் குறைத்துக்கொண்டார். 

    நான் நடித்த நந்தினி கேரக்டரை எந்த நடிகையும் நடிக்கலாம். ஆனால், பிரபு சார், மனோரமா ஆச்சி நடித்த கேரக்டர்களில் யாரை நடிக்க வைப்பீர்கள்...?’. இவ்வாறு குஷ்பு கேட்டுள்ளார்.
    ×