search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "jewel theft"

    • அண்ணன்-தங்கையை மிரட்டி நகை பறித்த கொள்ளையர்கள் கண்காணிப்பு காமிரா மூலம் சிக்கினர்.
    • விசாரணையில் கைதான 4 பேர் மீதும் மாநகராட்சி பகுதி போலீஸ் நிலையங்களில் பல வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.

    மதுரை

    மதுரை சீமான் நகரைச் சேர்ந்தவர் சரவணன். இவரது மகள் பாண்டிராதா (வயது 21). இவர் சம்பவத்தன்று இரவு தனது சகோதரர் நல்லமணிக்கு சாப்பாடு கொடுப்பதற்காக பக்கத்து தெருவுக்கு சென்றார். பின்னர் அவர் தனியாக வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.

    அவர் சீமான் நகர், அம்மன்கோவில் தெரு சந்திப்பில் வந்தபோது, 4 பேர் கும்பல் அங்கு வந்தது. அவர்கள் கத்தியை காட்டி மிரட்டி பாண்டிராதா அணிந்திருந்த 1 செயினை பறிக்க முயன்றனர்.

    இதனால் அதிர்ச்சிய டைந்த அவர், சத்தம் போட்டார். இதனை கேட்டு அவரது சகோதரர் நல்லமணி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். அப்போது மர்ம நபர்கள் பாண்டிராதா அணிந்திருந்த 1 பவுன் செயினை பறித்ததுடன், நல்லமணி வைத்திருந்த செல்போனையும் பறித்து விட்டு தப்பிச்சென்று விட்டனர். இதுபற்றி பாண்டிராதா மாட்டுத்தாவணி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வந்தனர். இதில் துப்பு துலங்கவில்லை. இதைத்தொடர்ந்து மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்திர நாயர் குற்றவாளிகளை கைது செய்யும்படி உத்தரவிட்டார்.

    அதன் பேரில் மாநகர வடக்கு துணை கமிஷனர் அரவிந்த் மேற்பார்வையில் அண்ணாநகர் உதவி கமிஷனர் சூரக்குமார் ஆலோசனையின் பேரில் மாட்டுத்தாவணி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாங்கம், சப்-இன்ஸ்பெக்டர் ராஜூ தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் சம்பவம் நடந்த இடத்தில் உள்ள கண்காணிப்பு காமிரா காட்சிகளை ஆய்வு செய்து பார்த்தனர். இதில் பாண்டிராதாவிடம் நகை பறித்தது சீமான் நகர் பாரதிபுரம் ராஜபாண்டி (25), நவீன்குமார் (20), முத்துப்பாண்டி (23), விஸ்வா (20) என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்து அவர்கள் பறித்து சென்ற நகை மற்றும் செல்போனை மீட்டனர்.

    விசாரணையில் கைதான 4 பேர் மீதும் மாநகராட்சி பகுதி போலீஸ் நிலையங்களில் பல வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.

    • வீட்டிற்குள் புகுந்து மூதாட்டியிடம் மர்ம ஆசாமிகள் நகைகளை பறித்தனர்
    • போலீசார் நகைகளை வாங்கி சென்ற மர்ம ஆசாமிகள் யார் என்று விசாரித்து வருகின்றனர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் கல்பாடி எறையூர் கிராமத்தை சேர்ந்தவர் தங்கராசு. இவரது மனைவி தனபாக்கியம் (வயது75). இந்த தம்பதியினருக்கு குழந்தைகள் இல்லை. இவர்கள் தனபாக்கியத்தின் அக்கா மகன் அண்ணாதுரை வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று மாலை மர்ம ஆசாமிகள் தனபாக்கியம் வீட்டிற்கு வந்து தனபாக்கியத்தை மிரட்டி நகைகளை கேட்டுள்ளனர்.இந்நிலையில் தனபாக்கியம் உயிருக்கு பயந்து தான் அணிந்திருந்த நகைகளை அந்த மர்ம ஆசாமிகளிடம் கொடுத்து விட்டார். பின்னர் இதுகுறித்து தனபாக்கியம் மருவத்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து போலீசார் நகைகளை வாங்கி சென்ற மர்ம ஆசாமிகள் யார் என்று விசாரித்து வருகின்றனர்.


