என் மலர்
உள்ளூர் செய்திகள்

அரசு ஊழியர் வீட்டில் திருடிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
வேப்பூர் அருகே அரசு ஊழியர் வீட்டில் நகை திருடிய பெண் கைது
- வேப்பூர் அருகே அரசு ஊழியர் வீட்டில் நகை திருடிய பெண் கைது செய்யப்பட்டார்.
- மனைவி ஷம்ஷாத் என்பவரை தேடி லப்பைகுடிகாடு பகுதிக்கு சென்ற போலீசார் விசாரணை செய்து தேடினர்
கடலூர்:
கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே அடரி கிராமத்தை சேர்ந்தவர் கபிலன் (வயது32) இவர் விருத்தாசலம் ஊரக வளர்ச்சித் துறை அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது வீட்டை பூட்டி விட்டு சாவியை பக்கத்தில் உள்ள ஓட்டு வீட்டு மாடத்தில் வைத்துவிட்டு அவரது மனைவியுடன் விருதாச்சலம் சென்றார் மீண்டும் தனது வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு சாவியை கொண்டு திறந்து வீட்டின் உள்ளே பீரோவில் இருந்த சுமார் 7½ பவுன் நகை மற்றும் வெள்ளி பொருட்களை யாரோ மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது இதையடுத்து சிறுப்பாக்கம் போலீசாருக்கு தலவல் அளித்தனர் அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதையடுத்து சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு அருகே உள்ள நபர்களை விசாரணை செய்த போது அவர்கள் கூறிய அங்க அடையாளங்கள் படி அந்த நேரத்தில் பெண் ஒருவர் வந்து போனது விசாரணையில் தெரிய வந்தது.
அதனை தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்த போது பழைய குற்றவாளியான பெரம்பலூர் அருகே லப்பைகுடிகாடு பகுதியை சேர்ந்த ஹாலீக் பாஷா மனைவி ஷம்ஷாத் என்பவரை தேடி லப்பைகுடிகாடு பகுதிக்கு சென்ற போலீசார் விசாரணை செய்து தேடினர். ஆனால் அவர் அங்கு இல்லை என்பது தெரியவந்தது. மேலும் சந்தேகமடைந்த போலீசார் மேற்கொண்ட தீவிர விசாரணையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் பகுதியில் உள்ள அவரது தாய் வீட்டில் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து வேப்பூர் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன்,எஸ்ஐ, சந்திரா, பயிற்சி எஸ்ஐ. நித்யா ஆகியோர் ஷம்ஷாதை அவரது வீட்டில் வைத்து கைது செய்து மேற்கண்ட சம்பவத்தில் திருடிய தங்க நகைகளை அவரிடம் இருந்து பறிமுதல் செய்தனர். இந்த திருட்டு சம்பவத்தில் சிறப்பாக செயல்பட்டு 24 மணி நேரத்தில் நகையை பறிமுதல் செய்து திருடியவரையும் கைது செய்த சிறுப்பாக்கம் மற்றும் வேப்பூர் போலீசாரை கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேஷ் பாராட்டினார்.