என் மலர்
உள்ளூர் செய்திகள்

வீட்டிற்குள் புகுந்து மூதாட்டியிடம் நகை பறிப்பு
- வீட்டிற்குள் புகுந்து மூதாட்டியிடம் மர்ம ஆசாமிகள் நகைகளை பறித்தனர்
- போலீசார் நகைகளை வாங்கி சென்ற மர்ம ஆசாமிகள் யார் என்று விசாரித்து வருகின்றனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் கல்பாடி எறையூர் கிராமத்தை சேர்ந்தவர் தங்கராசு. இவரது மனைவி தனபாக்கியம் (வயது75). இந்த தம்பதியினருக்கு குழந்தைகள் இல்லை. இவர்கள் தனபாக்கியத்தின் அக்கா மகன் அண்ணாதுரை வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று மாலை மர்ம ஆசாமிகள் தனபாக்கியம் வீட்டிற்கு வந்து தனபாக்கியத்தை மிரட்டி நகைகளை கேட்டுள்ளனர்.இந்நிலையில் தனபாக்கியம் உயிருக்கு பயந்து தான் அணிந்திருந்த நகைகளை அந்த மர்ம ஆசாமிகளிடம் கொடுத்து விட்டார். பின்னர் இதுகுறித்து தனபாக்கியம் மருவத்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து போலீசார் நகைகளை வாங்கி சென்ற மர்ம ஆசாமிகள் யார் என்று விசாரித்து வருகின்றனர்.
Next Story