    • அவர்கள் விலாசம் கேட்பது போல் நடித்து பார்வதி கண்ணில் மிளகாய் பொடியை தூவினர்
    • திட்டக்குடி செல்லும் சாலையில் மின்னல் வேகத்தில் சென்றனர்.

     கடலூர்:

    கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே பூலா ம்பாடி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் விருத்தகிரி. அவரது மனைவி பார்வதி (வயது45). இவர் புல்லூர் செல்லும் மண் சாலையில் மாடு மேய்த்துக் கொண்டி ருந்தார். அப்போது அந்த வழியாகஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் வந்தனர். அவர்கள் விலாசம் கேட்பது போல் நடித்து பார்வதி கண்ணில் மிளகாய் பொடியை தூவினர். பின்னர் கீேழ தள்ளி அவரது கழுத்தில் 5 பவுன் தாலிச் செயினை பறிக்க முயன்றனர்.

    அப்போது பார்வதி செயினை கெட்டியாக பிடித்து கொண்டு சத்தம் போட்டுள்ளார் அதை பொறுப்படுத்தாத மர்ம நபர்கள் பாதியை மட்டும் அறுத்து கொண்டு திட்டக்குடி செல்லும் சாலையில் மின்னல் வேகத்தில் சென்றனர். இது குறித்து பார்வதி வேப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • பணம் எடுப்பதற்காக வீட்டுக்குள் சென்ற மூதாட்டியிடம் நகையை பறிக்க முயன்றார்.
    • முனிபாண்டி அளித்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர்:

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பாட்டக்குளத்தை சேர்ந்தவர் தங்கரத்தினம் (43), காய்கறி வியாபாரி. இவர் சிவகாசி பழனியாண்டவர் தியேட்டர் பகுதியில் வியாபாரம் செய்ய சென்றார். அப்போது வசந்தாதேவி (73) என்ற மூதாட்டி இவரிடம் மொச்சைக்கடலை வாங்கி உள்ளார்.

    பணம் எடுப்பதற்காக வீட்டுக்குள் சென்றபோது தங்கரத்தினமும் அவர் பின்னால் சென்று நகையை பறிக்க முயன்றார். அப்போது வசந்தாதேவி, ''திருடன் திருடன்'' என்று கூச்சலிட்டார். கூச்சல் சத்தத்தை கேட்ட உறவினர்கள், அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து வெளிகதவை பூட்டிவிட்டனர்.

    இதனால் தங்கரத்தினம் வசமாக சிக்கி கொண்டார். பின்னர் அவரை சிவகாசி கிழக்கு போலீஸ் நிலையத்தில் உறவினர்கள் ஒப்படைத்தனர். இந்த நிலையில் சிவகாசி கிழக்கு போலீஸ்காரர்கள் முனிபாண்டி மற்றும் மணிவண்ணன் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் கோர்ட்டு அழைத்து சென்று போலீஸ் நிலையத்திற்கு மீண்டும் அழைத்து வந்தனர்.

    சிவகாசி-களத்தூர் சாலையில் அவர்கள் வந்த போது தங்கரத்தினம் தப்பிப்பதற்காக முனிபாண்டியின் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே குதித்தார். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. உடனே சுதாரித்து கொண்ட போலீஸ்காரர் முனிபாண்டி மற்றும் பின்னால் வேறொரு இருசக்கர வாகனத்தில் வந்த மணிவண்ணன் ஆகியோர் தங்கரத்தினத்தை பிடித்தனர். உடலில் காயங்களுடன் இருந்த தங்கரத்தினம் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    இது தொடர்பாக போலீஸ்காரர் முனிபாண்டி அளித்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • காங்கயம் அருகே சடையபாளையம்-தாளக்கரை செல்லும் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.
    • ஊதியூா் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

    காங்கயம்:

    காங்கயம் அருகே காடையூா் கிராமம், தாளக்கரை பகுதியைச் சோ்ந்தவா் நித்யா (வயது 25). தையல் தொழிலாளியாக வேலை செய்து வருகிறாா். இவா், காங்கயம் அருகே சடையபாளையம்-தாளக்கரை செல்லும் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். அப்போது நித்யாவை பின் தொடா்ந்து இருசக்கர வாகனத்தில் 2 நபா்கள் வந்துள்ளனா். சடையபாளையம், புளியங்காட்டு தோட்டம் அருகே வந்தபோது அந்த 2 நபா்களும் திடீரென நித்யா வாகனத்தை வழிமறித்து அவரை கீழே தள்ளிவிட்டு அவா் அணிந்திருந்த 4 1/2 பவுன் தாலிக்கொடியை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றனா்.இது குறித்து ஊதியூா் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். 

