என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோவை அரசு ஆஸ்பத்திரி டாக்டர் வீட்டில் நகை திருட்டு
- பத்மாராணி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டராக வேலை செய்து வருகிறார்.
- 5 பவுன் தங்க செயினை கழற்றி வீட்டில் வைத்தார்.
கோவை
கோவை கணபதி அத்திப்பாளையம் பிரிவு பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவரது மனைவி பத்மாராணி (வயது 37). இவர் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டராக வேலை செய்து வருகிறார்.
சம்பவத்தன்று இரவு இவர் தனது 5 பவுன் தங்க செயினை கழற்றி வீட்டில் வைத்தார். பின்னர் தூங்க சென்றார். மறுநாள் காலை எழுந்து தான் நகை வைத்திருந்த இடத்தில் பார்த்தார்.
அப்போது நகை மாயமாகி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே வீடு முழுவதும் அவர் நகையை தேடி பார்த்தார். ஆனால் நகை கிடைக்கவில்லை. பின்னர் இதுகுறித்து பத்மாராணி சரவணம்பட்டி போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை திருடி சென்றது யார்? மர்ம நபர்கள் யாராது வீடு புகுந்து நகையை திருடி சென்றார்களா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
2 நாட்கள் முன்பு அரசு ஆஸ்பத்திரி நர்சிடம் 2 வாலிபர்கள் நகையை பறித்து சென்றனர். இந்த நிலையில் அரசு ஆஸ்பத்திரி டாக்டர் வீட்டில் நகை திருட்டு போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






