search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "High profit"

    • விலை நிலங்களில் மணிலா, நெல், தர்பூசணி, கரும்பு, எள,கேழ்வரகு உள்ளிட்ட பயிர்களை நடவு செய்வது வழக்கம்.
    • குறைந்த செலவின் மூலம் அதிக லாபம் ஈட்டி வருவதாக விவசாயிகள் மகிழ்ச்சியுடன் கூறுகின்றனர்.

    விழுப்புரம்:  

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கந்தாடு, நடுக்குப்பம், ஓவி பேர், அடசல், புதுப்பாக்கம் உள்பட 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இப்பகுதியில் உள்ள விவசாயிகள் தங்களது விலை நிலங்களில் மணிலா, நெல், தர்பூசணி, கரும்பு, எள,கேழ்வரகு உள்ளிட்ட பயிர்களை நடவு செய்வது வழக்கம். இதுபோன்ற விவசாய பயிர்களுக்கு அதிக அளவில் தண்ணீர் தேவைப்படும். இந்நிலை யில் இப்பகுதியில் கடந்த பருவ மழையின் போது சராசரி மழை அளவை விட குறைந்த அளவில் மழை பொழிந்தது. இதனால் இங்குள்ள பெரும்பாலான நீர் நிலைகள் முற்றிலும் நிரம்ப வில்லை. இதன் காரணமாக தற்பொழுது பல நீர் நிலைகள் வறண்டு வரும் நிலையில் உள்ளது. எனவே விவசாயிகள் தங்களது விலை நிலங்க ளில் குறைந்த தண்ணீரில் அதிக வருவாய் ஈட்டக்கூடிய முருங்கையை சொட்டு நீர் பாசன மூலம் அதிக அள வில் பயிர் செய்துள்ளனர். இதுபோல் சொட்டு நீர் பாசனம் மூலம் நடவு செய்யப்பட்டுள்ள முருங்கை நன்றாக செழித்து வளர்ந் துள்ளது. இந்த முருங்கை மூலம் ஒரு ஆண்டுக்கு மேலாக காய்கள், கீரைகள் போன்ற வற்றை குறைந்த செலவின் மூலம் அதிக லாபம் ஈட்டி வருவதாக விவசாயிகள் மகிழ்ச்சியுடன் கூறுகின்றனர்.

    • அதிக லாபம் தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.70 லட்சம்- 143 பவுன் நகைகள் பறிக்கப்பட்டது.
    • இதையடுத்து பாத்திமா சமிம், கணவர் ஜாகிர் உசேன், பரமேஸ்வரி, சுரேஷ் ஆகிய 4 பேரை மதுரை மாநகர குற்ற தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.

    மதுரை

    மதுரை அய்யர் பங்களா, ஸ்ரீ நகரை சேர்ந்த டைட்டஸ் தம்பிநாதன் மனைவி சந்திரா (வயது 54). இவர் மதுரை மாநகர குற்றத் தடுப்பு பிரிவு போலீசில் புகார் மனு கொடுத்து உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுரை கே.புதூர் மகாலட்சுமி நகரை சேர்ந்த பாத்திமா சமீம் (34), அவரது கணவர் ஜாகிர் உசேன் (40), பரமேஸ்வரி, சுரேஷ் ஆகிய 4 பேர் அறிமுகம் ஆனார்கள்.

    அவர்கள் என்னிடம், நாங்கள் புதிய தொழில் ஒன்றை செய்து வருகிறோம். இதில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் கிடைக்கும். நீங்கள் செலுத்திய பணத்திற்கான ஆவணங்களை தருகிறோம் என்ற ஆசை வார்த்தை கூறினார்கள். இதனை நம்பிய நான் அவர்களிடம் உறவினர்கள் மூலம் ரூ.70 லட்சம் பணத்தைத் திரட்டி கொடுத்தேன். மேலும் எங்களிடம் இருந்த 143 பவுன் நகைகளையும் அவர்களிடம் கொடுத்தேன்.

    பணம், நகையை பெற்று கொண்ட 4 பேரும் பல மாதங்களாகியும் லாபத் தொகை தரவில்லை. எனவே நான் அவர்களிடம் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டேன்.

    அப்போது அவர்கள் நான் கொடுத்த பணம், நகைக்கு ஈடாக ஆவணம் ஒன்றை கொடுத்தனர். உங்களது பணம் கூடிய விரைவில் திருப்பித் தருவோம் என தெரிவித்தனர். ஆனால் அவர்கள் பணம், நகையை திருப்பி தராமல் என்னை ஏமாற்றினர்.

    இந்த நிலையில் 4 பேரும் பணம், நகையை திருப்பிதர முடியாது என்று கூறி கொலை மிரட்டல் விடுத்தனர்.

    எனவே போலீசார் உரிய நடவடிக்ைக எடுத்து ரூ.70 லட்சம், 143பவுன் நகையை மீட்டு தர வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தார்.

    புகாரின் அடிப்படையில் போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தினார்கள். அப்போது சந்திரா பணம் கொடுத்ததற்கான ஆவணங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை சமர்ப்பித்தார்.

    இதனைத் தொடர்ந்து போலீசார் எதிர் தரப்பிடம் விசாரணை நடத்திய போது, பணம்-நகையை பெற்று மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து பாத்திமா சமிம், கணவர் ஜாகிர் உசேன், பரமேஸ்வரி, சுரேஷ் ஆகிய 4 பேரை மதுரை மாநகர குற்ற தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.

    ×