    • வழி கேட்பது போல் பேசினர்
    • பெண்ணிடம் 8 பவுன் சங்கிலி பறித்த சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் கீழப்புலியூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமநாதன் மனைவி சம்பூரணம் (வயது 55). இவர் தனது வயலில் இருந்து கால்நடைகளை வீட்டுக்கு ஒட்டி வந்துகொண்டிருந்தார். அப்போது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் சம்பூரணத்திடம் வழி கேட்பது போல் பேச்சுக் கொடுத்து அவர் அணிந்திருந்த 8 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி சென்றனர். இது குறித்து சம்பூரணம் மங்களமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


    • அதிக லாபம் தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.70 லட்சம்- 143 பவுன் நகைகள் பறிக்கப்பட்டது.
    • இதையடுத்து பாத்திமா சமிம், கணவர் ஜாகிர் உசேன், பரமேஸ்வரி, சுரேஷ் ஆகிய 4 பேரை மதுரை மாநகர குற்ற தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.

    மதுரை

    மதுரை அய்யர் பங்களா, ஸ்ரீ நகரை சேர்ந்த டைட்டஸ் தம்பிநாதன் மனைவி சந்திரா (வயது 54). இவர் மதுரை மாநகர குற்றத் தடுப்பு பிரிவு போலீசில் புகார் மனு கொடுத்து உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுரை கே.புதூர் மகாலட்சுமி நகரை சேர்ந்த பாத்திமா சமீம் (34), அவரது கணவர் ஜாகிர் உசேன் (40), பரமேஸ்வரி, சுரேஷ் ஆகிய 4 பேர் அறிமுகம் ஆனார்கள்.

    அவர்கள் என்னிடம், நாங்கள் புதிய தொழில் ஒன்றை செய்து வருகிறோம். இதில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் கிடைக்கும். நீங்கள் செலுத்திய பணத்திற்கான ஆவணங்களை தருகிறோம் என்ற ஆசை வார்த்தை கூறினார்கள். இதனை நம்பிய நான் அவர்களிடம் உறவினர்கள் மூலம் ரூ.70 லட்சம் பணத்தைத் திரட்டி கொடுத்தேன். மேலும் எங்களிடம் இருந்த 143 பவுன் நகைகளையும் அவர்களிடம் கொடுத்தேன்.

    பணம், நகையை பெற்று கொண்ட 4 பேரும் பல மாதங்களாகியும் லாபத் தொகை தரவில்லை. எனவே நான் அவர்களிடம் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டேன்.

    அப்போது அவர்கள் நான் கொடுத்த பணம், நகைக்கு ஈடாக ஆவணம் ஒன்றை கொடுத்தனர். உங்களது பணம் கூடிய விரைவில் திருப்பித் தருவோம் என தெரிவித்தனர். ஆனால் அவர்கள் பணம், நகையை திருப்பி தராமல் என்னை ஏமாற்றினர்.

    இந்த நிலையில் 4 பேரும் பணம், நகையை திருப்பிதர முடியாது என்று கூறி கொலை மிரட்டல் விடுத்தனர்.

    எனவே போலீசார் உரிய நடவடிக்ைக எடுத்து ரூ.70 லட்சம், 143பவுன் நகையை மீட்டு தர வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தார்.

    புகாரின் அடிப்படையில் போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தினார்கள். அப்போது சந்திரா பணம் கொடுத்ததற்கான ஆவணங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை சமர்ப்பித்தார்.

    இதனைத் தொடர்ந்து போலீசார் எதிர் தரப்பிடம் விசாரணை நடத்திய போது, பணம்-நகையை பெற்று மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து பாத்திமா சமிம், கணவர் ஜாகிர் உசேன், பரமேஸ்வரி, சுரேஷ் ஆகிய 4 பேரை மதுரை மாநகர குற்ற தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.

    • வேப்பூர் அருகே அரசு ஊழியர் வீட்டில் நகை திருடிய பெண் கைது செய்யப்பட்டார்.
    • மனைவி ஷம்ஷாத் என்பவரை தேடி லப்பைகுடிகாடு பகுதிக்கு சென்ற போலீசார் விசாரணை செய்து தேடினர்

    கடலூர்:

    கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே அடரி கிராமத்தை சேர்ந்தவர் கபிலன் (வயது32) இவர் விருத்தாசலம் ஊரக வளர்ச்சித் துறை‌ அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது வீட்டை பூட்டி விட்டு சாவியை பக்கத்தில் உள்ள ஓட்டு வீட்டு மாடத்தில் வைத்துவிட்டு அவரது மனைவியுடன் விருதாச்சலம் சென்றார் மீண்டும் தனது வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு சாவியை கொண்டு திறந்து வீட்டின் உள்ளே பீரோவில் இருந்த சுமார் 7½ பவுன் நகை மற்றும் வெள்ளி பொருட்களை யாரோ மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது இதையடுத்து சிறுப்பாக்கம் போலீசாருக்கு தலவல் அளித்தனர் அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதையடுத்து சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு அருகே உள்ள நபர்களை விசாரணை செய்த போது அவர்கள் கூறிய அங்க அடையாளங்கள் படி அந்த நேரத்தில் பெண் ஒருவர் வந்து போனது விசாரணையில் தெரிய வந்தது.

    அதனை தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்த போது பழைய குற்றவாளியான பெரம்பலூர் அருகே லப்பைகுடிகாடு பகுதியை சேர்ந்த ஹாலீக் பாஷா மனைவி ஷம்ஷாத் என்பவரை தேடி லப்பைகுடிகாடு பகுதிக்கு சென்ற போலீசார் விசாரணை செய்து தேடினர். ஆனால் அவர் அங்கு இல்லை என்பது தெரியவந்தது. மேலும் சந்தேகமடைந்த போலீசார் மேற்கொண்ட தீவிர விசாரணையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் பகுதியில் உள்ள அவரது தாய் வீட்டில் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து வேப்பூர் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன்,எஸ்ஐ, சந்திரா, பயிற்சி எஸ்ஐ. நித்யா ஆகியோர் ஷம்ஷாதை அவரது வீட்டில் வைத்து கைது செய்து மேற்கண்ட சம்பவத்தில் திருடிய தங்க நகைகளை அவரிடம் இருந்து பறிமுதல் செய்தனர். இந்த திருட்டு சம்பவத்தில் சிறப்பாக செயல்பட்டு 24 மணி நேரத்தில் நகையை பறிமுதல் செய்து திருடியவரையும் கைது செய்த சிறுப்பாக்கம் மற்றும் வேப்பூர் போலீசாரை‌ கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேஷ் பாராட்டினார்.

    • வாலிபரிடம் நகை பறித்த மர்ம ஆசாமியை போலீசார் தேடிவருகின்றனர்
    • பஸ் நிறுத்தம் அருகில் நின்று கொண்டிருந்தார்

    திருச்சி:

    தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 27) சம்பவத்தன்று இவர் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் திருப்பூர் பஸ் நிறுத்தம் அருகில் நின்று கொண்டிருந்தார். அப்பொழுது இவர் அருகில் வந்த ஒரு மர்ம ஆசாமி பெரியசாமி கழுத்தில் அணிந்திருந்த 1 1/2 பவுன் நகையை பறித்துக் கொண்டு அங்கிருந்து ஓடி விட்டார்.இதுகுறித்து பெரியசாமி திருச்சி கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு போலீஸ் புகார் கொடுத்துள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை திருடி சென்ற மர்ம ஆசாமியை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • பத்மாராணி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டராக வேலை செய்து வருகிறார்.
    • 5 பவுன் தங்க செயினை கழற்றி வீட்டில் வைத்தார்.

    கோவை

    கோவை கணபதி அத்திப்பாளையம் பிரிவு பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவரது மனைவி பத்மாராணி (வயது 37). இவர் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டராக வேலை செய்து வருகிறார்.

    சம்பவத்தன்று இரவு இவர் தனது 5 பவுன் தங்க செயினை கழற்றி வீட்டில் வைத்தார். பின்னர் தூங்க சென்றார். மறுநாள் காலை எழுந்து தான் நகை வைத்திருந்த இடத்தில் பார்த்தார்.

    அப்போது நகை மாயமாகி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே வீடு முழுவதும் அவர் நகையை தேடி பார்த்தார். ஆனால் நகை கிடைக்கவில்லை. பின்னர் இதுகுறித்து பத்மாராணி சரவணம்பட்டி போலீசில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை திருடி சென்றது யார்? மர்ம நபர்கள் யாராது வீடு புகுந்து நகையை திருடி சென்றார்களா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    2 நாட்கள் முன்பு அரசு ஆஸ்பத்திரி நர்சிடம் 2 வாலிபர்கள் நகையை பறித்து சென்றனர். இந்த நிலையில் அரசு ஆஸ்பத்திரி டாக்டர் வீட்டில் நகை திருட்டு போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பெண், சிறுமியுடன் வெளியேறிய பின் ஊழியர் கடையில் இருந்த தங்க செயின்களை சரிபார்த்தனர். அப்போது ஒரு சங்கிலி குறைவாக இருந்தது தெரிய வந்தது.
    • கடையில் உள்ள கண்காணிப்பு காமிரா பதிவை சோதனை செய்தபோது அதில் தங்க சங்கிலியை அந்த பெண் ஆடைக்குள் மறைத்து வைத்து திருடிச் சென்றது தெரிய வந்தது.

    பழனி:

    பழனியில் திண்டுக்கல் சாலையில் நகைக்கடை உள்ளது. இங்கு ஒரு சிறுமியுடன் வந்தபெண் ஊழியர்களிடம் தங்க சங்கிலி வாங்க வேண்டும் என கூறி உள்ளார். இதனைத் தொடர்ந்து பல்வேறு மாடல்களை கடை ஊழியர்கள் காண்பித்தனர்.

    அதனை பார்த்த பெண் மற்றொரு நாள் வந்து வாங்கிக் கொள்வதாக கூறி விட்டு சிறுமியுடன் வெளியேறினார். இதனைத் தொடர்ந்து ஊழியர் கடையில் இருந்த தங்க செயின்களை சரிபார்த்தனர். அப்போது ஒரு சங்கிலி குறைவாக இருந்தது தெரிய வந்தது.

    உடனடியாக கடையில் உள்ள கண்காணிப்பு காமிரா பதிவை சோதனை செய்தபோது அதில் தங்க சங்கிலியை அந்த பெண் ஆடைக்குள் மறைத்து வைத்து திருடிச் சென்றது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து ஊழியர்கள் விரட்டிச் சென்று அந்த பெண்ணை பிடித்து பழனி டவுன் போலீசில் ஒப்படைத்தனர்.

    விசாரணையில் அவர் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த காஜாமைதீன் மனைவி ஆமினா (40) என்பது தெரிய வந்தது. மகளுடன் நகைக்கடையில் தங்க சங்கிலி திருடியதை ஒப்புக் கொண்டார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்

    • திருமங்கலம் அருகே பஸ்சில் பெண்ணிடம் நகை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    • இதுகுறித்து திருமங்கலம் டவுன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் அமர்நாத். இவரது மனைவி காயத்ரி (வயது 30) சென்னை ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இதனால் அவர் மட்டும் சென்னையில் தங்கி வேலை பார்த்து வந்தார்.

    இந்தநிலையில் உறவினர் திருமணத்திற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு காயத்ரி திருமங்கலத்திற்கு வந்தார். அவர் கள்ளிக்குடியில் நடந்த உறவினர் வீட்டு திருமணத்தில் பங்கேற்று விட்டு, மீண்டும் திருமங்க லத்திற்கு அரசு டவுன் பஸ்சில் திரும்பி வந்தார்.

    தான் அணிந்திருந்த நகை களை பாதுகாப்புக்காக கழற்றி பைக்குள் வைத்தி ருந்தார். இந்தநிலையில் திருமங்கலம் பஸ் நிலை யத்தில் இறங்கியபோது அவரது பை திறந்திருந்தது. உள்ளே பார்த்தபோது, பையில் வைத்திருந்த 7½ பவுன் தங்கச்செயினை காணவில்லை.

    யாரோ மர்ம நபர்கள் ஓடும் பஸ்சிலேயே காயத் ரியின் பையில் இருந்த தங்கச்செயினை நைசாக திருடிச்சென்று 

    ×